( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாகம் என்பது என்னவென்றால்...


  யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது தெரியாததை புரிய வைப்பது தானே நம் வேலை

     யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும்.  நம்மிடம் உள்ள பொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும்.  அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா?  அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம்.  அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார்.  அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது.  பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.

     நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும் யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு.  ஒவ்வொரு நாட்டிலும், தொழிற்சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம் செய்யப்பட்டிருக்குமேயானால் இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும் முடியாது.  சுற்றுபுறச் சூழல் கெட்டுருக்கவும் செய்யாது.

இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:

     தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும்.  உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும்.  நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும்.  பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும், ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும்.  அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும்.  இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்.


+ comments + 2 comments

00:03

This is for the atheists who question the purpose and usefulness of yagna.

Yagna is not a superstitious ritual performed by religious fanatics. High temperatures ranging from 600° to 1200° Celsius are produced in the homakund resulting in complete oxidation of all the materials placed in it. Every kilogram of cow ghee releases several tons of Oxygen. Different woods, spices, herbs and fragrances release their medicinal compounds in their elemental form as vapors which will enter the bloodstream of the performers through their lungs. The intense heat also produces dilatation of the blood vessels in the skin, helping the absorption of these substances through the skin. Profuse sweating eliminates the impurities from the blood.

The Vedic mantras, chanted during Yagna produce sound waves which are carried into the sky by the raising warm air, clean the atmosphere. The byproducts of the fire, Carbon monoxide & Carbondioxide are oxidized at the high temperatures resulting in release of Oxygen molecules. Controlled scientific studies have confirmed that Yagna lowers blood sugar, blood pressure, heart rate, suppresses the Delta waves and increases the Alpha waves in the brains of the subjects thereby confirming the beneficial effects of Yagna on the body and mind.

The case study of a Bhopal family who escaped the ill effects of a toxic gas leak at Union carbide plant, by performing their daily Agnihotra is a living testimony to the benefits of Yagna.

For more details visit here: http://www.scribd.com/doc/7602320/Integrated-Science-Yagna

VISWAM
21:20

"தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும். உடல் தந்த பெற்றோரை அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும். நலிந்தோருக்கு தொண்டு செய்வது மனுஷ யெக்கியமாகும். பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும், ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும். அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம் கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது பிரம்ம யெக்கியமாகும். இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது யார் வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்."
அருமை. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய குணங்கள்.


Next Post Next Post Home
 
Back to Top