( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடவுள் இருப்பதற்கு இதோ ஆதாரம்

இந்து மத வரலாற்று தொடர் 10

    னது ஆரம்ப பாடசாலை ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடம்.  அப்போது அங்கு பணியில் இருந்த ஆசியர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்.  இதனால் பாடங்கள் முதல் வழிபாடு வரையிலும் கிறிஸ்துவ தாக்கமே அதிகமாக இருக்கும்.  அது மட்டுமல்ல.  குழந்தைகள் இடத்திலும் பாகுபாடுகள் வெளிப்படையாக காட்டப்படுவதும் உண்டு.  கிறிஸ்துவ குழந்தைகளுக்கு தனிச்சலுகைகளும், வாய்ப்புகளும் வழங்கப்படும்.  இந்து குழந்தைகள் நன்றாக படிப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை பல நேரங்களில் ஒரங்கட்ட படுவார்கள்.

    குழந்தைகள் தங்களுக்குள் பழகும்போதும்,  விளையாடும்போதும் கூட கிறிஸ்துவ குழந்தைகளின் மேலாதிக்கம் அதிகமாக இருக்கும்.  இத்தகைய ஒரு சூழலில் படிப்பை ஆரம்பித்த நான் எனக்குள் இயற்கையாலும் அப்போது பதிந்து இருந்த அதிகாரத்திற்கு உட்படக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி கிறிஸ்துவ தாக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து அதே நேரம் வேறு வழியில்லாமல் அந்த பாடசாலையிலேயே படிக்க வேண்டிய நிலையிலும் பிள்ளை மனதிற்கு தகுந்த எதிர்புணர்ச்சியை பல நேரங்களில் காட்டி இருக்கிறோம்.  அதனால் சில சங்கடங்களும் எனக்கு அப்போது ஏற்பட்டது உண்டு.


    இந்த மாதிரியான நிலையில் ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் ஒருநாள் எங்கள் வகுப்பிற்கு வந்து மத போதனை செய்தார்.  அவர் பேச்சு உலகிலேயே அறிவுடைய மதம் விஞ்ஞான ரீதியிலான மதம்.  கிறிஸ்துவம் மட்டும் தான் மற்ற மதங்கள் எல்லாம் முட்டாள் தனமானவை அர்ப்பத்தனமானவை என்று எங்களுக்கு பாடம் எடுத்தார்.

 இன்னும் ஒருபடி மேலே சென்று இந்துமதத்தில் சிலை வழிபாடும்.  ஆடு கோழி பலி இடுதலும், தீ மிதித்தலும் பெண்களை உயிரோடு எரித்தலும்,  இன்னும் பல மூட பழக்கவழக்கங்கள் மட்டுமே நிறைந்துள்ளதாக கூறினார்.  அவர் கூற்று அந்த வயதிலேயே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ஆனாலும் என்னுடைய அப்போதைய வயதும்,  அறிவும் அவருக்கு பதில் சொல்ல கூடிய அளவில் வளர்ச்சியடையவில்லை.

  ஆயினும்,  அவர் கூற்று என் மனதிற்குள் நெறிஞ்சி முள்ளாக உறுத்திக்கொண்டிருந்தது.  இந்த நிலையில் திருமுருக கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவை இலங்கை வானொலியில் கேட்டேன்.  அவர் சைவ சமயத்தின் சிறப்புகள் பற்றியும்.  அதன் தொன்மைகளை பற்றியும். அதிலுள்ள அறிவுப்பூர்வமான விஷயங்களை பற்றியும் மிக எளிமையான முறையில் விளக்கினார்.  பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைந்தவனுக்கு இளநீர் கிடைத்தால் எப்படி சந்தோஷபப்படுவானோ அதே போன்று அவர் பேச்சு என் மனதில் பாலை வார்த்தது.


     நான் பிறந்த மதம் மூடத்தனமானது அல்ல.  அதே நேரம் அதுதான் உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மதம் என்ற பெருமிதம் எனக்குள் துளிர் விட ஆரம்பித்தது. நாளாவட்டத்தில் அந்த பெருமிதம் மதங்களைப் பற்றிய பல விஷயங்களை தேடிப் படிக்கும் ஆர்வத்தை எனக்குள் வளர்த்தது.  அப்படி நான் தேடலில் பெற்ற பல கருத்துக்கள் வியப்பையும்.  மலைப்பையும் எனக்கு தந்தது.

 ஏசுநாதர் பிறப்பதற்கு 10,000 வருடங்களுக்கு முன்பே இந்து மதத்தின் முக்கிய பிரிவான சைவ சமயம் அமெரிக்காவில் இருந்தது என்றும்,  ஒரு காலத்தில் லிங்க வழிபாடுதான் உலகம் முழுமையும் பரவிக்கிடத்தது.  என்று அறியும் போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  அதன் விவரங்களை எனது நூலான யார் ஞானியில் தெளிவாக கூறியிருப்பதை வாசகர்கள் அறிவார்கள்.  அதனால் முதல் சமயமான சைவ சமயம் இந்து மதத்தின் இதயமாக எப்படி இருக்கிறது என்பதை நாம் அனைவருமே நன்கு உணர்ந்திருக்கிறோம்.  அப்படிப்பட்ட சைவ சமயத்தின் கருத்துக்களை ஒரளவு சிந்தனை செய்தால் நமது மதத்தின் வரலாற்று பின்னனியை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். அப்படி தெரிந்து கொண்டால்தான் நம்மை பற்றிய பெருமிதம் நமக்கே வரும்.


    இன்றைய நிலையில் சைவ சித்தாந்தம் தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமே அதிகமாக வழக்கத்தில் உள்ளது.  காஷ்மீர சைவம் எனப்படும் சைவ பிரிவு இந்தியாவின் வடபகுதியில் நடைமுறையில் இருந்து வருகிறது.  ஆனால் காஷ்மீர சைவத்திற்கும் தென்கோடியில் வழங்கும் சைவத்திற்கும் பல மாறுபாடுகள் உள்ளன.  இதைபோலவே கர்நாடக பகுதியில் வழக்கத்திலிருக்கும் வீர சைவத்திற்கும்,  தமிழ் சைவத்திற்கும் பல வேற்றுமைகள் உண்டு.  எனவே சைவ சித்தாந்தம் என்றால் அது தமிழர்களுக்கே பிரத்யேகமாக உரிய சொத்தாகும்.   இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.

    தமிழர்களுக்கு சைவ சித்தாந்தம் சொந்தமென்றால் அது தமிழ்நாட்டில் எப்போது தோன்றியது?  ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா? அல்லது இடையில் வந்ததா?  என்றொரு கேள்வி எழும்பும்,  ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் அங்கிங்கெனாதிபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருந்த சைவம் இடத்திற்கு இடம் ஏற்பட்ட சில மாறுபாடுகளால் வடக்கிலும்,  கன்னட தேசத்திலும் தனி பெயரோடு தனிக் கொள்கையோடு இன்று இருந்தாலும் சைவத்தின் மூலக் கொள்கைகளை சிந்தாமல் சிதறாமல் தமிழகம் மட்டுமே வைத்துள்ளது எனலாம்.


    சைவ சித்தாந்தத்தை தமிழர்களுக்கே உரிய தனிசொத்து என்று சொல்வதில் மிகப் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது.  அது என்னவென்றால் தமிழர்களின் மதம்மான சைவம் அதன் மூல நூல்கள் தமிழில் இல்லாமல் வடமொழியில் இருப்பதற்கு என்ன காரணம்?   அப்படியென்றால் இது தமிழருக்குறிய மதம் அல்ல என்ற சிக்கலை சிலர் எழுப்புகிறார்கள்.

    சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களும், ஆகமங்களும் சைவ சித்தாந்தத்தின் ஆதார நூல்களாகும்.  அதாவது அந்த நூல்களில் தான் இந்த சித்தாந்தத்தின் முழுமையான கருத்துக்கள் காணகிடக்கின்றது.  வேதாகமங்கள் அனைத்தும் வடமொழியிலேயே இயற்றப்பட்டிருக்கிறது.  என்பது நாம் நன்கு அறிந்த சங்கதிதான்.  தமிழரது தனித்தன்மையான தத்துவம் இது என்றால் இது தமிழில் எழுதப்படாமல் வடமொழியில் எழுதப்பட்டதற்கு என்ன காரணம் என்ற இக்கேள்விக்கு பலவகையான பதில்கள் தரப்படுகின்றன.  அந்த பதில்கள் கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தோற்றம் தருகிறதே தவிர ஒற்றுமையான கருத்துக்களை தரவில்லை.  அப்பதில்களை பார்ப்போம்.

    தத்துவக்கருத்துக்கள் முதல்முதலில் சமஸ்கிருத்திலேயே உருவாக்கப்பட்டன.  அவர்களில் ஒருசாராருடைய கருத்துக்களை தென்பகுதி மக்களான தமிழர்களும்,  எற்றுக் கொண்டனர்.  அதனால் வடமொழியில் இயற்றப்பட்ட ஆகம நூல்கள் சைவ சித்தாந்த பிரமாண நூல்களாயின.  என்பது ஒரு பதில்


  இன்னும் ஒரு விந்தையான பதிலை மறைமலையடிகள் கா.சு.பிள்ளை போன்றோர்கள் தருகிறார்கள்.  ஆதிகாலத்தில் வேதங்களும் ஆகமங்களும் தமிழில் தான் இருந்தன.  ரிக், யஜுர், சாமம் அதர்வனம் போன்ற வேதங்கள் அதே பெயரிலேயே தமிழில் இருந்தது. இவற்றில் ஒன்றாகிய சாம வேதம் ராவணனால் பாடப்பட்டது.  காலப்போக்கில் தமிழ் வேதங்கள் அழிந்துவிட்டன.  வடமொழி வேதங்கள் மட்டுமே நிலைத்து நின்றன.  எனவே அவைகளை தமிழர்கள் வேறு வழியின்றி பிரமாண  நூல்களான கொண்டனர்.  என்பதே மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துக்களாகும்.

    ஏறக்குறைய இதே கருத்துக்களை மேலும் விருத்தி செய்து அதற்கு கண், காது, மூக்கு வைத்து சிலர் புதுமையான ஒரு கருத்தை உலாவவிட்டார்கள்.  வேதங்கள் உபநிஷதங்கள்,  ஆகமங்கள் ஆகியவைகள்,  தமிழில் மட்டுமே ஆதியில் இருந்தது.  பின்னர் அவைகளை வடமொழியில் சிலர் பெயர்தெழுதி மூலமான தமிழ் நூல்களை அழித்து விட்டனர்.  அசல் மறைந்து விட்டதனால் வடமொழி நகல்கள் மட்டுமே இன்று இருக்கிறது.  என்றும் சொல்கிறார்கள்.

    சற்று நடுநிலைமை உடையவர்கள் வேறு ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.  தமிழர்களின் சொந்தக்கருத்துகளான வேதங்கள் ஆகமங்கள் ஆகியவை பரத வருஷம்.  என்று அழைக்கப்படும் இந்திய துணைகண்டம் முழுவதுமுள்ள மக்கள் அறிந்து கொள்வதற்காக வடமொழியில் தமிழ்ச்சான்றோர்களால் இயற்றப்பட்டது.  என்றும் கூறுகிறார்கள்.  இவைகளையெல்லாம் பார்க்கும்போது நமக்கு குழப்பம் தான் மிஞ்சும்.  ஆகவே இக்கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு,  வேறொரு முடிவிற்கு நாம் வரலாம்.


    சமஸ்கிருதம் என்பது அன்னியமொழி அதற்கும் தமிழருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.  அது யாரோ ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருடைய பாஷை அந்த இனத்தினர் எல்லாவிதத்திலும், தமிழருக்கு முற்றிலும் மாறு பட்டவர்கள் என கருதினால்தானே வடமொழியில் எழுதப்பட்டது ஏன்?  தென்மொழியில் எழுத படாதது ஏன் என்றெல்லாம் கருத்துக்கள் உருவாகும்.  சமஸ்கிருதம் என்பது தனி ஒரு இனத்திற்கு சொந்தமானது அல்ல.  அது பாரத தேசம் முழுமைக்கும் பொதுவான சொத்து.  தமிழர்களும், பாரத தேசத்து மக்கள் தான் மற்றைய இந்திய மக்களுக்கு சமஸ்கிருதத்தில் எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை தமிழர்களுக்கும் உணடு.  எனவே வடமொழி என்பதும் தமிழர்களது மொழிதான்.எனவே தான் அந்த மொழியில் ஆகம நூல்கள் எழுதப்பட்டிருக்கிறது என்ற சிந்தனை வருமானால் எந்த சிக்கலும் எப்போதுமே வராது.  வருங்கால தலைமுறையும் நம்மைப்போல் வேண்டாத மொழிச்சண்டையில் ஈடுபடாமல் அமைதியாக வாழ்வார்கள்.

    வேதங்கள்.  ஆகமங்கள் என்ற வார்த்தைகளை நாம் பலமுறை பயன்படுத்துகிறோம்.  இதில் வேதம் என்ற வார்த்தைக்கு முழுமையான அறிவு என்ற பொருள் உள்ளது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் ஆகமங்கள் என்ற வார்த்தையின் உண்மைப்பொருள் நிறையபேருக்கு தெரியவில்லை.  என்பது உண்மையாகும்.  எனவே ஆகமம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு மேலே சென்றால் நமக்கு பலவிதத்திலும் நன்மை உண்டு. 


  நேரிடையாக ஆகமம் என்ற வார்த்தை வடமொழி இலக்கணப்படி ஒன்றிலிருந்து வந்தது என்ற பொருளை சுட்டும்.  இதன் கருத்தாக்கம் என்னவென்றால் ஒரே பரம்பொருளான சிவபெருமானிடம் இருந்து வந்தவைகள் ஆகமங்கள் என்பதாகும். இது சரியான முறையான கருத்துத்தான் என்றாலும் கூட தத்துவ நோக்கில் இந்த வார்த்தைக்கு வேறொரு பொருள் தரப்படுகிறது.   ஆ என்பது பாசத்தையும், கா என்பது பசுவையும் அதாவது ஜீவன்களையும்,  மா என்பது பதி அல்லது இறைவனையும் குறிப்பதாகும். என்றும் சொல்லப்படுகிறது.  தத்துவ நோக்கில் பார்த்தாலும் பக்தி நோக்கில் பார்த்தாலும்.  மனிதனை இறைவனோடு சம்மந்தப் படுத்துவதே ஆகமங்கள் என்று துணிந்து கூறலாம்.

    பொதுவாக ஆகமங்கள் 28 வகை என்று கூறுகிறார்கள்.  இதில் 10 நேரிடையாக இறைவன் சொன்னது என்றும்,  மீதமுள்ள 18 யோகிகள் உருவாக்கியது என்றும் வழி வழியாக நம்பப்படுகிறது.  ஒவ்வொரு ஆகமமும்,  ஞான காண்டம் யோக காண்டம் கிரியா காண்டம்.  சரியா காண்டம் என்று நான்கு பகுதிகளை தனக்குள் கொண்டுள்ளது.  இதில் ஞான காண்டத்திலேயே மனிதனின் ஆன்மீக கேள்விகளுக்கு சரியான பதில்கள் பல தரப்பட்டுள்ளன.  வேதங்களை போலவே ஆகமங்களும்,  காலவரையரை செய்ய முடியாத அளவிற்கு வயதில் மூத்தவைகளாகும்.


     இனி சைவ சித்தாந்த ஞான பொக்கிஷமான ஆகமங்களின் கடவுளை பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை எளிமையான முறையில் சிந்தித்துப் பார்த்தபோம்.  கடவுள் என்ற தனித் தமிழ் சொல்லிலேயே மிக பெரும் அறிவுப் பூர்வமான உண்மை அடங்கியுள்ளது.  கடவுள் என்ற தனிச் சொல் புறநானூறு தொல்காப்பியம் போன்ற மிக பழமையான தமிழ் நூல்களில் கையாளப்பட்டிருக்கிறது.  கடவுள் என்ற ஒரே சொல்லுக்கு சிவபெருமானின் திரிசூலம் போல 3 கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.  கடவுதல் என்றால் இயக்குதல் எனவே கடவுள் என்பது உலகத்தை இயக்குபவரை குறிப்பது முதலாவது பொருள்.  இரண்டாவது தாக கடவுள் என்பது உள்ளத்தை மனதை கடந்தவர் எனப் பொருள் கொள்ளலாம். மூன்றாவதாக கடவுள் உலகத்தை கடந்தவர்.  அதே நேரம் உலகின் உள்ளும் உள்ளவர்.  ஒவ்வொரு உயிர் உள்ளும் நிறைந்து நிலைத்து நின்று அவற்றை கடந்தும் இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். இவைகள் சைவ சித்தாந்தம் கடவுளுக்கு சொல்லும் அறிவியல் பூர்வமான உண்மைகளாகும்.  கடவுள் என்ற வார்த்தையின் ஆராய்ச்சியை இம்மட்டோடு நிறுத்தி கடவுளை பற்றி சைவ சித்தாந்த கருத்துக்கள் இன்னும் என்னென்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

    இந்த விஷயத்தில் சைவம் இரண்டு பிரிவுகளான கருத்துக்களை கொண்டுள்ளது.  ஒன்று கடவுள் இருக்கிறார் என்பதை நிருபிப்பது மற்றொன்று கடவுளுக்குரிய குணங்களையும், இயல்புகளையும் விவரிப்பது.  கடவுள் உண்டு என்பதை நிருபிக்கும் முதல் பிரிவுக்குள் மேலும் இரு பிரிவுகள் உண்டு.  அவை சுபக்கம்.  பரவக்கம் என்ற வார்த்தைகளால் சைவ சித்தாந்திகள் குறிப்பிடுகிறார்கள்.  கடவுள் உண்டு என்பதை காரணங்கள் காட்டி நிருபிப்பது சுபக்கம் ஆகும்.  கடவுளை மறுப்பவர்களின் வாதங்களை பொருந்தாது என்று புறம் தள்ளுவது பரபக்கம் ஆகும்.


     ஒரு பொருள் இருக்கிறது என்பதை நிருபித்துக்காட்ட மூன்று வழிகள் உண்டு.  அவைகளை பிரமாணம்,  பிரதியட்சம், அனுமானம் ஆப்தவாக்கியம் என்று சொல்லலாம்.

    சைவ சித்தாந்தத்தில் ஆப்த வாக்கியம் என்பதற்கு  மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தனது உழைப்பால் கடவுளை அறிந்த மகான்களின் அனுபவ வாக்கியமே ஆப்த வாக்கியம் எனப்படும்.  இதையே சுருதி என்றும்,  சொல்லலாம்,  வேதம் ஆகமம் எல்லாமே சுருதி என்ற வட்டத்திற்குள் வந்துவிடும் என்பதாலும் தவத்தால் அனுபவத்தை நேரிடையாக பெற்ற ஞானிகளின் அமுத மொழிகளும்,  அவைகளுக்கு இணையானதே என்று சைவ சித்தாந்தம் கூறுவதில் மிக ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

    வேதங்கள் என்பது எந்த ஒரு தனி மனிதனாலும் உருவாக்கப்பட்டது அல்ல.  உடலை சுருக்கி உயிரை பெருக்கி ஞானக்கண்களால் தரிசிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளூணர்வால் வெளிப்படுத்திய பொக்கிஷங்களே வேதங்கள் ஆகும்.  அப்படி பெற்ற கருத்துக் கருவூலங்கள் வேதங்களின் சேர்க்கப்படாமல் வெளியிலேயும்,  உலா வரலாம். காலத்தால் மிகவும் பின்தங்கியும்,  அது வெளிப்பட்டு இருக்கலாம்.  எனவே காலங்கள் கடந்து நிற்கும் அனுபவ மொழிகளை ஏற்றுக்கொண்டு கடவுளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்ப வேண்டும். அப்படி நம்புவதும் நம்பாமல் இருப்பதும் தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் என்றாலும் கூட முன்னோர் வாக்கை புறம் தள்ளுவது அறிவுடைமை ஆகாது என்று சைவ சித்தாந்தம் நம்புகிறது.


    மேலும் வேதங்களிலும் ஆகமங்களிலும் கடவுளைப்பற்றி கூறப்பட்ட விஷயங்களை நிருபித்து காட்டுவதற்கு ஞானிகள் நிச்சயம் முயன்றிருப்பார்கள்.  அம்முயற்சிகள் என்னவென்று சிந்திப்போம்.

    கடவுள் இருப்பது உண்மை என்பதை உலகத்தை வைத்து சைவ சித்தாந்திகள் நிருபிக்க முயன்றிருக்கிறார்கள்.  பானை ஒன்று இருக்கிறது என்றால் அதை செய்தவனும் இருக்க வேண்டும் அதே போன்று உலகம் இருக்கிறது. என்றால் அதை படைத்தவனும் இருந்தே ஆக வேண்டும். ஒரு பானை எப்படி தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதோ அதேபோலவே உலகமும்,  தன்னைத்தானே படைத்துக் கொள்ள முடியாது.

 உலகம் தன்னைத்தான் உருவாக்கி கொள்ளவில்லை என்றாலும்,  அது என்றோ ஒருநாள் உருவானது அல்ல என்றுமே காலகாலமாக அது இருந்து வருகிறது.  என்றும் வாதிக்கமுடியாது.  காரணம் என்னவென்றால் உலகம் என்பது பல பகுதிகளால் ஆனது.  பல கூறுகள் உடைய எந்த பொருளும்.  தானாகவே சேர்ந்து கொள்ள முடியாது.  அப்படி சேரும் என்பதற்கே எந்த அனுபவ சான்றுகளும் இல்லை.  பல பகுதிகளாக கிடப்பதை ஒன்று சேர்க்க ஒரு ஆள் வேண்டும்.  உதாரணமாக ஒரு குடையில் துணி, இரும்பு, மரம், என்று பகுதிகள் பல உண்டு,  இவற்றை ஒருவன் தனது அறிவை பயன்படுத்தி சேர்த்தால் தான் அது குடையாகும்.  அதே போன்றுதான் உலகமும் பலபல பகுதிகளாக கிடக்கிறது.  அதை ஒன்றுபடுத்தி உருவாக்க ஒரு சக்திவேண்டும். அந்த சக்திதான்  இறைவனாகும்.  என்று சைவ சித்தாந்திகள் இறைவனின் இருப்பை நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்கள்.


    உலகம் எப்போதுமே இருந்து வரும் பொருள் என்று கொண்டால் அதற்கு அழிவு என்பது இல்லை என்பதாக கருத வேண்டும்.  ஆனால் நாம் அப்படி அழியாத் தன்மையோடு உலகை பார்க்கவில்லை.  .பூமியில் உள்ள ஒவ்வொரு துளியும், அணுவும் ஒவ்வொரு விநாடியில் மாறிக்கொண்டேயும் அழிந்துகொண்டேயும் புதிதாக உருவாகிகொண்டேயும், வருகிறது. அழிந்தும் தோன்றியும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் ஒரு பொருள் என்றும் நிலைத்திருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  எனவும் சைவ சித்தாந்திகள் கருதினர்.

    அதே நேரம் வேறொரு உதாரணத்தையும்,  அவர்கள் காட்டி கடவுளை நிருபிக்க முயன்றார்கள்.  ஆத்மாக்கள் பிறப்பதும். சுக துக்கங்களை அனுபவிப்பதும் அவரவரின் கர்மாவே ஆகும்.  என்பதை எல்லா இந்துக்களும் ஒப்புக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல கடவுளே இல்லை என்று வாதிடும் ஜைனர்களும்,  பவுத்தர்களும் கர்மாவை உண்மையென்றெ நம்புகிறார்கள்.  அப்படிப்பட்ட கர்மா ஆத்மாவை தானக தேடி அடைய முடியாது.  கர்மாவிற்கு தானாக முடிவு எடுக்கும் அறிவு உண்டு என்றால் பலவிதமான சிக்கல்கள் மிகுந்ததாகி குழப்பங்களே மிஞ்சும்,  அதனால் இந்த ஆத்மாவின் கர்மாவை இதனோடு இணைக்கவேண்டும். என்று முடிவெடுப்பதற்கு ஒருவன் தேவை.  அவனே இறைவன்.  ஆகவே உலகை படைப்பதற்கும், கர்மாவை நெறிப்படுத்துவதற்கும் தானாக எதுவும் ஆகாது.  அதற்கு ஆண்டவன் என்பவன் நிச்சயம் தேவை என்று சைவ சித்தாந்தம் வாதிடுகிறது.


    ஒரு பானையை பார்த்தவுடன் அதை செய்தவன் கண்முன்னே இல்லாவிடட்டாலும் அப்படி ஒருவன் இருக்கவேண்டும்  என்று நம்மனம் நம்பிக்கை கொள்கிறது.  இதே போலவே காட்சிக்கு புலனாகாமல் கடவுள் இருந்தாலும் அவரை இருப்பவர் என்று ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று சைவ சித்தாந்திகள் கூற்றின் அடிப்படையாகும். இதற்கு மாறுபாடான கருத்துக்களும், இருக்கிறது.  அவற்றையும் தெரிந்து கொண்டால்தான் நமது ஞானம் என்பது பூர்த்தியானதாக இருக்கும்.

    உலகம் என்பது உண்மையாக இருக்கிறது என்றால்தான் அந்த உலகை படைத்தவனும்,  இருக்க வேண்டும் என்று நம்பவேண்டியது இருக்கிறது.  உலகம் என்பதே இல்லையென்றால் அதை படைத்தவன் தேவையே இல்லையல்லவா?

    ஆனால் உலகம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்   இருக்கிறது.  நமது கண்களுக்கே தெரிகிறது என்பது மட்டும்தானே ஆதாரம்.  ஆனால் நமது கண்கள் காட்டும் காட்சிகள் அனைத்துமே உண்மையானதுதானா?  சத்தியமானதுதானா?  என்று பார்த்தால் பல நேரங்களில் நமது கண்கள் இருப்பதை இல்லாமலும்,  இல்லாததை இருப்பதாகவும் காட்டி பொய்யான பல சித்திரங்களை உருவாக்குகிறது. இப்படி புலன்கள் உருவாக்கும் பொய்சித்திரங்களை நம்பி பலமுறை நாம் ஏமாந்து இருக்கிறறோம்.  இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத புலன் உலகம் இருக்கிறது என்று காட்டுவதை எப்படி நம்ப இயலும்?


    ஆகவே புலக்காட்சி, சந்தேகம் எனும்போது உலகத்தின் இருப்பும் சந்தேகமாகி விடுகிறது.  சந்தேகமான ஒரு பொருளை உருவாக்க கடவுள் எதற்கு? எனவே கடவுள் என்பது தேவையில்லாத பொருள்,  என சிலர் கருதுகிறார்கள்.  இக்கருத்தை மேலோட்டாமாக பார்க்கும் போது அதில் உண்மை இருப்பது போல் நமக்கு தோன்றும்.  ஆனால் நமது அறிவை உள்முகமாக திருப்பி சிந்தனை செய்தால் எது உண்மை என்பது நன்கு புலப்படும்.

    புலன்கள் எல்லா நேரமும் உள்ளதை உள்ளபடி காட்டவில்லை என்பது உண்மைதான்.  என்பதற்காக உலகமே பொய் என்று வாதிடுவது அறிவுடைமை ஆகாது.  உலகத்தை மாயை என்று கூறும் சங்கர வேதாந்திகள் கூட அது ஆகாயத்தாமரை போலவோ மலடி மகன் போலவோ முற்றிலுமாக இல்லாதது அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.  புலன்கள் நம்பகத்தன்மை அற்றது என வாதிடும் இம்மானுவேல் காண்ட் போன்ற மேலைநாட்டு தத்துவஞானிகள் கூட அவைகள் எதையோ காட்டுகின்றன என்பதை மறுக்கவில்லை. எனவே உலகத்தை ஒரு மாயா தோற்றம் என்று வைத்துக்கொண்டால் கூட அந்த தோற்றத்தை தோற்றுவிக்க ஒருவன் வேண்டும்.  ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும்.  இறைவன் ஒருவன் இருப்பது தெளிவாகும்.


    சரி உலகம் உண்மையென்றும், கடவுள் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.  அப்படி வைத்துக்கொண்டால் கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார்.  அதனால் அவருக்கு என்ன லாபம்?  என்ற கேள்வி அடுத்ததாக எழும்புவது இயற்கை.  இதற்கு சைவ சித்தாந்திகள் நல்ல பதிலை தருகிறார்கள். உலகம் படைக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடுகிறது.  இதேபோன்று ஆத்மாகள் படைக்கப்பட்டு,  முற்றிலுமாக இல்லாத வகையில் அழிக்கப்படுவது இல்லை.  காலகாலமாக இறைவனைப்போல் நித்தியமாக இருக்கின்ற ஆத்மாக்கள் ஜனன மரணம் எடுத்து தனது நிலையை சுத்திகரித்து இறைவனோடு கலப்பதற்கு உலகம் என்பது நிச்சயம் தேவை.  எனவே உயிர்கள் பிறவி பெருங்கடலை கடப்பதற்கு கடவுள் உலகத்தை படைத்துள்ளார்.  என்பது சித்தாந்திகளின் அறிவார்ந்த பதில்களாகும்.

உயிர்களை கரையேற்றுவதற்கு இறைவன் உலகத்தை படைத்திருக்கிறான் என்றால் அப்படிப்பட்ட இறைவனின் இயல்புகள் என்னவாக இருக்கும் என்பது நமக்குள் எழும் அடுத்த கேள்வியாகும்.  அதற்கு சைவம் இறைவன் என்பவன் சத்சித் ஆனந்தம் என்ற மூன்று இயல்பாக இருக்கிறான் என்ற பதிலை தருகிறது.  சத் என்றால் உண்மையான பொருள் என்று அர்த்தம் சித் என்றால் தானே இயங்குதல் என்பது பொருளாகும்.  ஆனந்தம் என்றால் உண்மையே வடிவாய் தானே இயங்கி தன்னையும்,  மற்ற அனைத்தையும்,  இன்பமாக வைத்துக் கொள்ளுதல் என்பது பொருளாகும்.


ஆகவே இறைவன் இந்த மூன்று இயல்பாக இருக்கிறான் என்பது சித்தாந்தம் கூறுவதை அனுபவ அறிவு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்.

சைவ சித்தாந்தத்தின் கடவுள் கருத்தை இதுவரை சுருக்கமாக பார்த்தோம்.  இந்து மதத்தை தவிர உலகில் உள்ள வேறு எந்த மதத்திலும் இத்தகைய வினாக்கள் எழுப்பி அறிவு பூர்வமான பதில்களை கொடுக்கும் வழக்கமில்லை.  ஏன்? சில மதங்களில் கேள்விகள் கேட்பதற்கே அனுமதி இல்லை. அறிவுக்கு பொருந்திவரக்கூடிய சகல விஷயங்களையும்
 இந்து மதம் தனக்குள் கொண்டிருந்தாலும்.  அது தன்னை விளம்பர படுத்திக் கொள்ள விரும்வில்லை என்பதனால் அரைகுறையாக மற்ற மதங்கள் தாங்களே அறிவின் சிகரம் என்று குதியாட்டம் போடுகிறது.  நாம் நம்மை அலங்காரப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட சுத்தமாக இருப்பது தவறு என்று யாரும் சொல்லிவிட முடியாது.  மற்றவர்கள் நம்மை முட்டாள்கள் என்றே பட்டம் கட்டாமல் இருப்பதற்காகவது நமது அறிவு விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

    சைவ சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் இருக்கிறதென்று ஆரம்பத்திலேயே பார்த்தோம். அந்த பிரிவுகளின் அனைத்து சிந்தனைகளையும் வரும் அத்தியாயங்களில் ஆழமாக சிந்திப்போம்.  அப்படி செய்தால்தான் இந்து மதத்தின் உண்மை வடிவை முழுமையாக தரிசிக்கலாம். 
+ comments + 29 comments

சைவ சமயத்தைப் பற்றி அருமையான விளக்கம்,இதைத் தொடர்ந்து எழுதுங்கள்,சைவ சமயத்தைக் கைக் கொள்பவர்கள்,கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவைகள் ,பதிவுக்கு நன்றிகள்.

Anonymous
11:11

I can understand the difficulty you have faced in the school by christian mission.

I am really sorry about. some understood jesus christ wrongly and insisting to follow christianity.

Jesues never started a religion "Christianity".

In the time of Jesus Christ, The only effective mode of cummunication to people is by words of mouth.

So jesus said , go and preach else where the words of God , so as the people will return to the Source of Creation, the God Father

So the deciples went across to many places, the followers , went across to many countries to preach about the Words of God .

Even today some are preaching the words of god in the name of Christ and ask to get converted to Christianity.


Jesus never started christianity , he never ask to get convereted to chritianity.

Its the people who came after so many years misinterpreted and creating a bad name to christianity in the name of religion conversion.

Being a christian is not following the rules and regulations of Christianity, its being Christ HIMSELF


I studied in a Christain College , We ask the Question to elder Father who is nearly 60+.

Is Chrsitianity is the Only Path to Salvation, Is All other religion is not a correct one.

His answer was truly amazing. He said , we respect all religion,any religion any path is OK to merge with Divine.

Jesus path of Love is also one way. If you see properly , all the religion are conveying the same.


Because of this religion conversion by some , Kindly don't feel the whole Christianity and Jesue Christ in a wrong way.

Who ever able to rise their consiousness to Christ Consiousness

They are Christians.

Buy the way, Rising to the Christ consiousness never means being Christian, are reading bible, or going to church.

The Kingdom of God is within you , who ever able to witness that (Self realization), they are in align with Christ , not only with Christ but with all the Yogis, Siddhars, Mahatmas,Rishis and so on, Who ever realized whom they are , by following any path , any technique.

Here the path are so so many, but destination is SAME

Don't Follow Christianity but Christ


truly
Francis

@Guruji,

மிக நிண்ட நாட்களுக்கு பிறகு மிக நல்ல பதிவு.

:)

@Francis,

உங்களை போல் உள்ளவர்கள் இருப்பின் கிறுத்துவத்தை யாரும் குறைசொல்லபோவதில்லை. உங்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

உதாரணத்திற்க்கு சென்னையை எடுத்துகொள்வோம், எங்கு சென்றாலும், கடற்கரை, பொதுஇடங்கள், சில கிறுத்துவ நண்பர்கள் கையில் ஒரு விளம்பர பத்திகளை கொடுத்து, நம்மை கிறுத்துவராக்க முயற்சி செய்யும் பொழுது என்னை போன்றவர்களுக்கு மிகுந்த் கோபங்கள் தான் வருகிறது. ஒருவருடைய மதம் சார்ந்த விடயங்களில் அவரை அல்லாத மற்றவருக்குரிமையில்லை என்ற சாதரண விடயம் குட தெரியாத இவர்கள் எப்படி கடவுளை அடைய முடியும்.?

U explained well how the christians expand their religion among the buddies in schools. This is the same thing happening in their sunday mass also

U explained well how the christians expand their religion among the buddies in schools. This is the same thing happening in their sunday mass also

இந்துமதத்தின் தத்துவத்தை விளங்காதவர்கள் புராண இதிகாச த்தின் உட்பொருளை வியங்காதவர் கருத்தாகி விட்டது அதை விளங்க ஞாணம் தேவை அதை விளக்குவதே ஞாணிகளின் பணி

Krish
03:27

Basically mainstream Christians like Catholic and Protestant don't do much mischief like conversion/preaching etc. It is the newly formed cults like Jehovah/ 7 day and number of such sects that create trouble.

@Anonymous
Dear Ananimous,
yours is the perfect true view.
So, Jesus Consciousness = Siva consciousness = Vishnu Consciousness = Muruga Consciousness = Allah Consciousness = Buddha Consciousness
= In short Consciousness of All Religions of the World,
BECAUSE THERE IS ONLY ONE GOD ONLY;SO ONE GOD-CONSCIOUSNESS MANIFESTING IN DIFFERENT NAMES.
WHAT A PRISTINE BEAUTY!!!

17:35

ஒவ்வொரு மதங்களும் மனித இதயத்தைப் பண்படுத்தவேயன்றி.. மதவெறி கொண்டு மனித இதயத்தைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. எந்த மதமாயினும் நாம் மதிக்க வேண்டுமேயன்றி மிதிக்கக்கூடாது. யாவரும் நல்வழியில் நடந்து சொர்க்கத்தையடைய வேண்டுமென்பதே இறைவனினதும், மனிதனினதும் அவாவும் கூட. நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் உஜிலாவிற்கு என் நன்றிகள்!

Anonymous
20:15

இந்து மதம்தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. முதலாவது இந்து மதம் என்பது ஒரு மதம் இல்லை. சைவம் வைணவம் என்பவற்றை வேண்டுமானால் ஒரு பேச்சுக்கு மதம் என்று சொல்லலாம். ஆக சைவம் மற்றும் வைணவம் இன்ன பிற மூதாதையர் வழிபாடு இந்தியத் துணைக்கண்டத்தில் பன்னெடுங்காலமாக உள்ளது.

ஆகவேதான் இந்து மத புராணங்களில் இந்தியா அல்லாது வேறு நாடுகளைப் பற்றியோ அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. அது போன்றே ஆப்ரிக்க நாடுகளில் சிலையை வணங்கும் எவரையும் இந்து என்று சொல்ல முடியாது. இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் மக்களை மேற்கு ஆசியர்கள் (பூலோக அடையாளத்திற்காக) இந்து என்ற சொல்லை உபயோகித்தனர். சிந்து நதி இதற்கு ஒரு முக்கிய காரணம். பிறகு அதுவே மதம் மற்றும் கலாச்சாரத்திற்கான அடையாளமாகிப் போனது. அவ்வாறு பார்த்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம் கிறிஸ்துவர் அனைவரும் இந்துக்களே (அதாவது பூலோக ரீதியாக) .

இஸ்லாம் (இஸ்லாம் என்றால் இறைவனுக்கு சரண் என்று அர்த்தம்) கூறுவது என்னவென்றால், (இறைவனிடம் சரணாகதி என்கிற) இயற்கை மதம் தான் இறைவனால் அருளப்பட்டதாகும். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் "ஒரே இறைவன் ஒரே குலம்" என்ற அமைப்பில்தான் பிறக்கின்றன. பிறகு அக்குழந்தை தனது பெற்றோர்களையும் உற்றார்களையும் பின்பற்றி இறைவனுக்கு உருவம், மனைவி, குழந்தை என்று தனது கற்பனை வட்டத்துக்குள் கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி மனிதருள் ஜாதி, பிறப்பால் உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்று பல்வேறு கற்பனைகலைப் புகுத்தி விடுகின்றனர். அது மட்டுமின்றி பயம் காரணாமாக பாம்பு, நெருப்பு போன்றவற்றை வணங்கும் பழக்கமும் பின்னாளில் ஏற்ப்பட்டது. மனிதன் இவ்வாறு தவறு செய்யும் போதெல்லாம் மனிதருள் ஒருவரை இறைவன் தனது தூதராக அனுப்பி உபதேசம் செய்தது வரலாறு. (அவ்வாறு வந்த தூதர்களையும் அவர் மறைவுக்குப் பின்னர் கடவுள் என்றும் அவர்தம் அவதாரம் என்றும் வழிபடுவது வேறு கதை)

ஆகவே, உலகில் தோன்றிய முதல் மதம் இறைவனை மனிதக் கற்பனையின்றி (இறைவனுக்கு உருவம், இடம், குடும்பம் கற்பிக்காமல் ), வணங்குவதாகும்.

இப்போது சொல்லுங்கள், முதல் மதம் இந்து மதமா அல்லது இயற்கை மதமா?

Anonymous
20:16

இந்து மதம்தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. முதலாவது இந்து மதம் என்பது ஒரு மதம் இல்லை. சைவம் வைணவம் என்பவற்றை வேண்டுமானால் ஒரு பேச்சுக்கு மதம் என்று சொல்லலாம். ஆக சைவம் மற்றும் வைணவம் இன்ன பிற மூதாதையர் வழிபாடு இந்தியத் துணைக்கண்டத்தில் பன்னெடுங்காலமாக உள்ளது.

ஆகவேதான் இந்து மத புராணங்களில் இந்தியா அல்லாது வேறு நாடுகளைப் பற்றியோ அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றியோ எந்த குறிப்பும் இல்லை. அது போன்றே ஆப்ரிக்க நாடுகளில் சிலையை வணங்கும் எவரையும் இந்து என்று சொல்ல முடியாது. இவ்வாறு இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் மக்களை மேற்கு ஆசியர்கள் (பூலோக அடையாளத்திற்காக) இந்து என்ற சொல்லை உபயோகித்தனர். சிந்து நதி இதற்கு ஒரு முக்கிய காரணம். பிறகு அதுவே மதம் மற்றும் கலாச்சாரத்திற்கான அடையாளமாகிப் போனது. அவ்வாறு பார்த்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம் கிறிஸ்துவர் அனைவரும் இந்துக்களே (அதாவது பூலோக ரீதியாக) .

Anonymous
13:25

@kara1946

Damn, Jesus Consciousness = Siva consciousness = Vishnu Consciousness = Muruga Consciousness = Allah Consciousness = Buddha Consciousness


Allah is the Lord of All worlds, not Christ, Budha, Vishnu, Sivan, Muruga.....

13:30

@Anonymous
Yes, You're true, The history books clearly states what you're written here. But people of India always confused and they related religion in to geographical locations, "Hindu" - People lived around the river Sindh (Sanskrit) which derived from persian " Hind" , this is orginated from Arab word "Al-Hind".... If any one doubted let's try searching " Etimology-Hindu"

You will get some Idea!

Anonymous
19:23

@Arif:
The origin of Islam can be traced back to 7th century Saudi Arabia. The prophet Muhammad (circa 570-632 A.D.) introduced Islam in 610 A.D.

The orgin of Hinduism can be tracked from, Around 6000 B.C. along the banks of river Ganges,Yamuna & Saraswati "Vedic Religion" or "Sanatan Dharma" came into existence in ancient Bharatvarsha or modern day India.

So hinduism came Around 6000 B.C.( before christ) and Muslim religion 610 A.D ( After death of Christ).

How could your muslim religion say that the persian( this language was availble in the befoe christ era) word "Hind" , is orginated from Arab word "Al-Hind" ????

More over, based on the aboove facts, Hinduism is the first religion and all other religions came later.

According God is one, u say ALlah,Christ or Krishna All are one and same.

I am jus clarifying the statement raised by u.

Anonymous
06:13

//சைவ சித்தாந்தம் என்றால் அது தமிழர்களுக்கே பிரத்யேகமாக உரிய சொத்தாகும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது.//

நல்ல பதிவு .. ஆனால் பல பிழைகள் இருக்கின்றன.. உதா. சைவ சித்தாந்தம் தமிழகத்தில் நிலைத்து நின்று விட்டாலும் - அது கசுமீரத்தில் தோன்றி தமிழகத்துக்கு வந்ததே உண்மை .....

Anonymous
20:07

அன்பர்களே, இந்து (இந்திய) மதம் (அதாவது சைவம், வைணவம்) எல்லாமே, மதங்கள் இல்லை. அவை ஒரு குறிப்பிட்ட இடத்தில், பூலோக எல்லையில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை மற்றும் தத்துவங்கள். உதாரணமாக, கர்மா என்பது இந்து மத தத்துவம். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்". இதுதான் கர்மா. சேலை அணிவதும் பொட்டு வைத்துக் கொள்வதும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதும் இந்திய மத பாரம்பரியங்கள். இது கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

அது போக (மகா ஈஸ்வரன் - மித உயர்ந்த கடவுள்) சிவபெருமானின் இருப்பிடம் கைலாயம், அதாவது இமய மலையில் உள்ளதாக நம்பப்படுகிறது. உலகைக் கட்டியாளும் ஒரு இறைவன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருப்பதோ அல்லது இருப்பாதாக நம்பப்படுவதோ ஒரு பிரபஞ்சக் கடவுளுக்கு ஏற்புடையதா? அப்படிஎன்றால் ஆஸ்திரேலியவில் வாழும் மனிதருக்கு யார் கடவுள்?.

உயிர்களைக் கொல்லாமை என்ற தத்துவத்தில் உருவானதுதான் பவுத்தம். இது ஒரு தத்துவமே அன்றி வாழ்க்கைக்கு எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரு சட்ட நெறி இல்லை. நாலாபுறமும் கடல் நீரால் சூழப்பட்டுள்ள தீவுகளில் வாழும் எந்த மனிதனும் இதைப் பின்பற்ற முடியாது. (மீன்தானே அவன் முக்கிய உணவு). மதம் / சட்டம் என்பது பின்பற்றத்தானே ஒழிய அதை மீற அல்ல. ஆனால் தத்துவங்கள் மீறப்படலாம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நல்ல தத்துவம்தான். ஆனால் உதாரணமாக இன்று கேரளாவில் ஆண் பெண் விகிதம் ஒன்றுக்கு மூன்று என்று இருக்கும்போது மீதம் இருக்கும் பெண்களின் கதி என்ன? அல்லது ஒருவன் மனைவி தீராத நோயாளியாக இருக்கும் போது, அவள் வாழ்க்கையுடன் சேர்த்து அவனும் வேறு மனம் புரியாமல் வாழ்க்கையை வீணடிக்க வேண்டியதுதானா? வைப்பாட்டி வைத்துக் கொள்வதைவிட சட்டபூர்வமாகத் திருமணம் செய்வது சிறந்தது அல்லவா?

மதம் என்றால், ஒரு தீர்க்க தரிசி மக்களை வழி நடத்த வேண்டும். பாவம் புண்ணியம், எது என்ற வரையறை இருக்க வேண்டும். புண்ணியம் செய்தவனுக்கு கூலியும் பாவம் செய்தவனுக்கு தண்டனையும் இவ்வுலகிலேயே அளிக்கப்பட வேண்டும். இறைவன் கூறிய சட்ட திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். மது அருந்துவது தீயது என்றுதான் எல்லா மதங்களும் கூறுகின்றன. ஆனால் மது அருந்திவிட்டு பஞ்சமா பாதகங்களைப் புரியும் ஒருவனுக்கு என்ன தண்டனை என்று எத்தனை மாதங்கள் கூறுகின்றன? (அவன் செத்த பின் நரகம் புகுவது அல்லது வாழும் வியாதியில் உழல்வது என்பது வேறு கதை).

எது நேர்வழி என்பதை இறைவன் ஒருவன்தான் மனிதனுக்கு அறிவித்துத் தர வேண்டும். இறைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? அதற்காக அவன் மனித ரூபத்தில் பூமிக்கு வர வேண்டுமா? அப்படி வந்தால் அவன் இறைவனா? அவன் குழந்தை பெற்றாலோ அல்லது பெறப்பட்டலோ அவன் இறைவனா? . இறைவன் என்பவன் மனிதக் கற்பனைக்கு எட்டாதவனாக, மனிதத் தேவைகள் எல்லாவற்றில் இருந்தும் தூய்மையானவனாக இருக்க வேண்டும் (உண்பது, தூங்குவது, மறப்பது என்பது போல்).

எனவேதான் சொல்கிறேன், இந்து மதத்தை ஒரு மதம் என்ற ரீதியில் வேறு மதங்களுடன் ஒப்பிடுவது, அதன் பழமையைப் பற்றிப் பேசுவது என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது என்று தோன்றுகிறது.

FORTRAN என்கிற computer program 70 களில் பிரபலமான ஒன்று. ஆனால் இன்று அதைவிட மிகவும் சிறந்தவை உள்ளன. அதற்காக இன்றைய ப்ரோக்ராம்களுடன் அதை ஒப்பிட்டு இன்றையவைகளுக்கு அது ஒன்றும் குறைந்ததில்லை என்று வாதிடுவதில் என்ன பயன்? அன்றைய தினங்களில் அது சிறந்தது மற்றும் இன்றைய காலத்திற்கு இது சிறந்தது. அவ்வளவே. பழமையான ஒன்று எப்போதுமே சிறந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. அதற்காக அதைகுறைத்து மதிப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

இஸ்லாம் கி.பி. 600 களில் தோன்றியாதாக கூறப்பட்டாலும் அதன் செய்தி என்னவோ பழமையானதுதான். 6000 வருடத்திற்கு முன் தொட்டு ஆபிரகாம், பின்னர் அவர் வழி வந்த மோசஸ் கூறிய அதே செய்தி: ஒன்றே குலம் ஒருவனே தேவன், இறைவனுக்கு நமது கற்பனைக்கேற்ப உருவம், மனைவி, குழந்தை, எல்லை, குறைகள் கற்பிக்கக் கூடாது. அவர்களின் ஒரே வித்தியாசம், சட்டங்கள் ஒவ்வொரு தீர்க்க தரிசியின் நாட்டுக்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில், சிவபெருமானும, திருமாலும் கூட இந்தியாவில் இறைவனால் அனுப்பப்பட்ட தூதரகளாகக் கூட இருக்கலாம். நான் முன்பு கூறியது போல தூதர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களையே கடவுளாக வழிபடும் கலாச்சாரமும் மனிதர்களில் இருந்து வந்தது.

நன்றி.

goldmari
20:08

நல்ல தகவல் ! நன்றிங்க !பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .

goldmari
20:09

நல்ல தகவல் ! நன்றிங்க !

rajudranjit
20:10

அருமையான விளக்கம்!

Anonymous
08:31

FORTRAN-TAMIL EXPLANATION about the Religion -EXCELLENT.I AGREE WITH HIM.HIS POINT IS ALMOST RIGHT. Thks.Dr.Mohan.

Anonymous
18:55

ஏன் இசுலாமியர்கள் / இஸ்லாம் மற்ற மதத்தின் சாராம்சத்தினை பொருந்தி கொள்வதில்லை?

இறைவனின் திருப் பெயரால்

இந்த கேள்விக்கு மிக முக்கியமான ஆழமான காரணம் உண்டு. அடிப்படையிலிருந்து வருவோம்.!

நமக்கு தெரிந்த வைத்திய முறைகள், பழங்கால அறிவியல் சார்ந்த அறிவு, மொழி மற்றும் ஏனைய அடிப்படையான அறிவு மற்றும் சட்டங்கள் அனைத்தும் நன்றாக ஆராய்ந்தோமானால் அவை அனைத்தும் மதம் சார்ந்த புத்தங்கள் வாயிலாகவே கிடைத்து இருக்கும்.

இத்தனை இரண்டு வகையில் பார்க்கலாம், 1) சாமி பெயரை சொல்லி மிரட்டினால்தான் மக்களுக்கு புரியும், மேலும் அவர்கள் அதனை முறையாக பின்பற்றுவார்கள் 2) இது நம்மை படைத்த இறைவன் நமக்கு வாழ வகுத்து இருக்கும் வழிமுறை.

முதலாவது வாசகம் வேதங்களை முற்றிலுமாக பொய் என்று மறுக்கும் அளவுக்கு வன்மையான வாசகம், ஆனால் இதற்கான வாய்ப்பு மிக குறைவு ஏனெனில் ஒவ்வொரு வேதமும் அதற்கே உரிய சிறப்புகளுடன் அது இறைவேதம்தான் என்று உறுதி படுத்தும் ஆச்சரியங்களை கொண்டு இருக்கும். அறிவியல் தத்துவம், வாழ்கை தத்துவம், பொருளாதாரம், காதல் மற்றும் அந்த அந்த கால, சமுதாய மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ற சட்ட திட்டங்காளை கொண்டு இருக்கும். அவற்றில் சில இன்றளவும் அறிவியலாலோ மற்ற சில கோணத்தில் நோக்கும் போது விடை புரியா வினோதங்களாக இருக்கும். இந்த இறை வேதங்கள் மக்களுக்கு தூதர் / ரிஷி / அவதாரம் மூலமாக அளிக்கப் பட்டு வந்து இருக்கிறது.

Anonymous
18:55

வேத புத்தகங்களை வெறுமனே பிதற்றலாக எண்ணிவிடாமல், அதை அறியும் ஆவல் கொண்டு அதை படிப்பவர்களுக்கு தெரியும் அது கொண்டுள்ள அறிய மற்றும் ஆச்சரிய தகவல்கள்.

இதில் விஷயம் என்னவென்றால், மனிதனுக்கே உள்ள பெருமை குணம்,(அனைத்து வேதங்களும் தத்துவங்களும் கண்டிக்கின்ற குணம்) என் வேதம் தான் பெரிது அதில் இல்லாதாவைகளே இல்லை என்று அது உண்மையில் போதிப்பது என்ன என்று அறியாத நிலையில் பெருமை கொண்டு மற்றவைகளை கீழ்தரமாகவோ அல்லது மருத்து பேச வைக்கிறது.

உண்மையை அறிந்தவர்களாக இருப்போமானால் வேதம் அதற்கு உரிய அனைத்து அத்தாட்சிகளையும் கொண்டுஇருக்குமானால் அது கண்டிப்பாக இறைவனிடத்தில் இருந்து வந்ததுதான் என்று விளங்கும்.

இறைவன் கொடுத்த ஓரு வேதத்தை கொண்டாடுவதும் மற்றொன்றை இழிவு படுத்துவதும் / மறுப்பதும் எந்தவகையில் அறிவுபூர்வமான செயல் என்று எனக்கு தெரிய வில்லை.

சரி ஒன்றுக்கொன்று முரண்பாடுகளை கொண்ட வேதங்களில் எதனை பின்பற்றுவது? அதற்கான பதிலும் இறைவன் வேதங்களில் கொடுத்துள்ளான்.

எப்படி மௌரியர் கால சட்டம் முகலாயர் காலத்திற்கு பொருந்தாதோ, எப்படி முகலாயர்கள் கால சட்டம் ஆங்கிலேய இந்தியாவுக்கு பொருந்தாதோ, எப்படி ஆங்கிலேய இந்திய சட்டம் சுதந்திர இந்தியாவுக்கு பொருந்தாதோ அதேபோல் வேத சட்டங்கள் அந்தந்த கால கட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் வழங்கப்பட்டது ஆகும்.

இன்னும் சுதந்திர இந்தியாவில் திருத்தப்பட்ட சட்டங்கள் பல உள்ளன, திருத்தப்பட்ட சட்டத்தை விட முந்தய சட்டம் தான் எனக்கு பிடித்து இருக்கிறது அதனயே நான் பின்பற்றுவேன் என்று நாம் சொல்லலாம், ஆனால் சட்டத்தை வகுத்து பாதுகாப்பவர்கள் பார்வையில் பழய சட்டம், செல்லாக் காசு மேலும் நீதி, திருத்தப் பட்ட சட்டத்தினைக் கொண்டே வழங்கப்படும். அதே போல் காலத்திற்கு ஏற்ப வேத சட்டங்களை கொடுக்கும் இறைவன் பார்வையில் எது திருத்தப் பட்ட அல்லது தற்போதய நடைமுறயில் உள்ள வேதம் என்று சிந்தித்து படித்து இல்லயேல் கேட்டாவது தெரிந்து கொள்வது நாம் கடமை ஆகும்.

எடுத்து காட்டாக முன்பெல்லாம் தங்கம் 5 கிலோ வரை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர சட்டம் அணுமதித்தது, இப்பொழுதோ நிலைமை அப்படி இல்லை. ஒருவேளை 5 கிலோ தங்கத்தை எடுத்து வருவீர்கள் ஆனால் பிடிபடுவீர்கள், அப்பொழுது நான் போன முறை எடுத்து வந்தேன் சட்டத்தில் வழி இருக்கிறது என்று சொல்வோமானால் அதற்கான பதில் என்னவாக இருக்கும்? சட்டம் மாட்ட்றப்பட்டுவிட்டது அது செய்தி தாள்களிலும் வெளியிடப் பட்டுவிட்டது, தெரிந்து கொள்வது உமது கடமை என்று சொல்வார்களா இல்லை, ஹோ உங்களுக்கு தெரியாதா, சரி நீங்கள் எடுத்து செல்லுங்கள் உங்கள் தங்கத்தை என்று சொல்வார்களா?

அதே போல் வேதத்தில் இறைவன் தெளிவான சட்டங்களையும் இது அவனது வேதம் தான் என்பதற்கான அறிகுறிகளயும் வைத்து இருக்கின்றான். தெரிந்து கொள்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. அனைத்து வேதங்களையும் படித்து எது உண்மை என்று அறிந்து கொள்ள முற்படுவது கொஞ்சம் கடினம்தான், எனவே இறைவன் அதர்கான அறிவையும் வாய்ப்பையும் சிலருக்கு கொடுத்து அவர்கள் வாழ்க்கையை முழுவதுமாக அதற்கென அற்பனித்து தங்கள் ஆராய்ச்சியினை உலகுக்கு தெரிய படுத்துகிறார்கள். அவர்கள் குறைந்தது 2 வேதமாவது முழுவதும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

அந்த அறிஞர்களின் ஆராச்சி படி புனித குர்ஆன் கடைசி வேதம் மேலும் அது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட இறை வழிகாட்டி. மரியாதைக்கு உரிய திரு முகம்மது ஸல் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர் / ரிஷி / அவதாரம்.


இறைவன் என்பவன் யார் என்பதை நாம் சரியாக விளங்கி இருப்போமானால், அவன் இந்த உலகத்தின் ஆதி மூலம், பர பிரம்மம், கர்த்தர், அல்லாஹ் அனைத்தயும் படைத்தவன் அவனே என்பது புரியும். என்றால் இதில் எங்கிருந்து பிராமினுக்கு ஒரு கடவுளும் தாழ்த்த பட்டவனுக்கு ஒரு கடவுளும் இஸ்ரேலுக்கு ஒரு கடவுளும் சீனர்களுக்கு ஒரு கடவுளும் இருக்க முடியும். இறைவன் ஒருவனே அவன் எங்கிருந்து வேண்டுமானாலும் அவனது கட்டளைகளை அனுப்புவான் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்வோம்.

ஒரு இஸ்லாமியனாக இருக்க சில அடிப்பதை தகுதிகள் இருக்கிறது.

அவன் இறைவன் ஒருவனே என்ற உண்மையை நம்ப வேண்டும், முகம்மது ஸல் அவர்கள் இறைவனின் தூதர் என்பதை நம்ப வேண்டும்.
மட்டுமல்ல,
அனைத்து தூதர் / ரிஷி / அவதாரங்களையும் நம்புவானாக இருக்க வேண்டும்
அனைத்து வேதங்களையும் நம்ப வேண்டும்
நாம் அறிந்த மொழி, அறிவியல், தத்துவம், சட்டம் மற்றும் அனைத்தும் உள்பட இறைவன் நமக்கு கற்று கொடுத்ததே அன்றி வேறில்லை என்பவைகள்.

சரி அனைத்து வேதங்களையும் ரிஷிகளையும் நம்புகிறோம் என்று சொல்கிற நீங்கள் ஏன் மற்ற மதத்தவரின் பண்பாடுகளை, நம்பிக்கைகளை, கடவுள்களை, ரிஷிகள் சொல்பவைகளை, வேதங்கள் சொல்பவைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவது இல்லை? என்று கேட்கலாம்.

இவை எல்லாம் ஒரே வார்த்தையில் அடிபட்டு போகின்றன. "நம்பகத்தன்மை"

Anonymous
18:55

முகம்மது நபிகள் இதனை சொல்லி விட்டார்கள் என்று யாரேனும் சொன்னால் அதனை அப்படியே பின்பற்றுதல் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அழகல்ல. ஏனெனில் அவர் போய் கூறவும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கான நம்பகத்தன்மையை அறிந்த பின்னரே அதனை ஏற்று நடப்பவர்கள் முஸ்லிம்கள். சொல்பவரின் நம்பகத்தன்மை, முகமது நபிகளிலிருந்து அது புத்தகமாக்க பட்ட வருடம் வரை உள்ள சங்கிலி தொடரில் உள்ள அனைவரின் நம்பகத்தன்மையும் ஆராயப்பட்டே நபிமொழிகள் பின்பற்ற படுகின்றன. புனித குரான் முகமது நபி காலத்தில் இருந்து இன்றுவரை எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை எனில் அது இறைவனால் அருளப்பட்ட விதம் அப்படியே இன்று வரை உள்ளது.

இது இப்படி இருக்க பழய வேதங்களில் உபநிஷான்களில் உள்ள நம்பகத்தன்மை யாராலாவது நிரூபிக்க முடியுமா? அதில் பலமாற்றங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து இருக்கும் என்றால் அந்த இறைவனின் வார்த்தை அதன் தூய வடிவில் இல்லை. அது போதிக்க பட்ட சங்கிலி தொடரில் இடையில் ஒருவரின் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியதாக இருந்தாலும் அதன் நம்பக தன்மை போய்விடுகிறது. குறைந்தது இந்த வேதங்கள் உபனிசங்கள் இதுவரை கொண்டு வரப்பட்ட சங்கிலி தொடர் யாருக்கேனும் தெரியுமா? இதுவரை வேண்டாம், அது புத்தகமாக்கப்பட்ட வரை?

கிருஸ்தவர்களின் பைபிளும் யூதர்களின் தொரவும் பலமுறை அல்லது சிலமுறை மாறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்து மதத்தின் வேதங்கள் தோன்றிய கலகட்டமே யூகத்தின் அடிப்படையில்தான் சொல்லப்படுகிறது. பண்பாடு கலாச்சாரங்கள் பற்றி சொல்லவே வேண்டியதிலை, வேத காலத்தின் உடுப்புக்கும் நடைமுறைக்கும் இப்பொழுதுக்கும் சம்பந்தமே இல்லை.

இன்னும் நாம் விளங்கியவர்களாக இருந்தால், இந்துமதம் என்பது சைவம், வைணவம் மற்றும் வட்டார சிறு மதங்கள் மற்றும் கலாச்சாரத்தின் கலவை. அதாவது வெவ்வேறு ரிஷிகளால் அருளப்பட்ட வெவ்வேறு மக்களுக்கான வெவ்வேறு கால கட்டங்களில் வழங்கப்பட்ட போதனைகளின் சங்கமம். எனவேதான் அதில் இத்தனை முரண்பாடுகள்.

ஒரே வரியில் விளக்க வேண்டுமானால் இறைவனின் வேதம் மற்றும் சட்டங்கள் மனிதனால் கரை படுத்தப்பட்டு இருக்கும் பொழுது நாம் அதனை பின்பற்றுவது எந்த பலனையும் தராது. மேலும் திருத்தப்பட்ட சட்டம் இருக்க பழய சட்டத்தை பின் தொடர்வது நம்மை மீளா பிரச்சனையில் தள்ளிவிடும்.

நம்மையும் இந்த உலகையும் மிக நுணுக்கமாக முரண்பாடுகள் இன்றி படைத்த இறைவனை அவனை வணங்கும் முறைப் படி வாங்குவதும் அவனது கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடப்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை ஆகும் இல்லயேல் அனைத்து மதங்கள்/வேதங்கள் சொல்லுவது போல் இறைவனின் கட்டளைக்கு அடிபணிபவர் சொர்ககத்திற்கும், இல்லயேல் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்...

அல்லாஹு ஆஹ்பர்..

Anonymous
18:56

i hope you will post it without deny it

io @anonymos you just know nothing about hinduism
KAILAS means the last chakra of human body sahasra chakra thats where shiva lives inside our body.sakthi means kundalini snake in muladhara.if these two powers meet you can see shiva sakthi.you will find the secret of nature.

உண்மையான கருத்து என் நினைக்கிறேன் .

Anonymous
06:10

Don't simply talk about Hinduism.. Wat u know about this religion..don' t talk rubbish without knowing anything OK.don't interfere in others religion. Respect others believing..people always create stupid stories to hide their weakness.. So better don't talk talk about my Tamil, my people, n my religion.. I'm very proud to be Hindu..I'm very lucky..no words to describe the beauty of my religion.. Valga baaratham valga Tamil valga en Hindu mathame..vetri namakku...unmai endrum jeikum..

வீர சைவ சிவ பிள்ளைகள்
10:28

தயவு செய்து மாற்று மத நண்பர்கள் கருத்து தெரிவிக்க வர வேண்டாம், உங்களுடைய காட்டுமிராண்டி சட்டங்கள் எங்களுக்கு வேண்டாம்,
குரு ஜி, இது போன்ற பெயரையே சொல்ல விரும்பாத நபர்களின் கருத்துக்களை நீக்குங்கள்
இவர்களின் கருத்துக்களால் எங்களின் மனம் மிகவும் பாதிக்கிறது பாரத நாடு முழுவதும் சித்தர்களின், ரிஷிகளின் சங்கல்பத்தினால் கட்டுமானம் செய்யப்பட்டு உள்ளது. சித்தர்கள் ரிஷிகள் இந்த ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லவே இதனை வடிவமைத்து மந்திரக் கட்டும் செய்து வைத்துள்ளார்கள். அதை ஏற்காமல் இங்கு வாழ்பவர்களை அது நிச்சயம் பாதிக்கும். பாதித்து வருகிறது.நாட்டின் சித்தர்கள் ரிஷிகளின் இந்த நாட்டின் விதிகளை மாற்ற முயலுபவர்களை அது அழிக்கும். அவர்களின் சந்ததிகளையே கூட அழித்துக் காட்டும். அது இந்த பாரத நாடு மட்டுமல்ல. இந்த பாரத நாட்டு குடிமக்கள் அனைவரும் ரிஷிகளின் சந்ததிகளே.

பாரத தேசம் என்ற சொல்லின் பெயரிலேயே அது அறிவிக்கப்பட்டே உள்ளது. பாரதம் என்றால் பா நெறி அல்லது வேத ஞான நெறிக்காக அர்ப்பணிக்கப் பட்டு கட்டுமானம் செய்யப்பட்டது என்று பொருள்!
அதனால் இந்த பாரத மக்களை, அதாவது இந்த நாட்டினை வடிவமைத்த உரிமையாளர்களான சித்தர்கள் ரிஷிகளின் சந்ததிகளான அவர்களை ஏமாற்றுதல், அவர்களிடம் லஞ்சம் வாங்குதல், அவர்களை அல்லது அவர்களின் சமைய உணர்வுகளை மதிக்காமல் ஆட்சி செய்தல், அரசு நிர்வாகம் செய்தல், சட்டங்களை இயற்றுதல், நீதி என்ற பெயரில் அநீதிகளை தீர்ப்பாகக் கொடுத்தல்,..... அனைத்துமே மிகப் பெரிய பாப காரியங்கள்.பிரிட்டிஷ் உலகில் உயர்ந்த பலம் கொண்ட நாடாக இருந்தது. அவர்கள் கொள்ளை அடித்து சென்றபோது வரை அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருந்தது இல்லை.

அனால் இந்த நாட்டில் மதம் மாற்றத்தை அதிகரித்து, இந்த நாட்டின் கல்விமுறையையும் மெக்காலே கல்வி முறையினால் மாற்றினார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகெங்கும் விழத் துவங்கியது. அழிந்து சுருங்கிப்போய் விட்டது.இசுலாமியர்களும் இந்த நாட்டிலிருந்து திருடிச்சென்றவரை அவர்களுக்கு எந்த பெரிய பிரச்சினைகளும் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் இங்கு இருந்து ஆட்சி செய்யத் துவங்கினார்கள். அழிந்து போனார்கள்.

இசுலாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் உலகில் எங்கெல்லாம் படை எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் பிடித்த நாடுகளை இசுலாமிய நாடாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் இங்கு முடியவில்லை. அதன் காரணம் இந்த ரிஷிகளின் மந்திரக் கட்டுமானமே.அதேபோலவே கிருஸ்தவர்களும் உலகில் எங்கெல்லாம் படை எடுத்துச் சென்றார்களோ, அங்கெல்லாம் பிடித்த நாடுகளை கிருஸ்தவ நாடாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் இங்கு முடியவில்லை. அதன் காரணமும் இந்த ரிஷிகளின் மந்திரக் கட்டுமானமே.

புத்தர் இந்த நாட்டில் கௌரவத்துடன் வாழ்ந்தார். மதிப்புடன் மரியாதையுடன் வாழ்ந்தார். அவர் வேத நெறிக்கு புறம்பாக வாழ்ந்தது பேசியது என்பது என்றுமே இல்லை. அவர் இந்த வேத நெறிக் கட்டமைப்புக்கு உள்ளே இல்லாதவர்களை, வர விரும்பாதவர்களை, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களை முதலில் மனிதத் தன்மைகளுக்கு கொண்டுவருவோம். பிறகு அவனே தனது பகுத்தறிவின் துணையுடன் வேத நெறிக்குள் வருவான். ஆனால் அதனை வெளிப்படையாக கூறினாள் ஒதுங்கிவிடுவார்கள்,... என்ற காரணங்களால் அவர் எதுவும் வேத நெறிகளை பேசாமல் மனித நெறிகளை மட்டுமே பேசினார்.

ஆனால் அவரது வழிவந்தவர்கள் புத்தர் பேசியது வேதம் வேண்டாம் என்று பேசினார்கள். அழிந்தார்கள். உலகமெங்கும் வளர முடிந்த அவர்களின் அந்த புத்த மதம் என்று அவர்கள் கூறிய கோட்பாடுகள், இந்த பாரத நாட்டில் இல்லாமலேயே ஆகிவிட்டது.இதேபோன்று இன்னமும் ஆயிரக் கணக்கான நிகழுவுகளை, உதாரணங்களை காட்ட முடியும்.
ரிஷிகளின் இந்த சூக்ஷ்ம மந்திரக் கட்டுமானம் வேலை செய்யும் சூக்ஷம விதிகளை, நியதிகளை, முறைகளை பார்க்கும் சக்தியை இறைவன் அருளினான். நாமும் பார்க்கிறோம்.

ஒற்றுமை ஓங்குக
நமது இறைவன் ஒருவனே
என்னுடைய உன்னுடைய என்று எதுவுமே இல்லை
ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதற்கு ஒரு வார்த்தை சொல் தான் இஸ்லாம்
ஏன் இந்த இஸ்லாம் கடைசியில் வந்தது
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்து இருந்தால் இதை புரிந்து கொள்ள யார் இருக்கிறார் நீங்கள் பிள்ளைகள் இடம் போய் கற்பை பற்றி விளக்க முடியுமா?
இறைவன் காலம் அறிந்து வேதம் அனுப்பி உள்ளான் தயவுகூர்ந்து ஒரு முறை படித்து பாருங்கள். காட்டயம் கிடையாது.


Next Post Next Post Home
 
Back to Top