( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உன் பாதையில் உலகம் நடக்கும்


டை நீராய் ஆசைசேர்ந்து
         உருண்டு புரண்டு எழுந்தாலும்
வீடை கொடுக்கும் இறையவனின்
         விருப்பம் இன்றி முடியாதே
மேடை ஏறி பேசிநிதம்
         மோகப் பதவி பிடித்தாலும்
பாடை மீது போகவேண்டும்
         பாழும் மனமே மறக்காதே!

பெற்றவள் வந்தவள் பிறந்தவர்கள்
       பெரிய உறவாய் விரிந்தவர்கள்
கற்றது கண்டது கடந்தவைகள்
      கணக்குகள் பிணக்குகள் பிடித்தவைகள்
உற்ற தேகம் படுத்துவிட்டால்
       உயிரை மேவி வருவதில்லை
நற்றவம் ஒன்றே கூடவரும்
       நாயகன் நிழலை தேடிதரும்


வஞ்சகம் சூது களவெல்லாம்
      வந்து சூழும் மனவீட்டை
பிஞ்சு மனதால் அவைகளை நீ
     பிடித்தால் உன்னை கொன்றுவிடும்
கொஞ்சமும் கருணை இல்லாமல்                              
     கொடுமைத் தன்னை வீழ்த்திவிடு
தஞ்சமாய் அணைக்கும் திருவிழிகள்
     தரணி நடக்கும் உன்வழியில்


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG

+ comments + 9 comments

வணக்கம் குருஜி. மிகவும் அருமையாக உள்ளது கவிதை. மிக்க நன்றி குருஜி.

வரிகள் மிகவும் அருமையாக இருக்கு

நற்றவம் ஒன்றே கூடவரும்//
eternal words.

Yashwanth Prathap
09:23

Very nice, Kavithai

Good one

Mind blowing words Guruji. You have conveyed the fact of life to each and every one especially youngsters(who are the backbone of every country), super!!

guruji, fantastic kavithai. I liked very much.
Shall I use this ?

ike this....................... nice.............

அருமையான வாழ்க்கையின் தத்துவம் குருஜி


Next Post Next Post Home
 
Back to Top