( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பச்சை இலைகளில் பரம்பொருள் வாசனை


த்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன?     கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்?  எவையெல்லாம் கூடாது?
அஜித் குமார் திசையன்விளை

     பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான் நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று.  பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும்.  கடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது.  முதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  இதனால் இயற்கையின் தன்மை பாதுகாக்கப்படுகிறது.  இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது.  எண்ண கடத்திகளாக இருக்கும் விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து விடுகிறது.  இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு உடனடியாக கலப்பது தான்.  இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

     இனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம்.  திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான்.  ஆனால், ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான்.  அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலையாலும், கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலையாலும், பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும் கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.

     வேளமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது.  கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது.  ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது.  தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது.  எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரம்பஜத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன்.  அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன?  இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும்.  இது ஆகாது.  என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா?  என்று சிலர் யோசிக்கலாம்.  அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.  சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு.  மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும்.  அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம்.  குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும்.  அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்துக்கு இன்ன இலை ஆகாது என சொன்னார்கள்.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும் • ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்

 • + comments + 2 comments

  vinoth
  21:07

  மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும் விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து விடுகிறது. இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு உடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

  இது புதிய செய்தி ஆக இருக்கிறது.

  வினோத் கன்னியாகுமரி
  வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

  VISWAM
  21:07

  அருமை


  Next Post Next Post Home
   
  Back to Top