( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வீட்டு சாப்பாடும்! ஹோட்டல் சாப்பாடும்!

  • இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும். ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
                                                                             ஆர்.திலகவதி   மலேசியா


   பொதுவான வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும். சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே இருக்கும், கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக பிரார்த்திப்பார்கள், இதோடு இறைவனின் அருள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தில் மிக அதிகபட்சமாக கண்கிலடங்காத அளவில் நிறைந்திருக்கும், அதே சமயம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வழிபடலாம், ஹோட்டல் சாப்பாடு போன்றதுதான் இறைவழிபாடு என கூறக்காரணம் வீட்டில் பல பிரச்சினைகளால் மனம் அலைகழிக்கப்படும், சிந்தனை இறைவன்பால் இருக்காது என்பது சர்வ நிச்சயம், ஆகவே நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று அங்கமர்ந்து பக்தர்களின் துயரைப் போக்கும் “இறைவனுடைய திருவடி கமலங்களை நினைவில் நிறுத்தி நாமும். நமது குடும்பமும். நமது தேசமும். நமது பிரபஞ்சமும் எல்லா வளமும் பெற்று நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வோமாக”
+ comments + 18 comments

Anonymous
03:16

//கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள்//
குருஜி இது தவறான கருத்து..தீயவர்களுக்கு கோவிலும் மற்ற இடங்களும் ஒன்றுதான்..நீங்கள் சொல்வது உண்மையென்றால் திருடர்கள் கோவிலுக்குள் திருட கூடாது..திருடர்கள் கோவிலுக்குள் நுழைந்த உடனே மனம் மாறி கோவிலுக்குள் திருடாமல் இருக்க வேண்டும் ஆனால் அந்த மாதிரி நடபதில்லை..ஒரு அசிங்கமான உதாரனத்தை சொல்ல வேண்டுமானால் கோவிலில் காம அர்ச்சகர் பண்ணிய அசிங்கத்தை கூறலாம்..எனவே தீயவர்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி நடந்து கொள்வார்கள்.அவர்களுக்கு கோவிலுக்கும் மற்ற இடங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

Anonymous
07:37

@Jayakumar
It's also true.

உண்மைதான் அய்யா..

11:26

எதை எங்கே செய்ய வேண்டுமோ, அதை அங்கேதான் செய்ய வேண்டும்.

இறைவனை வழிபட என்று தனியாக தளங்கள் இருக்கும்போது, அங்கேதான் சென்று வழிபட வேண்டும். அவ்விதம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம்.

கட்டுரையாளர் இதனை விளக்க வேறு ஒரு உதாரணம் காட்டியிருக்கலாம். காரணம், சாப்பாட்டு விசயத்தில் இப்போது காலம் மாறி விட்டது. வீட்டு சாப்பாட்டைவிட ஹோட்டலில்தான் விதவிதமாக, வாய்க்கு ருசியாக பலவாறு கிடைக்கின்றன. இதை கையேந்தி பவனில் இருந்து KFC வரை சொல்லிக் கொண்டே போகலாம்.

தீயவர்கள் கோவிலுக்குள் நுழைந்தால் “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவதை விட, அந்த சிலையையே தூக்கிக் கொண்டு / கடத்திக் கொண்டு போவதுதான் அதிகம்.

ஒரு வாசகர் சொன்னதைப் போல, அவர்களுக்கு வழிபாட்டுத் தளங்களும் ஒன்றுதான் - விபச்சார விடுதியும் ஒன்றுதான்.

அருமை, உண்மையான விளக்கம்

i agree with the first comment.

Anonymous
00:31

வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு...அருமை...

எனக்கு கோவிலில் தனிமையில் அமர்ந்தால் தான் கோவில் சென்ற பலனாயிருக்கும்...

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற மகான்கள் ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப் பாடியுள்ளனர். தாங்கள் சொல்வது போல் என்றால் அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் இறைவனை நினைத்துக்கொண்டு இருந்திருக்கலாமே. ஒவ்வொரு கோவில்களுக்கும் சில சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. சுந்தரர் கண் பார்வை பெற பல கோவில்களுக்குச் சென்ற பின்தான் பலனடைந்தார். கோவிலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே வணங்கலாம் என்றால் கோவில்கள் எதற்கு?. ஆன்மீகத்தில் உயரந்த நிலையை அடைந்தவர்கள் எல்லாம் பிரம்மம் என்று உணர்ந்தவர்கள் மட்டுமே கோவில்களுக்குச் செல்லாமல் இருக்கலாம. எனவே தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது.

//வீட்டில் பல பிரச்சினைகளால் மனம் அலைகழிக்கப்படும், சிந்தனை இறைவன்பால் இருக்காது என்பது சர்வ நிச்சயம்,//

வீட்டை விட இன்று கோவில்களே! சிந்தையைச் சிதைப்பதாக உள்ளன. அர்ச்சகரில் இருந்து அனைவரும் காட்டும் எடுப்புக்கள் தாங்காதையா?
பணம் படைத்தோரைக் கண்டால், சில பெண்களைக் கண்டால் அர்ச்சகர்கள் போடும் கூத்துகள்., தாங்காதையா?
பணம் படைத்தோரும்; அற்பன்களும் இன்று பவுசு காட்டும் இடம் ஆலயங்களே!, அவர்கள் போடும் பிச்சைககாசுக்காக அதற்கு மிகத் துணைபோவோர் , நம் அர்ச்சகர்களே!

நான் கோவில் சென்று பெற்ற அமைதியை விட, வீட்டில் நிறையவே பெறுகிறேன். கடந்த 7 வருடமாக.

18:32

@யோகன் பாரிஸ்(Johan-Paris)


நண்பரே! எனக்கு எல்லா மட்டத்திலும் / எல்லா மதத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களோடு பழகும் அதே வேகத்தில், ஒரு சில கருத்து வேறுபாடுகள் பற்றி வாதம் / விவாதம் செய்வதும் உண்டு. ஆனால், ஒருபோதும் தகாத வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை.

ஆனால், நீங்களோ, உங்கள் மத அர்ச்சகரை "பிச்சைககாசுக்காக...." என்று வர்ணித்து இருப்பது மிகவும் தடித்தனமான வார்த்தை.

அன்பான நண்பர் அப்துல் ரகுமானுக்கு!நீங்கள் கூறியது மிக மிக உண்மையே! அது தடித்தனமான வார்த்தையே, ஆனால் உண்மையில் இதை நான் கூறவில்லை. நான் குறிப்பிட்ட பணம் படைத்தோரும், அற்பன்களும் கூறுகிறார்கள். பூசை நேரம் கடந்தும் பக்தர்கள் காத்திருப்பார்கள், பணக்காரர்களுக்கும், அற்பன்களுக்காகவும் அர்ச்சகர் காத்திருப்பார். எப்படி இது சாத்தியமாகிறது. என்று வினாவியபோது' போடுறதைப் போட்டு, எறிவதை எறிந்தால்' - போடுவது, எறிவதெல்லாம்- பணக்காரர் அகராதியில் 'பிச்சை' -தான். எங்கள் மத அர்ச்சகர் என்பதற்காக , அவர் தேவநாதன் குருக்கள் போல் கருவறையில் சல்லாபம் புரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? சங்கராச்சாரி என் மதம் என்பதால் அவர் கொலைக்கு உடந்தையாக இருந்தால் பொறுக்க வேண்டுமா? அவர் வேலைக்குப் போகும் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று கூறினால் பொறுக்க வேண்டுமா?அந்தணன் என்போன் அறவோன்....அறுப்போன் அல்ல.பலர் அப்படி இல்லை.சிக்கலே அதுதான்.

யோகன் பாரிஸ் அவர்களே
கோவில்களில் நீங்கள் தெய்வத்தை வணங்கத்தான் உள்ளே சென்றிருக்கிறீர்களே தவிர அர்ச்சகரை அல்ல. அர்ச்சகரைப் பற்றி கவலைப்படாமல், சட்டை செய்யாமல் நேராக இறைவனைப் பார்த்து வணங்கி விட்டு வர வேண்டியது தானே. உங்களுக்காக தீபாராதனை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். தட்டில் காசு போடாதீர்கள்.

பொதுவாக அர்ச்சகர்கள், புசாரிகள் தாம் தெய்வ தொண்டு செய்வதாக உளமார நம்பி அன்றன்றைக்கு இறைவன் எவ்வளவு படி அளக்கிறாரோ அது போதும் என்று செயல்பட வேண்டும். சில கோவில் புசாரிகள் தட்டில் காசு போடுங்கள் என்று பகிரங்கமாக உரத்த குரலில் கேட்கிறார்கள். அவருக்கு தான் சேவை செய்யும் தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். அது போல் கேட்பவர்களுக்கு காசு போடாதீர்கள். ஆனால் சிலர் காசை எதிர்பார்க்காமல் சிரத்தையாக செய்வதையும் பார்க்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு காசு போடுங்கள். இது தான் நான் கடைப்பிடிக்கும் வழிமுறை.

Anonymous
09:49

சரியாக சொன்னிர்கள் PAATTIVAITHIYAM

\\\வீட்டை விட இன்று கோவில்களே! சிந்தையைச் சிதைப்பதாக உள்ளன. அர்ச்சகரில் இருந்து அனைவரும் காட்டும் எடுப்புக்கள் தாங்காதையா?
பணம் படைத்தோரைக் கண்டால், சில பெண்களைக் கண்டால் அர்ச்சகர்கள் போடும் கூத்துகள்., தாங்காதையா?
பணம் படைத்தோரும்; அற்பன்களும் இன்று பவுசு காட்டும் இடம் ஆலயங்களே!, அவர்கள் போடும் பிச்சைககாசுக்காக அதற்கு மிகத் துணைபோவோர் , நம் அர்ச்சகர்களே!\\\\

நண்பரே,

தாங்கள் இப்படி கூறுவது தவறு...நீங்கள் இப்படி கூறுவது எனக்கு ராமாயணத்தை நினைவூட்டுகிறது ..

அதாவது ராமனின் குருகுலத்தின் பயிற்சியின் போது ..அங்கே வில்வித்தை பயிற்சி நடந்து கொண்டிருந்து ..அங்கு ஓரு மரத்தில் கிளி பொம்மை வைத்து அதை அம்பால் தாக்கவேண்டும் என்று குரு கூறிகொண்டிருந்தார் அப்போது ஒரு மாணவனை அழைத்து நீ அந்த கிளி பொம்மையை தாக்க வேண்டும் நீ குறி வை உனக்கு அங்கே எதெல்லாம் தெரிகிறது என்று நீ என்னிடம் கூறு என்றார் ..அதற்க்கு அந்த மாணவன் குருவே எனக்கு அந்த மரம் தெரிகிறது ..அதன் கிளை தெரிகிறது ..அதில் இலை மற்றும் காய்கனிகள் தெரிகிறது என்றான்...அதற்க்கு அந்த குரு நீ செல் உன்னால் இது முடியாது என்று அனுப்பிவிட்டார் ...பிறகு ராமனை அழைத்து உனக்கு என்ன தெரிகிறது என்று கேட்டார் அதற்க்கு அவர் எனக்கு அந்த கிளியின் கண் தெரிகிறது என்றார்...இங்கே ராமனுக்கு தன் இலக்கு எதோ அது மட்டுமே தெரிந்தது ...எளிதாக அந்த கிளி பொம்மையை தாக்கினார் ராமன் ...

அதே போல் தான் நீங்களும் கோவிலுக்கு எதற்காக செல்கிறோம் என்பதே மறந்து உங்கள் கவனத்தை இறைவனின் மீது வைக்காமல் மற்றவை மீது வைக்கிறீர்கள் ..இப்ப கூறுங்கள் தவறு யார் மீது ?

\\\நான் குறிப்பிட்ட பணம் படைத்தோரும், அற்பன்களும் கூறுகிறார்கள். பூசை நேரம் கடந்தும் பக்தர்கள் காத்திருப்பார்கள், பணக்காரர்களுக்கும், அற்பன்களுக்காகவும் அர்ச்சகர் காத்திருப்பார். எப்படி இது சாத்தியமாகிறது. என்று வினாவியபோது' போடுறதைப் போட்டு, எறிவதை எறிந்தால்' - போடுவது, எறிவதெல்லாம்- பணக்காரர் அகராதியில் 'பிச்சை' -தான். எங்கள் மத அர்ச்சகர் என்பதற்காக , அவர் தேவநாதன் குருக்கள் போல் கருவறையில் சல்லாபம் புரிவதைப் பார்த்துக் கொண்டிருக்கமுடியுமா? சங்கராச்சாரி என் மதம் என்பதால் அவர் கொலைக்கு உடந்தையாக இருந்தால் பொறுக்க வேண்டுமா? அவர் வேலைக்குப் போகும் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று கூறினால் பொறுக்க வேண்டுமா?அந்தணன் என்போன் அறவோன்....அறுப்போன் அல்ல.பலர் அப்படி இல்லை.சிக்கலே அதுதான்.\\\\\

மற்றவர்களை எல்லாம் குறை கூறும் நீங்கள் முதலில் நாம் எப்படி என்று ஒருமுறை சிந்திக்க வேண்டும் ..

ஒரு சிறு கதை ...

ஒருமுறை ஒரு பக்தர் கோயிலுக்கு சென்றார் அங்கே கோவில் பூஜாரி இறைவனை எளிதாக தரிசிப்பதற்காக மற்றவர்களிடம் பணம் வாங்கிவிட்டு தனியாக அனுப்பி கொண்டிருந்தார் ..இதை கண்ட பக்தர் என்ன இது இப்படி காசு வாங்கிவிட்டு இறைவனை எளிதாக காண்பதற்கு அவர்களை தனியாக அனுப்புறாரே இது சரியா ...மக்களும் காசு கொடுத்துவிட்டு வரிசையில் நிற்காமல் எளிதாக சென்று தரிசனம் செய்கிறார்களே இது புண்ணியம் தருமா இவர்கள் உண்மையான பக்தர்களா என்று கூறிவிட்டு சென்று விட்டார் ....இதயெல்லாம் கண்ட இறைவன் இப்படி கூறும் இவன் உண்மையான பக்தனா என்று சோதிக்க ஆசைபட்டார் ...அதன் படி மறுநாள் அந்த பூஜாரியை போல் வேடம் இட்டு சென்ற இறைவன் ஒரு அறிக்கை செய்தார் இன்று முதல் தரிசனம் செய்பவர்களுக்கு ஒரு வைர மோதிரம் இலவசம் என்று கூறினார்...அதற்க்கு அன்று வாய்கிழிய பேசிய அந்த பக்தர் முதல் ஆளாக வந்து சாமி விரைவு தரிசனம் செய்ய எவ்ளவு பணம் கேட்ட வேண்டும் என்றார் !!!!!...

இதை போல் தான் இன்று ஒருவர்கொருவர் குறை கூறுவதும்.. இதற்க்கு தான் இந்து மதம் கூறுகிறது ஒருபோதும் பிறரை குறைத்து பேசாதே என்று .....

Anonymous
06:54

we are playing with compters, science and technology. but we didn't know about god. we never touch BHAGAWATH GEETHA. Then, how can we debate our God. Johan is about 98% correct. Most of the Priests in Temples are Beggers.

anbu (malaysia)
08:14

nalla karuthu!!!


Next Post Next Post Home
 
Back to Top