( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யமனின் தூதர் இதுவா...?


  நான் திருவனந்தபுரத்தில் இருந்த போது ஒரு நாள் அழகான அரனை ஒன்று என் மேல் ஏறி சென்றது

அதை பார்த்த ஒரு வயதான அம்மணி அரனையை முட்டாள் தனமாக உடம்பில் ஏற விட்டிருக்கிறாயே அது கடித்தால் விஷம் தலைக்கு ஏறி செத்து விடுவாய் என்று சொன்னார்

 எனக்கு அவர் சொன்னது நகைச்சுவையாக இருந்தது அதே நேரம் இந்த கூற்றை உண்மை என எத்தனையோ பேர் நம்புகிறார்கள்

 உண்மையில் அரனை கடித்தால் மரணம் ஏற்படுமா?


 பெரு நாட்டு பகுதியில் வாழ்ந்த மாயன் இன மக்கள் முயல்கள், மான்கள், நரிகள் போன்ற மிருகங்களை கதாபாத்திரமாக வைத்து நம்மூர் பஞ்சதந்திர கதைகளை போல பல நீதிக் கதைகளை சொல்வார்கள்

  நம்மவர்கள் நரியை வஞ்சத்திற்கு உதாரணம் காட்டுவது போல அவர்கள் முயலை உதாரணம் காட்டுவார்கள். 

இதனாலேயே மாயன் மக்கள் தங்கள் பகுதிகளில் ஒரு முயலை கூட விட்டு வைக்காமல் கொன்று தீர்த்தார்கள்.

 முயல் போலவே அரனையும் ஒரு அப்பாவி ஜந்து.

 அது பார்ப்பதற்கு பாம்பு போன்ற முகத்தை பெற்றிருப்பதினால் அதன் தலையில் இத்தகைய பழி பாவத்தை சுமத்தி விட்டார்கள். 


  மலையாளத்தில் ஞாபக மறதி அதிகமாக இருப்பவர்களை அரணை புத்தியுள்ளவர்கள் என்று சொல்லுவார்கள்.

  அரனைக்கு ஞாபக சக்தியில் அத்தனை குறைபாடு உண்டாம்.

 அது யாரோ ஒருவனை கடிக்க வேண்டும் என நினைத்து மனிதர்கள் அருகில் வருமாம்.  வந்தவுடன் நான் இவனையா கடிக்க வந்தேன்.  அல்லது வேறு எவனையாவது கடிக்க வந்தேனா என மறந்து போய் குழம்பி திரும்பி விடுமாம். 

அரனையின் மூளைக்குள் சென்று ஆராய்ந்து இந்த உண்மையை கண்டுபிடித்தவன் எவ்வளவு பெரிய மேதாவியாகயிருப்பான்.

 அவன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டு பாராட்ட வேண்டும்.

சிறிய பொந்துகளில் இருந்து அரனை தலையை வெளியே நீட்டும் போது அச்சு அசல் பாம்பை போலவே இருக்கும். 


  பாம்பை கண்டால் படையே நடுங்கும்.  அதை போலவே இருக்கும் அரனையை கண்டு ஒரு தனி மனிதன் நடுங்க மாட்டானா.

  நம் நாட்டை பொறுத்த வரை பாம்பு கடித்து செத்தவனை விட பாம்பு கடித்து விட்டதே என  பயந்து செத்தவனின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.

  நம் ஊரில் உள்ள பாம்புகளில் மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு விஷம் உள்ள பாம்புகள் நாகமும், விரியனும் தான். 

மற்ற பாம்புகள் எல்லாம் சுத்தமான அப்பாவிகள்

சாரை பாம்பிற்கு விஷம் என்பதே கிடையாது.  ஆனால் அது கடித்து விட்டதாக பயந்து இதயம் வெடித்து செத்தவர்களை பல பேரை நானறிவேன். 


  பாம்பு மேல் உள்ள பயம் அரனை மேலும் வந்து விட்டதினால் தான் அரனையின் பாடு திண்டாட்டமாகி விட்டது.

 சில மேதாவிகள் அரனையின் உடல் பகுதியில் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒரு நிறம் இருப்பதை பார்த்து அது கொடிய விஷம் என பறை சாற்றுகிறார்கள்.

  உண்மையில் அது நான் திருமணத்திற்கு தயாராகி விட்டேன்.  என்னை நீ கட்டிக்கொள்கிறாயா என பெண் அரனையை பார்த்து ஆண் அரனை கேட்பதன் உடல் அடையாளமேயாகும்.

 அரனை கடித்தால் செத்துவிடுவார்கள் என சொல்லுபவர்களை பார்த்து ஒன்றை கேட்க விரும்புகிறேன்.

  பல் இருந்தால் தானே கடிக்க முடியும்.  அரனைக்கு ஏது பல்.  அரனை பல்லை பார்த்தவர்கள் யார்.  இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்.
 
+ comments + 7 comments

Thank you for the correct information, Such fear is exist in our place also

அறனை கடித்தால் மரணம் உரப்பு (கட்டாயம் )அனால் அறனை மறவி (மறதி)காரணம் கடிக்காமல் திரும்பி விடும் .பல் இல்லாத விஷயம் நிங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன் நன்றி குருஜி -தமிழ் மன்னன்

Excellent and rarest info Guruji!!

ஓ,, அரனைக்கு விசமும் பல்லும் இல்லையா ?
இன்றுதான் இதனை அறிந்து கொண்டேன் ..

நன்றி குருஜி..

வணக்கம் குருஜி. அரனை போன்று எத்தனை ஜந்துக்கள் பற்றி பல பயமுறுத்தல்கள் இருகின்றது. என்னைபொருத்தவரை அந்தகாலத்தில் எந்த விலங்கையோ, அல்லது ஜந்துக்களையோ, அல்லது பூச்சிகளையோ கொள்ளாமல் இருப்பதற்கு பல கதைகளையும், கட்டுக்கதைகளையும் சொல்லி மனிதர்களாகிய நாம் கொள்ளாமல் இருப்பதற்கு சொல்லுவார்கள். ஆனால் காலத்தின் மாறுபாடால் அனைத்தையும் தெரிந்து கொள்ளவேண்டியுள்ளது. அரனை பற்றி ஐயம் போய்விட்டது. என்னைபொருத்தவரை ஹரனை(கடவுள்) பற்றிக்கொண்டால் எந்த அரனை பற்றி பயம் வேண்டாம். மிக்க நன்றி குருஜி.

அரனை பார்த்தால் பல்லி போல உள்ளதால் ஒரு அருவருப்புடன் பார்க்கிறோம் அதுதான் காரணம்

Anonymous
12:40

அரனை கடித்து என் ஊரில் ஒரு உயிர் பலி ஏற்பட்டது 18 வயது பெண் இறந்து விட்டால் 2017-ம் வருடம் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தினத்தந்தி நாளிதழில் வந்திருக்கிறது (நெல்லை மாவட்டம் ) இதை பார்க்கவும்


Next Post Next Post Home
 
Back to Top