Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆப்ரேஷனுக்கும் கொலைக்கும் ஒரே கத்தி!


  கேரள மாநிலத்தைச் சார்ந்த ஓர் இளைஞனுக்கு அபிசாரப்ரயோகம் என்ற ஏவல் சூன்ய பிரச்சனையால் பல தொல்லைகள் இருந்து வந்தது

உயிருக்குப் பாதகமான நிலையில் அவனை என்னிடம் அழைத்து வந்தனர்

 தொடர்ச்சியாக 63 நாட்கள் தாந்ரீக வழியிலான பூஜைகள் ஹோமங்கள் செய்து அவனது உபாதையை இறைவன் அருளால் நீக்கினேன்

 அப்போது அவனோடு வந்திருந்த ஒருவர் இத்தகைய பூஜைகள் எதன் அடிப்படையில் செய்கிறீர்கள் எனக்கேட்டார் 
 அதர்வண வேதத்தின் அடிப்படையில் என்றேன்

அதற்கு அவர் அதர்வண வேத மந்திரங்களால் தீமை மட்டும்தானே செய்ய முடியும் நன்மையும் அவைகளால் செய்ய இயலுமா என்று என்னிடம் கேட்டார்

அதர்வண வேதத்தைப்பற்றி அவருக்கு விவரித்தேன் அந்த விவரங்களை வாசகர்களோடும் பகிர்ந்துக் கெள்ளுவதே இன்றைய பதிவு

அதர்வண வேதத்திற்கு அதர்வாங்கிரஸ், பிருகுவாங்கிரஸ், பிரம்ம வேதம் என பலப் பெயர்கள் உண்டு.

 ஆதிகாலத்தில் ரிக், யஜுர், சாம ஆகிய மூன்று வேதங்களை வேதங்களாக மதிக்கபட்டது.  அதர்வண வேதம் தீமை தரக்கூடியது.  கீழ்த்தரமானது என ஒதுக்கப்பட்டது.
   ஆனால் அரசர்களும் பொதுமக்களும் அந்த வேதத்தை மிகவும் விரும்பியதனால் காலப்போக்கில் நான்காவது வேதமாக ஏற்று கொள்ளப்பட்டது.

  உண்மையை சொல்வதென்றால் மற்ற மூன்று வேதங்கள் மக்களின் அன்றாட தேவைகளை பற்றியோ அவர்கள் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனைகளிலிருந்து விடுபடக் கூடிய வழிமுறைகளை பற்றியோ அக்கறை காட்டவில்லை.

 ஆனால் அதர்வண வேதம் மக்களின் பிரச்சனையை பேசுகின்றது.  அவைகளை தீர்ப்பதற்கான நடைமுறை வழிமுறைகளை கூறுகிறது.

 அதனால் தான் அது மக்கள் வேதம் என அழைக்கப்படுகிறது.

 அதர்வண வேதம் ஒன்பது சாகைகள் கொண்டது.  பைப்பலாதம், தௌடம், மைளடாயணம், சௌநகியம், சாஜ ஜலம், சலதம், பிரம்மவாதம், வேத தர்ஷம், சரணவைதயம் என்பவை அந்த ஒன்பது சாகைகளாகும்.
   இவற்றுள் பைபலாதம் சௌநகியம் ஆகிய இரு சாகைகள் மிகவும் புகழ் பெற்றதாகும்.

 அதர்வண வேதத்தை ஒரு முழுமையான மாந்திரிக நூல் என்றே சொல்லலாம்.

  இந்த வேதம் சொல்லும் சரியை, கிரிகை எல்லாமே மந்திரங்களாகவே உள்ளது. 

ஆதிகாலத்தில் அதர்வண வேதம் பல தீமையான காரியங்களுக்கே பயன்பட்டது என சொல்ல வேண்டும்.

  கால போக்கில் தான் நன்மை பெறுவதற்கான வழிவகைகள் சொல்லப்பட்டன.

  இதிலுள்ள மந்திரங்கள் சந்தேகத்திற்கே இடமில்லாமல் சக்தி வாய்ந்தவைகளாகும். 
 சில மந்திரங்கள் தனது அதிசய ஆற்றல்களால் தீராத நோய்களையும் தீர்க்கும்.  நீண்ட ஆயுளையும் தரும்.  பிரிந்த குடும்பத்தையும் ஒன்று சேர்க்கும்.  அழியாத புகழை தரும்.  வஞ்சகரை மண்டியிட செய்யும்

  வேறு சில மந்திரங்கள் சாபம் இடுவது எப்படியென கற்றுத் தரும்.  மரணத்தை ஏற்படுத்தவும், மதி மயங்க செய்யவும், தரங்கெட்டு போகவும் செய்விக்கும்.

 அதர்வண வேதத்தில் பல பாடல்கள் பேஷ ஜானி ராகத்தில் அமைந்துள்ளது.  இந்த ராகம் மூளை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க வல்லது என நவீன கால சங்கீத ஆராய்ச்சி சொல்கிறது.

 உழவுத் தொழில் மேம்படவும், குடியிருப்புகள் அமைக்கவும், தீ விபத்துக்களை தடுக்கவும், மழை பெய்விக்கவும் அதர்வண வேதத்தில் மந்திரங்கள் உள்ளன.

  இவைகளை மௌஸ்டிகானி மந்திரங்கள் என அதர்வண வேதிகள் அழைக்கிறார்கள்.  ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் பின் விளைவுகள் சிறிய தவறுகளால் உருவாகும் பெரும் பாதிப்புகள் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற அதர்வண வேத பிராயசித்த சூத்தகங்கள் வழி சொல்லுகின்றன.

 ஸ்திதி கர்மானி என்ற மந்திரங்கள் கணவன் மனைவி உறவை பலப்படுத்தவும், காதலில் வெற்றியடையவும், பெண்களின் துன்பம் தீரவும் வழி வகை சொல்கிறது.  எதிரிகளின் குலப்பெண்களின் கற்பு நிலை தவறி போவதற்கும், வசப்படாத பெண்களை வசியப்படுத்துவதற்கும் அபிசாராணி வகை மந்திரங்களும் இதில் உள்ளது. 

நாடு உயரவும் மன்னர்கள் வெற்றி அடையவும் தான் தோன்றிகளான மன்னர்கள் மரணத்தை முத்தமிடவும் ராஜ கர்மானி வகை மந்திரங்கள் உதவுகின்றன.

  எனவே அதர்வண வேத மந்திரங்கள் நமது கையில் உள்ள கத்தியை போன்றது.  இதில் கொலையும் செய்யலாம், ஆப்ரேஷனும் செய்யலாம்.

Contact Form

Name

Email *

Message *