( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இந்த ஆடம்பரம் வேண்டுமா...?

   தேர்த் திருவிழாக்கள், திருவிளக்கு பூஜைகள் போன்ற ஆன்மீக விஷயங்கள் அரசியல் மாநாடு போல் பெரிய அளவில் விளம்பரபடுத்தி நடத்த படும் போது இத்தகைய ஆடம்பரங்கள் தேவையா என பலருக்கும் தோன்றும்

உப வேதங்கள் என்று அழைக்கப்படும் உபநிசதங்கள் வேதங்களை விட மிக சிறப்பான கருத்துக்களை சொல்லியிருக்கின்றன.

யுத்த களத்தில் சோர்வடைந்து கிடந்த அர்ஜூனனுக்கு உபநிசத கருத்துக்களை அப்படியே எடுத்து கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? அர்ஜூனன் குருஷேத்திரத்தை விட்டு ஓடிபோயிருப்பான்

எதை, எப்படி சொல்ல வேண்டும் என்ற ஒரு நியதியிருக்கிறது. அதை அப்படி சொன்னால் தான் சரியாகயிருக்கும்.

உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமாக சில மாடுகள் இருக்கும். அதை போலவே சில மனிதர்களும் உண்டு.

அவர்களை பார்த்து மாடு மாதிரியிருக்கிறாயே என்று சொன்னால் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.

நீ பசு மாதிரி என்று சொல்லி பாருங்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்.

மாடு என்றாலும், பசு என்றாலும் விஷயம் ஒன்று தான். ஆனால் சொல்லப்படும் விதம் வேறு மாதிரியாகயிருக்கிறது.

திருவிழாக்கள் பூஜைகள் எல்லாம் கடவுளை வணங்கத்தான்.

ஆனால் அதை ஊர் கூடி சத்தம் போட்டு சொன்னால் தான் சில காதுகளால் கேட்க முடிகிறது.

சாஸ்திரங்களாலும் சம்பிரதாயங்களாலும் கட்டுப்பாட்டுடன் இருந்த நமது இந்து மதம் இன்று கட்டுப்பாடு குலைந்து நிற்கிறது.

ஒரு மிக பெரிய மடாதிபதி கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இன்னொருவரோ யோக சமாதியில் காம களியாட்டம் செய்தார்.

பிரம்மச்சரியம் நிலைக்கிறதா என்று பரிசோரனை பண்ணிப் பார்த்தேன் என்கிறார்.

காவி ஆடையெல்லாம் பாவிகளின் புகலிடமோ என மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்து மத வழக்கங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் இருக்க சில ஆடம்பரமான விழாக்கள் தேவைப்படுவது கால கட்டாயமாகி விட்டது.

இராமாயணம், மகாபாரதம் படித்திருப்பீர்கள். அதில் இராமன் இந்த அறம் செய்தான். கர்ணன் இப்படி தானம் செய்தான் என்று எல்லாம் சொல்லப்பட்டிருக்கும்.

ஆனால் அந்த ராமனோ, கர்ணனோ எங்காவது கோயில்களை கட்டினான், கும்பாபிஷேகம் செய்தான் என்று எழுதப்பட்டிருக்கிறதா.

ஒரு சின்ன வரி கூட அப்படி கிடையாது.

ஏன் என்றால் அப்போதைய மக்கள் எல்லோரும் ஆன்மீக விழிப்பு நிலையிலேயே இருந்தனர்.

அதனால் அவர்களுக்கு ஆலயங்கள் தேவைப்படவில்லை.

இதிகாசங்களின் காலத்திற்கு பிறகே சின்ன சின்ன கோவில்கள் கட்டப்பட்டிருந்தன.

புத்த மதம் எழுச்சி பெற்ற பிறகு பெரிய பெரிய மடாலயங்கள் உருவாகின.

பிரம்மாண்டமான அவைகள் ஏராளமான மக்களின் கவனத்தை கவர்ந்தது.

இந்து மதம் அழிந்து போகாமல் இருக்க மக்களை கவர பிற்காலங்களிலேயே மாபெரும் ஆலயங்கள் அரசர்களால் எழுப்பப்பட்டன.

எங்கும் நிறைந்த கடவுளுக்கு மாபெரும் ஆலயங்கள் ஆடம்பரம் தான்.

ஆனால் அந்த ஆடம்பரம் மக்களுக்கு தேவைப்பட்டது. அதே போன்ற நிலமை தான் இன்றும் நிலவுகிறது. எனவே ஆடம்பர விழாக்கள் தவறல்ல.

மேலும் இந்துமத விழாக்கள் ஆடம்பரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டது கிடையாது

ஆழமான சமூக நோக்கும் தத்துவச் சிந்தனையும் அதனுள் உண்டு

ஒவ்வொறு திருவிழாவிலும் உள்ள தத்துவத்தை ஆராய்ந்தால் நமக்கு பெருத்த வியப்பை உண்டாக்கும்

அவைகளை மற்றுமொறு பதிவில் பார்ப்போம்

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 10 comments

குருஜி மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி.

ஏற்கனவே இந்துக்களின் விழாக்களை நாத்திகர்களும், கிறிஸ்தவ, முஸ்லீம் அடிப்படைவாதிகளும் கொண்டாட விடுவதில்லை. நீங்களும் சேர்ந்து கொண்டீர்கள் போல. நீங்கள் நாமம் போட்ட .......

"எங்கும் நிறைந்த கடவுளுக்கு மாபெரும் ஆலயங்கள் ஆடம்பரம் தான்.

ஆனால் அந்த ஆடம்பரம் மக்களுக்கு தேவைப்பட்டது. அதே போன்ற நிலமை தான் இன்றும் நிலவுகிறது. எனவே ஆடம்பர விழாக்கள் தவறல்ல.

மேலும் இந்துமத விழாக்கள் ஆடம்பரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டது கிடையாது

ஆழமான சமூக நோக்கும் தத்துவச் சிந்தனையும் அதனுள் உண்டு"

But really people are understanding reason behind these festivals?.
You only said people in this Yuga are not as that of people in Rama & Krishna days. Then how can you expect from them the reason behind all these festivals. If they really understand the meaning, then there is no need for such festival at all.

வணக்கம் குருஜி. எது ஆடம்பரம், எது ஆடம்பரம் இல்லை என்று எக்காலத்திலும் பிரித்து பார்க்க முடியாது. ஆதி காலத்திலும், இக்காலத்திலும் மனதுக்கு மகிழ்ச்சி உண்டாக்கக் கூடிய எந்த ஒரு செயலக இருந்தாலும் அது பார்க்கிற பார்வையை பொறுத்து உள்ளது. நமக்கு ஒரு விஷயம் பிடித்து இருந்தால் அது ஆடம்பரமாக இருக்காது. அதே செயல் பிடிக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய ஆடம்பரமாக தெரியும். கோவில் திருவிழாக்கள் என்பது என்னை பொறுத்தவரை கடவுளுக்காக கொண்டாடப்படுவது என்பதைக்காட்டிலும், பல தரப்பட்ட மக்களின் எண்ணக்குவியலை, மனதை ஒரு நிலைப்படுத்த சங்கமிக்கும் இடம் தான் இத்திருவிழாக்கள். இப்படிகூடும்போது நல்ல அதிர்வுகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பொது நல்ல எண்ணங்கள் வரும். சந்தோஷம் அனைவருக்கும் கிடைக்கும். என்றைக்குமே தனியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைக்காட்டிலும், கூட்டு பிரார்த்தனையாக அதை செய்யும்போது, அதன் பலன் உடனடியாக தெரியும். திருவிழாக்களில் கூடும்போது அந்த மனநிலை கொஞ்சநாளுக்கு நம் கூடவே அந்த நினைவுகள் இருக்கும். எனவே எந்த காலத்திலும், ஆன்மீக விஷயத்திற்கு நன்றாக ஆடம்பரம் தேவைதான். அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.

ஒவ்வொறு திருவிழாவிலும் உள்ள தத்துவத்தை ஆராய்ந்தால் நமக்கு பெருத்த வியப்பை உண்டாக்கும்
நிறைய வியப்படைந்திருக்கிறேன்.

Anonymous
10:24

உண்பதும், குடிப்பதும், உறங்குவதுமாக சில மாடுகள் இருக்கும். அதை போலவே சில மனிதர்களும் உண்டு

என்ன பாஸ் எங்களை இப்படி சொல்லுரிங்க இது நல்ல இல்லை எனக்கு கோபம் வராது வரதுனா வராதுதான்

வணக்கம் குருஜி,
தங்களது ஒவ்வொரு பதிவும் விடாமல் தினமும் படிக்கிறேன். உள்ளுக்குள் இருக்கும் ஒவ்வொரு சந்தேகம் தீர்ந்து வருகிறது..
நன்றி...

Anonymous
07:15

கோயில்களில் எடுப்பது திருவிழா; " ஆடம்பரம்" என்ற சொல் பொருந்தாது.காந்தி எனக்குச் சுதந்திரம், விடுதலை வாங்கிக் கொடுத்தார் என்றாலும் காந்தி எனக்கு மோட்சம் வாங்கிக் கொடுத்தாலும் சொற்பொருள் ஒன்றுதான் ஆனால் மரபு இதை ஏற்பதில்லை. மோட்சம் என்பது ஆன்மீக விடுதலைக்கு மட்டுமே பொருளாகும் என்பதுதான் மரபு. எனவே ’ஆடம்பரம்’, ’டம்பம்’,
தம்பட்டம் அடித்தல் எனும் பொருளில்தான் அதன் சொல்லாட்சி மரபு. எனவே கோ்யில்களில் திருவிழா எடுப்பது மிக அவசியமே, அது ஒவ்வொருவரின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏதோவகையில் உதவுவதே. அதனால் அதை ஆடம்பரம் என்று கொச்சைப்படுத்தக் கூடாது.கோயில் திருவிழாவே ஆடம்பரம் என்றால், குடியரசு தினத்தன்று கோடிக்கணக்கில் செலவழித்து அரசாங்கமே கொண்டாடுவது எந்த வகையைச் சேர்ந்தது. அரசியல்வாதிகளின் விழாக் களியாட்டக்கூத்துக்களை என்னவென்று சொல்லுவது?

VISWAM
20:24

"காவி ஆடையெல்லாம் பாவிகளின் புகலிடமோ என மக்கள் குழம்பி போயிருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்து மத வழக்கங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் இருக்க சில ஆடம்பரமான விழாக்கள் தேவைப்படுவது கால கட்டாயமாகி விட்டது.". சரியாகத்தான் சொல்லியிருகிறீர்கள்.


Next Post Next Post Home
 
Back to Top