( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்

   னுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் பிரவேசிக்கும் மங்களகரமான இந்த புனித அறுவடைத் திருநாளில் வாசகர் அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது மூதாதையர்களின் நம்பிக்கை மட்டுமல்ல நம் நம்பிக்கையும் அதுதான்

 நம் ஒவ்வொறுவர் வாழ்விலும் எத்தனை எத்தனையோ விதவிதமான சிக்கல்கள் பிரச்சனைகள் அத்தனைக்கும் விடிவுகாலம் வராதா முடிவு தெரியாதா என ஏக்கத்துடனே ஒவ்வொறு வினாடியையும் கடத்துகின்றோம்


   நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம் இன்பத்தை அடைவோம் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கைச் சக்கரம் சுழலுகிறது அந்த நம்பிக்கை இல்லா விட்டால் எல்லாமே இருள்மயமாகி விடும் 

   தன்னை நம்பாமல் நாளும் கிழமையையும் நம்புவது மூடத்தனம் என்று பகுத்தறிவு வாதம் பேசுபவர் கூட துன்பச்சுமை அழுத்தும் போது கண்ணுக்கே தெரியாத நல்ல பொழுது தனக்கு எப்படியும் வந்துவிடுமென நம்பித்தான் வாழ்கின்றனர்

  இதை அவர்கள் வாய் மறுக்கலாம் என்றாலும் நெஞ்சம் நிச்சயம் ரகசியமாக ஒத்துக் கொள்ளும்

  நல்லகாலம் கெட்டக்காலம் என்பதை ஏற்றுக் கொள்ளுவதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம் நாம் அதை விட்டு விட்டு நம்முன்னே நல்ல படியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புக் உள்ளாகிக் கிடக்கும் விஷயங்களை கொஞ்சம் நினைவில் புறட்டிப் பார்ப்போம் 


    உலகம் முழுவதையும் மதப்பயங்கர வாதம் பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது இப்போதே வெடிக்குமா இன்னும் சற்று நேரங்கழித்து வெடிக்குமா என்ற நெஞ்சப் படப்படப்போடு எல்லாத்தரப்பு மக்களும் தீவிரவாதத்தால் மிரண்டு போய் கிடக்கிறார்கள்

   முதலில் இந்த நிலை மாறவேண்டும் துப்பாக்கி பிடித்திருக்கும் கைகளில் குழந்தைகளுக்கு புகட்டும் பால் புட்டி வரவேண்டும் அப்படி வந்தால்தான் நடுங்கிக் கொண்டிருக்கும் இதயங்கள் நல்லமைதி கொள்ளும்

   அடுத்ததாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பெருவாரியான மனிதர்களை பீடித்திருக்கும் பசிப்பிணி நீங்க வேண்டும்

   படிக்க ஆசை இருந்தும் கையில் காசில்லாமல் பட்டாசு தொழிற்சாலையில் கந்தகத்தோடும் தெருவோற டீக்கடையில் எச்சில் டம்ளரோடும் போராடி வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் லச்சகக்கணக்கான சின்னஞ்சிறு அறும்புகளின் கனவுகள் மெர்ப்பட வேண்டும் 


    சினிமாக்காரனுக்கு அபிஷேகம் செய்தும் அரசியல்வாதிகளுக்கு கொடிபிடித்தும் குருடர்களாக கிடக்கும் எங்கள் இளைஞர்கள் சற்றேனும் சுயநினைவு பெற்று நாட்டைப் பற்றியும் வீட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்

   எங்கள் மங்கையர் திலகங்களை போதையில் மிதக்கவைக்கும் சின்னத்திரையின் ஒப்பாரி தொடர்கள் முடிவுக்கு வரவேண்டும்

   எங்களை ஆளுகின்ற சுயநல கூட்டத்தாரும் ஆளப்போகின்ற ஆதிக்க கும்பலும் எங்கள் இன்னல்களைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்து இறக்கம் காட்டி அடிக்கின்ற கொள்ளையின் அளவை குறைக்க வேண்டும்

   காசு வாங்கி ஓட்டுப் போடும் ஈன புத்தி எங்களிடமிருந்து விலக வேண்டும்   சொந்த நாட்டில் வாழ முடியாமல் உலகம் முழுவதும் அனாதைகளாய் அகதிகளாய் கையேந்தி நிற்கும் எங்கள் ஈழ சொந்தங்களின் துயரம் இந்தத் தையிலாவது நீங்கும் வழி தெரிய வேண்டும்

  மிக முக்கியமாக விவசாயிகளின் தற்கொலை இனி நடக்கவே கூடாது

  ஊருக்கெல்லாம் சோறு போடும் உழவன் வயிற்றுக்கு உணவின்றி வரப்பு பொந்துக்குள் வாழும் எலிகளை பிடித்து தின்னும் நிலைக்கு வந்து விடவே கூடாது

  இந்த நம்பிக்கை எல்லாம் நிறைவேற பொங்கட்டும் பொங்கல்

  கனவுகள் நினைவாக உதிக்கட்டும் ஆதித்தன்

  இன்பம் மட்டுமே இனி கரும்பாக இனிக்கட்டும்!

துயரங்கள் மறைந்து இன்பங்கள் பொங்கலோ பொங்கல்!+ comments + 14 comments

வணக்கம் குருஜி. உங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்த பொங்கல் நாளில் பால் மட்டும் பொங்காமல், நம் உள்ளத்தில் அனைவர்பால் அன்பு பொங்கி மனதில் மகிழ்ச்சி உண்டாகட்டும். நம்பிக்கை என்ற விதையை நன்றாக விதைத்து, உழைப்பு என்ற உழவை உழுது, அமைதி என்ற மகசூலை உலகில் எல்லா இடத்திலும் பெற்று, அன்பு என்ற ருசியை கரும்பைபோல் ருசிப்போம். உஜிலாதேவி வாசகர்கள் அனைவருக்கும், என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக. நன்றி குருஜி.

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

வணக்கம் குருஜி..
இன்றைய நிலையில் மிகவும் தேவையான ஆசைகள்..
நடந்தால் நன்றாகத் தான் இருக்கும்..
பொங்கல் வாழ்த்துக்கள்..

இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Vannakam Guruji Yenoda Jhadhagam Parthu Solla mudiuma

Nan Sikkim la Iruken Adhanala Yennal Mudiyala Please

name : T.Karthikeyan,

D.0.B : 16-11-1984

Birth time : 23:55 Pm

Day : Friday
rasi : Simham
Lakanam : Kadakham
Nakhshthra : Maham

Please Mail Me In Tamil Language
mail id :- roobakarthik2002@gmail.com

இப்படி எல்லாம் நடக்காதா? நடக்கணும் விடியனும் என வேண்டி கொள்வோம் - நம் திருநாள் வாழ்த்துக்கள்

நல்லாருக்கு ஐயா பொங்கல் வாழ்த்துகள் ஆசிகள் வேணும்

பொங்கல் வாழ்த்துக்கள்

மிச்சம் அருமையான சிந்தனைகள் ஐயா.. நன்றிகள் எனது வலைப்பதழவையும் தொடடருங்கள் http://vellisaram.blogspot.com/

ஒவ்வொருவர் மனதிலும் வரையறுக்க வார்த்தைகள் இல்லாத,
உள்ளத்தை உருக்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை உயிர்கொடுத்து எழுத்து வடிவம் தந்திருக்கிறீர்கள் ... பாதம் தொட்டு வணங்க முடியாத தூரத்தில் இருக்கும் உங்கள் சீடன் ...
அந்தந்த தரப்பினர் திருத்திக்கொண்டால் பூமியில் வாழ சொர்க்கம் கூட ஆசைப்படும்.

மகேஷ்..
http://maheskavithai.blogspot.com/

வணக்கம் குருஜீ,

தங்களின் இந்த பொங்கள் எதிர்பார்ப்பு மிக வேடிக்கையாக உள்ளது.ஏனெனில், இது நடக்காத ஒன்றாகும்.
இருந்தாலும் தங்களின் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல அந்த இறைவனை (அ) இயற்கையை வேண்டுவோம்.

rajudranjit
21:24

சினிமாக்காரனுக்கு அபிஷேகம் செய்தும் அரசியல்வாதிகளுக்கு கொடிபிடித்தும் குருடர்களாக கிடக்கும் எங்கள் இளைஞர்கள் சற்றேனும் சுயநினைவு பெற்று நாட்டைப் பற்றியும் வீட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்
நன்றாக சொன்னீர்கள், புரட்சிகரமான எண்ணங்கள்! பாராட்டுதலுக்குறியது!

VISWAM
21:25

நம்பிக்கைதான் வாழ்க்கையே. அருமை.

கடவுள் எனக்கு முதல் தந்த பரிசு அம்மா....
........ அகிலன் .........


Next Post Next Post Home
 
Back to Top