( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?

  • கவான் விஷ்ணு எடுத்தது பத்து அவதாரங்கள் மட்டுந்தானா?
ஸ்ரீனிவாசன் நாகர்கோவில்


   ன்மையை வாழ வைக்கவும் தீமையை வேரறுக்கவும் ஒவ்வொரு காலத்திலும் தான் அவதரிப்பதாக கீதாச்சரியன் கூறுகிறார்.

நமது புராணங்களும், சாஸ்திரங்களும் அவதாரங்களை சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று மூன்று வகையாக பிரிக்கிறது

சாட்சாத் அவதாரம் என்பது கடவுளே தனது பரிபூரண தன்மை கெடாமல் மனிதனாக அவதரிப்பது. 

ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தெய்வீக சக்தி ஆவேசம் கொண்டு வந்து போவது ஆவேச அவதாரமாகும்.  


இறைவனின் சில அம்சங்கள் மட்டும் பிறப்பெடுப்பது அம்ச அவதாரமாகும். 

ஆவேச அவதாரங்களாக வியாசர், தன்வந்தி, மோகினி போன்ற அவதாரங்களை சொல்லலாம். 

அம்ச அவதாரத்திற்கு பலராமனை காட்டலாம். 

பொதுவாக சர்வ வல்லமை படைத்த கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்ததாக சொல்வது மரபு. 

ஆனாலும் கூட அவதார பட்டியலில் மாறுபாட்டையும் வேறுபாட்டையும் காண முடிகிறது.  


விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத் குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர், பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன், பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான லிங்க புராணத்தில் திரிபுர சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது. 

பதினொரம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும் நூலில் பலராமருக்கு பதிலாக புத்தரை அவதார பட்டியலில் காட்டுகிறார். 

 அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார். 

ஆயினும் புத்தரை விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்படுத்த பலருக்கு கொள்கை ரீதியான ஈடுபாடு கிடையாது. 

புத்தர் வேதங்களை ஒதுக்கி கடவுளே இல்லையென கூறி பொய் மத பிரச்சாரத்தை செய்வதாக பலர் கருதியதினால் கால வெள்ளத்தில் புத்தரும் திருமாலின் அவதாரம் என்பது மறைக்கப்பட்டு போனது. 

கடவுள் இந்த வடிவில் தான் வருவார் என இதை தான் அவர் செய்வார் என யாரும் இலக்கண வாம்பு கற்பிக்க முடியாது. 

ஆகவே பத்து அவதாரங்கள் மட்டும் தான் சரியானது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.  


ராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்கள் பூமியில் சாதித்துள்ளதை போல ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அவதார புருஷர்களும் சாதித்துள்ளனர். 

எனவே கீதா வாசகத்தின் படி அவர் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவதரிப்பார். 

கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?+ comments + 9 comments

Anonymous
02:32

//கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?//
நாம் அவருடைய அன்பு குழந்தைகள்

ஆனால் தற்போது பாரத நாட்டில் நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் பார்த்தால் பகவான் லாங் லீவில் போய்விட்டார் என்றே தோன்றுகிறது

GOBI
07:59

இந்த கலியுகத்தில் மிருகங்களும் அவசர உலகத்திற்கு ஏற்றவாறு மாறிவருகின்றன

முன்பெல்லாம் பசு தன் கன்று தன் அருகில் இருந்தால் மட்டுமே மற்றவர்களை பால் கற்க அனுமதிக்கும்

ஆனால் இன்று கன்றை பிறந்த அன்றே விற்றுவிடுகிறார்கள்

ஆனாளும் பசு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பால் கொடுக்கிறது

இது பற்றி தாங்கள் ஒரு பதிவு கண்டிப்பாக போடவும்ஒரு சிறு கதை
--------------

அவன் கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான்...

கடவுள் அவன் முன் தோன்றினார்...

"பக்தா!! உன் தவம் கண்டு மெச்சினேன். உனக்கு வேண்டிய வரம் கேள்"
"கடவுளே!! எனக்கு சாகா வரம் வேண்டும்"


"பக்தா!! நான் பல யுகங்களாக கூறி வருவது போல சாகா வரம் மட்டும் கொடுக்க முடியாது. வேறு ஏதாவது கேள்"

"இறைவா!! இந்த பூமியில் தோன்றிய எந்த பொருளாலும்- உயிருள்ளதோ உயிர் அற்றதோ- நான் இறக்க கூடாது"

"அப்படியே ஆகட்டும்!! "
கடவுள் மறைந்தார்!!

அவன் சிரித்தான்..
"எப்படியோ கடவுளை ஏமாற்றி சாகா வரம் வாங்கி விட்டேன். இனி என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது"


தூரத்தில் ஒரு விண்கல் அவன் தலையைக் குறி வைத்து வேகமாக வந்து கொண்டு இருந்தது!!

புத்தர் இறைவனின் அவதாரம் என்பதற்கு ஸ்ரீமத் பாகவதமும் சான்று காட்டுகிறது !
tataḥ kalau sampravṛtte

sammohāya sura-dviṣām

buddho nāmnāñjana-sutaḥ

kīkaṭeṣu bhaviṣyati

SYNONYMS

tataḥ—thereafter; kalau—the age of Kali; sampravṛtte—having ensued; sammohāya—for the purpose of deluding; sura—the theists; dviṣām—those who are envious; buddhaḥ—Lord Buddha; nāmnā—of the name; añjana-sutaḥ—the son of Añjana; kīkaṭeṣu—in the province of Gayā (Bihar); bhaviṣyati—will take place.


Then, in the beginning of Kali-yuga, the Lord will appear as Lord Buddha, the son of Añjana, in the province of Gayā, just for the purpose of deluding those who are envious of the faithful theist. 1.3.24


எல்லரும் நினைப்பது போல ஸ்ரீமன் நாராயணன் வெறும் 10 அவதாரம் மட்டும் எடுக்கவில்லை. அவதாரம் என்பது கல்ப அவதாரம், மன்வன்தார அவதாரம்,யுக அவதாரம் என்று பல வகையில் பிரிக்க படுகிறது.

சனத்குமாரர்கள் , வராஹம் ,நாரதர்,நர நாராயணர்கள்,கபிலர்,தாத்ரேயர்,யக்னர்,ரிஷிபதேவர் ,பிருது மகராஜா ,மத்ஸ்ய ,கூர்மம் ,தன்வந்தாரி ,நரசிம்மம்,வாமணர் ,பரசுராமர் ,வியாசர்,ராமர், பலராமர் , கிருஷ்ணர் ,புத்தர் ,கல்கி இப்படி பல அவதாரங்களை பாகவதம் விவரிக்கிறது !

இது மட்டும் இல்லை. ஹயக்ரிவர்,ஹரி, ஹம்சர், ப்ரிஷ்னிகர்பர், விபு , சத்தியசேனா,வைகுண்டா,சர்வபவுமா ,விஸ்வக்சேன ,தர்மசேது,சுதமா,யோகேஸ்வரா, ப்ர்ஹட்பானு ,மற்றும் பல அவதாரங்கள், எம்பெருமான் எடுத்தார் என்பதை புராணங்கள் கூறுகின்றன.! ,

பாகவதம் கூறும் மிக பெரிய ரகசியம் என்னவென்றால், இந்த அவதாரங்களுக்கெல்லாம் மூலம், கோகுலத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணரே.!

அந்த பரம புருஷ பகவான் , கிருஷ்ணரே, புருஷ அவதராமாக , காரணகசாயி விஷ்ணுவாகவும் , கர்போடகசாயி விஷ்ணுவாகவும் , ஸ்ரோத்த கசாயி விஷ்ணுவாகவும் , குண அவதாரமாக , பிரம்மனாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும் , இருந்து இந்த இந்த அண்டசராசரங்களை படைத்து,காத்து அழிக்கிறார் .

அந்த மூல முழு முதல் இறைவனே, 5000 வருடம் முன் , பூரணமாக , ஸ்ரீ கிரிஷ்ணராக ,இந்த பூமியில் , அவதரித்து , தன் பிருந்தாவன லீலைகளை நடத்தினான .

நண்பர்களே, வியாச முனிவரால், இறுதியாக இயற்ற பட்ட ஸ்ரீமத் மஹா பாகவத புராணத்தை படித்தால், பல எண்ணற்ற ரகசியங்கள் தெரியவரும். பிரமசூத்திரதிட்கு விளக்கவுரை எழுத விரும்பிய வியாசர், தன் குருநாதர் , நாரதர் முனிவரின் அருவுரை பேரில் , இந்த மகாபாகவத புராணத்தை இயற்றினார்.!

இறைவனை, மும்மூர்த்திகள், தேவாதி தேவர்களின் படைப்பு , சப்டரிஷிகளின் படைப்பு ,மஹா முனிவர்களின் தோற்றம் ,கல்பம் , மன்வந்தாரம்,யுகம், மஹா பிரளயம் , மகோன புகழ்பெற்ற அரசர்கள்,பக்தர்கள், சத்தியயுகம் ,திரேதாயுகம் , துவாபரயுகம் , கலியுகம், இந்த யுகங்களின் தர்மங்கள், இப்படி பல ரகசியங்களை பாகவதம் விவரிக்கிறது.

முடிந்த அளவு இந்த பரிசுத்தமான மஹா புராணத்தை படித்து, எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணரின் அருளை பெறுவோம். வாருங்கள். நன்றி.

@GOBI

Good story. I like it verymuch.

பொதுவாக சைவம் வைணவம் இரண்டும் மதங்கள் என்று நம்பினால் அதற்கு உங்களின் அறியாமையே காரணம். அவை இரண்டும் இனபெருக்க அடிப்படையில் அமைந்த இருவேறு பள்ளிகள். அதை இன்னும் தெளிவாக சொன்னால் சைவம் ஆண் உயிரணு பூமியை விட்டு மேல் (புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக) நோக்கி நீந்தி அண்டத்தை அடைவதையும், வைணவத்தில் ஆண் உயிரணு புவி ஈர்ப்பு சக்தியை நோக்கி செல்வதையும் காணலாம். அதற்கு ஆதாரம் சிவன் கோயில்களில் ஆண் பெண் உறுப்புகளை வழிபடுகிறார்கள். வைணவத்தில் ஆண் உயிரணுவை நாமமாக இட்டு கொள்கிறார்கள். மேலும் பல கோயில்களின் கோபுரங்களில் கலவி நிலையில் உள்ள சிலைகள் ஆதாரம். தோப்புகரணம் போடுவது ஆண் உயிரணு உற்பத்தியை அதிக படுத்தும் என்று அறிவியலில் நிரூபித்து உள்ளார்கள்.

கௌதமபுத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டது கிடையாது. தான் புத்தநிலையை அடைந்த ஒரு மனிதன் மட்டும்தான் என்பதனையும் இந்தப் பூமியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்தநிலையை அடையமுடியும் என்பதையும் தெளிவாக கௌதமபுத்தர் வலியுறுத்தினார். ஆசைதான் துன்பங்களின் அடிப்படையாகும். சுயநலம்தான் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆசையை விட்டால் மனநிம்மதியும் சந்தோஷமும் அடைய முடியும். தீயனவற்றை செய்யாது நல்ல விடயங்களை மட்டும் செய்து வந்தால் ஆசைதானாக அகன்றுவிடும். இவ்வுலக வாழ்க்கை வறுமை, பிணி, நோய் போன்றன நிறைந்த எளிதில் விலக்கிக் கொள்ளமுடியாத துயரம் நிறைந்தது. சிற்றின்பங்கள் மீதான அதீத நாட்டமும் சுயநலமும்தான் துயரங்களுக்கு வழிசமைக்கின்றன. ஆசையை ஒழித்தாலொழிய துயரத்தை ஒழிக்க இயலாது என கௌதமபுத்தர் கூறினார்.
பௌத்தம் மதத்தில் கூறப்படும் நல்லவனவற்றைச் செய்தல், தீயனவற்றை விலக்குதல், தியானம் என்பனவற்றின் மூலம் அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட்டு "ஞானம் பெறுதல்" என்ற நிர்வாண நிலையை அடையமுடியும்.
பெளத்தமதத்தை பொறுத்தவரையில் கடவுள் என்று ஒருவர் கிடையாது.. கர்மவிதிகளுக்கு அமையவே இவ்வுலகம் இயங்குகின்றது என பௌத்தமதம் தெரிவிக்கின்றது. கௌதமபுத்தர் ஒரு கடவுள் இல்லை. கௌதமபுத்தர் ஒரு விடுதலைபெற்ற மனிதர். உண்மையான பெளத்தர்கள் கௌதமபுத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.
- நல்லையா தயாபரன்

10:40

aneyangal adhikarikum bodhu kandipaga varuvan KANNAN

10:41

TRUST GOD


Next Post Next Post Home
 
Back to Top