( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பிராமணர்கள் மட்டும் தான் பூணூல் அணிய வேண்டுமா?

    ல்லூரியில் படிக்கிறோம்.  படித்து முடித்தவுடன் ஒரு சான்றிதழ் தரப்படுகிறது. 

  காவலர் பயிற்சியை முடித்தவனுக்கு போலிஸ்காரனுக்குரிய அடையாள சின்னங்கள் தரப்படுகின்றன. 

   ஒரு சான்றிதழ் போல அடையாள சின்னம் போல காட்டப்படுவது தான் பூணூல் ஆகும். 

இந்த பூணூல் அடையாளம் எதற்கு தேவைப்படுகிறது.

 மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.

 நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான்.

 ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. 

இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

        பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும்.  இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும்.

        அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது. 


       முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம். 

       மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.

        மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர். 

        மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது.

        வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன.

       சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன. 

        தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது.

       பழைய ஆரோக்கியமான சமூக நிலையை உருவாக்க விரும்பிய பாரதியார் தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். 

      இன்றைய சமூக சீர்திருத்த காரர்கள் பூணூல் அறுப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

        பூணூலை பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும்.

       இயற்கை உபாதைகள் சரிவராதவர்கள் காதுகளில் பூணூலை சற்று அழுத்தமாக சுற்றிக் கொண்டால் மிக சுலபமாக பிரச்சனை தீரும்.

       இது அனுபவ உண்மை மட்டுமல்ல.  மருத்துவ உண்மையாகும்.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 18 comments

வணக்கம் குருஜி. கண்டிப்பாக அந்த காலத்தில் எவ்வளவோ விஷயங்கள் சொல்லிகொடுகப்பட்டது. ஆனால் கால மாற்றத்திற்கேற்ப அவர்கள் பல விஷயங்களை மாற்றிகொண்டார்கள். நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையே. நல்ல பதிவு குருஜி. மிக்க நன்றி.

இன்றைய சமூக சீர்திருத்த காரர்கள் பூணூல் அறுப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும். //
நிச்சயமாக ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உண்டு.

Anonymous
10:28

TRILLION TRTHANKS!!! FOR EXPOSING THIS .
MY GURU WAS FROM THE LOWEST CASTE and HIS "GURU" from BRAHMIN CASTE accepted him as a disciple and initiated GAYATHRI MANTRA to him. They lived away from publicity and a very humble life serving humanity all over the world from wherever they lived BUT WERE in real communication with the ANCIENT SAGES & RISHIS and passed on all information that they got from them to the people from all castes who followed and came to them THESE ARE THE REAL GREAT GAYATHRI SIDDHARS who lived and in LIVE SAMADHI
in the wolrd. Once when I went on a pilgrimage with my GURU I asked his " GURU JI"(126 years old) who blessed me as well this question of POONOOL and he GAYASTHRI MANTRA and he replied there were no restrictions and anyone can say this Mantra. We went to another ASHRAM and I asked the same question and after reluctance that SWAMY had to come out with the truth and said that there was NO RESTRICTION and ANYONE COULD sy the GAYATRI MANTRA. So I belive that the BRAHMINS PURPOSELY kept the GAYATRI MANTRA as their SECRET for getting all powers from this Mantra. MY GURU'S GURUJI used to tell that ALL RELIGIONS ARE repeating GAYATRI MANTRA.

GURU JI PLEASE give MORE ELABORATE DETAILS ON GAYTRI MANTRA PLEASE which will be definitely helpful to ALL.

Dhanasekaran Arumugam
12:43

vanakkam,supper explanation.

Anonymous
06:48

This is stupid, All scientist in the world are brahmin?. These are just a faith. YOU FAITH WILL SAVE YOU. Hind is a good religion don't septate people like this. ie: Cast class etc., Dear Brahmins When you get degree ask University to give you thread instead of certificate. Gayatri mantra is good for your brain.It will stimulate your brain power. I encourage everyone to learn good things like mantra and please teach other cast not only Brahmin. Please share good things to other fellow Indian. Then India will become super power Nation. Jai Hind.

தமிழ்செல்வன்
11:39

பூணூல் எதுக்கு..?

மிகவும் பிரயோசனமான நல்ல பதிவு..ஆனா பூணுல் எதுக்கு சும்மா ? Reason?

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

Anonymous
16:07

The Brahmins who won Nobel prize like CV. RAMAN , SUBRAMANYAM CHANDRASEKAR, VENKATRAMAN RAMAKRISHNAN do not wear Poonool. I also do not wear it. It is time for brahmins to be more sympathetic and helpful to others. We paid the price for our snobbishness (due to great the success Brahmins had in Tamil Nadu between 1850 to 1950). I would rather have temples that give first preference to dalits.

Anonymous
04:26

AS PER THE RELIGIOUS SENTIMENTS AND PRINCIPALS, BRAHMINS MUST WEAR POONOOL. NOT ONLY THIS, THERE ARE MANY NON BRAHMINS WEARING POONAL, ESPECIALLY AT THE TIME OF PERFORMING THEIR RELIGIOUS RITES. SECONDLY RECITING GAYATRI MANTRA GIVES AN INDIVIDUAL CONCENTRATION AND SELF DISCIPLINE. NO NEED THAT ONLY BRAHMINS SHOULD CHANT GAYATRI MANTRA. ANYBODY CAN DO IT. WE HAVE ONLY DIFFERENTIATED PEOPLE BY CASTE, ESPECIALLY OUR POLITICIANS (PURELY FOR RUNNING THEIR SHOPS). OTHER WISE, FOLLOWING THE PREACHING ANY RELIGIOUS LEADER IS GOOD. ONLY THING, WE HAVE NO RIGHT TO QUESTION OTHERS' RELIGIOUS SENTIMENTS AND FEELINGS. IF ONE DOES NOT LIKE TO FOLLOW CERTAIN CULTURAL OR RELIGIOUS ACTIVITY, OPTION IS HIS.

Anonymous
05:39

பஞ்ச பூதங்களில் 3 பூஙகளை வென்றவர் பூணூல் அணியலாம் . காயத்ரி மந்திரம் முளுமையானதல்ல "பூர்ண காயத்ரி மந்திரம்" முளுமையானது ஆனல் மறைக்கப்பட்டுவிட்து
r.s.purusotham
9842425780

காதிலே பூ சுற்றுவதை கேட்டிருக்கிறேன் , இப்போது தான் காதினில் பூணூல் சுற்றும் விஷயம் கேள்விபடுகிறேன்

Anonymous
16:32

கோவை 16 ஏப்ரல் 2011

அய்யா வணக்கம்,

நான் பிராமணன் அல்லாத வகுப்பை சேர்த்தவன், என் குரு எனக்கு 1995 இல் பூணூல் அணிய வேண்டுகோள் விடுத்தார் அனால் நான் மறுத்து விட்டேன், இப்பொழுது எனக்கு பித்ரு கர்மா செய்ய வேண்டி அவசியம் உள்ளத்தால் எனக்கு பூணுல் அணிய நிர்பந்தம் உள்ளது.

நான் அணைத்து நாட்களிலும் தேவ தர்ப்பணம் செய்வபன், எனக்கு கோயம்புத்தூர் இல் ஒரு நல்ல குருவை அறிமுகம் தாருங்கள். இன்று தங்களுக்கு தனிப்பட்ட முறையில் மின் அன்ஞ்சல் அனுப்பி உள்ளேன்.

தங்களின் பதிலுக்காக காத்திருக்கும் சீடன்.

இப்படிக்கு நன்றியுடன்

லோகநாதன்
கோவை

Anonymous
16:34

கோவை 16 ஏப்ரல் 2011

அய்யா வணக்கம்,

நான் பிராமணன் அல்லாத வகுப்பை சேர்த்தவன், என் குரு எனக்கு 1995 இல் பூணூல் அணிய வேண்டுகோள் விடுத்தார் அனால் நான் மறுத்து விட்டேன், இப்பொழுது எனக்கு பித்ரு கர்மா செய்ய வேண்டி அவசியம் உள்ளத்தால் எனக்கு பூணுல் அணிய நிர்பந்தம் உள்ளது.

நான் அணைத்து நாட்களிலும் தேவ தர்ப்பணம் செய்வபன், எனக்கு கோயம்புத்தூர் இல் ஒரு நல்ல குருவை அறிமுகம் தாருங்கள். இன்று தங்களுக்கு தனிப்பட்ட முறையில் மின் அன்ஞ்சல் அனுப்பி உள்ளேன்.

தங்களின் பதிலுக்காக காத்திருக்கும் சீடன்.

இப்படிக்கு நன்றியுடன்

லோகநாதன்
கோவை

poonool aniyum sadangu yaral nadathapadum

சத்ரியனான நான் எவ்வாறு பூணூல் அணிவது

சத்ரியர் வம்சத்தை சர்ந்த நான் எவ்வாறு அணிவது

Anonymous
17:43

பூணூல் எந்த சாதியினரும் அணியலாமா... முதன் முதலில் பூணூல் அணியும் போது என்ன என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்... எப்பொழுது எல்லாம் பூணூல் அணிவதை தவிர்க்க வேண்டும் என்பதை எனக்கு தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..


Next Post Next Post Home
 
Back to Top