( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது...!

  •    லைவர் கருணாநிதி அவர்கள் ராமர் பதினான்கு வருட வனவாச காலத்தில் தான் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று சொல்லி உள்ளாரே இந்த வாசகத்தின் படி அவர் தன்னை ராமனாக நினைத்து கொள்கிறாரா?

  ப்போது நாட்டில் நடமாடுகிற தலைவர்கள் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை போடும் போது எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கும்

   எவ்வளவு நல்ல தலைவர்கள் இவர்கள்! செத்து போய்விட்டார்கள் என்ற தைரியத்தில் சிறிதளவும் தகுதியே இல்லாத மனிதர்கள் இவர்களை தொட்டு மாலை அணிவிக்கிரார்களே

  இந்த தலைவர்களும் எதாவது பாவம் செய்திருப்பார்கள் அதனால் தான் இவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றும்

  இதே எண்ணம் இப்போது ராமன் பெயரில் எனக்கு வருகிறது

  சீதா தேவியை தீ குளிக்க வைத்த பாவத்திற்காகத்தான் கலைஞரோடு ஒப்பிட வேண்டிய துர்பாக்கியம் ராமனுக்கு ஏற்பட்டிருப்பதாக தோன்றுகிறது

  இந்த ராமன் பேசாமல் கிரேக்கத்திலோ அமெரிக்காவிலோ பிறந்திருக்கலாம் தெரியாத்தனமாக இந்தியாவில் பிறந்து யார் யார் வாயிலோ பட்டு படாத பாடு படுகிறான்

  ராமன் இருக்கட்டு காய்த்த மரம் கல்லடி படுவது போல் அவனுக்கு என்றும் கஷ்டம் தான்

  நமது தானை தலைவர் உளறினால் காவியம் கிறுக்கினால் இலக்கியம் என்று கழக கண்மணிகள் துதிப் பாடுவார்களே அப்படிப் பட்ட இல்லக்கிய சூரியனின் இலக்கிய ஞானத்தை கண்டு சிரிப்பாக வருகிறது

  ராமன் வனவாசம் போகும் போது தாடகை எங்கே வந்தாள்? அவன் சிறுவனாக இருந்த போது யாகத்தை காக்க விசுவாமித்திரரோடு சென்ற போது தான் தாடகையை வதம் செய்தான்

  இத்தனை பெரிய இலக்கிய அறிஞருக்கு இது கூட தெரியாமல் எப்படி போனது?

   பொறாமையும் காழ்புணர்ச்சியும் வந்துவிட்டால் எப்பேர் பட்ட வீரனும் மண்ணை கவ்வுவான் என்பது இதன் மூலம் தெரிகிறது

  எது எப்படியோ ராமாயணத்தையும் ராமனையும் கலைஞர் அவர்கள் மறக்காமல் இருக்கிறாரே! கனிமொழியின் பிரிவு துயரத்தில் கூட ராமனை நினைக்கிறாரே! அது வரை அவர் பக்தி வாழ்க !


  •     மத்திய அரசுக்கும் ஜெயலலிதா அம்மையாரின் மாநில அரசுக்கும் நல்ல உறவு இருக்கிறதா?

  முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போதைய மத்திய அரசு எல்லா விசயத்திலும் அதாவது தன்னை காப்பாற்றி கொள்ளும் விசயங்களில் சர்வ ஜாக்கிரதையாக செயல் படுகிறது என்றே சொல்ல வேண்டும்

  காமன் வெல்த் அலைக்கற்றை ஊழல்களை கையாள்வதில் துவங்கி அன்ன ஹசாரே ராம்தேவ் போன்றோர்களை அலைக்கழிப்பது வரையிலும் அதன் ஜாக்கிரதை தன்மை தெளிவாகவே தெரிகிறது

  தமிழ் நாட்டை பொறுத்தவரை திராவிட பரிவாரங்களை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்பது மத்திய காங்கிரஸ் அறியாதது அல்ல

  முஸ்லிம் லீக் பாஜக பார்வாட் ப்ளாக் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு கூட கொடி பிடிக்க தொண்டர்கள் உண்டு அவைகளுக்கென்று  தனி ஒட்டு வங்கி கூட இருப்பதாக சொல்லலாம்

  ஆனால் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தொண்டர்களே இல்லாமல் தலைவர்களை மட்டும் கொண்ட கட்சி

  இதற்கென்று ஊருக்கு ஒருவர் கூட ஓட்டு போட ஆள் கிடையாது

  அந்த சூழலில் இதுவரை சவாரி செய்த திமுக குதிரை பள்ளத்தில் விழுந்து விட்டது

  இனி அதை நம்பினால் எந்த பலனும் இல்லை என்பது காங்கிரஸ் காரர்கள்  அறியாதது அல்ல

  வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தயவு கங்கிரஷுக்கு கண்டிப்பாக தேவை என மேல் மட்டம் கருதுகிறது

  இதனால் அம்மையார் அவர்கள் சிதம்பரத்தை திட்டினாலும் சோனியாவையே வசைமாரி பொழிந்தாலும் அவைகளை எல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள மத்திய காங்கிரஸ் தயாராக இல்லை

  எனவே தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு கனிவோடு பரிசிலிக்கும் என்பது எனது எண்ணம் 

  •  தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்றதற்கு ஈழ பிரச்சனை தான் காரணம் என்று சிலர் சொல்வது சரியா?

  நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்ப்பவர்கள் நான் மக்களோடு மக்களாக இருந்து மக்களை பார்ப்பவன் என்று

 அதை இங்கு வேறு மாதிரி சொல்ல விரும்புகிறேன் நான் தினசரி கோடிஸ்வரன் முதல் கோவணாண்டி வரையிலும் பலதரப்பட்ட மக்களை சந்திப்பவன்

  தினசரி மூன்று கிராமத்திற்காவது சென்று அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை மனோ நிலைகளை நேரடியாக பார்ப்பவன்

  முன்பை போல் இப்போதெல்லாம் தமிழக தமிழன் ஈழ தமிழனை பற்றி கவலைப் படுவது இல்லை

  தமிழகமே கொதித்து எழுவது போல் சில தலைவர்கள் மேடையில் பேசுவது அரசியலுக்காகவும் ஈழ மக்களை ஏமாற்றவும் தான்

  இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்து கொண்டியிருந்த போது பல்லாயிரம் தமிழ் உயிர்கள் ரத்த சேற்றில் மூழ்கி கொண்டியிருந்த போது தமிழக தமிழனின் பலரின் மனதில் ஒரு சிறிய சலனம் கூட ஏற்பட வில்லை என்பது யதார்த்தமாகும்

  அதனால் தான் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போட்டார்கள்

  இப்போது கூட இலங்கை இன பிரச்சனையை மக்கள் கவனிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்

  இலங்கை தமிழருக்காக காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போட வில்லை என்றால் ஈழத்திற்காக பல மேடைகளில் கரடியாய் கத்திய திருமாவளவனையும் ராமதாசையும் மக்கள் கை விட்டது ஏன்?

   திரு வைக்கோ அவர்களை ஜெயலலிதா அநியாயமாக புறக்கணித்தும் கூட அம்மையாருக்கு கணிசமான வெற்றியை கொடுத்தது ஏன்?

   உள் நாட்டில் நடந்த ஊழல் அரசியலும் குடும்ப கூத்தடிப்பும் தான் காரணமே தவிர இலங்கை பிரச்சனை காரணம் அல்ல

  எனவே தான் மீண்டும் மீண்டும் நான் ஈழ போராளிகள் மக்கள் செல்வாக்கில்லாத தமிழ் தீவிரவாதிகளை ஓரம் கட்டி விட்டு தமிழகம் மக்களிடம் மீண்டும் செல்வாக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று வலிவுருத்துகிறேன்

 இது தான் ஈழ மக்களுக்கு நன்மை செய்வதாக அமையும்


+ comments + 16 comments

Anonymous
08:50

எனக்கு தெரிந்தவரை தமிழ்நாட்டில் உள்ள 50% மக்களுக்கு இலங்கை தமிழர்கள் பற்றியோ அவர்கள் கொல்லபடுவது பற்றியோ எதுவும் தெரியாது .

மீதி இருபது சதவீததில்
5%பேர் அரசியல்வாதிகள் இந்த பிரச்னை கிடைத்தது அரசியல்வதிகளுக்கு சக்கரை பொங்கல் கிடைத்தது போல் ஆகிவிட்டது இவர்கள் இதை வைத்து இன்னும் பலவருடம் பிழைப்பை ஓட்டிவிடலாம் என்று நினைதுகொண்டிருகிரர்கள்.

மீதி உள்ள 15% பேர் ஊடகங்களிலும் .செய்திகளிலும் அரசியல்வாதிகளின் முழக்கத்தை வைத்து தெரிந்து கொண்டவர்கள்

மீதி உள்ள சொற்ப எண்ணிக்கை கொண்ட மக்களே உண்மையாக வருத்தபடுகிரார்கள் .

கருணாநிதீ தன் குடும்பத்திற்கு மந்திரி பதவி வேண்டுமென்றால் மட்டும் உடனே டெல்லிக்கு விமானம் ஏறி விடுவார்.மற்ற பிரச்சனைக்கு கடிதம் மட்டுமே எழுதுவார்.

தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,

அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .

ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள் இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .

இதுபற்றி தாங்கள் கண்டிப்பாக ஒரு பதிவு போடவேண்டும் .

Anonymous
09:05

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் பற்றி சுவாமிகளுக்குத் தெரியுமோ என்னமோ. அவரின் வீரமிக்க உணர்ச்சிமிக்க பேச்சில் அவ்ரின் SINCERITY தொனிக்கிறதே! தமிழினத்திற்காகப் பாடுபடும் ஒரே தலைவன் போல் தென்படுகிறார். இவர் பற்றித் தங்கள் உண்மையான கருத்து என்ன சுவாமிஜி?

பார்பானின் கட்டுகதைகள் என்பவர்கள், தனக்கு தேவை வரும் நேரத்தில், அந்த கதைகளை பயன் படுத்தி கொள்வார்கள். இதுவெல்லாம் திராவிட நாத்திர்களுக்கு கைவந்த கலை.


இனத்ரோகி, அடிகடி தன்னை மகாபலி சக்ரவர்தியாக என்னிகொள்ளும். மகாபலி (பச்சை தமிழனாம் ) நன்றாக ஆட்சி செய்தானாம். இந்திரனும் தேவர்களும் (ஆரியர்களாம்) சூழ்ச்சி செய்து விஷ்ணு (ஆரிய கடவுளாம்) உதவியால், மகாபலியை கொன்றுவிட்டு அவனின் ஆட்சியை கைபற்றிவிட்டர்களாம்.

நாதிகன் என்ன சொல்ல வருகிறது தெரிகிறதா? இதன் ஆட்சிக்கு பிரச்சனை வரும்போதெல்லாம், உடனே இது ஆரிய சதி, ஆரிய சதி, நான் தமிழன், நான் தமிழன். என்று சொல்லியே, 60 வருடம் தன் அரசியல் வாழ்கையை ஓட்டிவிட்டது.

இதையும் நம்பி, இத்தனை நாட்களாக இதற்கு ஆதரவு அளித்த நம் தமிழர்களைத்தான் நாம் குறை சொல்ல வேண்டும்.அதுவும் நம் ஹிந்து தமிழர்கள். பெரும்பான்மை முஸ்லிம் தமிழர்கள் இந்த நாத்திகனைதான் ஆதரிப்பார்கள். அதற்கு காரணம், அவர்களின் ஹிந்து மத வெறுப்பு. ஹிந்து மதம் அழிய வேண்டும்.. அதற்கு ஹிந்துவின் எதிரி அதிகாரத்தை கைப்பற்றவேண்டும் . இதுவே அவர்களின் திட்டம்.

அனால், காலம் என்ன பதில் தந்தது பார்திர்களா? இந்த நாத்திகன் மறைவுக்கு பிறகு, நிச்சயம் தி மு க அழிந்துவிடும். அதே போல தான் அம்மா கட்சியும். அவருக்கு பிறகு, அந்த கட்சி இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அம்மா மீது எனக்கு அவ்வளவு வெறுப்பு இல்லை. கடந்தகாலம் சில தவறுகள் அவர் செய்திருந்தாலும், இந்த நாத்திகனைவிட அவர் 1000 மடங்கு மேல். எனக்கு நம் தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர வேண்டும். என்ற ஆசை நீண்ட காலமாக உள்ளது. என்றாவது ஒரு நாள். அது நிச்சயம் நிறைவேறும்.


face bookil எனக்கு ஒரு இலங்கை தமிழர் நண்பராக இருக்கிறார், இப்போது லண்டனில் வசிக்கிறார். அவர் எனிட்டம் சொன்ன ஒரு வார்தை,

ஈழ தமிழர்கள், ராஜபக்க்ஷையை மன்னித்து விடுவார்களம். சோனியா காந்தியை மன்னித்து விடுவார்களம். அனால், ஒருகாலும் இந்த இனத்ரோகி கருணாநிதியை மன்னிக்க மாட்டார்களாம்.

உண்மைதான். வாழ்நாள் முழுதும் வாயெல்லாம் தமிழ், தமிழ், என்று முழங்கிக்கொண்டே , இறுதியில் பதவியை காப்பாற்றி கொள்ள தமிழர்களின் வாயில் வாய்கரசி போட்டவன் இந்த ஈன சண்டாளன்..


ஆரியர் படையெடுப்பு , என்ற நாசமாய் போன கதையை நம்பி, சிந்திக்க தெரியாமல், இனவெறி மொழிவெறி, கொண்டு, சண்டாள நாத்திக தறுதலைகளின் வார்தை ஜாலங்களுக்கு மயங்கி, அன்று பெருந்தலைவர் காமராஜரை , தோட்கடிதர்களே, இந்த தமிழர்கள், அவர்களுக்கு காலம் தந்த நல்ல பாடம் இது.

இப்போதும் நமக்கு நேரம் இருக்கிறது. பாரதம் என் தாய்நாடு ,தமிழ் என் மொழி ,வேதமே என் வாழ்க்கை நெறி, என்று நம் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த போலி நாத்திக தலைவர்களையும் ,இன துரோகிகளையும் நம் மதத்தை அழிக்க நினைபவர்களையும், அடையாளம் கண்டு அவர்களை மயானதித்கு அனுப்ப வேண்டும்.

Anonymous
10:15

"நமது தானை தலைவர் உளறினால் காவியம் கிறுக்கினால் இலக்கியம் என்று கழக கண்மணிகள் துதிப் பாடுவார்களே அப்படிப் பட்ட இல்லக்கிய சூரியனின் இலக்கிய ஞானத்தை கண்டு சிரிப்பாக வருகிறது"
Why sir? Even your writings are recognised. In which way MK's writings are lower than yours? Don't write some stupid articles. Must follow some dignity while writing. Please follow that.

"ராமன் வனவாசம் போகும் போது தாடகை எங்கே வந்தாள்? அவன் சிறுவனாக இருந்த போது யாகத்தை காக்க விசுவாமித்திரரோடு சென்ற போது தான் தாடகையை வதம் செய்தான்"

புராணத்தை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல் யாரோ ஒருவர் பேசுவதை அரைகுறையாக கேட்டு கொண்டு தவறான கருத்தை வெளியிட்டு முக்கு அறுபடுவதை வேலையை போய்டுச்சு.

இது போன்று தான் சில மாதங்களுக்கு முன்பு அ.ராசாவை மகாபலி சக்கரவரித்தி யுடன் ஒப்பிட்டு ஒரு கருத்து வெளியிட்டார்கள். மகாபலி நல்லவர் தான் இருபினும் தேவர்களுக்கு அவனால் ஆபத்து வர இருப்பதால் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மகா விஷ்ணு வமான அவதாரம் எடுத்து வந்து மகா பலியை வதம் செய்தார் அப்படின்னு சொன்னார்கள். அதுவும் தவறான கருத்து,

மகா விஷ்ணு இதுவரை எடுத்த ஒன்பது அவதாரத்தில் யாரையும் வதம் செய்யாத அவதாரம் இரண்டு, ஒன்று கூர்ம அவதாரம் (ஆமை) மற்றொன்று வாமன அவதாரம், இதில் மகாபலியின் ஆணவத்தை புரிய வைத்து மகாபலியின் அகந்தையை ஒலித்தாரை தவிர மகாபலியை வதம் செய்யவில்லை.

இனிமேலாவது புராணத்தை முழுமையாக கேட்டு அதை உதரணமாக எடுத்து சொன்னால் நல்லா இருக்கும் ..

ரபீக்
12:48

திமுக கேணியில் விழுந்தபோது கூட மீண்டும் வெளியில் வந்திருக்குது என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது நண்பரே !!

13:13

காமராஜரை பாராட்டுங்கள் - மிக உன்னத அரசியல்வாதி.

நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததற்காக நாம் காந்தி தாத்தாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோமே தவிர, மற்றபடி, அவரை உத்தமர் என்று சொல்ல வேண்டாம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பல விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

/////இலங்கையில் உச்ச கட்ட போர் நடந்து கொண்டியிருந்த போது பல்லாயிரம் தமிழ் உயிர்கள் ரத்த சேற்றில் மூழ்கி கொண்டியிருந்த போது தமிழக தமிழனின் பலரின் மனதில் ஒரு சிறிய சலனம் கூட ஏற்பட வில்லை என்பது யதார்த்தமாகும்/////
-- நூறு சதவீதம் உண்மை. ஏதோ தமிழகமே கொந்தளிப்பில் இருப்பதைப் போன்று வெறும் ஊடகங்களும், ஒரு சில அரசியல்வாதிகளும்தான் ஊளையிட்டார்களே தவிர, உண்மையிலேயே, வெறும் பதினெட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஈழத்தில் நடந்த மரண ஓலத்தை, ஏதோ, பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடக்கும் படு கொலைகளைப்போல, தமிழக தமிழன் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டுக் கொண்டான்.

மொத்தத்துலே தனக்கு எல்லாமே தெரிஞ்ச மாதிரி அரசியல் ஆன்மிகம் உலக நடப்பு அறிவியல்ன்னு எல்லாமே தெரிஞ்ச மாதிரி ஒரு பதரு எதையாவது கிறுக்கி தள்ளுது.

ராமன் காய்த்த மரமா அல்லது காய்ந்த மரமா? பின்னே கல்லால் அடித்தால் ஏனைய்யா கோபப்படுறேல்?

ஊர்க்குருவி என்னதான் உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது அய்யர்வாள்... பொத்திகின்னு இருக்கேளா?

பொழுது போகலேன்னா போயி கோவில்லே டிங்கு டிங்குன்னு மணி அடிப்பா.

ஹஹஹஹா ! கோமாளி பன்றி, மறுபடியும் எதோ உளறியிருக்கிறது.நான் அளித்த பின்னோடட்டிட்கு பதில் அளிக்க வக்கில்லை. அனால், உளறல் பேச்சுக்கு மட்டும் அதுக்கு குறைவில்லை.

பதிவுக்கு ஏற்ற கருத்து சொல்ல முடியவில்லைஎன்றால், போய் பாதிரியார் கொடுக்கும் பிஸ்கட்டை தின்று விட்டு தேவாலயத்தில் மணி அடிக்க வேண்டியதுதானே? இங்கே ஏன் வருகிறது?. இந்த பன்றியின் ஓலத்தையும் ஒரு பொருட்டாக மதித்து ,குருஜி அவர்கள், தன்னுடைய தளத்தில் அதுக்கு இடம் கொடுத்திருகிறார். அவரின் பெருந்தன்மை பாராட்டக்குடியது . இந்துவுக்கே உள்ள பெருந்தன்மை இது.

அய்யர்வாள்,பார்பான் என்ற கதை எல்லாம் இந்த காலத்தில் எடுபடாது கோமாளி! 70 வருடம் இதை சொல்லி பிழைப்பு நடத்திய பெரியவரே, இப்போது கூவம் நதியில் வீசப்பட்டு நாரிகொண்டிருகிறார். . புரிந்து கொள் கோமாளி!


பன்றி என்னதான் ஓலமிட்டாலும் , அது சிங்கமாக ஆகா முடியாது, கோமாளி! மலம் தின்னத்தான் அதுக்கு கர்மம் விதிக்க பட்டுள்ளது கோமாளி! எப்போதெல்லாம் உன்னை கண்டால், மிகவும் பரிதாபமாக இருக்கிறது கோமாளி!. சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன் கோமாளி.

நீ கேட்க மாட்டாய் என்று எனக்கு தெரியும். அனாலும் ஒரு அறிவுரை, எதிர் கருத்து சொனாலும் , அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நண்பர், அப்துல் ரஹ்மான் அவர்களிடம் பாடம் படித்து, பிறகு இங்கே வா கோமாளி. சரியா? கோமாளி? போய் வருகிறேன்.

கருணாநிதியை இலக்கிய அறிஞர் என்று எப்படி கூறுகிறீர்கள்..எச்சில் பொறுக்க சில காக்காய் கூட்டம் இருந்ததால் தமிழின தலைவன்,தொல்காப்பிய பூங்கா, உலக தமிழினத தலைவன்....பட்டங்களை கீட்டு பெற்ற வெட்கங்கெட்ட மனிதன்

(தி)- ருட்டு (மு)- ட்டாள்களைக் கொண்ட (க)-ழகம் குழியை தானே பறித்துக்கொண்டு அதில் விழுந்துவிட்டது

Suresh
05:04

@Anonymous

Suresh. Kanchipuram
05:05

We should not stick tiles on the temple. It should be protected

Anonymous
16:24

stop presuming about DMK failiure,it is afact that tamilnadu people always changes govt once in 5 years.that has happend now also. there is no third party in tamilnadu so people had no option rather than admk.( its not that admk is so good to rule TN nor DMK is too bad to thrown off)

திமுக தன்னுடைய பழங்கால கதைகளை சொல்லியே நட்டு மக்களை ஏமாற்றி வந்தார் எத்தனை நாட்களுக்கு இது எடுபடும். சில பழைய மனிதர்கள் அன்றைய திமுக வின் சரித்திரத்தை நினைத்து இன்றும் ஒட்டு போட்டு கொண்டிருக்கிரர்கள் அது அறிஞ்சர் அண்ணா காலம். அப்போதிருந்த கருணாநிதி வேறு இபோதிருக்கும் கருணாநிதி வேறு, அப்போது இருந்தவருக்கு இருந்த சொத்து மதிப்பு எவ்வளவு, ஆனால் இன்று கருணாநிதியின் குடும்பத்தார்க்கு இப்போது இருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு! சற்று சிந்தித்து பாருங்கள் உலகிலேயே விரல் விட்டு என்னுமளவிற்கு மிக பெரிய பணக்காரர்களில் ஒருவராக கருணாநிதியின் குடும்பம் திகழ்கிறது கழக கண்மணிகள் மிக நன்றாக யோசிக்க வேண்டும். இவரை இந்த அளவிற்கு உயர்த்தியது தமழக மக்கள் அவர்களுக்கு இவர் செய்தது என்ன பட்டை நாமம். சட்ற்றேனும் தமிழ் பற்று இருந்திருந்தால் அங்கு தமிழன் கொல்லபடுவது எவ்வகையிலாவது நிறுத்த பட்டிருக்க வேண்டும். அங்கு சோனியாவை மிரட்டியிருக்க வேண்டும் பெயருக்கு கடிதங்களை தூது விட்டு ஒப்புக்கு உண்ணாவிரதம் இருந்து ஒரு மணி நேரத்திலேயே உண்ணாவிரதத்தை முடித்துகொண்ட மகா சிகாமணில்லவா இவர்

Anonymous
20:39

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டின் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும்.

முதலில் " கடவுள் வாழ்த்து "
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி

அடுத்து மொழி வரலாறு: தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி ( நம்ம கவிஞர் வாலிதான்) என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கணிதம்: திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்: உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு: தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றார் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி. பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்.


Next Post Next Post Home
 
Back to Top