Store
  Store
  Store
  Store
  Store
  Store

முக்கண் என்பது முட்டாள் தனமா?


  முக்கண் முதல்வனாக சிவபெருமான் கருதப்படுகிறார்

அவருடைய நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் பிறந்ததாகவும் சொல்லப் படுகிறது

இவைகளெல்லாம் அறிவுக்கு பொருந்தி வரக்கூடியதா?

இவற்றை எப்படி உண்மையென நம்புவது என்று பலர் கேட்கிறார்கள்

அவர்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான்

நமது மத வழிப்பாட்டு முறை ஒவ்வொன்றின் உள்ளேயும் ஆழமான பொருளிருக்கிறது 


அதை நுனுக்கமாக ஆராய வேண்டும் என்பதுதான்

தினசரி காலையிலும் மாலையிலும் வணங்கப்படுகின்ற சூரியன் விஞ்ஞான கருத்துப்படி ஒரு எரிகோளமாகும்

அதாவது சதாசர்வ நேரமும் எரிந்து கொண்டேயிருக்கும் ஒரு நெருப்பு பந்து சூரியன். 

அந்த நெருப்பை மூன்று வகையாக பிரிக்கலாம். 

முதலாவது நடுவில் உள்ள ஒளிக்கோளம். 

இதிலிருந்து தான் ஒளியும், வெப்பமும் உண்டாகிறது.

 இரண்டாவது நடுப்பகுதியை அடுத்துள்ள வண்ணகோளம் என்ற ஹைட்ரஜன் வாயு பகுதி 

 இதற்கு அடுத்ததாக முத்து போல் வெண்மையாக ஒளி விடும்  மூன்றாவது பகுதியிருக்கிறது.

 இந்த மூன்றாவது பகுதி வெப்பமே கதிர் வீச்சுகளாக பூமி உட்ப்பட மற்ற கிரகங்களை சென்றடைகிறது.

  சூரியனை ஒரு நெருப்பு பந்து என்று மட்டும் கருதி விடவும் முடியாது.  அது ஒரு காந்தமாகும். 

அதை சுற்றியுள்ள எல்லா பொருட்களுமே காந்த சக்தியால் நகருகின்றன.

 சூரியன் செல்லும் இடமெல்லாம் விரவிள வாயு (diffused gas) செல்கிறது இது குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தை தொட்டு கொண்டே இருக்கிறது

   வானத்தில் உள்ள ஆறு நட்சத்திர கூட்டத்தை கார்த்திகை நட்சத்திரங்கள் என்றும், அக்னி நட்சத்திரங்கள் என்றும் அழைக்கிறோம்.

  உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனை சிவபெருமானவாகவே நமது முன்னோர் சொல்கிறார்கள். 

சூரியன் சிவன் என்றால் அதை சுற்றியுள்ள மூன்று அடுக்குகளும் சிவனின் முக்கண்களாகும்.

 சூரிய வெளிச்சத்தில் நேரடியாக கார்த்திகை நட்சத்திரங்கள் சம்பந்தப்படுவதால் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் பிறந்ததாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. 

வானியியல் அமைப்பு படி கார்த்திகை நட்சத்திரத்தை அதாவது மேஷ ராசி மண்டலத்தை சூரியன் கடக்கும் போது ஆறு பருவங்களான    கோடைக்காலம், மழைக் காலம், வசந்த காலம், குளிர் காலம், சரத் காலம், ஹேமந்த்த காலம் ஆகியவைகள் தோன்றுகின்றன

  இதனாலேயே மேஷ மண்டல ராசி அதிபதியான கார்த்திகேயனுக்கு ஆறு முகங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 இந்திய புராணங்கள் எல்லாமே விஞ்ஞான விஷயங்களை உள்ளடிக்கயதே தவிர வேடிக்கையானது அல்ல.





     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


 

Contact Form

Name

Email *

Message *