( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்

  ல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது

பெரிய பணக்காரர்களுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கும் முன்வரிசை தரப்படுகிறது

ஏழைகள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்

ஆண்டவனின் சன்நிதானத்தில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படலாமா? இது சரிதானா? என்ற கொதிப்பு பலருக்கு உண்டு

இந்த மாதிரியான செயல்களை சுட்டிக்காட்டியே பலர் இந்து மதம் என்பதே மனிதர்களை தரம்பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து கீழே தள்ளுகிறது என விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள வேற்றுமைகள் ஏற்றத் தாழ்வுகள் ஆத்மாவின் தன்மையை பொறுத்ததே தவிர உடலை பொறுத்தது அல்ல.

உடல் நிலையில்லாதது அழியக் கூடியது என்றே நமது மதம் கூறுகிறது.

உடலை சார்ந்த நிறம், சாதி, குடும்ப பாரம்பரியம், செல்வ நிலை ஆகியவைகளுக்கு மதிப்பளிப்பதை நமது மத சாஸ்திரங்கள் ஏற்றுக் கொள்வதே கிடையாது.

 ஒருவனது திறமைக்கு பாராட்டும் பதக்கமும் கிடைக்கும் போது அவன் எந்த சாதியை சேர்ந்தவன் எத்தகைய செல்வாக்கு உடையவன் என்ற யாரும் பார்ப்பது கிடையாது.


அவனது தனிதிறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இது சமூக வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

அரசியல் தலைவர்களுக்கு முதலிடம் கொடுப்பதும் நிறைய பணம் கிட்டியவனுக்கு சிறப்பு தரிசனம் வழங்குவதும் ஆண்டவன் சந்நிதானத்தை அவமானம் படுத்துவதாகும்.

கடவுள் முன்னால் கோவணம் கட்டியவனும் கோமகனும ஒன்று தான்.

சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா முஸ்லிம்களுக்கு புனித ஷேத்திரம் என்பது நமக்கு தெரியும்.

மெக்காவிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேரத்தில் சவுதி அரேபிய மன்னரே தாமதமாக வந்தால் கூட அவருக்கு கடைசி இடம் தான் கொடுக்கப்படும்

ஒரு சாதாரண குடிமகன் முன் வரிசையிலும் அரசன் பின் வரிசையிலும் கடவுள் முன்னால் நிற்க வேண்டும் என்ற கொள்கை யாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதை எந்த மக்கள் பின்பற்றினாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே ஆவார்கள்.

இஸ்லாம் மதத்திலுள்ள இந்த சிறப்பு தன்மை நமது வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் நந்தனார் கதையை பாடியுள்ளதை கோபால கிருஷ்ண பாரதியார் சற்று மாற்றி பாடியுள்ளார்.

மூலக்கதையில் நந்தனார் தீ குளிப்பதற்கு முன்னால் அவரை அந்தணர்கள் போற்றி புகழ்ந்ததாகவும் மிகுந்த மரியாதையுடன் சந்நிதிக்கு அழைத்து சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பல வடமொழி சங்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஆலையத்திற்குள்ளும் இலக்கிய மன்றங்களிலும் மக்களும் மன்னரும் ஒரே தரமானவர்களாகவே மதிக்கப்பட்டுள்ளதாக பல ஆதாரக் குறிப்புக்கள் உள்ளன

இதை வைத்து பார்க்கும் பொழுது பண்டைய கால இந்து மதத்தில் அனைவரையும் சமம் என பார்க்கும் மனோபாவம் இருந்ததாக தெரிகிறது.

தற்போது தான் மனங்கள் செல்லரித்து போய் வக்கிரமாக மாறிவிட்டது

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 30 comments

வணக்கம் குருஜி. இந்தியாவை பொறுத்தவரை கடவுளை கோயிலில் போய் வழிபடுவதற்கு, பல பேருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. என்னை பொறுத்தவரை மனம் என்ற கோவிலில் உள்ள கடவுளை உணர்ந்தால் அதுவே போதுமானது. மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்பது போல் மனதில் கடந்து உள்ளே சென்றால் அதுவே பெரிய விஷயம். எத்தனை கும்பல்கள் கோவிலில் இருந்தாலும் நாம் தனிமையில் கடவுளை ஒரு நிமிடம் பார்த்தாலே ஆயிரம் மடங்கு இன்பம் வரும். மிகமிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

ஆகா என்ன ஒருபல்டி, யோவ் முஸ்லீம்க்கள் காய்ச்சி எடுக்கிறாங்கன்னு உடனே அவங்களப் புகழ்ந்து ஒருபதிவு போட்டு தாஜா பன்றியா? நீயெல்லாம் ஒரு சாமியாரா, உன்னைப்போல மதத்தை வைத்து அரசியல் பண்ணும் சாமியார்களை இந்து மதத்தை விட்டே ஓட வைக்க வேண்டும். இல்லைன்னா இந்து மதம் இன்னும் கெட்டு போகும். ஒழுங்கா சாமி ஆன்மீகம், ஆன்மா, பரமாத்மா வாழ்க்கை நெறிகள் ன்னு எழுதிட்டு போகாமா என்னாயா அரசியல் பன்ற. உன்னை போலிச்சாமின்னு சொல்றது சரிதான். ஒழுங்கா சாமிய பத்தி தத்துவங்களைப் பத்தி மட்டும் பேசு. மத விளையாட்டு விளையாடப்பாத்தைன்னா மக்கள் உன்னை நிராகரிப்பாங்க!

ஐயா வணக்கம் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் மிகவும் அருமை

@hayyram

hayyram சாமி ஆன்மீகம், ஆன்மா, பரமாத்மா வாழ்க்கை நெறிகள் இப்படி எழுதியவர்களின் எத்தனையோ புத்தகங்கள் மலிந்து கிடக்கிறது

அதே அளவுக்கு மனிதர்களின் காம எண்ணங்களும் பழிவாங்கும் எண்ணங்களும் மலிந்து கிடக்கிறது

hayyram நீங்கள் எதிர்பார்க்கும் ஆன்மா, பரமாத்மா போன்ற உயரிய நிலைகளை நேரடியாக எழுதுவதினால் நடிகர் கமலின் வார்த்தைகள் போன்று புரியாமல் மறந்து விடும்

2011 ம் வருட மக்களின் எண்ணங்களின் ஏற்ப ஆன்மீகங்களை எழுதக்கூடியவர்கள் வீரல் விட்டு எண்ணி விடலாம் அதில் குருஜியும் ஒருவர்

முஸ்லீம்க்கள் காய்ச்சி எடுக்கிறாங்கன்னு உடனே அவங்களப் புகழ்ந்து ஒருபதிவு போட்டு தாஜா பன்றியா?

நீங்கள் கேட்ற்கும் கேள்விகள் சரிதான் நேற்றும் இன்றும் தான் தங்களின் கமெண்ட் படித்துவருகிறேன் இந்த தளத்தி பற்றி முதலில் புரிந்து கொள்ளுங்கள் அதற்க்கு பிறகு ஆன்மா, பரமாத்மாபோன்ற விஷயங்கலை புரிந்து கொள்ளலாம்

நான் படித்த மட்டில் 2011 ல் மூன்று மதத்தில் உள்ள கருவை புரிந்த ஒருவர் இவர் மட்டும் தான்

தயவு செய்து குருஜி படைப்புகளை படித்து விட்டு கமெண்ட் எழுதுங்கள்

Anonymous
09:04

கடவுள் முன்னால் கோவணம் கட்டியவனும் கோமகனும ஒன்று தான் சரியாக சொன்னிர்கள் ஐயா

இஸ்லாம் மதத்தில் உள்ள பல சிறப்புகளில் தாங்கள் சொல்லியிருப்பது, மிகவும் முக்கியமானது மட்டுமில்லாமல் அனைவராலும் மறுக்க இயலாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஓன்று. இந்து மதத்தில் உள்ள மிகப் பெரிய முரண் பாடு இது தான். " காசு உள்ளவன் கடவுளை பக்கத்தில் பார்க்கலாம், இல்லாதவன் கடைக்கோடியில் நின்றுதான் பார்க்க இயலும்" இந்த நிலை மாற வேண்டும்..... மாறுமா ???????????

நீங்கள் சொல்வது மிகவும் புரிந்து கொள்ளவேண்டிய நடை முறை ஒழுக்கத்தில் சேர்க்கவேண்டிய விட்டுப்போன பழமை உண்மை .இதுவே கோயில் கட்டுபாட்டர்களால் கவனிக்க வேண்டிய கடமையும் ஆகும் .
சில கோயில் இது எங்கள் வசம் என எழுதிபோடாத குறையாக சிலரின் கட்டுபாட்டில் உள்ளது .
அவர்களின் ஆணவத்தின் முன் கடவுள் கட்டுப்பட்டவராக தவறான எண்ணமாக ஆகிவிடலாம்

இஸ்லாம் மதத்திலுள்ள இந்த சிறப்பு தன்மை நமது வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.//
இஸ்லாம் மதத்தின் இந்த சிறப்புத் தன்மையாலேயே பாலைவன நாடு சோலைவனமாக மாறி இருக்குமோ என்று எண்ணம் எழுந்தது உண்டு.

Anonymous
10:38

திரு hayyram அவர்களுக்கான பதில். நான் குருஜி அவர்களுடன் மிக சில நாட்களாக தொடர்பு கொண்டு இருக்கிறேன். அவரின் கருத்து பெரும்பாலும் இந்து மதம் சார்ந்தே இருந்தாலும் தான் சார்ந்த மதம் நல்லபடியாக மக்களிடம் போய் சேர வேண்டும் எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கும். தன்னிடம் விளக்கம் கேட்கும் இஸ்லாமிய அன்பர்களுக்கு அவர்களின் மதம் சார்ந்தே விளக்க அளிப்பார் பிரச்சினைகளுக்கும் அவர்களின் மதம் சார்ந்தே பதில் அளிப்பார்.
ஆனால் அவர் என்றும் தான் ஒரு இந்து என்ற வகையில் தான் இருக்கும் இல்லம் (மதம்) சுத்தமாக இருக்க வேண்டும் என்றவகையில் மட்டும் பதில் அளிப்பார்.
எதோ ஒரு சின்ன விசயத்திற்கு இஸ்லாம் சார்ந்து விளக்கம் அளித்ததற்கு இப்படி சீறி விழும் தாங்கள் அவரின் கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை என்பதனை படிக்கும் அனைவரும் அறிந்தே உள்ளோம். (கோவில் தரிசனத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு பதில் இல்லை). நான் அறிந்த அளவில் உங்களின் blog இல் உயர் சாதி இந்துக்களை தூக்கி பிடித்தும் இஸ்லாமிய துவேசம் கொண்டுமே எழுதுவிர்கள். அதுவும் எமக்கு தெரியும்.
Mohamed Ismail

நல்ல பதிவு!
நல்ல விஷயம் எங்கே இருந்து கிடைத்தாலும் அதை கற்பது தவறில்லை.

நல்ல பதிவு . உரியவர்கள் சிந்திக்கவேண்டும்

@hayyram :

பண்பாகப் பேசவும் எழுதவும் தெரிந்தவனே உண்மையான மனிதன் உமக்கு இங்குள்ள கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்றால் அதனைத் தெரிவிக்கும் பண்பு வேறுவிதமானது. மனிதனாக வாழுங்கள் பின்பு மதம் பற்றிச் சிந்திக்கலாம். ஆன்மீகத்தின் அடிப்படை தெரியாதவர் நீர்.

R Thevathi
15:35

நானே கண் கூடாக கண்டது, பெருமாள் கோவில்களில் விசேஷ காலங்களில் மக்கள் கூட்டம் அவ்வளவு இருக்கும். அப்படி இருந்தும் அந்த அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பூஜை முடிந்தவுடன், தனது ஆட்கள் அதாவது பிராமணர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி சென்று பிராமண பெண்களையும் தேடி ஆண்டவன் பிரசாதத்தை முதலில் அவர்களுக்கு கொடுத்த பின்னரே மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுவதாகவே நான் நினைக்கிறேன். அப்போது நமக்கு கோபம் பயங்கரமாக வரும். அதை கட்டுப்படுத்திக் கொண்டு, அவர்களை மன்னித்து விடும்படி அந்த கடவுளை நான் வேண்டிக் கொள்வேன். இப்படி ஒரு சாதாரணமான விஷயம் கூட தெரியாத பிராமணர்கள் நம்முடன் இருப்பதை விட அந்த கடவுளிடம் இருப்பதே சிறந்தது. இதை அடிப்படையாய் வைத்து தான் அந்த பிராமணர், தங்களிடம் பிராமணர்கள் மட்டுமே கடவுளை சென்று அடைகிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று நான் நினைக்கின்றேன். இது மாதிரி எண்ணம் கொண்ட ஆட்கள் எல்லாம் கடவுளிடம் மட்டும் தான் நிரந்தரமாக இருக்கவேண்டுமே தவிர மனிதர்களாக வாழும் நம்மிடையே இல்லை! !

st.mannan
16:40

.இஸ்லாமில் வழிபடும் உத்தி வேறுவிதமானது .பள்ளிவாசலில் ஏறினேன் உருவமோ மற்றோன்ற்றுமோ அன்குஎல்லை அதனால் தான் அவர்களுஹு வரிசை பழக்கம் மட்டுமே உள்ளது .இந்துமதத்தோடு மற்ற மதங்களை ஒப்பிடுவதில் அர்த்த மே சரிவராது
மதங்களை பற்றியும் அதன் சரியான நடவடிக்களை பற்றியும் நாம் Eண்ணமும் முழுமையாக தெரிந்துகொள்ளவேன்ன்டும் .ellaakoil களிலும் தனிதனி நடைமுறைகள் கைகொள்ளபடுகின்றன .உணவு பழக்கத்தின் காரணம்மaககூட முன்பு chila விதிமுறைகள் நம்நாட்டில் இந்துkoiல்களில் இருந்துவந்தது .அது தற்போது மாறிவிட்டது .ஹிந்து மதத்தில் சில கலாச்chaரனடவடிகைளின் காரணமாஹி தங்களின்வழ்வாத்ரா முன்னேட்ட்ரத்தில் மக்களுக்கு ஆர்வதைதுண்டும் வஹயில் தங்கள் முன்னேர்த்ற்றம் எப்பdiபட்ட தாக வேண்டும் என்ன்று உணந்துகொண்டு தியானிக்கும் எண்ணமும் பழக்கமும் ஏற்பட இந்ந்தமுறை உதவும் .
இஸ்லாமில் வழிபடும் உத்தி வேறுவிதமானது . .இந்துமதத்தோடு மற்ற மதங்களை ஒப்பிடுவதில் அர்த்த மே சரிவராது தயவுசெஎது ஒப்பிடவேண்டாம்.

sir,if i want to visit a temple i simply close my eyes,wish it and in my heart and mind the temple will be visible in totality[provided if i would have visited at least once] and from the Nantheeswarar to the Siva's lingam one after another will be visible and i worship him ,i wont demand anything ,i surrender myself and he knows what to do and what not to do and if i visit physically it will be more or less picnic like and i Don't mind if i could see the god in person due to heavy crowd,its enough if i could reach the temple

//(கோவில் தரிசனத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு பதில் இல்லை). நான் அறிந்த அளவில் உங்களின் blog இல் உயர் சாதி இந்துக்களை தூக்கி பிடித்தும் இஸ்லாமிய துவேசம் கொண்டுமே எழுதுவிர்கள். அதுவும் எமக்கு தெரியும்.// இந்து மதக்கோவில்கள் ஒரு காலத்தில் ஜாதிகளால் ஏற்றத்தாழ்வுகள் இருந்தது உண்மை. ஒரு பெரிய பிரளயகாலப் போராட்டத்திற்குப் பிறகு அவற்றை விரட்டியடித்தார்கள் பெரியோர்கள். அந்த புரட்சி எங்களால் தான் நடந்தது என்று மார்தட்டிக் கொள்பவர்கள் திராவிட கட்சிக்காரர்கள். ஆனால் அவர்கள் கையில் தான் இன்றைக்கு கோவில்கள் இருக்கின்றன. ஜாதியால் ஏற்றத்தாழ்வை நீக்கிய அவர்களே தான் இன்று பணத்தால் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி இருக்கிறார்கள்.

எந்த இந்துவும் கோவிலுக்குள் பணம் வசூலிக்கும் முறையை விரும்புவதே இல்லை. நாத்திகர்கள் கையில் கோவில்கள் சிக்கி சின்னாபின்னப்படுகிறது. இதில் முஸ்லீம்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது. முதலில் முஸ்லீம்கள் கோவிலெல்லாம் முஸ்லீம்களிடம் இருக்கிறது. இந்துக்கோவிகளெல்லாம் நாத்திகர்களின் பிடியில் தான் இருக்கிறது என்பதை உங்கள் குருஜி புரிந்துகொள்ள வேண்டும். அதை மீட்டெடுக்காமல் எப்படி இந்துக்கள் கோவில் பற்றிய முடிவுகளை எடுக்க முடியும். மேலும் இந்து கோவில் வருமானங்களை அரசாங்கம் அனைத்து துறைகளுக்கும் ஏன் மற்ற மதத்தினர் கோவில்களுக்கும் பகிர்ந்து கொள்வது தெரிந்தது தானே! முழு உண்டியல் வசூல்களையும் இந்து கோவில்களுக்கே அரசு செலவு செய்தால் சாமி தரிசனத்திற்கு டிக்கெட் விற்க வேண்டிய அவசியமே இருக்காதே! எல்லாரும் ஒரே வரிசையில் ஒரே தூரத்தில் தரிசனம் செய்யலாமே! இதில் உண்டியல் காசை எண்ணும் பொழுதே பெரிய நோட்டுக்களை ஒதுக்கும் வேலையும் நடக்கிறது. இப்படி இந்துக்கள் கையில் அதாவது கோவிலின் மீது மரியாதை உள்ளவர்கள் கட்டுப்பாட்டில் இந்துக்கோவில்கள் இல்லாத போது , அரசாங்கமே கோவில் சாமியை வைத்து எக்ஸிபிஷன் நடத்தி வியாபாரம் பார்க்க துணியும் போது இந்துக்கள் என்ன செய்யமுடியும்? இதில் முஸ்லீம்களிடமிருந்து பாடம் கற்கவேண்டும் என்கிற வார்த்தைக்கு என்ன அவசியம். எந்த வித கூட்டமும் இல்லாத சாதாரண கோவில்களில் கருவரை பக்கத்திலேயே நின்று பார்க்கவும் தான் நம்மால் முடிகிறதே! பணம் வரும் இடத்தில் அரசியல் வருகிறது. இதில் இந்துக்களை யாரிடம் பாடம் கற்கச்சொல்லுகிறார் இந்த சாமியார்? அரசாங்கம் இந்துக்களின் பார்லிமென்டரி ஒன்றை அமைத்து அந்தக் குழுவினர் மூலமாக கோவிலை நிர்வகிக்கச் செய்தால் நாம் நினைக்கும் மாற்றத்தை வரவழைக்க முடியும். இப்படி பிரச்சனைகளின் ஆதாரத்தைப் புரிந்து கொள்ளாமல் வெறும் ஹிட்ஸுக்காக பதிவெழுதி இந்துக்களை பாடம் வேறு கற்கச் சொல்லுகிறார். கொடுமை!

//மனிதனாக வாழுங்கள் பின்பு மதம் பற்றிச் சிந்திக்கலாம். ஆன்மீகத்தின் அடிப்படை தெரியாதவர் நீர்.// ஆம், மரியாதைக்குரிய கீதையை 'கொலைகார நூலா'? என்று தலைப்பிட்டு சீப்பான ஒரு விளம்பரத்தை தளத்திற்கு கொண்டுவருதல் தான் ஆன்மீகத்தின் அடிப்படையா? சிவனை துப்பாக்கிகளுடன் படமிட்டு சீப்பான விளம்பரம் தேடிக்கொள்வது தான் ஒருவரின் ஆன்மீகத்திற்கு அடிப்படையா? ஒரு முஸ்லீம் தன் கடவுளரைப் பற்றியோ, தன் திரு குரான் பற்றியோ மோசமான வார்த்தைகளால் தலைப்பிட்டுகட்டுரை எழுதுவாரா? முஸ்லீம்களிடமிருந்து கடவுளரை மத புத்தகத்தையும் மதிக்க உங்கள் குருஜி அல்லவா கற்றுக்கொள்ள வேண்டும். புதுமையாகச் சொல்கிறேன் என்று நினைத்து சொந்த கடவுளரையும் புத்தகத்தையும் தேவையற்ற முறையில் சித்தரிக்கும் இவர் மற்ற இந்துக்கள் மனதில் நெருடலை உண்டாக்குறார் என்பது உங்களுக்கு புரியவில்லையா என்ன? உங்கள் குருஜி முதலில் இந்துக்களின் புனித நூலையோ, கடவுளரையோ சித்தரிப்பதில் அடிப்படை பயபக்தியை முஸ்லீம்களிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். காத்திருப்போம்!

// இஸ்லாமிய துவேசம் கொண்டுமே எழுதுவிர்கள். அதுவும் எமக்கு தெரியும்// எத்தனைப் பதிவுகள் அப்படி எழுதப்பட்டிருக்கின்றன என்பதற்கு சுட்டிகளை இங்கேயே கூட காட்டுங்கள்! பார்க்கலாம்! முஸ்லீம்களின் தட்ஸ்தமிழ் தளத்தில் இந்து மதத்தை விமர்சிக்கும் பதிவுகளையே புக்மார்க்கில் நிரந்திரமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு மத துவேஷமா எமது தளத்தில் இருந்து விடப்போகிறது?!

@hayyram

உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அறிவுப்பூர்வமாக தோன்ற வில்லை

ஏதோ ஒரு காரணத்தால் குருஜியின் மேல் கொண்ட தனிப்பட்ட புகைச்சலாகத்தான் தோன்றுகிறது

நீங்கள் குறிப்பிடுவது போல எல்லா இந்துக் கோயில்களும் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லை

திருப்பதியும் ஸ்ரீரங்கமும் யார் பொருப்பில் உள்ளது?

அங்கு பக்தர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்ன?

சற்று யோசித்துப் பாரும்...?

மேலும் கீதையை கொலைகார நூலா என குருஜி தலைப்பிட்டது உங்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் கொடுத்திருப்பது

இந்து மதத்தின் மேல் நீர் கொண்ட அன்பை காட்டவில்லை அறியாமையை காட்டுகிறது

குருஜி கீதையை கொலைகார நூல் என்று சொல்லவில்லை நூலா என்று கேட்கிறார் அவ்வளவுத்தான் அந்தக் கேள்வி கூட அவர் மட்டும் கேட்டதில்லை இவருக்கு பலகாலத்திற்கு முன்பே சுவாமி சித்பவானந்தா கேட்டுள்ளார்

அதையெல்லாம் படித்துவிட்டு பேசுவது தான் புத்திசாலிக்கழகு

இனியாவது திருந்தப்பாரும்!

நல் முத்தான பதிவு! நல்ல விஷயம் எங்கே இருந்து கிடைத்தாலும் அதன் படி நடப்திலும் தவறில்லை.

@hayyram
உங்களுக்கு மதம் பிடிதுல்ளத்தால் தான் இப்படி பிதற்றுகின்றீர்கள்.

//உங்களுக்கு மதம் பிடிதுல்ளத்தால் தான் இப்படி பிதற்றுகின்றீர்கள்// இல்லை ஸ்ரீ ராம், உங்கள் சாமியின் விளம்பரப்பித்து பிடிக்கவில்லை. அது தான் காரனம். தட்ஸ்தமிழ் புக்மார்க்ஸில் நமது ப்ளாக் லின்க் இடம் பெற வேண்டுமென்றால் இந்துமதத்தை விமர்சிக்கும் பதிவுகள் இருக்க வேண்டும். முழுக்க முழுக்க இந்து மதத்தை ஆதரித்து எழுதும் பதிவுகள் அங்கே திட்டமிட்டு நீக்கப்பட்டு விடும். ஆதலால் தான் இந்து மதத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் பதிவுகளையே உங்கள் குருஜி எழுதி வருகிறார். இது ஒரு குருவுக்கு அழகல்ல. திராவிட நாத்திக பாணியில் எழுதினால் தான் நம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நினைக்கிறார். இந்த போலித்தனத்தை சாடுகிறேனே அன்றி அவர் முகத்தை பார்த்தாலே பாவமாக இருக்கிறது.

@hayyram

வணக்கம் குருஜி இந்த மாதிரி அடி முட்டாள் கமெண்ட் போடாமல் தடுக்கலாமே குருஜி எனக்கு hayyram போன்ற லூசு மேல் கோபம் வர வில்லை இந்த மாதிரி கமெண்ட்டைவெளியிடுகிரிர்கள் அல்லவா அதனால் உங்கள் மேல் தன எங்களுக்கு கோபம்

படைப்புகளுக்கு தலைப்பு வைப்பது என்பது அவர் அவர்களின் சொந்த விருப்பம் குருஜி ஒன்றும் தப்பாக தலைப்பு வைக்கவில்லையே

hayyram தயவு செய்து நீங்கள் இந்த தளத்தை விட்டு வெளியே சென்று விடுங்கள்

குற்ற கண்களுடன் பார்ப்பவர்களுக்கு குற்றங்களாக தெரியுமே தவிர சுவாமிஜி எழுதி வரும் நல்ல விஷயங்கள் உங்களுக்கு தெரியாது மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் இந்த தளம் உங்களுக்கு சுத்த படாது

தர்க்கா பற்றி எனக்கு தெரியவில்லை.. ஆனால் கோவில்களில் இதைப்போல பாகுபாடு காட்டப்படுகிறது என்பது உண்மை. அது சிறிய கோவிலாக இருந்தாலும் சரி பெரிய கோவிலாக இருந்தாலும் சரி.. அந்த ஊர் பெரியவர்கள் கட்டுப்பாட்டில் தான் கோவில் இருக்கிறது. அனைவரும் சரி சமம் கிடையாது.

இதனாலே கோவிலுக்கு செல்வது என்றாலே எரிச்சலை தரும் ஒரு விசயமாகி விட்டது.. மற்றபடி யாரும் கண்டுகொள்ளாத கோவில்கள் மன நிம்மதியை தருகின்றன.

for hayyram,
That's Tamil online newspapers is not owned by muslims. he is a hindu guy.
ahhhhh u don't know anything but acting like genius. All religious is equal, we muslims believe vedas is send by allah(allah(arabic) mean god(english)). we human being separating humans according to colour, money, language and religious.

Anonymous
00:34

குருஜி அவர்களே தலைப்பு தான் தவறு.

மற்றபடி அதில் உள்ள கருத்துக்கள் இந்துக்கள் அனைவரும்

எப்பொழுதுமே எற்றுக் கொள்வார்கள்.

திருப்பதி கோவிலும் ஆந்திர அரசின் மறைமுக கட்டுப்பாட்டில் தான்

உள்ளது. மேலெழுந்த வாரியாக பார்த்தால் தனியாக தேவஸ்தான

போர்டு மாதிரி தான் இருக்கும்.

நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

மற்றபடி தவறு ஒன்றும் இல்லை.

முஸ்லிம்களை பின்பற்ற வேண்டும் என்று சொன்னதில் தான் தவறு உள்ளது. மற்றபடி தாங்கள் சொல்லிய கருத்தில் அனைவருக்கும்
உடன்பாடு இருக்கும்.

அவர்களின் பள்ளிவாசலும் நமது கோவிலும் ஒன்றாகாது.

அங்கே விக்கிரகங்கள் இல்லை எனவே நாம் அவர்களுடன் ஒப்பிடமுடியாது.

இதே இந்துக்கள் “ வாழும் கலை ” மற்றும் “ வாழ்க வளமுடன் ” ஆகிய இடங்களுக்கு செல்லும் போது ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர். வரிசையாக அமர்கின்றனர். அங்கே பாரபட்சம் பார்பதில்லை.

நம்மிடம் அமைப்பு ரிதியாக ஒன்றுபட வாய்ப்பு வரும் போது மற்றம்
நாம் ஒற்றமையுடன் பெரும் ஏழுச்சி பெரும் பொழுது கண்டிப்பாக
இந்நிலை மாறும்.

குறிப்பு திருநெல்வேலியில் கூட இப்பொழுது சில மாதங்களாக
பணவசுல் தொடங்கியுள்ளதை அங்கே உள்ள இந்து அமைப்புகள்
(இந்து முண்ணனி உள்பட) எதிர்த்து ஆர்பாட்டம் செய்து வருகின்றன.

ஆனால் உண்மை நிலை என்னவேனில் இந்துக்கள் ஒன்றாக திரளும்
வரை இந்நிலை மாறாது.

Hey Ram கருத்தில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது.

ஆனாலும் இந்துக்களுக்காக அவர் குரல் கொடுத்ததில் திருப்தி.

மற்றப்படி நாம் யாரிடமும் பாடம் கற்ற வேண்டியதில்லை.

அன்புடன்

தங்கள் வாசகன்.

//சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா முஸ்லிம்களுக்கு புனித ஷேத்திரம் என்பது நமக்கு தெரியும்.

மெக்காவிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேரத்தில் சவுதி அரேபிய மன்னரே தாமதமாக வந்தால் கூட அவருக்கு கடைசி இடம் தான் கொடுக்கப்படும்//

ஐய்யா,நீங்கள் சொல்வது சரிதான்அங்கு மட்டுமல்ல,உலகில் உள்ள எந்த பள்ளிவாசலுக்கும் அதே நிலைதான்.உதாரணமாக,நம் முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அஹமது ஒரு முறை தொழுகைக்காக தில்லியில் உள்ள ஜும்மா மசூதி சென்றார்.அப்போது தொழுகை ஆரம்பமாகிவிட்டது.எனவே அவர் கடைசி வரிசையில் நின்று தொழுதார்.

மேலும்,சில மாதங்கள் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் அபுல் கலாம் ராமேஸ்வரம் சென்றபோதும்,தொழுகைக்காக தாமதமாகிவிட்டதால் கடைசி வரிசையில் நின்றுதான் தொழுகை நடத்தினார்.

2:153.நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

திருக்குர்ஆன்

http://www.tamililquran.com/quransearch.php?q1=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&B2=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95

Anonymous
10:45

//இதே இந்துக்கள் “ வாழும் கலை ” மற்றும் “ வாழ்க வளமுடன் ” ஆகிய இடங்களுக்கு செல்லும் போது ஒரு ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர். வரிசையாக அமர்கின்றனர். அங்கே பாரபட்சம் பார்பதில்லை.//
அன்பிற்குரிய நண்பரே ஏன் முஸ்லிம் என்றாலே இப்படி வெறுப்பு . ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவருமே ஒரு காலத்தில் நீர் உட்பட இந்து மக்களின் உறவினரே. ஏற்று கொண்ட மத கோட்பாடு அல்லது வழியின் அடிப்படையில் மட்டுமே மாற்றுகருத்து கொண்டு இருக்கிறோம். பொதுவாக பார்த்தால் இஸ்லாமியன் என்பது வணக்க வழிபாடு வித்தியாசம் போன்ற விஷயங்கள் தவிர மற்ற விசயங்களில் அந்தந்த வட்டார பழக்க வழக்கம் மட்டுமே முஸ்லிம் மக்களிடமும் இருக்கும்.
வாழ்க வளமுடன் அமைப்பு ஒரு இந்துவால் உருவாக்க பட்டிருந்தாலும் அது இந்து மதத்தை பரப்பும் அமைப்பல்ல. ஆன்மிக அமைப்பு. அருட்தந்தை வேதாத்ரி அவர்களே தனது பயிற்சி பற்றி குறிப்பிடும் பொது "இஸ்லாமியரின் தொழுகை நெறி' அடிப்படையும் இணைத்து என்று தான் தனது பயிற்சி முறையை வகுத்துள்ளார்.

இஸ்மாயில்

malathi
20:26

மதத்தில் அல்ல தவறு.மதத்தை ஒரு கூட்டம் கையில்
வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறதே அங்கு தான் தவறு. :clஅப்: தங்கள் கருத்து சரி

சரவணமுத்து
20:28

இலவசம் என்றால் தூர நின்று பார்ப்பதும், கட்டணம் என்றால் அருகில் இருந்து பார்ப்பதும், ஐய்யா சொன்னபடி மதத்தை வைத்து கூத்தடிப்பவர்களின் செயல் தான்! இந்த மாறுதல்கள் எல்லாம் சில காலங்களாகத் தான் கால் பதிக்க ஆரம்பித்து உள்ளன.
வேறோடு களைய வேண்டிய விசயந்தான்!
அரசாங்கம் தான் செயல்பட வேண்டும். ஒரு சிறிய முயற்சி எந்த அரசாங்கம் எடுத்தாலும் அதை குறை சொல்வதற்கென்றே எதிர்க்கட்சிகள் காத்துக்கொண்டு இருக்கும்.
--------------------------------


Next Post Next Post Home
 
Back to Top