( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தலையும் இல்லை தலைவரும் இல்லை

  ராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் ஒருவனை சமீப காலத்தில் சந்திக்க நேரிட்டது

அவன் தனது தாய் மண்ணை பற்றி ஏராளமான விஷயங்களை ஆர்வமுடன் என்னிடம் கேட்டறிந்தான்

 அப்போது அவன் இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மாநிலம் சுகந்திர போராட்ட காலத்தில் அதிகமான பங்கு பணியை ஆற்ற வில்லையே ஏன் என்று என்னிடம் கேட்டான்

 அவன் கேள்வி எனக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது

வேலு நாச்சியார் காலம் துவங்கி வடலி விளை ஜம்புலிங்கம் காலம் வரை எண்ணற்ற தேசிய தியாகிகளை தந்தது நம் தமிழகம்


 கட்டபொம்மனின் வீரம் சிதம்பரனாரின் துணிவு உலகம் அறியாதது அல்ல

 இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு துரத்த போர் கொடி பிடித்தது முதலில் தமிழர்கள் தான்

 ஆனால் தமிழர்களின் தியாகம் தொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ளயே முடங்கி போனதற்கு யார் காரணம்?

 அல்லது தமிழர்களின் சிறப்புகளை மற்றவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்களா என்று பக்கம் சார்பில்லாமல் சிந்திக்கும் போது நமக்கு அதிர்ச்சி தான் மேலோங்கி நிற்கிறது

 உண்மையில் தமிழர் உலகம் என்பது மற்ற மக்கள் பலரால் இன்னும் கால் பங்கு கூட அறியாத நிலையிலேயே இருக்கிறது 

 நமது வள்ளுவரும் இளங்கோ அடிகளும் பாரதியும் இந்தியாவில் பலருக்கு அறிமுகம் இல்லாத பெயராகவே இருக்கிறது இதை முதலில் நாம் ஒத்துக் கொள்ள தயங்க கூடாது

 நமது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற தமிழ் பெருமைகள் எல்லாம் புகழ்ச்சிகள் எல்லாம் நம்மை போலியாக திருப்தி படுத்துவதாகவே இருக்கிறதே தவிர உண்மையை சொல்வதாக இல்லை

 இந்த குறைகளுக்கு ஒட்டு மொத்தமாக அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு

 தமிழ் அறிஞர்களும் தமிழ் குடிமக்களும் கூட காரணமாக இருக்கிறார்கள்

 நாம் நமது முதுகை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப் படுகிறோமே தவிர நமது புகழ் அண்டைய ஊர்க் காரனுக்கு தெரிந்திருக்கிறதா இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டி கொள்வது கிடையாது


 பூனை கண்ணை மூடி கொண்டியிருப்பது போல இருக்கிறோம்

 இதனால் தான் தேசத்திற்கான நமது உழைப்பு பலரும் அறியமுடியாத வண்ணம் உள்ளது

வெளி மாநிலங்களிலும் தேசங்களிலும் தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை

பெற்ற தாய்க்கு சோறு போடுகிறானோ இல்லையோ திரைப்பட நடிகர்களுக்காக கோஷம் போடுவான் காவடி தூக்குவான் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நிற்கிறது

தான் விரும்புகின்ற நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு


 இதனால் தான் நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்கிறது

காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் நம் தமிழ் நாட்டில் யாருமே இல்லை என்ற கவலையை அப்துல்கலாம் அவர்கள் ஓரளவு தீர்த்தாலும் மற்றவர்கள் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை

 மக்களிடம் தேசிய சிந்தனை இல்லாமல் போய் விட்டதனால் பெருந் தலைவர்கள் யாரும் உருவாக வில்லை அல்லது உருவாக விரும்ப வில்லை

 தமிழன் தமிழன் என்று மார்தட்டி கொள்வதனால் கண்ட பயன் யாதும் இல்லை

 தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பவர்கள் மேடை தோறும் முழங்குவதனால் தமிழன் வளர்ந்து விட்டதாக கருதிவிட முடியாது


 இலங்கையில் தமிழன் செத்து மடிகிறான் மலேசியா சிங்கப்பூரில் அடிமை வாழ்வு வாழ்கிறான் ஆனால் தமிழக தமிழன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து கொண்டு இருக்கிறான்

இது தான் தமிழருக்காக உழைக்கும் தலைவர்களின் தொண்டுகளால் கிடைத்த பலன்

தேசிய அளவில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் நிஜமாகவே இருந்தால் உலக தமிழர்களின் இன்னலுக்காக இந்திய தேசமே இறங்கி வந்திருக்கும்

 ஆனால் நம் தலைவர்கள் மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில் உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர வீறு கொண்டு எழுந்து உழைக்கிறார்கள் இல்லை

 நம்மை போன்றவர்களும் எழுதுவதிலும் பேசுவதிலும் படிப்பதிலும் காட்டுகின்ற சிறத்தையை செயலில் காட்டுவது இல்லை

  இதனால் தான் நமது முன்னோர்களின் உழைப்பும் புகழும் வரலாற்று பக்கங்களில் தூசி படிந்து கிடக்கிறது

 இந்த நிலையை மாற்ற நாம் தினசரி நமது குழைந்தைகளுக்கு தேச சேவையின் முக்கியத்துவத்தை போதிக்க வேண்டும்

  வாஞ்சி நாதன் திருப்பூர் குமரன் தில்லையாடி வள்ளியம்மை இன்னும் பலரின் தியாக வாழ்க்கையை உணரும் குழைந்தைகள் இந்தியாவின் தலைமையை நோக்கி வீர நடை போடுவார்கள்

 அப்போது தான் தமிழன் என்று சொல்லும் போதே தலை நிமிரும் அது வரை தமிழனுக்கு தலையும் இல்லை தலைவரும் இல்லை.


+ comments + 12 comments

மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால் தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும் அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.

Anonymous
11:41

@surendhar , உன்னுடைய ஒரே தலைவன் யார்?.

நம்மை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப் படுகிறோம் மாறாக நம்மை பற்றி வேற்றவரும் மற்றவரும் அறிய என்ன செய்தோம்
தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை, கலை(ஆய கலைகள் 64 தொழில்கள் ) சோறுபோடும் என்பது முன்னோர் வாக்கு இந்நாளில் பிள்ளைக்கு உள்ள சோற்றை கலைஞனுக்கு போட்டு தானும் பட்டினி கிடக்கும் தறுதலை தமிழன்

நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் தமிழன்
நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்க காரணமான தமிழன்

இலங்கையில் தமிழன் செத்து மடிந்த போதும், மலேசியா சிங்கப்பூரில் அடிமைகள் என விரட்டியபோதும் பெரு வாழ்வு வாழ சுயநலத்துக்காக , மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில் உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர தமிழன் நலம்பெற தறுதலை தலைவனோ தமிழக தமிழனோ முன்னின்றதில்லை,மாறாக
தமிழக தறுதலை தலைவன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து நிற்கும் தமிழன் மானோடும் மயிலோடும் நேரத்தை வீணடிக்கும் தமிழன் வீறு கொண்டு எழுவது எப்பொழுது
காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற, செயல் பட தமிழன் ஒருவன் முன்வரவில்லை
அப்துல்கலாம் போல் ஒருவர் வந்தாலும் அதற்கும் குதர்க்கம் பேசி குந்தகமும் செய்த தலைவன்உள்ளவரை

தமிழன் தலை நிமிர்வது எவ்வாறு எப்பொழுது.. !. தமிழனுக்கு தனியொரு தேசம் கிடைக்கும்பொழுது !!!

Anonymous
15:21

சுரேந்தர் சொன்னது மாவீரன் பிரபாகரனை

karthik

எனக்கு தெரிந்தவரையில் இங்கு உள்ள "வள்ளுவர், இளங்கோ அடிகள்,பாரதி,வாஞ்சி நாதன்,திருப்பூர் குமரன்,தில்லையாடி வள்ளியம்மை,வேலு நாச்சியார்,வடலி விளை ஜம்புலிங்கம்,கட்டபொம்மன்,சிதம்பரனார்" யாரும் புகழ் வேண்டியோ அல்லது பெருமைகாகவோ எந்த செயலையும் செய்யவில்லை, மாறாக பொதுநலன் கருதியும் தம் கடமையாகவும் நினைத்து வாழ்ந்தவர்கள்.

ஆமாம் என்னுடைய ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் அவர்கள்

Anonymous
22:20

நல்ல வேலை நான் மு க என்று நினைத்தேன்

தமிழையும், இந்தியாவையும் ஏன் உலகையும் தலை நிமிர செய்ய ஒரு தமிழன் வருவான் கவலையை விடுங்கள்...

Swamiji, please read the book "Viduthalai Velviyil Tamilagam" by Mr.Stalin Gunasekaran from Erode. the book is a finest history of all freedom fighters from Tamilnadu with their photos.

அருமையான கட்டுரை,தமிழன் இன்றைய நிலை -பற்றி மிக அழகாக கூறியிருக்கிறீர்கள்
Nanthakumar
chennai

Sriram
06:51

ஐயா பார்பனர் என்ற காரணத்துக்காகவே "தமிழ் தாத்தா உவே சாமிநாத ஐயர் இருட்டடிக்கப்பட்டார். பார்பனர் என்பதாலேயே மஹா கவி பாரதியாரின் 125ஆவது பிறந்த நாள் மறக்கப்பட்டது. இதுபோல் ஜாதிகளின் ஆதிக்கம் உள்ளவரை வரலாறுகள் மறைக்கப்படும்!


Next Post Next Post Home
 
Back to Top