( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாமிசம் தின்பவன் இந்து இல்லையா ?  பரிமலை போன்ற கோயில்களுக்கு யாத்திரை செல்ல விரதமிருப்பவர்கள் மாமிசம் உணபது கிடையாது

சாதாரண குடிமக்கள் கூட மாமிச உணவுகளை சாப்பிட்ட நாளில் ஆலையங்களுக்குள் நுழைவதில்லை

ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறுபவர்களும் அசைவத்தை தீண்டுவதில்லை

இவைகளை பார்க்கும் போது சைவ உணவை மட்டும்தான் இந்துமதம் வரவேற்கின்றதோ என பலருக்குத் தோன்றும்

உயிர்களை கொன்று தின்பதை நம்மதம் தடை செய்தால் தாவரங்களும் உயிற்பொருள் தானே

அவற்றை சமைத்துண்பது பாவமாகாதா என்றும் சிலருக்குத் தோன்றும்

ஒரு மரத்தின் கிளையை வெட்டி வேறொரு இடத்தில் நடும் போது மரம் வளர்கிறது.

அது செத்து போவதில்லை. செடிகளும் கிழங்குகளும், கீரை வகைகளும் ஏறக்குறைய அப்படித்தான்.

ஆனால் ஒரு மிருகத்தையோ, பறவைகளையோ கொன்று உணவாக கொள்ளும் போது அந்த உயிர் மீண்டும் வளர்வது இல்லை.

காய்கறிகளையும், கீரைவகைகளையும் பயிறிடும் போதும் சரி, அறுவடை செய்யும் போதும் சரி ஏராளமான உயினங்கள் செத்து மடிகின்றன.

ஆனால் அந்த சாவு இன்னொரு உயிர் பிழைக்க வழி செய்கிறது.

ஆகவே மரக்கறிகளை அறுவடை செய்வது கொலை தொழிலாகாது.

மேலும் மனித உடலின் உள்ளுறுப்புகள் தாவர வகைகளை செரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

மாமிச வகைகளை உண்டு வளர்வதற்கான வாய்ப்புகள் மனித உள்ளுறுப்புகளுக்கு கிடையாது.

மேலும் மாமிசம் எவ்வளவு வெப்பத்தில் சமைக்கப்பட்டாலும் அதில் இருக்கும் சில கிருமிகள் சாவதேயில்லை.

அது மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.

செத்த மாமிசத்தை சுமப்பதற்கு நம் வயிறு ஒன்றும் மயானம் அல்ல.

ஆரோக்கியத்தையும் அகிம்சையும் விரும்புவர்கள் மரகறிகளை உண்பதே சிறந்தது.

ஆனால் நம் மதம் வழிபாட்டிற்கு சர்வ சுதந்திரம் கொடுத்திருப்பது போலவே சாப்பாட்டிற்கும் கொடுத்து இருக்கிறது.

அது நம்மை மாமிசம் உண் என்றும் சொல்லவில்லை.

உண்ணாதே என்று தடுக்கவும் இல்லை.


தொன்மை கால இந்து மத சடங்குகளில் உயிர் பலி கொடுக்கப்பட்டதையும் பலியிடப்பட்ட மாமிசம் புரோகிதர்கள் உட்பட அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டதையும் நமக்கு காட்டுகின்றன.

இன்று கூட காஷ்மீர் பண்டிட்கள் மாமிச போஜனம் செய்கிறார்கள்.

வங்காளத்தில் மீன் சாப்பிடாத பிராமணனே இல்லை என்று சொல்லலாம்.

எனவே அசைவம் சாப்பிடுவதும் சைவம் சாப்பிடுவதும் மத விஷயம் அல்ல. மருத்துவ விஷயமேயாகும்.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 30 comments

வணக்கம் குருஜி. மிகவும் அருமை. மிக்க நன்றி குருஜி.

Anonymous
04:20

Guruji,
Very well said. thanks.

//"எனவே அசைவம் சாப்பிடுவதும் சைவம் சாப்பிடுவதும் மத விஷயம் அல்ல. மருத்துவ விஷயமேயாகும்."//

அல்லது பழக்கமே காரணமாகலாம். பண்டைய காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண்டு வந்ததாகவும் அகத்தியர் வாதாபியை ஜீரணம் செய்த பிறகு 'இனி வேண்டாம் இந்த ரிஸ்க்' என்று நிறுத்தியதாகவும் கூடப் படித்திருக்கிறேன்.

Anonymous
08:46

குருஜி அவர்களுக்கு.,

எப்பொழுதுமே நமது முன்னோர்கள் மாமிசத்தை உணவாகக் கொள்வதை வரவேற்கவே இல்லை ,,,

நம் தாய்திருநாட்டில் தோன்றியி 63 நாயன்மார்களும், ஆழ்வார்களும்
அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்க்ள்,

எடுத்துக்காட்டாக,

திருமந்திரத்தில்.

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் துதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே

என்னும் திருமூலரின் திருவாக்கை நினைவு கொள்ள வேண்டும் , மேலும் வள்ளுவப் பெருந்தகை ,

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று

என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...

இப்படி நிறைய சொல்லலாம் , எனவே அருள் துறையில் இருப்பவர்கள்
மறந்தும் இப்படி மறைமுகமாகவும் புலால் உணவுக்கு ஆதரவு தரக் கூடாது.

செல்வகுமார் UK
08:56

குருஜி அவர்களுக்கு வணக்கம் தினம் தினம் புதிய தகவலுடன் தங்களின் தளத்தில் காணுகிறேன்

எடப்பாடி சிவம்@

தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி

@ஸ்ரீராம்.

தாங்கள் கூறுவது போல் நானும் படித்தது உண்டு

உங்கள் ஒவ்வொரு ஆக்கங்களையும் படித்து வருகிறேன். விஞ்ஞான ரீதியாகவோ, சமய சம்மந்தமாகவோ, யதார்த்தமாகவோ நீங்கள் சொல்லும் கருத்துகள் யாவும் விளக்கமாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியனவாகவும் உள்ளன. இன்னுமின்னும் எழுதுங்கள்..பல்சுவை அம்சமாக உள்ளது உங்கள் ஒவ்வொரு படைப்புகளும். அன்று அா்த்முள்ள இந்து மதம் படித்தேன். இன்று உங்களின் ஒவ்வொரு அா்த்தமுள்ள படைப்பினையும் நன்கு ரசித்து உணா்ந்து பார்க்கிறேன்.கடவுளின் ஆசி என்றும் உங்களிற்குண்டாகட்டும். உங்கள் பணி மென்மேலும் தொடர கடவுளை வேண்டுகிறேன் காரணம்.. இவ்வுலக மடமையை நீக்கிய உங்கள் எழுதுகோலிற்கு நன்றிகள் பல!

மேலும் மனித உடலின் உள்ளுறுப்புகள் தாவர வகைகளை செரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.//
நம் பற்களும் தாவரவகைகளைச் சாப்பிட மட்டுமே வடிவமைக்கப்பட்டவையே!!

தமிழ்செல்வன்
11:37

மாமிசம் தின்பவனும் மனிதன்தான்..

yeah i accepted that

நெத்தி நிறைய நாமத்தைப் போட்டுக்கிட்டு இப்படியெல்லாம் பிளாக் போடலாமா? வாய் இருக்குதுன்னு சொல்லி எதை வேண்டுமானாலும் தின்று விடவேண்டியதுதானா? நீர் போடும் ஒவ்வொரு இடுக்கையிலும் சில உண்மைகள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரைவேக்காட்டுத் தனம்தான் விஞ்சியிருக்கிறது. எவ்வளவு பால் இருந்தாலும் அதில் ஒரு துளி விஷம் போதும், மொத்தப் பாலும் விஷமாகி விடும். நீர் எழுதுவதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உண்மைகள் இருந்தாலும், முடிவாக நீர் சொல்ல வருவது வைஷ்ணவ ஆசார்யர்கள் சொல்லியிருப்பதற்கு புறம்பாக இருப்பதால், நீர் சொல்லும் எதையும் ஏற்க இயலாததாக்கி [Unacceptable] விடுகிறது.

புலால் உணவை உன்னவேண்டாமேன்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் நேரிடையாகச் சொல்லவில்லை. ஆனால், நீ உண்ணும் உணவு அத்தனையும் எனக்கு அற்பித்துவிட்டு பின்னர் உண்ண வேடுமென்று சொல்கிறார். அவ்வாறு செய்யாவிட்டால் நீர் வெறும் வாழைப் பழத்தையே உண்டாலும் அதுவும் பாவம்தான் [BG 3.13]. அதற்க்கப்புறம், எதைஎதை எல்லாம் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் கூறுகிறார். அவை: ஒரு இலை, பூ, கனி மற்றும் கொஞ்சம் தண்ணீர் இவையெல்லாம் என்னால் ஏற்கத் தக்கவை என்கிறார்[BG 9.26]. எனக்கு கருவாடு, மீன், ஆடு, கோழி இதெல்லாம் பிடிக்கும் என்று பகவான் சொல்லியிருந்தால் அவற்றையும் தயக்கமில்லாமல் அவனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு நாமும் உண்ணலாம், ஆனால் அவன் அவ்வாறு சொல்லவில்லையே, பின்னர் மாமிசம் சாப்பிடுவதும், தவிர்ப்பதும் அவரவர் உடல் நலன் சம்பந்தப்பட்டது என்று நீர் பிரச்சாரம் செய்வது எதற்கு? நீர் என்ன ஆன்மீக வாதியா, இல்லை ஆங்கில மருத்துவரா? இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுவதற்கு மதத்தை எதற்கு உபயோகிக்கிறீர்? கலியுகத்தில் எல்லாவற்றிலும் போலிகள், நீர் மட்டும் என்ன விதி விலக்கா...? பாவம் உமது வாசகர்கள்.

yajna-sistasinah santo
mucyante sarva-kilbisaih
bhunjate te tv agham papa
ye pacanty atma-karanat [BG 3.13]

உண்ணும் உணவை எனக்கு நைவேத்யம் செய்த பின்னர் உண்பவர்களுக்கு எந்த பாவமும் சேருவதில்லை, அதை விடுத்து நாருசிக்காக உணவை தயாரித்து உண்பவர்கள் வெறும் பாவத்தையே உண்கிறார்கள்.

patram pushpam phalam toyam
yo me bhaktya prayacchati
tad aham bhakty-upahritam
asnami prayatatmanah [BG 9.26]

ஒரு இல்லை, பூ, ஒரு கனி மற்றும் கொஞ்சம் நீர் இவற்றை பக்தியுடன் அர்பணித்தால் அவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

@எடப்பாடி சிவம்

மிக அருமையாகச் சொன்னீர்கள், இந்த இடுக்கையின் ஆசிரியர் இடுக்கை போடுவதை நிறுத்திவிட்டு உங்களை போன்ற சான்றோர்களிடம் கொஞ்சம் நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டு பின்னர் வந்து போதனைகளை ஆரம்பிக்கலாம்.

மிக முக்கியமான ஆன்மிக நேசர்களுக்கான பதிவு

@Jayadev Das

ஐயா வணக்கம் தங்கள் தளத்தை சில நாள் படித்துவருகிறேன் Jayadev Das@ போன்ற கமெண்ட் வெளியிடுவதே விரும்ப வில்லை

நீங்கள் எழுதும் படைப்புகளுக்கும் அவர் எழுதும் கமெண்ட்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் கூறுவதை மறுத்து எழுதுவதாக நினைத்து கொண்டு லூசு மாதிரி எழுதி கொண்டு வருகிறார் தயவு செய்து இவருடைய கமெண்ட்டை வெளியிட வேண்டாம் குருஜி

இப்படிக்கு தங்கள் வாசகன்
சண்முககுமார்

@ சண்முககுமார்

அன்பரே, முதலில் கொஞ்சமாவது ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும், அப்புறம் வந்து இங்கே பேசும். எதுவுமே தெரியாமல் லூசு மாதிரி நீர் தான் உளறிக் கொண்டிருக்கிறீர்.

நான் எழுதியதில் எங்கே எப்படித் தவறு என்று ஆதாரத்துடன் கூற வேண்டும். நான் சொல்லியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன ஆதாரம் என்று பகவத் கீதையிலிருந்தே கொடுத்துள்ளேன். நீர் மறுக்க வேண்டுமானால் அதே வழியில் பகவத் கீதையிலிருந்தே ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். அதற்க்கப்புறம் யார் மறை கலண்டவர் என்று பார்ப்போம்.அன்புள்ள @Jayadev Das அவர்களுக்கு தயவு செய்து தங்களின் கருத்தை நாகரிகமாக எழுதவும்

சுவாமிஜி எழுதுவதில் தவறு இருந்தால் தவறை சுட்டி காட்டி தங்களின் கருத்தை தெரிவிக்கவும்

தங்களின் கருத்தில் நாகரிகம் அற்ற வார்த்தைகளை நீக்கி வெளியிட்டுள்ளோம் மீண்டும் இந்த தவறுகள் நேர்ந்தால் இந்த தளத்தில் வெளியிட மாட்டோம் மன்னிக்கவும்

என்றும் இறை பணியில்
சதீஷ் குமார்

@ சதீஷ் குமார்

அன்புடையீர், லூசு என்று எழுதுவது நாகரீகமா? நான் எங்கே தவறான வாதத்தை வைத்தேன் என்று எதையுமே சொல்லாமல், கீழ்த்தரமான மொழியில் எழுதியதை நீங்கள் அனுமதித்தனால் தானே நானும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளாலேயே பதிலளிக்க வேண்டி வந்தது? இப்போதும் சொல்கிறேன், நான் தவறாக எழுதியிருந்தால் பகவத் கீதையின் மேற்கோளோடு நிரூபிக்கட்டும், அதற்க்கப்புறம் லூசு டைட்டு எல்லா பட்டங்களையும் கொடுக்கட்டும். ஏற்றுக் கொள்கிறேன்.

அன்புள்ள@Jayadev Das அவர்களுக்கு தயவு செய்து இந்த வரியே படித்து பார்க்கவும்

@Jayadev Das அன்பரே, முதலில் கொஞ்சமாவது ஆன்மீகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும், அப்புறம் வந்து இங்கே பேசும். எதுவுமே தெரியாமல் லூசு மாதிரி நீர் தான் உளறிக் கொண்டிருக்கிறீர். நான் எழுதியதில் எங்கே எப்படித் தவறு என்று ஆதாரத்துடன் கூற வேண்டும். நான் சொல்லியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன ஆதாரம் என்று பகவத் கீதையிலிருந்தே கொடுத்துள்ளேன். நீர் மறுக்க வேண்டுமானால் அதே வழியில் பகவத் கீதையிலிருந்தே ஆதாரத்துடன் மறுக்க வேண்டும். அதற்க்கப்புறம் யார் மறை கலண்டவர் என்று பார்ப்போம். குத்துக் கல் எல்லாம் கடவுள் சிலை அல்ல, காவியுடித்தியவன் எல்லாம் ஆன்மீகத் துறவியல்ல, பிளாக் போட்டு அதில் ஆன்மீகத்தை பற்றி எழுதுபவன் எல்லாம் உண்மையான ஆன்மீக வாதியுமல்ல. ஆன்மீகத்தைப் பற்றிய அரிச்சுவடி கூட உமக்கோ உமது அரைவேக்காட்டு குருஜிக்கோ தெரியாது. தெரிந்திருந்தால் நான் சொன்னதில் என்ன தவறு என்று இந்நேரம் மறுத்து நீர் எழுதியிருக்க வேண்டும். லூசுகள் சில சமயம் மற்றவர்கள் எல்லோரும் லூசுகள் என்று நினைத்துக் கொள்ளும். நீர் அந்த ரகம்தான். தைரியமிருந்தால் கீதையின் மூலம் நான் சொன்னது என்ன தவறு என்று கூறும், ஏற்றுக் கொள்கிறேன். அதை விடுத்து மூன்றாம் தரமான வார்த்தைகளை இங்கே பிரயோகப் படுத்த வேண்டாம்.

@ சதீஷ் குமார்

தங்களது பதிலுக்கு நன்றி. திரு. சரவணக் குமார் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதால் கோபத்தில் நானும் சில வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். தங்களது வலை தளத்தில் பதிவுகளை தவறு என்று சவால் விடும் கருத்துக்களையும் மறைக்காமல் அனுமதிக்கிறீர்கள், அந்த நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. மற்றபடி கொள்கையளவில், சில விடயங்களில் நான் மாறுபடுகிறேன்.

1 . இறைவனுக்கு உருவமில்லை என்கிறீர்கள், அனால் அவனுக்கு உருவமுண்டு, சொல்லப் போனால் மற்ற யாரையும் விட அவன் அழகானவன். [கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து தானே அசந்து போகுமளவுக்கு அழகானவன்.]

2 . மாமிச உணவு அவரவர் விருப்பம் என்கிறீர்கள், அது இல்லை, இறைவனிடம் செல்ல வேண்டுமானால் புலால் தவிர்க்கப் பட வேண்டும்.

3 . மனிதனுக்கு பாவக் கணக்கு இல்லை என்கிறீர்கள், ஆனால் மனிதன் மட்டுமல்ல பிறவி எடுத்த எட்டு லட்சத்து நாற்பதாயிரம் வகை ஜீவராசிகளுக்கும் பாவக் கணக்கு இருக்கிறது. பாவக் கணக்கு இல்லையென்றால் ஒன்று அவர்கள் இறவன் வாழும் இடத்திற்க்குச் சென்று விடுவார்கள், இல்லாவிட்டால் இந்த மண்ணுலகில் எங்காவது இறைதூதராக மக்களை இறைவனை நோக்கிச் செல்லுமாறு வழிகாட்டும் வேலையைச் செய்துகொண்டு இருப்பார்கள்.

இவை அனைத்திற்குமே பகவத் கீதையில் ஆதாரம் உள்ளது. மற்றபடி தங்களுடன் விவாதம் செய்யும் எண்ணம் எனக்கில்லை. இயன்றால் இவற்றைத் தவறு என பகவத் கீதை மூலமாக யார் வேண்டுமானாலும் நிரூபிக்கட்டும்.

correction: //எட்டு லட்சத்து நாற்பதாயிரம் வகை ஜீவராசிகளுக்கும் பாவக் கணக்கு இருக்கிறது. //

Correctly: என்பத்து நான்கு லட்சம். 84,00,000

@Jayadev Das

சகோதரரே முதலில் எங்களது தளத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் குறிப்பிடும் பதிவில் இறைவன் உருவம் உடையவனாகவும் இல்லாதவனாகவும் தான் சொல்லப்பட்டிருக்கிறது அது கூட குருஜியின் சொந்தக்கருத்து அல்ல

பகவத்கீதையில் கண்ணன் தன்னை சகுண நிற்குண பிரம்மம் என்று சொல்வதைத்தான் சொல்லியுள்ளார்

சகுணம் என்றால் உருவம்
நிற்குணம் என்றால் அருவம்

என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்

மேலும் யாரையும் நாங்கள் அசைவம் சாப்பிடச் சொல்லி சிபாரிசு செய்யவில்லை

இந்துமதம் தனிமனித அபிலாஷைகளை கட்டுப்படுத்தவில்லை என்ற நோக்கில்தான் சொல்லிவுள்ளோம்

மனிதனுக்கு பாவக்கணக்கு கிடையாது என்பதல்ல குருஜியின் கருத்து மீளவே வழியில்லாத பாவியல்ல மனிதன் என்பதே கருத்து இந்துமதத்திலுள்ள எல்லாக்கத்துக்களும் ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லுவதே குருஜியின் இயல்பு

நீங்கள் கருப்பு கண்ணாடி போட்டு பச்சையை பார்த்தாலும் மஞ்சளாகத்தான் தெரியும்

சமயம் சார்ந்த உயரிய கருத்துக்களை பேசும் போது நமது சுயவிருப்பு வெறுப்புகளை கடந்தே பேசவேண்டும் என்பதே எங்கள் குருஜியின் கொள்கை மேலோட்டமாக அல்ல ஆழமாக சிந்தியுங்கள் உண்மைப் புலப்படும்

//பகவத்கீதையில் கண்ணன் தன்னை சகுண நிற்குண பிரம்மம் என்று சொல்வதைத்தான் சொல்லியுள்ளார்//ஆன்மீக பிளாக் நடத்துறீங்க, விளக்கம் குடுக்குறீங்க, ஆனால் பகவத் கீதையில் சொல்லியிருக்குன்னு எந்த அத்தியாயம், எத்தனையாவது ஸ்லோகம் என்று ஒன்னுமே இல்லாம மொட்டையா சொல்றீங்களே? நீதி மன்றங்களில் வக்கீல், "என் மனசுல இவன் பண்ணியது தப்பு" என்றோ அதைக் கேட்டு விட்டு நீதிபதி, ஆமாம் சரிதான், இவனை 14 வருஷம் உள்ளே தள்ளனும்னு நான் நினைக்கிறேன் என்றோ சொல்கிறார்களா? எதை ஆதாரமாக வைத்து வாதிடுகிறார்கள்? நாட்டின் அரசு உருவாக்கியுள்ள சட்ட புத்தகங்களில் இருந்து தானே? இ.பி.கோ இன்னின்ன செக்சன் படி இவன் குற்றவாளி/நிரபராதி, அதற்க்கு தண்டனை என்ன என்றுதானே நீதிபதியே கூட கூறுகிறார். நீங்க போடும் பதிவுகளுக்கு அப்படி ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா, இல்லை சொந்த விருப்பு, வெறுப்புகளை எழுதுகிறீர்களா? என்ன அடிப்படை என்று கூற முடியுமா?

\\சகுணம் என்றால் உருவம்
நிற்குணம் என்றால் அருவம் \\

இறைவன் உருவத்துடனும், உருவமில்லாமலும் இருப்பார் என்கிறீர்கள், ஆனால்
\\மேலும் கடவுளை உருவமற்றவனாக எங்கும் நிறைந்தவனாக காண்பது எல்லாம் சாதாரண மனிதர்களால் முடியவே முடியாத விஷயமாகும்.\\ இறுதியில் அவனுக்கு உருவம் கிடையாது என்று கூறுவது எந்த அடிப்படையில்? ஏன் உருவமுள்ள நிலையானது அருவ நிலையை விட உயர்ந்ததாக இருக்கக் கூடாது? இதற்க்கு அடிப்படை என்ன?

\\அது நம்மை மாமிசம் உண் என்றும் சொல்லவில்லை.\\

\\உண்ணாதே என்று தடுக்கவும் இல்லை.
எனவே அசைவம் சாப்பிடுவதும் சைவம் சாப்பிடுவதும் மத விஷயம் அல்ல. மருத்துவ விஷயமேயாகும்.\\மாம்சா என்ற வார்த்தையின் பொருள் : மாம் என்றால் நான் சா என்றால் நீ. மாம்சா என்றால் இன்று நான் உன்னை உண்கிறேன், எதிர்காலத்தில் நீ என்னை உண்ணலாம். இப்படி ஒரு மந்திரத்தை பலியிடும் மிருகத்தின் காதில் சொல்லி பலியிட்டு உண்ண வேண்டும், ஆனால் அத அர்த்தம் புரிந்தவன் அதை உண்ண முன் வருவானா? இந்த வகையில் மாமிசத்தை கைவிட வேண்டும் என்பதே நோக்கம். நீ என்ன வேண்டுமானாலும் அடித்து தின்னு உடம்ப மட்டும் நல்லாப் பாத்துக்கோ என்பது அதன் அர்த்தமல்ல. ஒரு ஆன்மீக குரு என்பவர் கசக்கும் உண்மையையும் தயங்காமல் கூற வேண்டும். புலால் உண்பதால் பின் பிறவிகளில் மிருகமாகி வெட்டுப்பட்டு சாக நேரிடும் என்ற ஆபத்தைக் கூற வேண்டும், அதை விடுத்து சீடர்கள் மனம் கோனுமே என்று உண்மைக்கு புறம்பானதை கூறக் கூடாது.

//இந்துமதம் தனிமனித அபிலாஷைகளை கட்டுப்படுத்தவில்லை என்ற நோக்கில்தான் சொல்லிவுள்ளோம்.// இது உங்களது அபிலாஷையாக இருக்கலாம், ஆனால் உண்மையில்லை. வாழ்வை நெறிப் படுத்துவதே மதம். தனி மனிதன் என்ன வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு இருந்துக்கோ என்று ஒரு மதமும் சொல்லவில்லை. ஒவ்வொரு மதமும் இடம், காலம், சூழ்நிலையைப் பொறுத்து கட்டுப் பாடுகளை விதிக்கிறது. நான்கு பெண்களுக்கு மேல் மனம் முடிக்காதே என்கிறது ஒரு மதம், பெண்ணை நினைத்து ஏங்குவதை விட கல்யாணம் பன்னி வாழ்வது மேல் என்கிறது இன்னொன்று, ஒரு குழந்தையை பெறுவதற்கு மட்டுமே உடலுறவு கொள்ள வேண்டும் என்கிறது மற்றொன்று. ஆக ஒவ்வொன்றும் ஏதாவதொரு வகையில் கட்டுப் படுத்தி நெறிப் படுத்தவே முயல் கிறது. அப்படி எந்தக் கட்டுப் பாடுமில்லாமல் சொந்த அபிலாஷைப் படி காட்டில் வாழும் மிருகம் மட்டுமே வாழும், நாகரீகமடைந்த மனிதன் அவ்வாறு வாழ மாட்டான்.

yada samharate cayam
kurmo ’nganiva sarvasah
indriyanindriyarthebhyas
tasya prajna pratisthita [B.G. 2.58]

ஆமை எவ்வாறு தேவைப் படும் போது தனது உடலுருப்ப்களை பயன்படுத்தி விட்டு தேவையில்லாத போது உள்ளிழுத்துக் கொள்கிறதோ அது போல ஒருவன் இந்திரியங்களை அடக்கியாள வேண்டும். [சொந்த அபிலாஷைப் படி என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியாது.]

//குருஜியின் கருத்து மீளவே வழியில்லாத பாவியல்ல மனிதன் என்பதே // Accepted.

//நீங்கள் கருப்பு கண்ணாடி போட்டு பச்சையை பார்த்தாலும் மஞ்சளாகத்தான் தெரியும்.// இதை நீங்கள் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும். உங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு இங்கு இடமில்லை. நான் கருப்பு கண்ணாடி போட்டிருக்கிறேன் என்று கருப்பு கண்ணாடி போட்ட அறைக்குள் இருட்டில் உட்கார்ந்து கொண்டு நீங்களாக சொல்லக் கூடாது.

//சமயம் சார்ந்த உயரிய கருத்துக்களை பேசும் போது நமது சுயவிருப்பு வெறுப்புகளை கடந்தே பேசவேண்டும் என்பதே எங்கள் குருஜியின் கொள்கை மேலோட்டமாக அல்ல ஆழமாக சிந்தியுங்கள் உண்மைப் புலப்படும்.// இஷ்டத்துக்கும் எதையாவது அள்ளிவிட்டு விட்டு, கூட்டி கழிச்சு பாரு கணக்கு எல்லாம் சரியாத்தான் இருக்கும் என்று குத்து மதிப்பாக பேசக் கூடாது.

Balamurugan78
20:30

unmaiyil asaivathivida saivathil miguntha nambikkai undu


Next Post Next Post Home
 
Back to Top