Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆழமாக சிந்தித்து பாருங்கள்

    லகத்தில் நடைபெறுகின்ற எல்லா காரியங்களும் கடவுளால் தான் நடக்கிறதுயென்றால் மனிதன் ஏன் செயல்புரிய வேண்டும்? சும்மா இருப்பதே சுகமல்லவா? என்று பலர் நினைப்பது உண்டு

     நமது இந்துமதம் எல்லாவற்றிற்க்கும் மூலம் கடவுள் தான் என்கிறது.

 கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடைபெற முடியாதுயென நமது வேதங்கள் சொல்கின்றன. 

  அதே நேரம் மனிதன் ஒரு சிறிது நேரம் கூட ஓய்வாக இருக்க கூடாது என பரம்பொருளான கண்ணபெருமான் பகவத் கீதையில் சொல்கிறார். 

  இந்த இடத்தில் ஒரு குழப்பம் வரும்.

  எல்லாவற்றையும் கடவுள் செய்கிறார் என்றால் மனிதன் ஏன் செயல்பட வேண்டும்.  ஆழமாக சிந்தித்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும்.

   கடவுளின் அளவற்ற சக்தியின் ஒரு சிறிய பகுதி மனிதனுக்குள் புதைந்து கிடக்கிறது.

  அந்த சக்தியை பயன்படுத்தி தன்னை உணர்ந்து தன்னிடமே மனிதன் வந்து சேர வேண்டுமென கடவுள் எதிர் பார்க்கிறார். 

  உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கடவுளின் செயலும் மனிதனின் முயற்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.

 அதனால் தான் பகவத் கீதை உன்னை மேலோனாக்குவதும், கீழ்மைபடுத்துவதும் நீ தான்.  உனக்கு நீயே நண்பன்.

  உனக்கு நீயே எதிரி.  உனக்கு நீயே நோய்.  உனக்கு நீயே மருந்து, என்று சொல்கிறது.

    கடவுளிடம் இருக்கும் ஒரே ஒரு சக்தி மனிதனிடம் இல்லை. 

   அது புதியதாக எதையும் படைக்கும் ஆற்றலாகும். 

   நல்லது, தீயதை அறிந்து கொள்ளும் தன்மை மனிதனிடம் நிறைவாகவேயிருக்கிறது.

   எனவே இறைவனின் செயல் என்பது மனிதனின் மூலமாகவே பலநேரம் வெளிப்படுகிறது. 

  மனிதனின் செயலும் மனிதன் மூலமாகவே சில நேரம் வெளிப்படுகிறது.

  மனித செயலில் துக்கமிருக்கிறது.  கடவுளின் செயலில் அது இல்லை.



Contact Form

Name

Email *

Message *