Store
  Store
  Store
  Store
  Store
  Store

முட்டாளுக்கு மட்டுமே கஷ்டம்!

 ர்மா என்பதும், அதன் பயன் என்பதும், விதி என்பதும் எந்த வகையில் மனிதவாழ்வை கட்டுப்படுத்துகிறது?

     நீயும் நானும் நமது முயற்சியும் தான் நமது வாழ்க்கையின் முழுமுதல் அதிகாரியும் எஜமானனுமாகும்.

 நம்முடைய கர்மாக்கள் நாம் அந்தரங்கமாகவும் வெளிப்படையாகவும் செய்த செயல்கள் நமது ஆசைகள் நமது எண்ணங்கள் நம் வாழ்க்கையை உருவாக்கும்.

 வெளியிலிருந்து துயரங்களும் மகிழ்ச்சியும் கிடைப்பதாக நாம் கருதுவதுயெல்லாம் வெறும் கனவுகளே ஆகும்.

 நம் எண்ணமானது ஆழமாக சென்று நம் அடி மனதில் பதிவாகி விடுகிறது.

 இப்படி பதிவாகும் எண்ணங்களை வாசனைகள் என்றும் சம்ஷ்காரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. 

  அந்த ஒவ்வொரு வாசனைக்கும் சமமான அல்லது எதிரிடையான பின் விளைவுகள் உண்டு.  இந்த விளைவுகள் பலனை தருவதற்கு கால அவகாசம் சிறியதாகவோ, பெரியதாகவோயிருக்கும்.

  நடந்து போகும் பாதையில் நாம் போட்ட முள் அடுத்த ஒரு மணி நேரத்திலோ  அடுத்த பிறப்பிலோ நிச்சயமாக வந்து நம் காலில் தான் குத்தும்.

இதில் மாற்றம் இல்லை. 

நமது செயல்களின் பலனை அனுபவிக்க தரும் சக்தியின் பெயரே விதியாகும்.

 இந்த விதியின் நாயகன் நாம் தான்.  கடவுள் அல்ல, காரணம் கடவுள் நம்மை சர்வ சுதந்திரம் உள்ளவனாக படைத்திருக்கிறான்.

 கொள்ளையடிப்பவன், துரோகம் செய்பவன், நம் கண் எதிரேயே சுகபோகிகளாக வாழ்வதை பார்க்கிறோம்.

 இதை பார்க்கும் போது விதியின் மீது நமக்கு நம்பிக்கை சற்று குறையலாம்.  நல்லதை மட்டுமே நினைத்தும் செய்தும் வருபவன் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பதை பார்த்து குழப்பமும் வரலாம்.

 ஆனால் உண்மையில் விதியை பொறுத்த மட்டில் நமது குழப்பமும் அவ நம்பிக்கையும் அர்த்தமற்றதாகும்.

 வாழும் காலத்தில் விதியின் தண்டனையை அல்லது வெகுமானத்தை அனுபவிக்காதவன் அடுத்த பிறவியில் அதன் பலனை அனுபவிக்காமல் இருக்க முடியாது.

 இது வெறும் மத கருத்தல்ல.  வாழந்து அனுபவித்த பல ஞானிகள் அனுபவ கருத்துகளாகும்.

 அப்படியென்றால் இன்னொரு கேள்வியும் எழும்.  தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டுùன்றால் தவறை உணர்ந்து திருந்தினாலும் கூட தண்டனை விஷத்தை குடித்தே ஆக வேண்டுமா? என்பதே அந்த கேள்வியாகும்.

 கடவுள் கருணை உடையவன் எனும் போது மன்னிப்பே கொடுக்காத சர்வதிகாரி போல் நடந்து கொள்வானா?  நிச்சயமாக அப்படியிருக்காது.

 மூன்று வகையில் மனிதன் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ள இறைவன் வழிகாட்டுகிறான்.

 1. பரிபூரணமாக என்னை சரணடை.

 2. நான், எனது என்ற அகங்காரத்தை கைவிடு.  உன்னை நோக்கி வருகின்ற துயரம் என்ற பாராங்கல்லை அப்புறம் தள்ள கடினமாக உழை.  எல்லாவற்றையும் எனக்கு அற்பணித்து நீ செய்யும் உழைப்பானது உன் தலை மீது விழயிருக்கும் துயரக்கல் சற்று தூரத்தில் விழ உதவி செய்யும்.

 3. நல்ல செய்கை நல்ல சிந்தனை இவைகளால் உன் மனதை நிரப்பு.  சாக்கடை கால் பங்கு என்றால் சந்தனம் முக்கால் பங்கு ஆனால் நாற்றத்தின் வீரியம் குறையும். 

  எனவே சரணாகதி அயராத உழைப்பு, நல்ல எண்ணங்களின் பயிற்சி ஆகிய மூன்றுமே விதியின் கொடுமையிலிருந்து விடுபட இந்து மதம் சொல்லும் மூன்று வழிகளாகும். என்று கண்ணன் சொல்கிறான்

  என் தேவைகள் அனைத்தையும் என் அன்புத் தந்தை கவனித்துக் கொள்ளும் போது முழுமையாக அவரை சரணடையாமல் இருப்பது முழு முட்டாள் தனமல்லவா?

  மூடன் மட்டுமே துன்பமடைகிறான் என்பது இதனால்தான்


Contact Form

Name

Email *

Message *