( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சமைக்க மட்டும் தான் பெண்ணா?


   நாற்காலி செய்யத் தெரிய வேண்டுமானால் தச்சுக்கலை தெரிந்திருக்க வேண்டும்

 இலையில் ஓடாத கெட்டியான பால் பாயாசம் செய்ய சமையல்கலை தெரிந்திருக்க வேண்டும்

 அதைப் போலவே கடவுளை அடைவதற்கு பிரம்ம வித்தை தெரிந்திருக்க வேண்டுமென பெரியவர்கள் சொல்லுவார்கள்

பிரம்ம வித்தையை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியாது

யாருக்கு கடவுள் அனுக்கிரஹம் அதிகமிருக்கோ அவர்கள்தான் கற்க முடியும் கற்றும் கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது


சத்தியமான வார்த்தையிது அவனருள் இல்லையென்றால் அவன்தாழ் கிடைத்துவிடுமா என்ன?

 இன்னும் சிலர் ஆணாகப் பிறந்தால்தான் பிரம்ம வித்தையை கற்க முடியும் பெண்ணாகப் பிறந்தால் ஆகாது என்கிறார்கள்

இது எப்படி சரியாகும்?

   யோகம் தவம் தியானம் சத்சங்கம் வேத அப்பியாசம் ஆகிய பிரம்ம வித்தை பெண்களுக்கு இல்லையா ?

பெண்ணாகப் பிறப்பது அவ்வளவுப் பெரிய சாபமா என பலர் நினைக்கலாம்

இயற்கையின் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் ரீதியாக சில மாற்றங்கள் உண்டே தவிர ஆத்ம ரீதியாக எந்த பாகுபாடும் இறைவன் கொடுக்கவில்லை.


  மரத்தை வெட்டி விறகு பிளப்பது ஆகட்டும், விண்கலத்தில் ஏறி அயனவெளியை ஆராய்வதாகட்டும் ஆணும் பெண்ணும் சமமான நிலையிலேயே இருக்கிறார்கள்.

 ஆணை விட பெண் தாழ்வானவள் என்றால் சிவபெருமான் ஏன் தனது, உடலில் பாதியை பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்?

  கடவுளுக்கு ஆத்மாவை தான் தெரியுமே தவிர, ஆத்மாவின் நிலையை தான் பார்ப்பாரே தவிர, ஆணா?  பெண்ணா?  என்றெல்லாம் பார்ப்பது இல்லை.

 படகின் துடுப்பை ஆண் வலிந்தாலும் சரி, பெண் வலிந்தாலும் சரி, அது கரையேற தான் செய்யும்.

 சாஸ்திரங்களை பெண்கள் கற்க கூடாது.  வேதங்களை பெண்கள் ஓதக் கூடாது என்று சொல்லுவதெல்லாம் கடவுளின் சிருஷ்டியை அவமானப் படுத்துவது ஆகும்.

வேதங்களை பெண்கள் ஓதுவது பாவம் என்றால் அதனால் வேதங்களின் புனித தன்மை கெடும் என்றால் பெண் ஞானிகளால் கண்டு உணரப்பட்ட வேத சூத்திரங்களை எடுத்து எறிந்து விட முடியுமா?

  வேதம் பாடிய பெண், வேதம் படிக்க கூடாது என்றால் அவர்கûளால் உருவாக்கப்பட்ட பாடல்களை வேதத்தில் வைப்பது எந்த வகையில் சரி?


பகவத் கீதையின் புகழை நாராயணன் பூமா தேவிக்கு கற்பிக்கிறார்.

 பரமசிவனோ குரு கீதையின்  பிரம்ம தத்துவத்தை பார்வதி தேவிக்கு சொல்கிறார். 

பிரகதாரண்ய உபநிசத்தில் யாக்சவல்கியர் மைத்ரேயிக்கு இறை தத்துவத்தை போதிக்கிறார்.

 இல்லத்தரசியாக இருந்த மாதாசாலே என்ற பெண்மணி பிரம்ம ஞானம் பெற்றதையும்,

சூடலா என்றவளும், மைத்ரேயியும் சுலபயோகினியும், பிரம்ம ஞானிகளாக திகழ்ந்ததையும்,

புராணங்களும், சாஸ்திர நூல்களும் விவரமாகவே எடுத்து சொல்கிறது.

 ஆதிக்க மனபான்மை உடைய சிலர் பெண்களை புறக்கணிப்பதனால் பிரம்ம வித்தையை பெண்கள் கற்க கூடாது என்ற போலியான கருத்து நிலவி வருகிறது.

 கண்மூடித்தனமான இத்தகைய கருத்துக்கள் நமது இந்து மதத்தை களங்கப்படுத்துமே தவிர சிறப்பிக்காது.

மேலும் இப்படிப்பட்ட விஷயங்களை நமது அருளாளர்கள் பேசவே இல்லை என்பதை விட சிந்திக்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


 
+ comments + 6 comments

வணக்கம் குருஜி. எந்த காலத்திலும், ஆண் என்றாலும், பெண் என்றாலும் சரிநிகர் சமானமாக நடத்தவேண்டும். என் குரு சொல்லுவார், ஆண் என்பவன் ஒரு பிரார்த்தனையை 5 மணிநேரம் செய்வதற்கும், பெண் என்பவள் 5 நிமிடம் பிரார்த்தனை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதே நேரத்தில் பெண் என்பவள் சக்தியின் வடிவம். அதனால் பலன் பெண் ஐந்து நிமிடம் செய்தாலே அவ்வளவு பலன் உண்டு என்று சொல்லுவார். "ஆதிக்க மனபான்மை உடைய சிலர் பெண்களை புறக்கணிப்பதனால் பிரம்ம வித்தையை பெண்கள் கற்க கூடாது என்ற போலியான கருத்து நிலவி வருகிறது" நீங்கள் கூறியது முற்றிலும் சரியே. மிக்க நன்றி குருஜி.

// ஆதிக்க மனபான்மை உடைய சிலர் பெண்களை புறக்கணிப்பதனால் //


பெண்களை தாழ்மையாக நினைப்பவர்களுக்கு இது சரியான பதிவு.............நன்றி குருஜி

illai illai saadhika vendum pengal........

இல்லீங்க சாப்பிடவும் தான்.. எனக்குத் தெரிஞ்சு பெண்கள் தான் அதிகம் நொறுக்குத்தீனி சாப்பிடறதா கேள்வி..!

Anonymous
17:52

:)))))))) onnum solla mudiyala Guruji. Nattula nadakkura kodumaya paarthaal ennaendru sirippathu. idukkan varungaal nagugaa.. Unga Aaanmeegam Gam Gam, Ottum gam sila neram chewing gum.

//நாற்காலி செய்யத் தெரிய வேண்டுமானால் தச்சுக்கலை தெரிந்திருக்க வேண்டும்

இலையில் ஓடாத கெட்டியான பால் பாயாசம் செய்ய சமையல்கலை தெரிந்திருக்க வேண்டும்

அதைப் போலவே கடவுளை அடைவதற்கு பிரம்ம வித்தை தெரிந்திருக்க வேண்டுமென பெரியவர்கள் சொல்லுவார்கள் //


நாற்காலியையும் பால் பாயாசத்தையும் செய்வதற்குதான் வித்தை தெரிந்திருக்க வேண்டும். அவற்றை காண்பதற்கோ உண்பதற்கோ வித்தை எதுவும் தேவை இல்லை. அதே போல் கடவுளை கண்ட / அடைந்த வித்தகர்கள் எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு கடவுளை காட்டலாமே?


Next Post Next Post Home
 
Back to Top