நல்ல வேலையில் அமர எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்? என்ன பரிகாரம்?
ரமேஷ் ஈரோடு
ஒவ்வொரு ஜாதகத்திலும் 9ம் இடமும், 10ம் இடமும் ஒரு மனிதனின் உத்தியோகம் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்கிறது.
என்றாலும் எல்லா மனிதனுக்கும் இவைகளைக கொடுப்பதும் கெடுப்பதும் சனி தான்.
எனவே சனிபகவானின் அருளைப் பெற வைஷ்ணவர்கள் அனுமனையும் சைவர்கள் விநாயகரையும் வழிபடலாம்.
சனியின் தானியமான எள் விதைக்கப்பட்டு இருக்கின்ற இடத்திற்குச் சென்று நீர் பாய்ச்சலாம். களை எடுக்கலாம்.
ஜாதகத்தில் சனி பகையாகவோ, நீசமாகவோ இல்லையென்றால் நீலக்கல் அணியலாம்.






