( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஐயர் தான் கடவுளை அடைவாரா ?

  பிராமணர்கள் மட்டும் தான் இறைவனை அடைய முடியும் என சில பிராமணர்கள் கூறுகிறார்களே அது உண்மையா?

வெகு நாளைக்கு முன்பு ஒரு வைதீகர் என்னை வந்து பார்த்தார்.

பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்த அவர் தனது பேச்சுக்கு இடையில் சில கருத்துக்களை சொன்னார்.

அதில் மிக முக்கியமானது பெண்கள் முக்தியடைய வேண்டுமென்றால் அவர்கள் எவ்வளவு ஒழுக்கமாகவும் பக்திசிரத்தையுடன் இருந்தாலும் ஆணாக பிறந்த பிறகு தான் கடவுளை அடைய முடியும் என்ற கருத்தாகும்.

இப்படி எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என அவரிடம் திருப்பி கேட்டேன்.

அதற்கு அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. காரணம் அப்படி ஒரு சித்தாந்தமே உலகத்தில் இல்லை.

அதே போன்று ஒரு போலியான சித்தாந்தம் தான் பிராமணன் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்பது.

மகாபக்த விஜய கதைகளில் வரும் கோர கும்பர் ஒரு குயவர். ஸ்ரீ சேனா என்பவர் நாவிதர். நரகசேனர் என்பவர் ஒரு பொற்கொல்லர். ரவிதாசர் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. நல்கிரு சாகுகர் ஒரு மார்வாடி.

இவர்கள் எல்லாம் கடவுளை அடைந்ததாக கூறுவது வெறும் கற்பனையா?

பெரிய புராணத்தில் அரசனான சேரமான், பரதவரான அதிபக்தர், குயவரான திருநீலகண்டர், வணிகரான இயற்பகையார், வேளாளரான இளையான்குடிமார நாயணார், வேடனான கண்ணப்பர், குடுப்ப தலைவியான காரைக்கால் அம்மையார் போன்றோர்கள் சிவபெருமானை தரிசனம் செய்தது பொய்யா? புனைச் சுருட்டா?

கடவுளை அடைவதற்கு தொழிலோ, சாதியோ, பொருளாதார அந்தஸ்தோ எதுவும் தடையல்ல

இருபதாம் நூற்றாண்டு பிராமணர்களிடம் எந்த அளவு அறிவு தீட்சன்யம் பெருகிக் கிடந்ததோ அந்த அளவு ஜாதி வெரியும் பெருகிக்கிடந்தது

பல பிராமணர்களின் தியாகமும் பொதுச் சேவையும் இதனாலேயே களங்கப்பட்டு விட்டது

இன்றளவும் கூட சில பிராமணர்களிடம் ஜாதி துவேஷம் நிறைந்துள்ளது

இவர்களில் சிலர் தங்கள் சமூகத்துக்குள்ளேயேக் கூட தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்

மாத்துவா பிராமணர்கள் ஐயங்கார்களையும் தமிழ் மற்றும் தெலுங்கு பிராமணர்களை தங்களுக்கு இணையாக கருதுவதில்லை

ஐங்கார் ஸ்மார்தா சண்டை ஊரறிந்த ரகசியம் குருக்களுக்கும் மற்ற பிராமணர்களுக்கும் கூட சுமூக உறவு கிடையாது

நான்தான் உயர்ந்தவன் என்ற குடுமிப்பிடி சண்டை நாள்தோரும் நடைபெருவதை நான் நன்கறிவேன்

பிராமணால்தான் கடவுளை அடையமுடியும் என்றால் எந்த பிராமணனால் .....?

ஐங்காரா? மாத்துவா ? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது கடவுளை அடைய மனிதனாக பிறந்தால் போதும்+ comments + 12 comments

Anonymous
08:15

நன்றாக சொன்னீர்கள் குருஜி

கடவுளை அடைய மனிதனாக பிறந்தால் போதும---
குருவி,யானை,சிலந்தி,குரங்கு, இன்னும் பல வகையான உயிரினங்கள், ஏன் ததி பாண்டனின் பானைக்குக்கூட கடவுளை அடையத் தடையில்லை.

வணக்கம் குருஜி. மிகவும் அருமையான பதிவு. பிரம்மத்தை உணர்ந்தவன் தான் பிராமணன் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். ஒவ்வொருவரையும் பார்க்கும் பொழுது அனைவரும் ஒன்று என்று உணருகிறோமோ, அப்பொழுது தான் அனைவரும் பிராமணன் என்று சொல்லலாம். மிக்க நன்றி குருஜி.

பிரமணர்களுக்கு " எந்த அளஇது வரை நான் படித்த தகவல்களில் இதுவே என்னை கவர்ந்த கருத்து , எனினும் இருபதாம் நூர்த்ரண்டு வு அறிவு பெருகி கிடந்ததோ " என்ற கருத்தை ???????

சோவின் எங்கே பிராமணன் படித்தீர்களா? பிராமணன் என்பவன் பிறப்பால் அல்ல, வாழும் முறையால்.

அருமை குருஜி.

//அதே போன்று ஒரு போலியான சித்தாந்தம் தான் பிராமணன் மட்டுமே கடவுளை அடைய முடியும் என்பது// ஐயா குருஜி, அப்படி ஒரு சித்தாந்தம் எந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது? நீங்கள் எதைப்பார்த்து இப்படி ஒரு சித்தாந்தம் இருப்பதாகக் கூறுகிறீர்கள்? ஏதாவது எழுதி வைத்து ஹிட்ஸ் கிடைக்க வேண்டுமென்று அறிவில்லாமல் உளறிக்கொண்டே இருக்கக்கூடாது. பிராமணர்களே செய்யும் எந்த ஒரு உபன்யாசத்திலும் நீங்கள் பிராமணராக இருந்தால் தான் கடவுளை அடைவீர்கள் என்று பிராமணர்கள் கூறாத போது நீராக கற்பனை செய்து கொண்டு பிராமணர்கள் மீது சேறு வாரிப்பூசினால் என்ன அர்த்தம். அறியாமையால் யாரும் கேட்டால் அதற்கு புரியும் படியான விளக்கத்தை கொடுப்பதை விட்டு விட்டு கற்பனை கதை கட்டி திராவிட கட்சிகளைப் போல செயல்படுவது ஒரு குருவாக இருப்பவனுக்கு அழகா? கீதை ஒரு கொலைகார நூலா என்று நீ தலைப்பு வைக்கும் போதே நீ ஒரு விளமபரப் பிரியன் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. இன்று ஒரு இன துவேஷத்தை உனது தளத்தின் மூலம் நிகழ்த்துவதிலிருந்து நீ ஒரு முழுமையான ஆன்மீக வாதி இல்லை என்பதும் நிரூபணமாகிறது. உன் உளரல்களை மூட்டை கட்டி போய் ஆன்மீகத்தை மீண்டும் படிக்கப்பாருய்யா? கடவுளின் பெயரால் பிரிவினையைத் தூண்டியவர்கள் எண்ணிக்கையில் நீயும் சேர்ந்து விடாதே!

நானே கண் கூடாக கண்டது, பெருமாள் கோவில்களில் விசேஷ காலங்களில் மக்கள் கூட்டம் அவ்வளவு இருக்கும். அப்படி இருந்தும் அந்த அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பூஜை முடிந்தவுடன், தனது ஆட்கள் அதாவது பிராமணர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி சென்று பிராமண பெண்களையும் தேடி ஆண்டவன் பிரசாதத்தை முதலில் அவர்களுக்கு கொடுத்த பின்னரே மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். அப்போது நமக்கு கோபம் பயங்கரமாக வரும். அதை கட்டுப்படுத்திக் கொண்டு, அவர்களை மன்னித்து விடும்படி அந்த கடவுளை நான் வேண்டிக் கொள்வேன். இப்படி ஒரு சாதாரணமான விஷயம் கூட தெரியாத பிராமணர்கள் நம்முடன் இருப்பதை விட அந்த கடவுளிடம் இருப்பதே சிறந்தது. இதை அடிப்படையாய் வைத்து தான் அந்த பிராமணர், தங்களிடம் பிராமணர்கள் மட்டுமே கடவுளை சென்று அடைகிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று நான் நினைக்கின்றேன். இது மாதிரி எண்ணம் கொண்ட ஆட்கள் எல்லாம் கடவுளிடம் மட்டும் தான் நிரந்தரமாக இருக்கவேண்டுமே தவிர மனிதர்களாக வாழும் நம்மிடையே இல்லை! !

//ஐங்காரா? மாத்துவா ? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது கடவுளை அடைய மனிதனாக பிறந்தால் போதும்//

********

பதிவை விட இந்த வரிகளை ரசித்தேன்...

@hayyram
ஐயா hayyram அவர்களே!
பிராம்மணன் யார் என்பதை " வஜ்ரசூசி" எனும் உபநிஷத்தே மிகத் தெளிவாக விளக்குகிறது, அதைப்படியும் முதலில்.
விருப்பு வெறுப்பற்ற ஒரு அருமையான
உண்மைத் துறவிமீது இவ்வளவு எரிச்சலும் காழ்ப்புமா? முதலில் நீர் பிராம்மணர் இல்லை என்பதை நன்கு புரிந்துகொள்ளும், பிறப்பினால் பிராம்மணன் ஆகிவிடமுடியாது என்பதை மேலே சொல்லும் சுருதியே சொல்லும்."பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" எனும் பொய்யாமொழிப்படி,உம்மிடமுள்ள இந்த துவேஷ குணம் ஒன்று ்போதும் உம்மையும் இந்த குறளுக்கு உதாரணமாக்க.பிறப்பொர்ழுக்கம் கெட்டுக் குட்டிச் சுவராக நிற்கும் உம்போன்றவரால்களால்தான் திராவிடக் கட்சிகளை இறைவன் தோற்றியுள்ளான். இதைப்புரிந்து கொண்டு அடுத்த ஜன்மத்திலாவது உண்மை பார்ப்பானாகப் பிறக்க இந்த சுவாமியைச் சரணடைந்து நல்ல வழியில் நடக்கப்பாருமய்யா, கோபக் குருடரே!

உங்களை குருஜி என்று கொண்டாட கூட்டம் வந்து விட்டதோ, அப்போதே நீங்கள் உஷார் ஆகி இருக்கவேண்டும். ரமணரின் "நான் யார்" படித்தால் குழப்பங்கள் விலக கூடும் (அ) அதிகரிக்க கூடும்.

உங்களை குருஜி என்று கொண்டாட கூட்டம் வந்து விட்டதோ, அப்போதே நீங்கள் உஷார் ஆகி இருக்கவேண்டும். ரமணரின் "நான் யார்" படித்தால் குழப்பங்கள் விலக கூடும் (அ) அதிகரிக்க கூடும்.


Next Post Next Post Home
 
Back to Top