( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இன்னும் ஜெயலலிதா மாறவில்லையா?


  கால்காசு என்றாலும் கவர்மெண்ட் காசு வேண்டும் என்று கிராமத்தில் சொல்வார்கள்

 அந்த அளவிற்கு அரசு உத்தியோகத்தின் மேல் மக்களுக்கு அபிமானம் இன்னும் இருக்கிறது

 சாதாரண மக்களை பற்றி சொல்வானேன் படித்து பட்டம் பெற்றவர்களும் இளையத்தலைமுறையினரும் கூட அரசாங்க வேலையை காதலிக்கிறார்கள்

 எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் தனது மகளை தனியார் துறையில் நல்ல வேலையிலிருந்த நல்ல நல்ல மாப்பிள்ளைக்கெல்லாம் கொடுக்காமல் வெகு நாள் காத்திருந்து சற்று வயசான கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கொடுத்தார் 


 இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று நான் கேட்டபோது சம்பளம் முக்கியமல்ல உத்தியோகப் பாதுகாப்புத்தான் முக்கியமானதனப் பதில் சொன்னார்

இது சரியான நம்பிக்கையா? அவநம்பிக்கயா என்று நமக்குத் தெரியாது

ஆனால் நம்ம தமிழ்நாட்டு ஜனங்க இப்படி நம்புகிறார்கள்

 இந்த நம்பிக்கையை சாதகமாகப்பயன் படுத்திக் கொண்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த வட்டம் மாவட்டம் எனத் துவங்கி அமைச்சர்கள் வரையில் தனி மகசூலே நடக்கிறது 


 சென்ற ஆட்சி துவங்கியவுடன் அமைச்சரான ஒருவரிடம் தனது மகனுக்கு பேருந்து நடத்துனர் வேலைக்காக இரண்டு லச்ச ரூபாய் கொடுத்து விட்டுஆட்சி முடியும் வரை காத்திருந்தார் எனக்குத் தெரிந்த பெரியவர்

 இப்படி ஏராளமானவர்களை தமிழ்நாடு முழுவதும் பார்க்கலாம்

 அரசாங்க வேலை பெருவதற்கு ஆள் சிபாரிசு வேண்டும் பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும் சிறிதளவு திறமை இருந்தால் கூட போதுமானது எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என பலர் நம்பிக்கொண்டிருந்தனர்

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையிலும் இடிவிழுந்திருக்கிறது


 அரசு வேலைக்கு சிபாரிசு லஞ்சம் திறமையெல்லாம் போதாது நாக்கையும் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று புதிய பார்மூலாவை ஒரு பெண்மணி தமிழ்நாட்டிற்கு வழங்கியிருக்கிறார்

 நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ஒருவேளை தமிழ்நாட்டில் இனி எல்லா புதிய அரசு ஊழியர்களும் நாக்கறுத்தவர்களாய் காது வெட்டியவர்களாய் தலையில்லாதவர்களாய் தான் காண நேறிடுமா என நடுக்கமாகவும் இருக்கிறது

 ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவி செய்ததை எப்படி தப்பென்று சொல்ல முடியும்? என சிலர் கேட்கலாம்

 உதவி செய்ததை யாரும் விமர்சிக்க வில்லை ஆனால் நாக்கை அறுத்து கொண்டதை மட்டுமே காரணமாக வைத்து அரசு வேலை கொடுப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?


  அந்த பெண்மணி தமிழ்நாட்டுக்காக எதாவது சாகசங்கள் புரிந்து உடல் உறுப்பை பறி கொடுத்தார் என்றால் அவருக்கு அரசு உதவி செய்வதில் நியாயம் இருக்கிறது

 தமிழ் மக்களுக்காக எதாவது செய்திருந்தால் கூட பாராட்டலாம்

 ஆனால் அவர் செய்திருப்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றிக்காக

இதை பாராட்டுவதோ பரிசு அளிப்பதோ தவறுதலான முன்னுதாரனமாகும்

பொதுவாக திமுக ஆட்சி என்றால் தலைவர்களை காக்கா பிடிக்க தோரணங்கள் வைப்பது ஆடம்பர கட் அவுட்டுகள் வைப்பது என்பது வழக்கம்


  அதிமுக ஆட்சி என்றால் தலைவிக்காக பால் குடம் சுமப்பது அலகு குத்துவது நெருப்பு மிதிப்பது என்று நடப்பது வழக்கம்

 ஆனால் இப்போதைய இந்த பழக்கம் மிகவும் விபரிதமானது ஒரு வேளை முதல்வர் ஜெயலலிதா இப்படி பட்ட மூட தனத்தை விரும்புகிறாரோ என்னவோ?

 ஒரு வேளை அது தான் நிஜம் என்றால் ஜெயலலிதா இன்னும் மாற வில்லை ஆப்படியே தான் இருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வகை ஏற்படும்

தலைமை செயலகத்தை மாற்றுவது அச்சிட்ட புத்தகங்களை குப்பையில் போடுவது நாக்கை அறுத்தவருக்கு அரசாங்க வேலை கொடுப்பது என்ற தொடர்ச்சியான நிகழ்வுகளை காணும் போது தமிழக மக்களுக்கு கிலி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை


 கருணாநிதி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் தண்டனை கொடுத்து சூடு இன்னும் தனிய வில்லை

அதற்குள் அதே தவறுகளை இவரும் ஆரம்பித்தால் மக்கள் கையில் உள்ள சாட்டை திரும்பி விடும்

செய்ய வேண்டிய ஆக்க பூர்வ பணிகள் எத்தனையோ உண்டு அதை விட்டு விட்டு இத்தகைய காரியங்களில் ஈடு படுவது யானை தலையில் மண்ணை வாரி போட்டது போல் ஆகி விடும்

அதனால் பழைய ஆசைகளை கழற்றி வைத்து விட்டு புதிய செயல்களை முதல்வர் செய்வது அவசியம்

இதை மறந்தால் நாட்டுக்கும் நல்லது நடக்காது அவருக்கும் நல்லது கிடைக்காது 


 
+ comments + 30 comments

அய்யா வணக்கம்
நல்ல பதிவு,இந்த தனி மனித வழிபாடு கொண்ட கட்சிகளில் ,தீக்குளிப்பு,உடல் உறுப்புகளை வெட்டுதல் என்பதெல்லாம் சாதாரணம்.அந்த பெண் உண்மையிலேயே கட்சி(அம்மா) பற்றினால் செய்தாரா? இல்லை வேலைக்காக் செய்தாரா என்பதும் தெரியாது.இதனை பதிவிட்டது நீங்கள்தான் முதல் என்று நினைக்கிறேன்.வாழ்த்துகள்.

08:01

வணக்கம் குருஜி

அருமையான பதிவு. ஜெயலலிதா இன்னும் மாறவில்லை என்றுதான் தோன்றுகிறது.ஜெயலலிதா நினைத்து கொண்டிருப்பது அவர்மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்கள் இந்த அமோக வெற்றியை அளித்திருக்கிறார்கள் என்று. தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த அந்த 13 ம் தியதி மத்தியான வேளையில் பத்திரிக்கையாளர்கள் சந்தித்து இந்த வெற்றியை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் என்னுடைய கடந்த 1991, 2001 ஆட்சியில் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் மீது கிடைத்த வெற்றி என்று மாற்றி கூறினார். அப்பொழுதே அதிகார போதை தலையில் ஏறி உட்கார்ந்து விட்டது. இரண்டு முறை அதிகாரத்தை ருசித்தவர் அல்லவா. ஆனால் தமிழக மக்கள் திமுக குடும்ப ஆட்சியை,தமிழர்களுக்கு துரோகம் செய்த ஆட்சியை, ஊழல் நிறைந்த ஆட்சியை, சீர்கெட்ட அரசு நிர்வாகத்தை வழங்கிய ஒரு ஆட்சியை தூக்கி எறிய மாற்றி வாக்களித்தார்களே ஒழிய ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்றும் வாக்களித்ததாக எனக்கு தோன்றவில்லை. சமச்சீர் கல்விக்கான ஒன்பது கோடி பாட புத்தகங்களை நிறுத்தி வைத்ததிலிருந்தே ஜெயலலிதா மாறவில்லை என்பதற்க்கான பிள்ளையார் சுழி.
இதைப்போன்று இன்னும் ஐந்து வருடங்களில் பார்ப்பதற்க்கு நிறையவே இருக்கிறது. ”வாள் போய் கத்தி வந்தது”

Anonymous
09:33

சரியாக சொன்னிர்கள் குருஜி

ivvalavu per irukkumbothu ivarai kondu vaithaargal muttaalgal

போக ..........போக...........

இது போன்ற முட்டாள் தனமான நிகழ்வுகளை முதல்வர் பரிசு/வேலை கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் முதல் தவறாக இருப்பதால் கொஞ்சம் பொறுமையுடன் அரசின் நடவடிக்கைகளைக் கவனிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

அதே சமயம் இதே போல மேலும் நிகழ்ச்சிகள் நடந்தால் மேலும் கடும் விமர்சனங்களை முன்வைக்க வேண்டியிருக்கும் என்றும் தோன்றுகிறதுஇது போன்ற முட்டாள் தனமான நிகழ்வுகளை முதல்வர் பரிசு/வேலை கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் முதல் தவறாக இருப்பதால் கொஞ்சம் பொறுமையுடன் அரசின் நடவடிக்கைகளைக் கவனிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

அதே சமயம் இதே போல மேலும் நிகழ்ச்சிகள் நடந்தால் மேலும் கடும் விமர்சனங்களை முன்வைக்க வேண்டியிருக்கும் என்றும் தோன்றுகிறது

இந்த பூனைக்கு யார்தான் மணிகட்டுவதோ?????????????????

இன்னும் அஞ்சு வருடம் இருக்கு.. பொறுமையாக ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்..

அந்தச் செய்தியைப் பத்திரிகையில் படிக்கக்கூட என்னால் முடியவில்லை. நிச்சயம் இது போன்று இனி நடக்கக்கூடாது
என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Anonymous
17:30

வணக்கம் குருஜி
ஒன்றே சொல்லினும்
நன்றே சொன்னீர்
இன்றே சொன்னீர்

தங்களைப் போன்ற உயர்ந்தவர்கள் வலைப் பதிவு உலகில்
முதியவர்கள் என்னைப் போன்ற புதியவர்களை பின் தொடர்
பவராக இருப்பது முறையல்ல எனவே நான் தங்களைப்
பின் தொடரவே விரும்புகறேன் நன்றி

புலவர் சா இராமாநுசம்

அரசு வேலை வேணும்? அம்மா பெயரையைச் சொல்லி நாக்கை வெட்டிக் காணிக்கை கொடு.

அரசியல் வாதிகள் வேண்டும் என்றால் கட்சி மாறுவார்கள். ஆனால் அடிப்படையில் எவருமே மாற‌மாட்டர்கள்.இதனால் தான் அரசியலை சாக்கடை என்று அழைத்தார்களோ என்னவோ!

ஜெ. இருக்குமிடத்தில் செருப்பு அணியாத அமைச்சர்-கேட்டால் 'அம்மா' இருக்குமிடம் கோவில் என்கிறார்!


சென்னை: முதல்வர் ஜெயலலிதா இருக்குமிடம் கோவில் என்றும், இதனால் ஜெயலலிதாவின் வீடு, அவர் பணியாற்றும் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகிய இடங்களில் செருப்பே அணியாமல் தவிர்த்து வருகிறார் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழக சட்டசபைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று பதவியேற்றபோதும் அவர் செருப்பு அணியாமல் தான் வந்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கோவிலுக்குள் எப்படி செருப்பு அணிந்து செல்லக் கூடாதோ அதேபோல, முதல்வர் ஜெயலலிதா இருக்கும் இடத்தில் நான் செருப்பு அணிந்து செல்ல மாட்டேன்.

அம்மா இருக்கும் இடம் தான் எனக்குக் கோவில். எனவே அம்மாவின் வீடு, அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலக வளாகம், இப்போது பதவி ஏற்ற சட்டப்பேரவை என எந்த இடத்திலும் நான் செருப்பு அணிவதில்லை.

கடந்த ஒரு வார காலமாக தலைமைச் செயலகத்தில் செருப்பு அணியாமல்தான் பணிகளை கவனித்து வருகிறேன் என்றார்.

அதே போல நேற்று பதவியேற்ற கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏவான காமராஜ், தனது காலணியைக் கழற்றி வைத்துவிட்டு முதல்வர் ஜெயலலிதாவின் இருக்கையை நோக்கி வணக்கம் தெரிவித்துவிட்டு பின்னர் தான் உறுதிமொழி ஏற்றார்.

தமிழகத்தின் ஐ.டி. அமைச்சராக இருந்து கொண்டு 'ஐஸ்' என்ற பெயரில் உதயகுமாரின் செயல்பாடு கொஞ்சம் ஓவராகவே உள்ளது.செய்தி : தட்ஸ் தமிழ்..பெத்த ஆத்தாவுக்குக் கூட இவ்வளவு மரியாதை கிடைச்சிருக்குமா என்று சந்தேகம் தான் ..!!!

@சிவஹரி

இந்த லட்சனத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வேற‌
நாடு உருப்பட்ட மாதிரி தான்.

@சிவஹரி

ஹா ஹா. புதுச் செருப்பு கொஞ்சம் கடிக்கத் தான் செய்யும்! அதிலும் இது வார் போய் மீண்டும் வார் போட்டு வந்திருக்கும் செருப்பு அல்லவா?

maaramaleruppathu nallathu........

Ilango Paramasamy
19:53

ellaam therthalukkaaka thaan marram marrum padi onnum illa

Matram enbathu arasiyal than arasiyavathigal idam kidayathu..

செய்ய வேண்டிய ஆக்க பூர்வ பணிகள் எத்தனையோ உண்டு அதை விட்டு விட்டு இத்தகைய காரியங்களில் ஈடு படுவது யானை தலையில் மண்ணை வாரி போட்டது போல் ஆகி விடும்

@Viji Sairishi

என்னா யானை தலை? இது யானை தானேய்யா. இதை என்னாத்த குளிக்கவச்சி உட்காரவைத்தாலும் இது தானும் மண்ணை அள்ளி போட்டுக்கும். பிறருக்கும் மண்ணை அள்ளி போடும்.

நாம் எதிர்பார்ப்பது போன்று எல்லாமே நடக்கவேண்டும் என்றால் எப்படி. யாரும் பாதிப்புள்ளாகாமல் யாரும் ஓன்றும் செய்யமுடியாது. எதிர்ப்புகளுக்கு பயந்தால் நல்லது செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பிடிக்கவில்லையென்றால் தூக்கியெறியுங்கள்.

Anonymous
20:08

இவர்கள் இப்படி தான் ....

ஆயிரம் பெரியார் வந்தாலும் இவங்களை திருத்த முடியாது,

12:43

5 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை இவரது செயல்பாடு தெரிவிக்கிறது ...

Thamil Nattin Thalai VIDHI IDHU....Oru pakkam KAYAMAIYUM SONTHA KUDUMBHA NALANUM KAAKUM KARUNA allathu Maru Pakkam INTHA AMMA

THAMILAGA MAKKALAI KADAVUL KAAKKAA

super cary on

AATSI AMAINTHA 10 naatkalukkul anaiththum nadakkavaendum entru ethirpaarpathu ""MADAMAI""!!!! ""PAERAASAI""!!!

Anonymous
18:32

போர்க் களத்தில் வெண் புரவிகள் பூட்டிய தேர் விரைந்தோடும்

போது, புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடும். அப்போது,

தேர்க்காலில் உட்கார்ந்திருக்கும் கொசு நினைக்குமாம், "ஆஹா,

என்னே வலிமை, என் வலிமை! என்னாலன்றோ, இந்தப் போர்க்

களத்தில் இந்தப் புழுதி" ... தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்

கொண்டவர்கள், வாக்களித்தவர்கள் !! இன்னும்

எத்தனையோ 'புரட்சி' செய்யக் காத்திருக்கிறார் தலைவி ...

பொறுத்திருங்கள் !!


"ஹலோ, கேப்டன் ... ஹலோ, கேப்டன் ... ஹலோ,

கேப்டன் ... " "கேப்டன், இப்ப பேச மாட்டாருங்க, அவரு நாக்க

யாரோ அறுத்துட்டாங்க ..... "

இளங்கோ
00:02

நல்லவேளை அந்த பெண்மணி கண்ணகி போல வேறு எதனையும் செய்யவில்லை.


Next Post Next Post Home
 
Back to Top