பல சந்நியாசிகள் நிர்வாணமாக ஊர்வலம் போவது நமது மதத்தை பற்றி மற்றவர்கள் கேவலமாக கருதமாட்டார்களா? என்று பலர் நினைத்து வறுத்த படுகிறார்கள்
உடம்பில் துளி கூட துணியில்லாமல் இருப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ஆடையோடு இருப்பதை விட அம்மணமாக இருப்பதில் தான் மகா சிரமம் இருக்கிறது.
மழை, குளிரை அம்மணம் தாங்காது என்பது வேறு விஷயம். ஆடை அணிகின்ற போது நமக்குள் அந்தரங்கமாக ஏற்படும் உணர்வுகளை மறைத்து கொள்ளலாம்.

ஆடையில்லாத நிலையில் உணர்ச்சிகளை மறைப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அவ்வளவு சுலபமாக எல்லோராலும் நிர்வாணமாகயிருக்க இயலாது.
ஒரு குழந்தை நிர்வாணமாகயிருப்பது பற்றி வெட்கப்படுவதில்லை.
அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து தனது நிர்வாணத்தை மறைக்க துவங்குகிறதோ அப்போதே அதன் மனதில் கள்ளம் கபடம் உருவாக துவங்கி விட்டது என பல மனோ தத்துவ நூல்கள் சொல்கின்றன.
ஒரு சராசரி மனிதன் அம்மணமாக இருக்கிறான் என்றால் ஒன்று அவன் மனம் பேதலித்த நிலையில் இருக்க வேண்டும் அல்லது ஆண், பெண் பேதத்தை அழித்தவனாக இருக்க வேண்டும்.
வாரனாசியில் பல நாகசாதுக்கள் நிர்வாணமாக ஊர்வலம் போவதை நாம் கேலி செய்கிறோம். அல்லது முகம் சுளிக்கிறோம்.

ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கொட்டும் மழையிலும், உறைய வைக்கும் பனியிலும் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் அவர்களின் மகத்துவம் என்னவென்று புரியும்.
ஜைன மதத்தை சார்ந்த பல துறவிகள் நிர்வாணமாக இருக்கிறார்கள். அதை எந்த ஜைன மதத்தவரும் அவமானமாக கருதுவதுயில்லை.
ஏனென்றால் ஜைன மத தத்துவம் ஒவ்வொரு ஜைனனுக்கும் தெரியும்.
ஆனால் இந்துக்களாகிய நாம் தான் நமது மதத்தின் தத்துவங்களின் ஒரு சிறு துளியை கூட அறியாமல் வீண் ஜம்பம் பேசிக் கொண்டுயிருக்கிறோம்.
நம் கருத்துக்களை நாம் உணர துவங்கிவிட்டால் உண்மைகள் தெரியும். அவமானம் தெரியாது

+ comments + 7 comments
வணக்கம் குருஜி. நம்முடைய மதத்தில் எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. நிஜமாகவே அனைத்தையும் துறந்து, தேக பாவனையை இல்லாமல் இருந்தால் அனைத்தும், சாத்தியமாகும். அனைத்தும் சத்தியமாகும். மிக்க நன்றி குருஜி
\\ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கொட்டும் மழையிலும், உறைய வைக்கும் பனியிலும் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் அவர்களின் மகத்துவம் என்னவென்று புரியும்.\\குரங்கு, காடேருமை, வரிக்குதிரை, சிங்கம், புலி, மான், ....என்று காட்டில் வாழும் மிருகங்கள் அத்தனையும் வெயில் மழை எல்லாவற்றுக்கும் ஆடையில்லாமல் அம்மணமாகத்தான் வாழ்கிறது, இது ஒரு சாதனையா? அதுசரி, இந்த பயலுக எல்லாரும் கஞ்சா அடிக்கிறானுங்களே, அந்த மாதிரி போதைக்கு அடிமையானது மட்டும் பரவாயில்லையா? அதுவும் ஒரு வித அடிமைத் தானம்தானே? இந்திரியக் கட்டுப் பாடு என்றால் எல்லா இந்திரியங்களையும் கட்டுப் படுத்த வேண்டும். அது மட்டும் போதாது, அவற்றை சரியான வழியிலும் பயன்படுத்தவும் வேண்டும்.
வாரணாசியில் நான் நாகாபாபாக்களை பார்த்திருக்கிறேன். ஒரு முறை நான் கான்பூரில் ஒரு பாபாவை ரோட்டில் சந்தித்தேன். அவர் உடையற்று இருந்தார். கையில் மனித கை எலும்பு வைத்திருந்தார்.என்னிடம் பணம் கேட்டார். நான் 10 ரூபாய் கொடுத்தேன். அவர் ரூபாய் நோட்டின் நுனியை விரலால் பிய்த்து என் நெற்றியில் குங்கும போட்டிட்டார். நாம் அதிர்ந்து விட்டேன்.அவர்களிடம் நிறைய விஷயம் இருக்கிறது. நமக்கு தெரியாதவரை எல்லாமே வேடிக்கைதான்.
@கே. ஆர்.விஜயன்
Are you really mad Mr. Vijayan, Still you believe in such bad criminals, damn
"அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து தனது நிர்வாணத்தை மறைக்க துவங்குகிறதோ அப்போதே அதன் மனதில் கள்ளம் கபடம் உருவாக துவங்கி விட்டது."
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...