( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யார் நல்ல குரு...?

     இன்றைக்கு மக்களிடம் இருக்கும் தலையாய பிரச்சனையே யார் நல்ல குரு என்பது தான். 

   சில குருமார்களின் செயல்பாடுகளை பார்த்தால் ஜனங்களுக்கு மிகவும் அச்சமாகயிருக்கிறது.  அரசியல்வாதிகளும், கொலைகாரர்களும் செய்ய கூடிய பஞ்சமா பாதகங்களை குருமார்கள் என சொல்லப்படுவர்கள் மிக சாதரணமாக செய்து விடுகிறார்கள்.    இதற்கு காரணம் என்ன?

   மக்களின் கண் மூடித்தனமான மூட பக்தியே ஆகும்.  எல்லா மனிதனுக்கும் பிரச்சனையிருக்கிறது.  தோட்டியிலிருந்து தொண்டைமான் வரைக்கும் கவலையிருக்கிறது.

   அனைவரும் தனது கவலைக்கு யாராவது மருந்து தரமாட்டார்களா?  என ஏங்குகிறார்கள். 
  இந்த ஏக்கம் மக்களின் அறிவு கண்னை மறைக்கிறது.  இதனால் புற்றியாசல் போல போலி குருமார்கள் புறப்பட்டு விடுகிறார்கள். 

   புரோகிதன் தட்சனை கேட்கலாம்.  ஜோதிடன் காணிக்கை கேட்கலாம்.  பரிகாரம் செய்பவன் கூட பணம் கேட்கலாம்.  ஆனால் குரு பணத்தை எதிர்பார்க்க கூடாது. 

  அப்படி எதிர்பார்த்தால் அவன் குருவே அல்ல.   எவனிடம் சுத்தமான வாக்கும், தெளிவான ஞானமும், பரிபூரனமான பக்தியும், உறுதியான வைராக்கியமும், எளிமையான வாழ்க்கையும் இருக்கிறதோ அவனே சிறந்த குரு. 

  ஆடம்பர மாளிகையில் குருவை தேடுபவன் நல்ல குருவை எப்போதும் பெறமாட்டான்.


      மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
+ comments + 4 comments

நல்ல பதிவு அய்யா

08:03

ஆஹா அருமையான விளக்கம் குருஜி
சாட்டையடி போன்ற சொற்க்கள், ஆனால் யாருக்கும் புரிந்து கொள்ளத்தான் மனம் இல்லை

malathi
21:28

குருடும் குருடும் குறுட்டாட்டமாடி
குருடும் குருடும் குழிவீழுமாறே!
நல்ல குரு கெட்ட குரு என்று பார்க்கவேண்டியது இல்லை.ஏணி யை பிடித்து மேலே போக வேண்டும்.ஏணியை பிடித்து தொங்க வேண்டியதில்லை,
ரேடியோ ஓட்டையா,கரப்பு இருக்கிறதா? நமக்கு கவ‌லை
இல்லை.செய்தி சரியா?இல்லையா?என்று பார்த்தால்
போதாதா.

VISWAM
21:28

புரோகிதன் தட்சனை கேட்கலாம். ஜோதிடன் காணிக்கை கேட்கலாம். பரிகாரம் செய்பவன் கூட பணம் கேட்கலாம். ஆனால் குரு பணத்தை எதிர்பார்க்க கூடாது."

அருமை,


Next Post Next Post Home
 
Back to Top