( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஒரே ஜாதியில் திருமணம் செய்தால் சொத்து இல்லை

        மது இந்து மதத்தை குறை கூறுபவர்கள் மிக முக்கியமாக சொல்லும் குற்றசாட்டு ஜாதி கொடுமைகளை இந்து மதம் உருவாக்கி பாதுகாத்து வருகிறது என்பது தான். 

           ஆலயத்திற்குள் சக மனிதனை நுழையாதே என்பதும், ஆடு மாடுகள் கூட தண்ணீரை குடிக்கும் பொது கிணற்றை ஒரு சாரார் தொடக்கூடாது என்பதும்,

       மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிப்பதும் சாதியால் தான்.

       உலகத்தில் எந்த பகுதியிலுமே இல்லாத இந்த சாதிக் கொடுமை இந்தியாவில் மட்டும் இருப்பதற்கு இந்து மதம் மட்டும் தான் பலிகடா ஆக்கப்படுகிறது. 

    ஆனால் உண்மையில் இந்து மதத்திற்கோ, இந்து சமூக அமைப்பிற்கோ, சாதியை பற்றி எந்த சம்பந்தமும் இல்லை.

        இஸ்லாம் வேதமான கூர்-ஆன் இஸ்லாமியர் அல்லாத நாட்டில் இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் கூட குறிப்பிட்ட நாட்டின் சம்பந்தமில்லாது உள்விவகாரங்களில் எந்த முஸ்லிம் நாடும் மூக்கை நுழைக்க கூடாது என்று சொல்கிறது.

    கூர்-ஆனின் இந்த கருத்திற்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  முஸ்லிம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவதே ஜிகாத் என்று இன்று சிலர் இஸ்லாமியத்தை களங்கப்படுத்துவது போலவே இந்து மதமும் களங்கப்படுத்தப்படுகிறது.

        இந்து மத வேதங்களில் சாதியை பற்றியோ, வர்ணமுறை பற்றியோ எந்த குறிப்புகளும் கிடையாது. 

    அதர்வண வேதம் துவக்கமே  இது எல்லா மனிதர்களுக்கும் பொது என்ற சொல்லோடு தான் ஆரம்பிக்கிறது. 

   ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் பிராமண சத்ரிய, வைசீக, சூத்ர என்ற நான்கு பதத்தை பயன்படுத்துகிறது. 

   இந்த சொற்கள் கூட பிறப்பை அடிப்படையாக கொண்டது என்று பொருள் சொல்ல முடியாது. 

    இதற்கெல்லாம் மேலாக புருஷ சூத்தகம் பிற்காலத்தில் தான் ரிக் வேதத்தில் சேர்க்கப்பட்டதாக வரலாற்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

        அப்படியென்றால் பிராமணன் முதல் சூத்திரன் வரை உள்ள வார்த்தைகள் புராணங்களிலும், இதிகாசங்களிலும் பகவத் கீதையிலும் பலமுறை பயன்படுத்தப்படுகிறதே அதன் தாத்பரியம் என்ன என்று சிலர் கேட்கலாம். 

   இந்து மத வேதங்கள் மனிதனின் குணத்தை சத்வ, ராஜஸச, தாமஸ என்று மூன்று வகைப்படுத்துகிறது. 

   சத்வம் என்றால் சாந்தநிலை.  ராஜஸம் என்றால் துரித செயல் நிலை.  தாமஸம் என்றால் செயல்படாத நிலை என்பதாகும்.

   உலக, மனிதர்கள், குணம் இந்த மூன்று இயல்புக்குள் அடங்கிவிடுகிறது.  எனவே எவனிடம் சத்வ குணம் மேலோங்கியிருக்கிறதோ அவன் பிராமணன் ஆவான்.

    எவனிடம் ராஜஸசம் பொங்கி வழிகிறதோ அவன் சத்ரியன் ஆவான்.

    யார் தாமஸ குணத்தால் சோம்பி கிடக்கிறானோ அவன் சூத்ரனாவான்.

   அமைதியும் செயல்பாடும் இணைந்து இருப்பவன் வைசீகன் ஆவான்.

    இதை தான் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் பதிமூன்றாம் சுலோகத்தில் பகவான் கண்ணன் குணத்தின் அடிப்படையிலேயே வர்ணம் அமைகிறது என தெளிவாக கூறுகிறான்.

    சாந்தமான பிராமணனுக்கு சோம்பேறியான சூத்திரன் பிறக்கலாம்.  சோம்பேறிக்கு பிறந்தவன் குணத்தால் பிராமணனாகவோ, சத்ரியனாகவோ இருக்கலாம்.

   இது தான் இந்து மதம் சொல்லும் மனித ஜாதி பிரிவுகள்

  இந்த பிரிவுகளை கற்றறிந்த சில சுயநலவாதிகள் தங்களது சுய லாபத்திற்காக பிறப்பின் அடிப்படையிலேயே சாதிகள் என வகுத்து மக்களை அதில் கட்டாயப்படுத்தி பழக்கி விட்டு விட்டார்கள். 

   அன்று வைத்த சாதி நெருப்பு இன்று அரசியல்வாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது.

   இன்றைய இந்திய சாதிகளின் கட்டமைப்பு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன என காரல் மார்க்ஸ் சொல்லியிருப்பது சத்திய வாக்கு.

  இத்தகைய சாதிகளை ஒழிக்க பிரச்சாரத்தாலோ, போராட்டங்களாலோ, உபதேசங்களாலோ முடியவே முடியாது. 

   சுயசாதியில் திருமணம் செய்தால் சொத்துரிமை மற்றும் வேலை வாய்ப்பு இல்லையென ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒரு மணி நேரத்திலேயே இந்தியாவிலுள்ள எல்லா சாதிகளும் செத்துவிடும்.

+ comments + 17 comments

well said ..........

all the proplem will sove, but nobody to follow

பிறகு உதாரணமாக பிராமணர்கள் ரிஷி களுடிய மூலத்தை கோத்ரமாக வைத்து கொண்டுள்ளார்களே..
வாழையடி வாழை யாக பிறகு மன்னர் ஆட்சி காலங்களில் தங்களுடைய வாரிசுகளை தானே இளவரசர் ஆக பட்டம் சூட்டினார்கள்..

ராமாயண காலத்தில் தசரதன் தன் மகன் ராமன் தானே பட்டம் சூடினான்...
(ஆட்சி புரிய வைத்தான்..பரதன் ஆட்சி யை பிடித்தது பற்றி வேண்டாம் )
மகாபாரத காலத்தின் போதே மன்னர் ஆட்சி தானே..

அப்பொழுது கீதை இல் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால்....

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் இந்த காரணங்கள் ஏற்று கொள்ள மறுக்கிறதே. தயவு செய்து விளக்கவும்.

சண்முககுமார்
09:44

@reno85

வணக்கம் குருஜி பல நாள் இருந்த சந்தேகம் திர்ந்தது

reno85//

வணக்கம் reno85 நீங்கள் கேட்க்கும் கேள்வி சரிதான் இதற்கு காரணம் இதில் சுவாமிஜி கூறிப்பிட்டுள்ளார் இந்த வரியை ஆழமாக படியுங்கள்

இந்த பிரிவுகளை கற்றறிந்த சில சுயநலவாதிகள் தங்களது சுய லாபத்திற்காக பிறப்பின் அடிப்படையிலேயே சாதிகள் என வகுத்து மக்களை அதில் கட்டாயப்படுத்தி பழக்கி விட்டு விட்டார்கள்.

Abdullah Mohamed
09:47

உங்களுக்கு பொண்ணையும் தந்து சொத்தும் தரணுமோ

இந்து மதம அல்லது இந்து சமயம் எது சரி

இந்து சமயம் என்பதுதான் சரி என நினைக்கிறேன்

விளக்கம் அளிக்கவும்

Anonymous
11:41

சொத்து வேண்டாம் money போதும்

chandrasekar
12:16

வனக்கம ஐயா
சந்திரசேகர்

மனிதன் பிறப்பில் இல்லை தாழ்குலம்
நடத்தை தான் குலம் காட்டும்

//சுயசாதியில் திருமணம் செய்தால் சொத்துரிமை மற்றும் வேலை வாய்ப்பு இல்லையென ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒரு மணி நேரத்திலேயே இந்தியாவிலுள்ள எல்லா சாதிகளும் செத்துவிடும்//

சபாஷ்! ஜாதியை ஒழிக்க இதைவிட சிறந்த வழி கிடையாது!

சாதிய வைத்து லாபம் அடைய நினைப்பவர்கள் , கருணாநிதி/சோனியாவை போன்றவர்களும் , தனது மதத்தை பரப்ப நினைக்கும் கிறிஸ்துவர்களும் தான்.

http://www.joshuaproject.net/joshua-project.php

saravanamuthu
08:03

சாதிகளை ஒழிக்க பிரச்சாரத்தாலோ, போராட்டங்களாலோ, உபதேசங்களாலோ முடியவே முடியாது

ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

rajudranjit
08:04

ஒரு மிகச்சிறந்த யோசனையை சொல்லியுள்ளீர்கள்! பாராட்டுக்குறியது!

rajudranjit
08:08

ஒரு மிகச்சிறந்த யோசனையை சொல்லியுள்ளீர்கள்! பாராட்டுக்குறியது!

வினோத் கன்னியாகுமரி
20:52

சுயசாதியில் திருமணம் செய்தால் சொத்துரிமை மற்றும் வேலை வாய்ப்பு இல்லையென ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒரு மணி நேரத்திலேயே இந்தியாவிலுள்ள எல்லா சாதிகளும் செத்துவிடும்.

நல்ல யோசனை.

ஆனால் பாருங்கள், ஒரே ஜாதியில் இப்போது பல உட்பிரிவுகள் இருக்கிறதே. மற்ற ஜாதிகளில் திருமணம் செய்யாமல் தங்கள் உட்பிரிவில் திருமணம் செய்வார்களே

பலமுறை வெவ்வேறு இடங்களில் சொன்னதை மறுபடியும் சொல்கிறேன்.
ஜாதியை ஒழிப்பது மிகக்கடினம். ஜாதி என்ற பெயரை வேண்டுமானால் ஒழித்து விடலாம். ஆனால் "கவிஞன், நடிகன், ஆசிரியர், மேலாளர், கொத்தனார், மென்பொருளாளர், போலீஸ், வக்கீல்" போன்று எல்லாத்தொழில்களிலும் தொழிற்சங்கங்களிலும் வேறு பெயரில் ஜாதி வாழ்ந்து கொண்டே இருக்கும்.
ஜாதியை வைத்து வேலை, இலவசம் என பங்கு போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்..

இ.குமரன்
20:53

மனிதனும் மாடும் திருமணம் செய்தால்தான் கலப்பு திருமணம்-தந்தை பெரியார்.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.

வினோத் கன்னியாகுமரி
20:53

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

மனுஸ்மிருதிய என்ன பண்ணலாம்...கொளுத்திடலாமா??? இல்ல அதுக்கும் உருண்டு புரண்டு ஏதாவது வெளக்கம் சொல்லப் போறீங்களா???!!!


Next Post Next Post Home
 
Back to Top