Store
  Store
  Store
  Store
  Store
  Store

உருவம் இருக்கிறதா இல்லையா?

   சிவ பெருமான் மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தார் என்று ஒருசராரும் எரித்து உயிர்பித்து விட்டார் என வேறொரு சராரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்

இதுதான் கிராமிய கலையில் ஒன்றான லாவணி பாடலுக்கு மூல வித்தாக இருக்கிறது

அதே போல தான் கடவுளுக்கு உருவம் உண்டு என ஒருவர் சொல்கிறார் இன்னொருவர் கடவுள் உருவம் அற்றவர் என்கிறார்

இதில் எது சரி எது தவறு என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு தெரிய வில்லை


  இதனால் பல நேரம் குழம்புகிறோம் உண்மையில் கடவுளுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா? என மயங்கி நிற்கிறோம்

எல்லா வற்றிர்க்கும் தெளிவான விளக்கம் தரும் நமது இந்து தர்மம் இதற்க்கு என்ன சொல்கிறது என பார்ப்போம்

கடவுளும் தண்ணீரும் ஒன்று என்று சொல்லலாம்.

  தண்ணீர் திரவப் பொருள்.  அதே நேரம் உறைந்து விட்டால் திடப்பொருள், கொதி நிலையில் வாயு பொருள்.

 கடவுளும் ஏறக்குறைய அப்படித்தான்.  அவருக்கு உருவம் இருக்கிறது.  உருவம் இல்லாமலும் இருக்கிறார்.  அதே நேரம் உண்டு இல்லை என உறுதியிட்டு கூற முடியாத அருவுருவ நிலையிலும் இருக்கிறார்.

  இது சற்று குழப்புகிற விஷயம் தான்.  ஆனால் உணர்வுகளை கூர்மைப்படுத்தி சிந்தித்தால் எளிமையாக புரிகின்ற விஷயமாகவும் இருக்கின்றது. 


 முதலில் கடவுள் உருவ நிலையில் எப்படி இருக்கிறார் என்பதை பார்ப்போம்.

 களிமண் இருக்கிறது.  அதை உருட்டி பொம்மை செய்தால் அதன் பேர் பொம்மை

 பானையாக செய்தால் அதன் பெயர் பானை

  ஆனால் பொம்மை, பானை என பெயர் மாறினாலும் அது களிமண் தான்

 அதே போன்று தான் பரம பிரம்மம் ஆகிய கடவுள் தனது மாயா சக்தியால் ருத்ரன் பிரம்மா, திருமால், பார்வதி என பல்வேறு வடிவங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

  நான் தீவிரமாக இயேசு நாதரை தொழுகிறேன் என வைத்து கொள்ளுங்கள்.  கடவுள் எனக்கு காட்சி கொடுக்க விரும்பினால் இயேசு நாதர் வடிவாகவே தோன்றுவார்.

 இதை ரிக்வேதம் மிக அழகாக சொல்கிறது.  ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி என்று

அதாவது ஒன்றான மெய்பொருளை ஞானிகள் பலவாறு அழைக்கிறார்கள் என்பது இதன் பொருள். 

 பக்தி நிலையில் நாம் விரும்புகின்ற வடிவத்தில் காட்சி தரும் இறைவன் நாம் பக்குவம் பெற்று ஞான நிலைக்கு செல்லும் போது அருவுறுவ நிலையில் தெரிகிறார்.

 அதாவது கடவுளின் இரண்டாவது நிலை இதுவாகும்.  ஒளியாக ஜோதி பிழம்பாக இந்த நிலையை சொல்லலாம்.

  இதை உருவகப் படுத்தி காட்டுவது தான் சிவலிங்கம், திருவிளக்கு போன்றவைகள்.

  ஞானம் முத்தி சமாதி நிலைக்கு பக்தன் செல்லும் போது நிற்குண வடிவில் அதாவது உருவமற்ற மூன்றாவது நிலையில் கடவுள் தன்னை உணர்த்துகிறார்.

  இதை நமது சாஸ்திரங்கள் உண்மையான நிலை என்ற பொருளில் சொரூப நிலை என்றும் குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலை என்ற பொருளில் நிர்குனம் என்றும் அழைக்கிறது.

  கடவுளின் இந்த நிலையை சச்சினாந்த பெருநிலை என ஞானிகள் சொல்கிறார்கள்.

 சத் என்றால் எந்த காலத்திலேயும் எந்த இடத்திலேயும் நிறைந்து மாறாமல் அழியாமல் நிற்கும் உண்மை பொருள் என்பதாகும்.

 சித் என்றால் எல்லாவற்றையும் அறியும் அறிந்து கொண்ட பேரறிவு என்பதாகும். 

ஆனந்தம் என்றால் எப்போதும் அழியாத இன்பம் என்பதாகும்.

  அதாவது கடவுள் உண்மையாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறார் என்பதே சச்சினாந்தம் என்ற வார்த்தை நமக்கு காட்டுவதாகும்.

  தண்ணீரை அருவுறுவ நிலை என்றால் பக்தி என்ற காற்று குளிர்விக்கும் போது பனிகட்டி என்ற உருவ நிலையை அடைகிறது

  ஞான அக்னி சுட்டெரிக்கும் போது உருவம் உருகி ஆவியாகி அருவுறுவ நிலை எனலாம்.

  தண்ணீர் தான் உலகுக்கு மூலம் என்பது போல் கடவுள் தான் அனைத்திற்கும் மூலம் என்பதை உணர்த்த தண்ணீரையும் தன்னையும் ஒன்றாக வைத்துள்ளான் கடவுள்.




 

Contact Form

Name

Email *

Message *