( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

திமுக வெற்றி பெற விஜய்காந்த் முயற்சி!


  தொடை தெரியும் வண்ணம் தூக்கிக்கட்டிய வேஷ்டி பட்டன் போடாத சட்டையில் புரளும் சைக்கிள் செயின் கையில் உடைத்த சோடாப் பாட்டில் பீடிப்புகை கசியும் வாயிலிருந்து ஒழுகும் கெட்ட வார்த்தை இது அந்தக்காலத்தில் தெருவில் வலுச்சண்டைக்கு இழுக்கும் போக்கிகளைப்பற்றி வளக்கமாக செய்யப்படும் வர்ணனை

 இந்த வர்ணனை இன்று ரௌடிகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ தங்களை வருங்காலத் தமிழத்தின் விடிவெள்ளி என அழைத்துக் கொள்ளும் தலைவர்களுக்கு நன்றாக பொருந்தி வருகிறது

 வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் இருக்கிறார்களே தவிற இவர்களின் செயல்பாடுகள் என்னவோ குப்பத்து வஸ்த்தாதுக்களின் வூடு கட்டுகின்ற லக்ஷ்சணமாகத்தான் இருக்கிறது


 போலிஸ்காரர்கள் ராணுவவீரர்கள் மின்சார ஊழியர் சுத்திகரிப்பு தொழிலாளிகள் போன்ற மக்கள் பணியாளர்களுக்கு காக்கி வண்ணத்தில் உடுப்பு கொடுப்பது அவர்களை சேவையாற்றுபவர் என்று பிரித்துக் காட்டத்தான்

 அதேப்போல வெள்ளை ஆடை என்பதே அரசில்வாதிகளின் சீருடை என்றாகி வெள்ளையை கண்டாலே பயமாக இருக்கிறது

காந்தியின் வெண்மைக் கதராடை இந்த அளவுக்கு தரம்கெட்டுப் போச்சே என்று வருத்தமாகவும் இருக்கிறது

 இன்று தமிழகம் எங்கும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தலைவர்களைப் பார்த்தால் கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் உள்ளது

  ஆனால் அவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்களை கேட்டால் நமக்கு செவிகளை கொடுத்த கடவுளைத் திட்டத் தோன்றுகிறது இதையெலாம் கேட்பதற்கு பதிலாக செவிடாகவே படைத்திருக்கலாமே  என்றும் தோன்றுகிறது


  சரியோ தவறரோ நல்லதோ கெட்டதோ கலைஞர் ஜெயலலிதாவுக்கு அடுத்தத் தரத்தில் சொல்லக் கூடியவராக விஜயகாந்த்தை மக்கள் பார்க்கிறார்கள்

 அவர் ஒரு நடிகர்தான் யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை பேசிவிட்டு போகக்கூடியவர்தான்

அரசியலை பற்றியும் தமிழகத்தின் பண்பாட்டுச் செழுமை பற்றியும் முற்றிலுமாக அறிந்தவர் என்று யாரும் அவரைச் சொல்ல வில்லைத்தான்

 ஆயினும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு கூட்டம் நாட்டில் இருக்கிறது

 விஜயகாந்த் தனக்காக இல்லையென்றாலும் தன்னை நம்பியக் கூட்டத்தார்களுக்காக வேண்டியாவது பண்பாட்டோடு நடந்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளார் பிரச்சாரக் கூட்டங்களில் முன்னுக்குபின் முரணாகப் பேசுவதும் தனது கட்சி வேட்பாளரேயே தாக்குவதும் தமிழக தேர்தல் வரலாறு முதல் முறையாகப் பார்க்கிறது

  கழுதையின் வாலில் தகர டப்பாவை கட்டி விடுவதும் கூட்டத்திற்குள் பன்றிகளை விரட்டி விடுவதுமாகிய காலாட்சார மறுமலர்ச்சியை உண்டாக்கிய திராவிடக்கட்சிகள் கூட இத்தகைய செயல்களை பகிரங்கமாக செய்ததில்லை

அரசியலுக்கு மிக இளையவரான விஜயகாந்த் இப்படி நடந்து கொள்வது தொடர்ந்தால் தமிழனின் மானம் மட்டுமல்ல அவரும் காணால் போகலாம்

தண்ணீல் விழுந்து மூழ்கியவனுக்கு கரையேற மூன்றுமுறை கடவுள் வாய்ப்புக் கொடுப்பாராம்

அதிலும் தப்ப முடியவில்லை என்றால்  கதை அவ்வளவுத்தானாம்  

விஜயகாந்தின் அறிவுத்திறனும் செயல் நுணுக்கமும் எப்படிப்பட்டதென்று ஊராரை விட அவருக்கு நன்றாக தெரியும்

இருந்தாலும் கடவுள் ஒரு மகத்தான வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார்

அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்தான் தவறினால் தலைக்குப்புற விழுவது வேறு யாருமில்லை!

மனைவி மைத்துனன் போன்ற அனுபவமில்லாதவர்கள் மட்டும்தான் அவர் பக்கத்தில் உள்ளார்கள் என்றால் விஜயகாந்த்துக்காக வருத்தப்படலாம்

 ஆனால் தனது வாதத்திறத்தாலே ஐ. நா . மன்றத்தில் உலகத்தின் பார்வையை இலங்கைத் தமிழர்பால் திருப்பிய பண்ருட்டி ராமச்சந்திரனும் அவர் அறுகில்தன் உள்ளார்

இந்திராக்காந்தி எம். ஜி . ஆர். போன்ற அரசியல் ஜாம்பவான்களால் உருவானவர் ராமச்சந்திரன் அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டு  அநாகரீகமான செயல்களை கடைபிடித்தால் விஜயகாந்தின் அரசியல் தெளிவைப் பற்றி நிச்சயம் மக்கள் சந்தேகிப்பார்கள்

இப்போதுகூட அடித்தட்டு மக்களும் அதிகாரம் பெருவதற்கு முன்பே இப்படி நடக்கிறாரே பெற்றால் எப்படி நடந்துக் கொள்வார் என பேச ஆரம்பித்து விட்டனர்

  இது ஆட்சிமாற்றம் வேண்டுமென எதிர்பார்க்கும் பலரையும் சிந்திக்க செய்தால் தி.மு.க.வுக்கே சாதகமாகப் போகும்

ஒட்டுமொத்த பாசிச ஆட்சித் தொடர வழி செய்த பாவம் விஜயகாந்த் தலையின் மீதே விழுந்து வெடிக்கும்+ comments + 16 comments

குறுஜீ , விஜயகாந்த பத்தி வார நியூஸ் லாம் களைங்கர் அண்ட் சன் டி‌வி ஊட ஃப்ராட் வேலை .

gurugee,
ithullam a.d.m.k koottani vaelai. ippa ellaarum captan patrithaana paesuraanga . ammaa patri yaarum paesurathu illayae.
eppadi..........
ammaa 128 seat pudichi atchikku vanthachu...............

சாமி நீ என்ன அதிமுக கை கூலியா? எவ்ளோ கொடுத்தாங்க? எல்லாம் திருடன் தான்னு சொல்லு அது தான் சரி. திமுக வை மட்டும் சொல்லாதிங்க. என்னா, உங்க பேச்சு பார்பனனுக்கு பார்பனன் சப்போர்ட் பண்ணுற மாதிரி இருக்கு. ஆன்மீக வாதிக்கு நடு நிலை ரொம்ப முக்கியம்.

11:53

@Elango
சாமி நீ என்ன அதிமுக கை கூலியா? எவ்ளோ கொடுத்தாங்க? எல்லாம் திருடன் தான்னு சொல்லு அது தான் சரி. திமுக வை மட்டும் சொல்லாதிங்க. என்னா, உங்க பேச்சு பார்பனனுக்கு பார்பனன் சப்போர்ட் பண்ணுற மாதிரி இருக்கு. ஆன்மீக வாதிக்கு நடு நிலை ரொம்ப முக்கியம்.

10:42

இளங்கோ

முதலில் நீங்கள் அரசியலை நன்றாக அறிந்துவிட்டு விமர்சியுங்கள் விஜயகாந்தின் யோக்கியதை கண்ணும் காதும் உள்ள யாருக்கும் தெரியும். இதில் பார்ப்பன சப்போர்ட் எங்கே தெரிகிறது. உங்களை போன்ற ஆட்களால்தான் திராவிடன் என்ற பெயரில் திரியும் கேடுகெட்ட அரசியல்வாதிகள் பிழைத்திருக்க முடிகிறது.

குரு ஜீ,நீங்கள் எப்படி இந்த சன் டிவி,கலைஞர் டிவி யில் வரும் செய்திகளை நம்புகிறீர்கள்.?அவர் பிரச்சாரத்தின் பொது ஆளும் கூட்டணியை பற்றி அனைத்து உண்மைகளையும் மக்களிடம் எதுத்து சொல்கிறார்.அதனால் இந்த போலி தொலைகாட்சி சேனல்கள் கிராபிக்ஸ் செய்து கேப்டன் மீது அவதூறு கிளப்பிவருகின்றார்கள்.ஆனால் இதனால் கேப்டனின் செல்வாக்கு ஒரு துளிகூட குறையாது.இன்னும்மா நீங்க சன் டிவி,கலைஞர் டிவி செய்திகளை நம்புகிறீர்கள்.

நடுநிலை அற்ற விமர்சனமாய் தெரிகிறது.தி முக வை பாசிஷ ஆட்சியாய் சித்தரிக்கும் காரணம் என்னவோ ? ஆரிய மாயை செய்யும் சூழ்ச்சியாக தெரிகிறது

@rajaDear Raja, We know about Thiravidan & Arriyan and also we know the politician also......am not supporting to vijakanth...u did miss understand...Sri Ramanantham only support to JJ. Please once remain 20 years political history.....u will know whats what.......thaks :)

தங்களின் வெப்சைட் கடந்த சில நாட்களாக பார்த்து வருகிரேன் அருமையான் ஆன்மிகம் சினிமா சமூகம் என்று உங்க‌
ளின், கருத்துக்கள் அனைத்தும் அருமை நீங்கள் எப்படி இந்த அரைவேக்காட்டுதனமான சன்டிவி யை பார்த்துவிட்டு
இப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை விஜயகாந்த் ஆப்பு அடிக்க வேண்டும் என்று கூறுகிறார் சன் டிவியில்
halfஅடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்று கூறுகிறார்கள் மக்களை அடிமுட்டாளாக்கும் சன் டிவி யை
பார்த்துவிட்டு இப்படி கருத்து எழுதாதிர்கள்

chandru
00:16

raja's voice is correct.we shoud not say any unjustice

Anonymous
00:21

raja said is correct

vinoth
19:32

எதிர்மறையான விளைவையே இவை ஏற்படுத்தும் என்பது நிஜம் .

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

saravanamuthu
19:33

பிரச்சாரங்களில் மட்டுமே இப்படி நடப்பதுபோல் தெரிகிறது. அவருடைய பெயரை அவரே கெடுத்துக்கொள்கிறார்.

விஜயகாந்த் வேட்பாளரை அடித்தது கிராபிக்ஸ் போலத்தான் இருந்தது
ஆனாலும் விஜயகாந்த்தின் பேச்சு குடித்து விட்டு பேசுவது போல இருக்கிறது

கவுண்ட மணி சொல்வது போல் '' அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா ''

குருஜி!!!!!
100% க்கு 100%சரியான வார்த்தை சொன்னிர்கள், நன்றி. நன்றி.நன்றி.
விஜயகாந்த் பேச்சை நேரில் கேட்டதால் இதை சொல்லுகிறேன்.

Anonymous
22:37

@Elangomiga sariaaga sonnergal yennamo karunanidhi dhaan thirudan indha amma rombha nallavanga madhiri pesuranga indha parpanungal nambave kudadhu avanunga yennaikum thirundave mattanunga. Parpanunga alivadhu nichiyam. Kadavule avanungala aliparu

அன்பான குருஜி
மனதில் அறையும் கருத்துக்கள் , நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை, கிடைத்த வாய்ப்பை தவற விட போகிறார் விஜயகாந்த்


Next Post Next Post Home
 
Back to Top