( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சமாதி கட்டினால் சந்தோசம் போகுமா...?

வணக்கம் ஐயா...
  
   உங்களோட சில கட்டுரைகளை நான் படித்து இருக்கிறேன்...ஒரு சில முரண்கள்    இருந்தாலும் பிடித்து இருக்கிறது...
  
   எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது...இதற்க்கு உங்களால் விளக்கம் தர முடியும்
   என்று நினைக்கிறன்...
  
   நான் கேட்கும் கேள்வியின் மையம் சமாதி கட்டுவது...
  
   இந்து மதத்தில் சமாதி கட்டுவதற்கு எதாவது விதி முறை இருக்கிறதா...
  
   இதை ஏன் கேட்கிறேன் என்றால்...என் தந்தையார் அவர்கள் என் தாத்தாவிற்கு இறந்தபிறகு சமாதி கட்டி தினமும் வணங்கி வந்தார்....ஆனால் பாருங்க என் தாத்தா இறந்த பிறகு படி படியாக என் தந்தையின் தொழில் முடங்கியது....
 
   குடும்பம் பிரிந்தது...ஒன்றாக இருந்த தம்பி அண்ணன்மார்கள் பிரிந்தார்கள்....அதன் பிறகு

   எந்த ஒரு நல்ல காரியமும் எங்கள் வீட்டில் நடக்க வில்லை....என்னோட திருமணம் கூட   காதல் திருமணம் தான்...வீட்டில் பல பிரச்சனைக்கு மத்தியில் தான் நடந்தது...
  
   இப்படி பல சோகம் கடந்த பத்து வருடங்களாக நடந்து கொண்டு
   இருக்கிறது....இதற்க்கு பலர் சொல்லும் காரணம்
  
   என் தாத்தாவிற்கு சமாதி கட்டியது தான் என்று சொல்கிறார்கள்....
  
   எனக்கு ஒன்றும் புரியவில்லை....நீங்கள் தான் இதற்க்கு விளக்கம் தர
   வேண்டும்....நான் வேளை நிமித்தமாக இன்று பல ஊருக்கு சென்று விட்டேன் ....ஆனால்
   பாருங்க இன்றும் எங்கள் குடும்பம் ஒரு புயலின் மத்தியில் தான் உள்ளது....
  
   இதற்க்கு எல்லாரும் கூறுவது சமாதி கட்டியது...
  
   உங்கள் மேன்மையான விளக்கத்திற்க்காக காத்து இருக்கிறேன்...
  
   நன்றி    
 Narendran Rajan


http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TJt7pmkRdbI/AAAAAAAADGI/MED4gCqwnDc/s1600-R/sriramanandaguruji_original.jpg
 • லகில் சடங்குகள் இல்லாத மதங்களே கிடையாது இந்து மதத்தை தவிர மற்ற மதங்களில் முக்கியமான சடங்குகள் பல உலக முழுவதும் ஒரே மாதிரியாக தான் கடைபிடிக்கப் படும் ஆனால் நமது இந்து மதத்தில் தான் இடத்துக்கு இடம் ஊருக்கு ஊர் ஏன் வீட்டுக்கு வீடு கூட சடங்குகள் வேறுப்பட்டும் முற்றிலுமாக மாறுப்பட்டும் இருக்கும் இதற்க்கான காரணம் இந்து மத பண்பாட்டின் தாக்கம் என்பது மண்ணோடும்  மனிதனின் மனதோடும் அவனின் அபிலாஷைகளோடும் பின்னி பிணைந்து இருப்பதே ஆகும் இறப்பிற்கு பிறகு இறுதி சடங்குகள் நடத்துவதில் கூட பல் வேறுப்பட்ட நடை முறைகள் பின்பற்ற படுகின்றன சிலர் சாவுக்கு மேளம் அடித்து நடனம் ஆடுகிறார்கள் சிலர் சங்கு மட்டும் ஊதுகிறார்கள் வேறு சிலர் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மெளனமாக மயானம் செல்கிறார்கள் இதில் எது தவறு எது சரி என்று சொல்லிவிட முடியாது கால காலமாக ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று சில பாராம்பரியங்களை கடைப்பிடித்து வருகிறார்கள் அதில் ஒன்று தான் இறந்தவர்களுக்கு சமாதி கட்டுதல் ஆகும் உங்கள் குடும்ப வழக்கப்படி சமாதி கட்டும் பழக்கம் இல்லாது இருந்திருந்தால் அதை துவங்குமுன் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும் இப்போது அது நடந்து முடிந்த கதை நம் முன்னால் நிற்கும் கேள்வி அப்படி கட்டினால் குடும்பம் பல சோதனைகளை சந்திக்குமா என்பது தான் இதுவரை இல்லாத ஒரு புது பழக்கத்தை உண்டாக்கும் போது இயற்கையாக சோதனை வந்தால் கூட இதனால் தான் ஏற்பட்டதோ என்று எண்ணுவது மனித இயல்பு ஆனால் முழுமையாக ஆராயும் போதும் சாஸ்திரங்க்களில் பதிலை தேடும் போதும் அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றே பதில் கிடைக்கிறது அதாவது என்னை பொறுத்தவரை உங்கள் தாத்தாவு சமாதி கட்டியதனால் தான் துயரங்கள் தொடர்கின்றன என்று சொல்ல இயலாது அதற்கு பூர்வ ஜென்ம கர்மா பித்துருக்கள் மற்றும் குல தேவதை தோஷங்கள் என்றும் நீங்கள் குடியிருக்கும் பூர்விக வீட்டின் வாஸ்து குறைப்பாடுகள் என்று எத்தனையோ சொல்லலாம் அதில் எதுதான் காரணம் என நுணுக்கமாக ஆய்வு செய்தால் கண்டுபிடித்து விடலாம் ஆனால் நிச்சயமாக சமாதி கட்டியது தான் காரணம் என நீங்கள் தொடர்ந்து நம்பினால் அது தவறு எனவே தொடர் துயரங்களுக்கு உண்மையான காரணம் எது என தக்கவரை கலந்து ஆலோசனை செய்து தீர்வு காணுங்கள் எந்த வழியும் கிடைக்காத போது எத்தகைய தோஷங்களையும் உடனடியாக நிவர்த்தி செய்யும் திலக் ஹோமத்தை வாரனாசி அல்லது ராமேஷ்வரம் போன்ற புனித ஷேத்திரங்களிலோ செய்யுங்கள் முடியா விட்டால் பவானி கூடுதுறையிலாவது அம்மாவசை திதியில் செய்யுங்கள் நிச்சயம் உங்கள் கஷ்டத்திற்கு விடிவு கிடைக்கும் நாராயணன் துணை செய்வான்


http://www.touchstone-blog.com/wp-content/uploads/2010/07/Question.jpg     மேலும் கேள்வி பதில் படிக்க 
  + comments + 7 comments

  வணக்கம் நண்பர்களே இரண்டு நாட்களாக பெயர் தெரியாத நண்பர் ச்வாமிஜியை பற்றி சில தவறான் வார்த்தைகளால் கருத்து தெரிவித்து வருகிறார் அந்த கர்த்துகளை நீக்கப்பட்டுள்ளது இந்த தளத்தில் தான் எப்பொழுதுமே கருத்து சுகந்திரம் உண்டு பின் ஏன் இந்த கோபம் என்று தெரியவில்லை சுவாமிஜி படைப்புகளில் குறைகள் இருந்தால் அந்த குறைகளுக்கான காரணத்தை தாராளமாக தெரிவிக்கலாம் அப்படி பட்ட பின்னூட்டத்தை எப்போதுமே நீக்கியது கிடையாது அதை போன்று யார் இந்த தளத்தில் இப்படி கருத்துகளை தெரிவிக்கிறார்கள் என்றும் எனக்கு தெரியும் அதை இப்பொழுது வெளியிட விருப்பம் இல்லை இருந்தாலும் அவர்கள் நாகிரத்தொடு நடந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது

  இப்படிக்கு
  சதீஷ் குமார்

  செல்வம் மும்பை
  11:09

  நண்பர் சதிஸ் குமார் தங்களுக்காக ஒரு இணையத்தால முகவரியை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளேன் பார்க்கவும் அந்த இணையதளத்தில் பின்னூட்டங்களில் url கொடுக்கவும் உடனடியாக அந்த பின்னூட்டத்தை யார் கொடுத்தார்கள் மற்றும் ip address அவரின் மின்னஞ்சல் முகவரி சமீபத்தில் பயன்படுத்திய இணையதளம் போன்ற அனைத்து விசயங்களும் தங்களுக்கு தந்துவிடும் அதனால் கவலை பட வேண்டாம் அந்த தவறான கருத்துக்கள் யார் கொடுத்தார்கள் எங்கிருந்து கொடுத்தார் என்று வரை எனக்கு தெரியும் தயவு செய்து தங்களுக்கு மின்னஞ்சலில் அந்த முகவரியை அனுப்பி உள்ளேன் பார்க்கவும்

  Anonymous
  11:26

  நண்பர் நரேந்திரன் ராஜன் அவர்களுக்கு :

  உங்கள் கேள்விகளுக்கு நம்ம சினிமாவிலேயே பதில் இருக்கிறதே!

  ( பழைய பாடல் )
  வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்...
  வாசல் தோறும் வேதனை இருக்கும்...
  வந்த துன்பம் எதுவென்றாலும்,
  வாடி நின்றால் நீங்குவதில்லை.
  உனக்கும் கீழே, உள்ளவர் கோடி நினைத்துப்
  பார்த்து நிம்மதி நாடு.

  +++

  ( புதிய பாடல் )
  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
  வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!
  உள்ளம் என்பது எப்போதும்
  உடைந்து போகக்கூடாது,
  என்ன இந்த வாழ்க்கை என்ற
  எண்ணம் தோன்றக்கூடாது!
  எந்த மனிதன் நெஞ்சுக்குள்
  காயமில்லை சொல்லுங்கள்!
  காலப் போக்கில் காயமெல்லாம்
  மறைந்து போகும் மாயங்கள்!

  +++

  ( ரஜினி ஸ்டைல் )
  ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய அள்ளி அள்ளி கொடுப்பான்.
  ஆனா, கடைசியிலே கை விட்டு விடுவான். நல்லவங்களை நிறைய சோதிப்பான். ஆனா, கை விட மாட்டன்.

  +++

  ( தீர்வு )
  நாளைப் பொழுதை இறைவனுக்களித்து...
  நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!!!

  12:21

  பிறப்பு நிச்சயம் கிடையாது. ஆனால், பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது மாற்றவே இயலாத நிச்சயம்.

  இறைவன் எந்த உயிரை தந்தானோ, அந்த உயிர் இம்மண்ணுலக வாழ்கையை முடித்துக் கொண்டு, மீண்டும் அந்த உயிர் அதை தந்த இறைவனிடமே சென்றடையும்.

  சிலரின் இறப்புகள் நமக்கு இழப்பையும் / பாதிப்பையும் தரலாம். ஆனால், அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். காரணம், பிறப்பும் / இறப்பும் இறைவனின் கட்டளை.

  //ஆனால், பாருங்க இன்றும் எங்கள் குடும்பம் ஒரு புயலின் மத்தியில் தான் உள்ளது//

  ஒவ்வொரு மனிதனும் பயம் என்னும் புயலின் மத்தியில்தான் அமைதியில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

  செல்வதில் வாழ்பவனுக்கோ, எங்கே நம் செல்வம் திருடப்பட்டு நமது கையை விட்டு தொலைந்து விடுமோ என்னும் பயம்!!

  வறுமையில் வாழ்பவனுக்கோ, நாளைய வாழ்வு எப்படி இருக்குமோ என்கிற மில்லியன் டாலர் கேள்வி பயம்!!

  புகழின் உச்சியில் இருப்பவனுக்கோ, எங்கே? எப்போது? நமது புகழ் சரிந்து விடுமோ என்கிற பயம்!!

  புகழுக்காக போராடுபவனுக்கோ, நாம் புகழ் பெறுவோமா? மாட்டோமா? என்கிற பயம்!!

  பெரும்பான்மை மக்களுக்கோ, எங்கே நமது பெரும்பான்மை குறைந்து விடுமோ என்கிற பயம்!!

  சிறுபான்மை மக்களுக்கோ, தங்களது வாழ்வாதார பாதுகாப்பு பற்றிய பயம்!!

  இவ்வளவு ஏன்? ஊரையே உருட்டி மிரட்டி திரியும் ஒரு தாதாவுக்கோ, எங்கே இன்னொரு தாதா நம்மை போட்டுத் தள்ளி விடுவானோ என்கிற பயம் ஒவ்வொரு நொடியும்!!

  புகழைத் தந்த இறைவன் ஆரோக்கியத்தை தருவதில்லை.
  ஆரோக்கியத்தை தந்த இறைவன் செல்வதை தருவதில்லை.
  செல்வதை தந்த இறைவன் நிம்மதியை தருவதில்லை.
  நிம்மதியோடு எந்த மனிதனும் இல்லை.

  இதுதான் உலகில் உண்மையான எதார்த்தம் நண்பரே!!!!!

  நம்பிக்கையோடு போராடுங்கள்! வெற்றி நிச்சயம்!!

  வீணான விசயங்களில் வீணாக மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள்!!

  sreenathan
  01:18

  குருஜி அருமையான யோசனை.

  புகழைத் தந்த இறைவன் ஆரோக்கியத்தை தருவதில்லை.
  ஆரோக்கியத்தை தந்த இறைவன் செல்வதை தருவதில்லை.
  செல்வதை தந்த இறைவன் நிம்மதியை தருவதில்லை.
  நிம்மதியோடு எந்த மனிதனும் இல்லை.

  உண்மை , ஆனால் இறைவன் எனக்கு எல்லா தீமையும் மட்டும் அல்லவா தந்து உள்ளன் . எப்படி இதை இறைவனை உள்ளான் என நம்புவது . செல்வம் புகழ் உடல் நலம் மன நலம் அன்பு எல்லாம் எடுத்து கொண்டு துன்பம் மட்டும் தந்து உள்ளான் .எப்படி என் கஷ்டம் நீங்குவது .

  12:21

  நண்பர் ஜாலிபேர்ட் அவர்களே!

  ///ஆனால் இறைவன் எனக்கு எல்லா தீமையும் மட்டும் அல்லவா தந்து உள்ளன்///

  மூளை வளர்ச்சி குன்றியவர், தனக்கு பசித்தால்கூட அதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்ட முடியாது.

  ஊமை கனவு கண்டால், அதை மற்றவர்களிடம் சொல்லிக்காட்ட முடியாது.

  கண் தெரியாதவருக்கு இவ்வுலகில் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசமே தெரியாது.

  பல விசங்களை எழுதும் நம்ம உஜிலாகூட உடற் குறையுள்ளவர்தான்! அவரால் ஓடியாடி நடமாட முடியாது.

  ஆனால், நீங்களோ அழகிய செந்தமிழில், அதுவும், இணையத்தில் / கணனியில் உங்கள் மன குறையை வெளிப்படுத்துகிறீர்கள்!!!

  இப்போது சொல்லுங்கள், நான் மேலே உதாரணம் காட்டியவர்களைவிட நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்று!!!


  Next Post Next Post Home
   
  Back to Top