Store
  Store
  Store
  Store
  Store
  Store

அரசியல் என்பது சாக்கடைத்தான்


ன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்

   உங்கள் ஒவ்வொறுவரின் வாழ்வும் வளம் அடைய கருணையே வடிவான இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்

  இன்று சற்றுநேரம் ஓய்வு கிடைத்தது அதில் பல அன்பர்களின் கருத்து மடல்களை படிக்க நேரிட்டது

   பெயர் வெளியிட விரும்பாத ஒரு நண்பர் மிக முக்கியமான ஒரு கேள்வியை கேட்டிருந்தார்

  துறவு வாழ்கை என்பது எல்லாவற்றையும் துறந்து கடவுளை மட்டுமே துறக்காமல் வாழ்வதாகும்

  அந்த வாழ்வில் அரசியலைப்பற்றி விமர்சனம் செய்வது களங்கமாக போய்விடக்கூடும்

  அதே நேரம் வேறுபல தீங்குகளுக்கும் இட்டுச் சென்று கடேசியில் படகை குப்புறதள்ளினாலும் ஆச்சர்ய படுவதற்கல்ல என்ற நோக்கில் எழுதி இருந்தார்

  அதைப் படிக்கும் போது இனம்புரியாத சந்தோஷமும் அவர் மீது அளப்பறிய மரியாதையும் ஏற்பட்டது

  இந்து மதத்தின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் நிஜமான அக்கரை இருந்தால் மட்டுமே இத்தகைய கேள்விகள் தோன்றும்

முதலில் அவருக்கு என் சல்யூட்!

  இதுமட்டுமல்ல ஹேராம் ஜெயதேவதாஸ் போன்ற அன்பர்கள் சற்று கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும் கூட சில நியாயமான கருத்துக்களையும்  அறிவுறைகளையும் வழங்கி இருந்தார்கள்

அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

  இவர்கள் யாரும் சுய நலத்திற்காக என்னை திட்டவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை என்பதை நன்கறிவேன்

அதனால்தான் அவர்களுக்கு நேராக பதில் சொல்ல விரும்புகிறேன்

  யோகி என்பவன் எல்லாவிதமான விருப்பு வெறுப்புகளை கடந்தவனாக இருக்கவேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் சரிதான்

இதை சரியில்லை என்று வாதம் செய்தால் நான் மூடனாகவே இருப்பேன்

  ஆனால் யோகி என்ற நிலையை பெற்றாலும் கூட சுயதர்மம் என்பதை செய்யவேண்டுமென வணக்கத்துக்குறிய நமது முன்னோர்கள் சொல்கிறார்கள்

எனது சுயதர்மாக என் குருதேவர் எனக்குத்தந்த கட்டளை மூன்று

 கண்ணில் கண்ட அதர்மத்தை சகித்துக் கொண்டு போகாதே

 நீ கற்ற எதையும் விரும்பியவனுக்கு கொடு

 பிறரின் உயர்வுக்காக ஆயிரம் துயரங்களையும் அனுபவி

  இந்த மூன்று கட்டளைகளையும் இதுவரை கைநழுவ விடாமல் கடைபிடித்து வருகிறேன்

வருங்காலத்திலும் அதைத் தொடர கடவுள் அருள்வார் என்று நம்புகிறேன்

  யோகியாக இருந்தாலும் ஞானியாக இருந்தாலும் குருவின் ஆணையை மீறக்கூடிய அதிகாரம் யாருக்கும் இல்லை என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்

  ஊரே பற்றி எரியும்போது சாதுக்கள் தியானம் செய்யவேண்டுமே யல்லாது நீர் ஊற்றி அணைக்க முயலக்கூடாது என்று நம் இந்துமதம் சொல்ல வில்லை என்பதை பெரியோர்கள் நன்றாக அறிவார்கள் 

  துறவியானவன் நீதிக்காக போராடுவதில் முதல்பலியாக வேண்டும் என்பதுதான் சனாதன தர்மத்தின் தீர்ப்பு

  இதை அடியொற்றிதான் அரசியல் மற்றும் சமூக காரணங்களை நான் எழுதுவதே தவிற தனிப்பட்ட மனிதர்கள் மீது கொள்ளும் கோபத்தாலோ விருப்பத்தாலோ அல்ல !

அரசியல் என்பது சாக்கடைத்தான் அதிலிருப்பது புழுக்கள்தான்

  ஆனால் இந்த சாக்கடை ஊருக்கு ஒதுக்குபுறம்பாக ஓடினால் நமக்கு கவலையில்லை

அது ஓடுவதோ நம் வீட்டுக் கூடத்திற்குள்

   தப்பித்தவறி நம் குழந்தைகளை அது மூழ்கடிப்பதற்குள் நாம் அதை சுத்தம் செய்யவேண்டாமா?

  எல்லோருமே ஒதுங்கி விட்டால் கறைபட்டுவிடும் என அச்சப்பட்டால் யார் அந்தக் காரியத்தை செய்வார்கள்?

  நான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை நாலுபேர் நாராயணனை அறியவேண்டும் என்ற ராமாநுஜர் வாழ்ந்த பூமியல்லவா இது!

  அதனால்தான் ஆன்மீகம் மட்டுமே துறவிகள் பேசவேண்டும் என எதிற்பார்க்கும் சமூகத்தில் எல்லாவற்றையும் பேசுகிறேன்

  இதனால் நான் கெடமாட்டேன் என்று என்னை நம்புவதை விட கண்ணன் என்னை கெட்டுப்போக விடமாட்டான் என அவனை நம்புகிறேன்

  மற்றபடி வேற்று மதங்களைப்பற்றியும் அவைகளில் உள்ள குறைகளைப்பற்றியும் நான் எழுதுவது அந்த மதத்தவர்களை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிச்சயம் அல்ல!

  இந்து மதத்தில் கூட குறையென்று எனக்குப்பட்டதை எழுதுகிறேன்

  சிலநேரம் உண்மையை எல்லோரும் அறிய வேண்டும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கமே தவிற வேறொன்றும் இல்லை

  இது சிலரின் மனதை புண்படுத்தியும் இருக்கலாம் அதற்காக வருத்தத்தை தெரிவிப்பதில் எனக்கு எந்த கௌரவக் குறைவுமில்லை

  இனிவரும் காலங்களில் அத்தகைய குறைகள் என்னிடம் ஏற்படுவதை கட்டாயம் கடவுள் தடுப்பார்.

  அதற்காக மதங்களில் உள்ள சாதக பாதகங்களை விமர்சிப்பதை முற்றிலும் விட்டுவிடப் போகிறேன் என்பது அர்த்தம் அல்ல !

ஹேராம் அவர்களுக்கு

  கீதையில் ஆத்மா சிறியதில் சிறியது பெரியதில் பெரியது என நான் எழுதியதை சுட்டிக்கட்டி அது பரமாத்மாதானே தவிற சாதா ஆத்மாவுக்கல்ல என்று சொல்லியிருந்தீர்கள்

உங்கள் கூற்று முற்றிலும் சரியானது தக்கப்படி தவரை சுட்டியமைக்கு நன்றி

  ஆனால் அது என்னையும் அறியாமல் ஏற்பட்டு விட்ட தவறு இனி அப்படி நிகழாது

  இந்த விளக்கங்கள் அனைத்தும் மனசாட்சிப்படி எழுதப்பட்டதே அல்லாமல் யாரையும் திருப்திப் படுத்த எழுதப்பட்டது அல்ல

அப்படி எழுத வேண்டுமென்ற அவசியமும் எனக்கில்லை

 

 தொடர்ந்து தளத்தை படியுங்கள்
 கருத்துக்களை சொல்லுங்கள்

நம் நட்பு வளரட்டும்


மீண்டும் சந்திப்போம்



Contact Form

Name

Email *

Message *