( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாய்கள் நம்மை இகழாதிருக்க வேண்டுமென்றால்...

   நாம் கடவுளை வணங்காவிட்டால் அவருக்கு குறை ஏற்படுமா?

கடவுள் மனிதனை படைத்தார். விலங்குகளையும் மற்ற உயிரனங்களையும் படைத்திருக்கிறார்.

நமக்கு பசி, தாகம், காமம், தூக்கம் எல்லாமே உண்டு. விலங்குகளுக்கும் இவைகள் உண்டு.

மனிதர்களை போலவே விலங்குகளும் உழைத்து சாப்பிடுகிறது. இனவிருத்தி செய்கிறது.

ஆனாலல் கட்டுபாடு, ஒழுக்கம், தர்ம நெறி, பகுத்தறிவு என்பனயெல்லாம் அவைகளுக்கு கிடையாது.

எந்த ஆடும், மாடும் உடலை மறைக்க ஆடை அணிவதில்லை.

காதலியை பார்க்க கால் கடுக்க காத்திருப்பதும் இல்லை.

வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு ஈட்டிக்காரனை கண்டு ஓடி ஒளிவதும் இல்லை.

மனிதனுக்கு தான் இத்தனை சுமைகள். மான அவமான உணர்வுகள், மனம் என்ற ஒன்றும் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மனம் உள்ளதனால் தான் நம்மை மனிதன் என்று அழைக்கிறார்கள்.

அந்த மனம் தான் நாலா விஷயங்களையும் சிந்தித்து பார்க்க வைக்கிறது. பால் கொடுத்து வளர்த்த பிள்ளை சோறு போடாத போதும் வாழ்த்த சொல்கிறது.

மருமகளாக வந்து விட்டால் அவள் சோறு போட்டாலும் கூட அவளை அந்நியமாகவே பார்க்க சொல்கிறது.

செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக எதாவது செய் என சொல்லவும் வைக்கிறது.

நமக்கு உயிர் தந்தவன் கடவுள். உடல் தந்தவன் கடவுள். அறிவு தந்தவனும் அவன் தான். அவனை நாம் வணங்காவிட்டால் அவனுக்கு ஒன்றும் குறைவு கிடையாது.

நாக்கு உணவை சுவைக்கிறது. உணவை மென்மையாக்கி பற்கள் கொடுக்கிறது.

மூக்கு சுவாசிக்கிறது. சுவாச காற்றுடன் தூசிகள் நுரையீரலுக்குள் செல்லாமல் மூக்கு ரோமங்கள் பாதுகாக்கின்றன.

காட்சிகளை பார்க்கும் கண்ணை பாதுகாக்க இமையிருக்கிறது.

இத்தனையும் காரண காரியம் அறிந்து கொடுத்த இறைவனை தொழாத கைகள் இருந்தென்ன? இல்லாவிட்டால் என்ன ?

நன்றி கெட்டவன் மனிதன் என நாய்கள் நம்மை இகழாதிருக்க வேண்டுமென்றால் கடவுள நாம் வணங்கித் தான் தீர வேண்டும். இதில் அவனுக்கு பெருமை இல்லை. நமக்கு தான் பெருமை.
     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

+ comments + 6 comments

Anonymous
07:54

இந்த நன்றி அறியும் குணம் இருக்குமாயின் அவனிடம் எல்லா நற்குணங்களும் குடிகொண்டிருக்கும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அதனால்தான் பிரபஞ்சப் பொதுமறை,UHLG, THE UNIVERSAL HUMAN LIFE GUIDE,THE THIRUKKURAL,திருக்குறள்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்று உலகுக்கு அறிவுறுத்துகிறது. இன்னும் கடவுளை வணங்காதவன் தலையில்லாத முண்டம் போன்றவன் என்று சாடுகிறது.
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை."
" எவனுடைய தலை இறைவனின் தாளை வணங்குவதில்லையோ, அப்படிப்பட்ட தலை இருந்தும் இல்லாததே ஆகும்" என்கிறார்.
இதிலிருந்து, இறைவனை வணங்காத தலை இருந்தும் இல்லாததே
ஆதலின் அவன் முண்டமே ஆவான். என்கின்றனர் பெரியோர்.
எனவே சுவாமி அவர்கள் சொன்னதோடு அதாவது நாயும் தலையில்லா முண்டங்களும் நம்மை இகழாதிருக்கவேண்டுமானால்
அவனுடைய தாளை நன்றியோடு சிரம்தாழ்த்தியும் மரம்போல் அவனடியில் வீழ்ந்தும் வணங்கவேண்டும் நம்மைக் கொன்றுகொண்டிருக்கும் அகங்காரம் ஒழிந்து அவன் வடிவே அனைத்தும் என நாம் உணரவேண்டுமென்றால்.

கதிரவன் தன் கிரணக்கையால் கடவுளைத் தொழுகிறான்;
ஐம்பூதங்களும் தம் தொழிலால் ஏத்தித் தொழ,
நம் அகத்தால் இறைவனை வாழ்த்தித் தொழுவதே சிறப்பு.

படம் அருமை. யாரின் வளர்ப்பு மகனோ!!!

இ.குமரன்
20:23

நமக்கு உயிர் தந்தது கடவுள். உடல் தந்தது கடவுள். அறிவு தந்ததும் அது தான். அதை நாம் வணங்காவிட்டால் அதற்கு ஒன்றும் குறைவு கிடையாது.

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Next Post Next Post Home
 
Back to Top