( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சிவன் ஏகே47 பிடிப்பார்

   ராவணனாலும், துரியோதனனாலும் அதர்மங்கள் நடைபெற்ற போது அதை தடுக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்தார்.

   இன்று வீதியெங்கும் இராவண, துரியோதனன்கள் மலிந்து விட்ட நிலையில் அதை தடுக்க எந்த ராமனும் பிறக்கவில்லையே ஏன்?

  கடவுள் மனிதனை கைவிட்டு விட்டாரா? என்ற கேள்வி நம்மில் பலருக்கு அடிக்கடி எழும்

        கடவுள் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்ததை அவதாரம் என்கிறோம்.

   ‘அவதாரம்’ என்ற சொல்லுக்கு இறங்கி வருதல் என்பது பொருளாகும்.

   தெய்வ நிலையிலிருந்து இறங்கி வந்து மனிதனை கைதூக்கி விட கடவுள் செய்யும் முயற்சியே அவதாரமாகும். 

    கடவுள் மனிதனாக வருவதனால் அவர் தரம் என்றும் குறையவே குறையாது.  மாறாக மனித தரமே உயர்வடைகிறது. 

    கடவுளின் அவதாரம் ஒரு புதிய சூழ்நிலையை தோற்றுவித்து தாழ்வுற்று கிடக்கும் தர்மத்தை நிலை நாட்டுவதேயாகும்.

   கடவுள் அவதாரம் நிகழும் போது தர்மத்தின் வழியில் நின்று சற்றேனும் மாறாத வாழ்க்கையை எப்படி வாழ்வதுயென மனிதன் கற்றுக் கொள்கிறான்.

   அதர்மம் என்ற நாகபாம்புகள் எவ்வளவு மூர்க்கமாக படமெடுத்து ஆடினாலும், சீறினாலும் அன்பும், கருணையும் எப்படி அதை வெல்கிறது என்பதை அவதாரங்கள் நமக்கு காட்டுகிறது.

   தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வினாலும், கடித்து குதறினாலும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை நன்றாக புரிந்து கொள்கிறோம்.

   அவனவன் சுயதர்மத்திலிருந்து விலகும் போது இயற்கையின் நிலை மாறி விடுகிறது.

   உலகத்தை படைத்து சுற்ற விட்டுவிட்டு சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது அல்ல கடவுளின் செயல்.

   இயற்கையை சரி செய்வதன் மூலம் கடவுள் இப்பொழுதெல்லாம் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். 

  இராவணன் ஒருவனாகயிருக்கும் போது அவனை அடையாளம் கண்டு அழிப்பது மிக சுலபம். 

   இன்று ஏராளமான ராவணர்கள்.  சில ராவணர்கள் ராமனை போலவே கூட தோற்றமளிக்கிறார்கள்.

   அதனால் கடவுளும் தனது அவதாரங்களை விதவிதமான வடிவத்தில் வைத்து கொள்கிறார்.

   வில்லும் அம்போடு தான் கடவுள் வருவார் என காத்திருந்தால் அது முழுமையான அறியாமையாகும்.

காந்தி காட்டிய அகிம்சையிலும் நேதாஜியின் வீர வழியிலும் கூட கடவுளின் அவதாரத்தின் சாயலை நிஜக் கண்ணுடையவர்கள் பார்ப்பார்கள்

  இன்று நாம் சாலையில் நடந்து செல்லும் போது கைபையை பறித்துச் செல்பவனை துரத்திப் பிடிக்கும் மனிதக் கால்களில் கடவுளின் அவதாரப் புன்னகையை காணலாம்

  நாசகார ஜீவன்களை நோக்கி நிமிரும் துப்பாக்கியை பிடித்திருப்பது ராணுவ வீரனாக இல்லாமல் சிவபெருமானாகக் கூட இருக்கலாம்

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

+ comments + 12 comments

Spectator
08:23

கடவுள் வேறு மனிதன் வேறு என்று நினைத்தால் தான் அவதாரம் தேவை. அணைத்து உயிர்களிலும் இறைவனே இருக்கிறான் எனும்போது தனியாக ஒரு அவதாரம் தேவையில்லை. இறைவன் எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு நம்மை கண்காணிக்கிறான் என்று நினைப்பதைவிட, அவன் நம்முள் தான் இருந்து அனைத்தையும் நடத்துகிறான் என்பது மகான்கள் வாக்கு. அதை உணர்வதே மனிதப்பிறப்பின் நோக்கம்.

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வினாலும், கடித்து குதறினாலும் மறுபடியும் தர்மமே வெல்லும்//
Very True.

வணக்கம் குருஜி. தெய்வம் மனுஷ ரூபேனே என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். நீங்கள் சொன்ன கருத்து மிகவும் சரியே. நத்தையில் முத்து இருப்பதுபோல் எத்தனையோ ராவணனும், துரியோதனனும் இருந்தாலும், கிருஷ்ணரும், ராமரும் அருகிலேயே இருக்கிறார். நாம் தாம் உணராமல் யாரோ ஒரு மனிதர் நம்மை காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்கிறோம். கடவுளும் காலத்திற்கேற்ப டிப் டாப்பாக ஜீன்ஸ் போட்டுகொண்டு வருகிறார். மிகவும் அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி.

வினோத்
10:02

அவனவன் சுயதர்மத்திலிருந்து விலகும் போது இயற்கையின் நிலை மாறி விடுகிறது.

நிஜம்...

நாசகார ஜீவன்களை நோக்கி நிமிரும் துப்பாக்கியை பிடித்திருப்பது ராணுவ வீரனாக இல்லாமல் சிவபெருமானாகக் கூட இருக்கலாம்

வாவ்..

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

சரவணமுத்து
10:03

அவனவன் சுயதர்மத்திலிருந்து விலகும் போது இயற்கையின் நிலை மாறி விடுகிறது

மிகவும் அருமை!
-------------------------
சரவணமுத்து

தலைப்புகளை புதுமையாக வைக்கிறோம் என்று நினைத்து இறைவனின் பெயரை உபயோகித்து அவரை அவமதிக்காதீர்கள்! குருஜி என்று கூறிக்கொள்ளும் உங்களுக்கே கடவுளர் மீது மரியாதையோ பயபக்தியோ இல்லையெனில் ஊருக்கென்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது!?

கடவுள் யார் ரூபத்தில் வந்தாலும் பரவாயில்லை. ஆனால், சீக்கிரம் வரவேண்டும் அப்படி அவர் வந்து அக்கிரமக்காரர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். கால தாமதமாக கடவுள் வந்து அவர்களை அழிப்பது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் நாம் கண் கூடாக எவ்வளவோ பேர்கள் நேர்மை தவறி பணத்தை சம்பாரிப்பவர்கள் நம்மிடேயே நாள் தோறும் நன்றாகவே வாழ்ந்து கொண்டு அதுவும், ஆணவத்தோடு என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறி கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களை இந்நேரம் கடவுள் தண்டித்து முடிந்தால் திருத்த வேண்டும் இல்லையேல் அதற்கு உண்டான தண்டனை வழங்க வேண்டும். அதற்கு மாறாக நேர்மை வழி நடப்பவன், கடவுளை கும்பிட்டு கடவுளுக்கு பயந்து(மரியாதை) செயல்படுபவன், யாருக்கும் மனதளவில் தீங்கு செய்யாதவன் எவனோ அவன் தான் மீள துயரங்களை அனுபவித்து வருகின்றான். பாவம் அவனும் மனிதன் தானே எவ்வளவு கஷ்டங்களை தாங்குவான். அதிகமாகும் பொது கடவுளையே நொந்து கொள்கிறான். இதற்கு கடவுள் இடங்கொடுக்காமல், அவ்வப்போது தன்னுடைய செயலை நடத்தி காட்ட வேண்டும் என்பதே நல்லோர்களின் சார்பாக என்னுடைய வாதம்(கருத்து).

R Thevathi Rajan கடவுள் யார் ரூபத்தில் வந்தாலும் பரவாயில்லை. ஆனால், சீக்கிரம் வரவேண்டும் அப்படி அவர் வந்து அக்கிரமக்காரர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். கால தாமதமாக கடவுள் வந்து அவர்களை அழிப்பது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் நாம் கண் கூடாக எவ்வளவோ பேர்கள் நேர்மை தவறி பணத்தை சம்பாரிப்பவர்கள் நம்மிடேயே நாள் தோறும் நன்றாகவே வாழ்ந்து கொண்டு அதுவும், ஆணவத்தோடு என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறி கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களை இந்நேரம் கடவுள் தண்டித்து முடிந்தால் திருத்த வேண்டும் இல்லையேல் அதற்கு உண்டான தண்டனை வழங்க வேண்டும். அதற்கு மாறாக நேர்மை வழி நடப்பவன், கடவுளை கும்பிட்டு கடவுளுக்கு பயந்து(மரியாதை) செயல்படுபவன், யாருக்கும் மனதளவில் தீங்கு செய்யாதவன் எவனோ அவன் தான் துயரங்களை அனுபவித்து வருகின்றான். பாவம் அவனும் மனிதன் தானே எவ்வளவு கஷ்டங்களை தாங்குவான். அதிகமாகும் பொது கடவுளையே நொந்து கொள்கிறான். இதற்கு கடவுள் இடங்கொடுக்காமல், அவ்வப்போது தன்னுடைய செயலை நடத்தி காட்ட வேண்டும் என்பதே நல்லோர்களின் சார்பாக என்னுடைய வாதம்(கருத்து).

கடவுள் யார் ரூபத்தில் வந்தாலும் பரவாயில்லை. ஆனால், சீக்கிரம் வரவேண்டும் அப்படி அவர் வந்து அக்கிரமக்காரர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். கால தாமதமாக கடவுள் வந்து அவர்களை அழிப்பது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.... ஏனென்றால் நாம் கண் கூடாக எவ்வளவோ பேர்கள் நேர்மை தவறி பணத்தை சம்பாரிப்பவர்கள் நம்மிடேயே நாள் தோறும் நன்றாகவே வாழ்ந்து கொண்டு அதுவும், ஆணவத்தோடு என்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கூறி கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்களை இந்நேரம் கடவுள் தண்டித்து முடிந்தால் திருத்த வேண்டும் இல்லையேல் அதற்கு உண்டான தண்டனை வழங்க வேண்டும். அதற்கு மாறாக நேர்மை வழி நடப்பவன், கடவுளை கும்பிட்டு கடவுளுக்கு பயந்து(மரியாதை) செயல்படுபவன், யாருக்கும் மனதளவில் தீங்கு செய்யாதவன் எவனோ அவன் தான் மீள துயரங்களை அனுபவித்து வருகின்றான். பாவம் அவனும் மனிதன் தானே எவ்வளவு கஷ்டங்களை தாங்குவான். அதிகமாகும் பொது கடவுளையே நொந்து கொள்கிறான். இதற்கு கடவுள் இடங்கொடுக்காமல், அவ்வப்போது தன்னுடைய செயலை நடத்தி காட்ட வேண்டும் என்பதே நல்லோர்களின் சார்பாக என்னுடைய வாதம்(கருத்து).

Next Post Next Post Home
 
Back to Top