( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கலைஞரின் குரு ஏற்ற கடவுள் !

   ன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வாசகத்தை கலைஞர் கருணாநிதியின் குருவான அண்ணாத்துரையும் ஒருகட்டத்தில் ஏற்றுக் கொண்டார்

கடவுள் ஒருவர் என்பதிலும் அவர் எங்கும் இருக்கிறார் என்பதிலும் சில அதிமேதாவிகள் தவிற வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை

எங்குமிருக்கும் இறைவனை கோயிலுக்கோ சர்ஜ்க்கோ மசூதிக்கோ சென்றுதான் வணங்க வேண்டுமா?

எந்த இடத்தில் வேண்டுமானாலும் வணங்க கூடாதா என பலருக்குத் தோன்றும்

அப்படித்தான் வணங்க வேண்டுமென எந்த மதமும் கட்டாயப்படுத்த வில்லை

ஆனால் பாலை உற்பத்தி செய்யும் சக்தி பசுவின் உடல் முழுவதும் இருக்கிறது.

அதன் காது தொடங்கி வால் நுனி வரையில் பாலுக்கான அணுக்கள் நிரம்பியிருக்கிறது.

அதற்காக பசு காதுகளை பிடித்து பால் கறந்து விட முடியுமா?

காம்புகளை பிடித்து கறந்தால் தான் பால் கறக்க முடியும்.

பகல் பொழுதில் சூரிய வெளிச்சம் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது என்பதற்காக பஞ்சு பொதியை வெயிலில் தூக்கி போட்டால் நெருப்பு பிடித்து எரியுமா?

சூரியகாந்த கண்ணாடிக்கு கீழ் பஞ்சை வைத்தால் தான் நெருப்பு பிடிக்கும்.

அதே போலத்தான் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஆனால் வழிபாட்டு தலங்களில் விஷேஷமாக வெளிப்படுறகிறார்.

நமது வீடுகளிலும், அலுவலகங்களிலும், வெளிப்புறங்களிலும் பல்வேறுபட்ட எண்ண அதிர்வுகள் நிறைந்தியிருக்கிறது.

நமது துக்கமும், சந்தோஷமும், அகங்காரமும், காதுக்கு கேட்காத அதிர்வுகளாக இந்த பகுதிகளில் நிறைந்திருப்பதனால் தான் நமது மனம் இங்கு எல்லாம் அமைதி அடைவது இல்லை.

ஆலயத்தில் கொள்ளையடிக்க வந்தவன் கூட ஒரு கணமேனும் இறை சிந்தனைக்கு ஆட்படுவான்.

பல்வேறுபட்ட மக்கள் தங்களது பயபக்தியாலும் புனித எண்ணங்களாலும் ஆலயத்தை பரிசுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

எனவே அங்கிருந்து வெளிப்படும் இறை சக்தியை மிக சுலபமாக நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எல்லாம் சரி கடவுள் ஒருவர்தனே நமது எல்லா விதமான தேவைகளுக்கும் அவர் ஒருவரிடமே வேண்டிக் கொள்ளலாமே

அதை விட்டுவிட்டு படிப்பு வர ஒரு சாமி நோய்போக வேரொறு சாமி என்று வணங்க வேண்டும் என்றும் சிலருக்குத் தோன்றக் கூடும்

நமது நாடு முழுவதும் ஜனாதிபதியின் ஆட்சிதான் நடைபெறுகிறது.

நாட்டின் ஒவ்வொரு அசைவுமே அவரது அதிகாரத்திற்கு உட்ப்பட்டது தான்.

பிரதம மந்திரியும் முதலமைச்சர்களும் இதர பிரதிநிதிகளும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க உள்ளவர்கள்.

அதற்காக கிராம பஞ்சாயத்தின் ஆண்டு வரவு செலவை ஜனாதிபதியா வந்து தீர்மானிக்க முடியும்?

அதற்கு என்று இருக்கும் தனித்தனி அலுவலர்கள் தான் அதை செய்ய வேண்டும்.

ஆயினும் ஊர் தலையாரி கூட ஜனாதிபதி அதிகாரத்தின் ஒரு சிறு கூறுதான் என்பதை நாம் மறக்க கூடாது.

கடவுளும் ஒருவர் தான். எல்லாம் வல்லவர் தான். ஆனாலும் அவரது அதிகார அம்சங்களாக பல தேவதைகள் பல காரியங்களை செய்கிறார்கள்.
     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 11 comments

வணக்கம் குருஜி. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். இந்த காலத்தில் எந்த துறையை எடுத்தாலும் அதற்கு பல பிரிவுகள் இருக்கிறது. சாதாரண காய்கறி மார்க்கெட்டில் எத்தனை விதமான காய்கறி இருக்கிறது. நமக்கு சாதகமான விஷயங்களை ஒத்துக்கொள்ளும்போது, கடவுள் ஒருவர் மட்டும்தான் அவருக்கு பல உருவம் கிடையாது என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் கடவுளிடத்தில் நம்பிக்கை வைக்கும் போது நமது மனம் லேசாகிவிடுகிறது. எனவே கடவுள் ஒருவரே என்று ஆரம்பத்தில் பக்கும் வந்தால் நல்லது. இல்லையேல் எல்லாக்கடவுளையும் கும்பிட்டாலும் தெளிவு வந்தால் சந்தோஷம் தான். மிக்க நன்றி குருஜி.

மிகவும் தெளிவு பெற்றேன்,
நன்றி குருஜி.

மிகவும் தெளிவுற்றேன்,
நன்றி குருஜி

Anonymous
12:08

loosu ji

என்ன சார் ஆனது உங்களுக்கு,சத்தியமாய் உங்களின் ஒரு பதிவின் மேல் கூட எனக்கு ஈர்ப்பு வந்ததில்லை,ஆனால் உங்களின் மேல் மதிப்பு அதிகமுண்டு,காரணம் உங்களின் போதுச்செவை,எத்தனையோ
வீணாய்போன பகுத்தறிவு பதிவர்களைவிட,மனிதனாய் பிறந்ததின் பலனாய் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்வதால் உங்கள் மதிப்புண்டு,,ஆனால் சமிப காலமாய் உங்களின் பதிவுகள் அறைவேர்காடு தனமாய் இருக்கிறது நேற்றைய பதிவு உள்பட,சத்தியமாய் நான் இதை உன்களை கொபமூட்டுவதற்கோ
மட்டம் தட்டுவதற்கோ எழுதவில்லை,உங்களுக்கு சம்பந்த பட்டதையே படித்து எழுதாமல் நிறைய பொதுவிசயங்களை படித்து
எழுதுங்களேன்,இறவனுக்கும் அல்லக்கைகள் இருக்கிறது என்கிற பாணியில் தயவு செய்து எழுதாதீர்கள்,, பருங்கள் யாரோ ஒரு அனானி உங்களை லூசுஜி என்று சொல்லியிருக்கிறார்,,இதை எல்லாம் நீங்கள் சற்று அறிவுப்பூர்வமாய் எழுதுவதில் மூலம் தவிற்கலாமே சார் ,,முடிந்தால் consider பன்னுங்களேன்

Anonymous
09:25

அதெல்லாம் குருஜி சரியான பாதையில்தான் செல்கிறார்.யாரும் அவருக்கு உபதேசிக்கவேண்டாம்@moulefrite

VISWAM
20:33

அருமை

arun_v76
20:33

சூப்பர்!உண்மையான வார்த்தைகள்

Anonymous
21:21

எங்கும் இருக்கும் கடவுள் ஏன் தவறு செய்பவர்களை தண்டிப்பதில்லை.

பாலை உற்பத்தி செய்யும் சக்தி பசுவின் உடல் முழுவதும் இருக்கிறது. அதன் காது தொடங்கி வால் நுனி வரையில் பாலுக்கான அணுக்கள் நிரம்பியிருக்கிறது. அதற்காக பசு காதுகளை பிடித்து பால் கறந்து விட முடியுமா? காம்புகளை பிடித்து கறந்தால் தான் பால் கறக்க முடியும். நல்ல உதாரணம் ஆனால் அதுவும் எல்லா காலத்திலும் முடியாது!

கடவுள் என்று ஒன்று இல்லை என்பதிலும் உங்களை போன்ற சில அதிமேதாவிகள் தவிற வேறு யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பிரார்த்தனையினால் ஒன்றும் கை கூடாது என்பதை நன்றாக தெரிந்தும் பிரார்த்தனை செய்யச்சொல்லி மக்களை ஏமாற்றுவீர்கள். பிரார்த்தனையின் மூலம் உலகில் மத சண்டை சச்சரவுகளை ஒழிக்க முடியுமா?

என் கடவுள் உயர்ந்தவர் என்ற எண்ணம் அதிமேதாவிகளிடத்தில் திகழ யார் காரணம்?

உலகில் நடந்த பல சண்டை சச்சரவுகளுக்கு கடவுள் பக்தியே/ மத நம்பிக்கையே இதற்கு உங்கள் பதில் ??


Next Post Next Post Home
 
Back to Top