( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



மிர்த தாரா மந்திர தீட்சை டிசம்பர் 18 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே எதிர்நோக்கக் கூடிய புண்ணியங்கள் என்னென்ன வென்று சிலர் கேட்கலாம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அவைகளை கிழே காணலாம்

  •  உண்மையான பக்தியோடு துளசி வளர்த்தால் எண்ணத்தாலும், செயலாலும் உருவான பாவங்கள் விலக
  • நல்ல மரங்கள் வளர்த்தால் இகத்திலும், பரத்திலும் சுகமுடன் வாழலாம்
  • சுமங்கலிகளை அன்னை பராசக்தியாக நினைத்து பாத பூஜை செய்தால் சௌபாக்கியம் ஏற்படும். 
  • ஏரி, குளம், கிணறு இவைகளை வெட்டுவித்தால் அல்லது வெட்டுவதற்கு உதவி செய்தால் அல்லது வெட்டியவற்றை பாதுகாத்தால் முன்னோர் சாபம் விலகும்.
  • இறைவன் வாழும் ஆலயத்தை பெருக்கி, மெழுகி கோலமிட்டால் அவன் திருவீதி உலாவரும் பகுதிகளை சுத்தம் செய்தால் சொர்க்கத்தில் அடையும் சந்தோஷத்தை பூமியிலேயே பெறலாம்.

  • வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவில்லாதவர்கள், இயலாதவர் ஆகியோர்களுக்கு முடிந்த உதவியை செய்தால் மரணபயம் விலகும்.
  • படிப்பவனை கெடுக்காதிருத்தல், படிக்க முடியாதவனை படிக்க வைத்தல், படிக்க உதவுபவனுக்கு ஒத்தாசை செய்தல் போன்றவை வருங்கால தலைமுறையினரை வாழ வைக்கும்.புண்ணியங்களாகும்

   இத்தகைய புண்ணிய வரிசையில் எனது சொந்த அபிப்பிராயமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன் அதாவது பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தொண்டு செய்யவில்லை என்றாலும் தொந்தரவு செய்யாதிருத்தல்









+ comments + 9 comments

வணக்கம் குருஜி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே. இருந்தாலும் இந்த கலிகாலத்தில் உதவிசெய்தாலும், சில சமயம் ஏமாற்றம் வருகிறது. அதையும் பொருட்படுத்தாமல் நாம் உதவிசெய்தால் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்றுகொள்ளவேண்டுமா?. அந்த பக்குவம் வர பொறுமையாக இருக்கவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. ஆனாலும் செயலில் சிலசமயம் காழ்புணர்ச்சி வந்துவிடுகிறது. இன்றையபதிவு அனைவருக்கும் ஒரு படமாக இருக்கும். மிக்க நன்றி குருஜி.

sathish
02:41

அனைவரும் படிக்கவேண்டிய பதிவு ஜி

Anonymous
02:42

இன்றைய பதிவு அருமை குருஜி

selvam
02:44

பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தொண்டு செய்யவில்லை என்றாலும் தொந்தரவு செய்யாதிருத்தல்

அருமையான வரிகள்

@Subhasri

சரியாக சொன்னிர்கள்

நல்ல எண்ணங்கள்

தங்களின் சொந்தக்கருத்து மிகவும் மதிப்பு மிக்கதாக தெரிகிறது, வழி காட்டலுக்கு நன்றிகள்.

தியாகராஜன்
06:58

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! புண்ணியமும் புண்ணியம் செய்வோருக்கே!

சுமங்கலிகளை அன்னை பராசக்தியாக நினைத்து பாத பூஜை செய்தால் சௌபாக்கியம் ஏற்படும்.'சுமங்கலிகளை' இந்த சொல் தேவையா ? பெரியவர்கள் என்று சொல்லலாமே.


Next Post Next Post Home
 
Back to Top