( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை செப்டம்பர் 24 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மரணம் வருவது தெரியுமா?

ரு மனிதனின் ஆயுளை ஜாதகப்படி சரியாக கணித்து விட முடியுமா?
ணிமாறன் வேலூர்


த்து மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பது பொது விதி.  எல்லா குழந்தைகளும் சரியாக பத்து மாதத்திலா பிறக்கின்றன?

காலம், நேரம் சற்று கூடவோ, குறையவோதான் செய்யும்.

 எனக்கு தெரிந்த ஒருவர் தனது பேரக் குழந்தையின் பிறப்பு இந்த நேரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஜோதிடர்களை பார்த்த அதிர்ஷமான நேரத்தையும் குறித்து விட்டார்.

அதை மருத்தவர்களிடம் சொல்லி குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தை பிறக்க செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


சட்டத்திற்கும் தர்மத்திற்கும் புறம்பான அந்த செயலை மருத்துவர்கள் மறுக்கவும் இல்லை.

 குறிப்பிட்ட நாளன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுக்க எல்லாம் தயாராகியது. 

ஆனால் மயக்க மருந்து கொடுக்கும் டாக்டரோ அந்த நேரத்திற்கு வரவில்லை.

  வேறு டாக்டர்களை அழைத்தாலும் அவர்களும் கிடைக்கவில்லை.

  கடைசியில் ஜோதிடர்கள் குறிப்பிட்ட நேரம் கழித்து கடவுள் நினைத்த நேரத்திலேயே குழந்தை பிறந்தது.

 ஆக பிறப்பு நேரம் கூட கடவுள் தீர்மானித்தபடி தான் நடக்கிறது எனும் போது நாம் விரும்புகிற படியோ அல்லது எதிர்பார்த்த படியோ மரணம் நடக்கவா போகிறது?

  அதுவும் கடவுள் கையில் தான் இருக்கிறது.

  ஆனால் ஒரு மனிதனின் ஆயுட்காலம் இவ்வளவு தான் என ஜோதிட சாஸ்திரம் சொல்வது பொய்யானது அல்ல.  ஏன் என்றால் ஒரு மனிதனின் ஜாதகம் அவனது பூர்வ ஜென்மத்தின் கர்மாவை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. 

சென்ற ஜென்ம கர்மாவின் படி இத்தனை ஆண்டு காலம் வாழ்வான் என கூறுவது பல நேரங்களில் சரியாக இருக்கிறது.  சில நேரங்களில் தவறி விடுகிறது.

 அப்படி தவறுவதற்கான காரணத்தை ஜோதிடரின் தவறான கணிப்பு என சொல்லி சமாளித்து விடலாம். 

ஆனால் அது உண்மையில்லை.  ஒரு மனித வாழ்க்கையில் பூர்வ ஜென்ம கர்மாவில் தாக்கம் எந்த அளவு ஆட்சி செலுத்துகிறதோ அதே அளவு தற்போதைய ஜென்மத்தின் கர்மா அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் போது பண்டைய கர்மா தலையை தாழ்த்தி கொள்கிறது.

  நாம் மரணம் என்பதை துயரமாக கருதுகிறோம்.  ஆனால் ஒரு ஆத்மாவை பொறுத்த வரை அது வரமாக கூட இருக்கலாம்.

 கடந்த கால கர்மாவில் விதிப்படி அதிக நாள் வாழ்ந்து நோயாலும் பற்று பாசத்தாலும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என இருப்பது தற்காலத்திய நற்கர்மங்களால் உடனடியாக தடுக்கப்பட்டு விடுதலை பெறுவதற்கு வழியாகவும் அமையலாம். 

விபத்துக்களில் அகால மரணம் ஏற்படுவதையும் இந்த வகையில் சேர்த்து கொள்ளலாம் என்றாலும் முற்றலுமாக இப்படி தான் என ஒத்துக் கொள்ளவும் முடியாது.

 ஒரு பம்பரத்தை சுற்றி விடுகிறோம்.  சுற்றும் வேகப்படி அது இரண்டு நிமிட நேரம் சுழல வேண்டும்.  ஆனால் அந்த சுழற்சியை யாராவது காலால் மிதித்து விட்டால் அது உடனே நின்று விடும்.

  ஒருவன் ஆயுள் பலனும் இப்படி தான்.

 எனவே ஜோதிட கணிப்புகள் எல்லாம் இவை இவை இப்படியிருந்தால் இப்படி நிகழும் என கூறும் ஒரு கணக்கு தான். 

எல்லா கணக்குகளுமே எப்போதும் தவறாவது கிடையாது.  எப்போதாவது தவறாகி விட்டால் அது கணக்கு குற்றம் அல்ல, இறைவனின் எண்ணம்.

 கடவுளின் கருத்தை எந்த கணக்கு போட்டும் கண்டுபிடிக்க முடியாது.  கண்டுபிடித்து விட்டால் மனிதன் கடவுளாகி விடுவான்

 
+ comments + 9 comments

09:38

தான் மரணம் தழுஉம் நேரத்தை சரியஹா சொல்லி......பலமாதங்களுக்கு முன்பே மிஹச்சரியாக குறித்து கொடுத்து அந்த நேரத்தில் சிரித்த முகத்தோடு சில நல்லமஹங்களும் மரணம் தழுவியவர்களும் இருந்தார்களே ?.......தமிழ் மன்னன்

10:24

@தமிழ் மன்னன்


இந்த பதிவில் சுவாமிஜி மகான்களும் சாதாரண மனிதர்களும் ஒன்று என குறிப்பிடவில்லை

கடவுளின் கருத்தை எந்த கணக்கு போட்டும் கண்டுபிடிக்க முடியாது. கண்டுபிடித்து விட்டால் மனிதன் கடவுளாகி விடுவான்


இந்த வரிகளை மீண்டும் படிக்கவும் இது நீங்கள் குறிப்பிடும் மகான்களை குறிப்பிடும் வரத்தையாகும்

மரணத்தை நினைத்து ஒவ்வொரு மனிதனும் பயந்து கொண்டுதான் இருக்கிறன், ஆனால் வாழும் பொது பவம் செய்யாமல் வாழ மனிதனால் முடியவில்லை, அதே பாவத்தினால் மறு ஜென்மத்திலும் அவன் கஷ்டப்படுவதோடல்லாமல், மறுபடியும் பயம் கொள்கிறான், சுவாமிஜி இந்தவிலயட்டுக்கு முடிவே இல்லையா,

Anonymous
16:39

11.11.11 அன்று உலகம் முழுதும் பிறந்த குழந்தைகளின் அப்பா அம்மாவை கேளுங்கள். அவர்கள் இதற்காக முன் ஏற்பாடு செய்தார்களா ? இல்லையா ? என்று

நாம் மரணம் என்பதை துயரமாக கருதுகிறோம். ஆனால் ஒரு ஆத்மாவை பொறுத்த வரை அது வரமாக கூட இருக்கலாம்.

yarlpavanan
20:25

மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் வகுப்பது வேறு
உங்கள் கதையும் அதுவோ!

வணக்கம் குருஜி

என்னா அழகா சமாளிச்சு இருக்கீங்க பம்பரத்த ஒருத்தர் கால்ல மிதிப்பது போல...அடடா...


Next Post Next Post Home
 
Back to Top