( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மலையாள ஐயப்பன் தமிழகத்து ஐயனாரா...?

   யனாரும் ஐயப்பனும் ஒன்று தான் ஒரே கடவுளை இரண்டு விதமான வணக்க முறைகளில் மக்கள் வழிப்படுகிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள் இந்த நம்பிக்கை சரியானது தானா இதற்கு வேத புராண இதிகாச ஆதாரங்கள் எதாகினும் உண்ட எனவும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்

ஐயனாருக்கு அறத்தை காப்போன், காரி, காயுறுதி கோழி கோடியோன், சாதவாகனன், செண்டாயுதன், செண்டலங்காரன், பஷீகலமணாளன், பூராணகேள்வன், புறந்தவன் மாசாத்தான், வெள்ளை யானை ஊர்தியான், ஹரி ஹர புத்திரன் சாத்தான், சாஸ்தா, ஐயனன், ஐயப்பன் என்று ஏராளமான பெயர்கள் உண்டு. 

தந்திர சமுக்கியம் என்ற நூலில் உள்ள தியான சுலோகத்தில் ஐயனாரை ஆரியக என்ற பெயரால் சூட்டப்பட்டுள்ளது.  ஜைன மத நூல்கள் சாத்தையன், மகா சாத்தையன் என்றும், பௌத்த மத நூல்கள் யோக சாத்தயன், தர்ம சாஸ்தா என்ற பெயரையும் கொண்டு அழைக்கிறது.  


சாஸ்தா என்ற சொல் வேதங்களில் எந்த இடத்திலும் காணப்படவில்லை.  ஆனால் இந்திரனை போற்றி புகழும் பாடல்களில் ஆரியக என்ற வார்த்தை வருகிறது.  இதை வைத்து வேத காலத்தில் ஐயனார் வழிபாடு இருந்தது என்று சொல்வாரும் உள்ளனர். 

சாஸ்தா என்ற வடசொல் கட்டளை பிறப்பிப்பவன் என்ற பொருளில் அமைவது.  இந்த பெயரால் புத்தர் கூட அழைக்கப்படுகிறார்.  அதற்காக ஐயனாரோடு புத்தரை சமப்படுத்த முடியாது என்பதை அறிய வேண்டும்  

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் மகனாக பிறந்தவன் ஹரி ஹர புத்திரன் என்றும் கச்சயப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம் சொல்கிறது.  இதே கருத்தை பிரம்மாண்ட புராணமும், குலால சாஸ்திரம் சூப்பிர பேதாகமம் ஆகிய நூல்களும் சொல்கிறது. 

ஆனால் அவற்றில் சில மாறுபாடுகளும் உள்ளன.  திருபாற் கடலை கடைந்த போது விஷ்ணு எடுத்த மோகினி அவதாரத்தில் மையல் கொண்ட சிவபெருமான் விஷ்ணுவோடு கூடியதினால் பிறந்ததாகவும், பஸ்மாசூரன் என்பவன் சிவனின் தலையில் கைவைத்து எரிக்க முயன்ற போது மோகினியாக வந்த விஷ்ணுவிடம் கூடிய போது பிறந்ததாகவும் தகவல்கள் உள்ளன.  


இதில் எது சரியானது என சொல்ல முடியாது.  இருப்பினும் ஐயனார் மானுடத்தை காக்கும் தெய்வமாக இந்து கிராம மக்களால் வணங்கப்படுகிறான்.  மந்திர சாஸ்திரத்தில் வசியம், ஆதர்ஷணம் என்பனவற்றில் செம்மை வண்ணத்தவராகவும், மோகனம் துவேசம், உச்சாடனம், மாரகம் போன்றவற்றில் கருவண்ணத்தவர் ஆகவும், சம்மரத்தில் பொன் வண்ணராகவும், ஞானராகவும், ஞானத்தில் வெண் வண்ணராகவும் போற்றப்படுகிறார். 

இவரின் பரிபால தெய்வங்களாக கருப்ப சாமி சப்பானி, பெரிய கருப்பு, மாமுண்டி, காளி, பத்ரகாளி, பேய்ச்சி, மாடத்தி, ராக்கச்சி, சன்னியாசி, முத்துமாலை அம்மன், பூமாலை ராஜா,  மாடன் முதலிய தெய்வங்கள் சொல்லப்படுகின்றன. 

கிராமபுற ரௌத்திர தெய்வமாக ஐயனார் இருந்தாலும் இவருக்கு மிருகபலி கொடுப்பதில்லை.  மற்ற தெய்வங்களுக்கு பலியிடும் போது ஐயனாரை திரையிட்டு மறைத்து விடுவார்கள். 

பூரணை, புஷ்பகலை ஆகிய இரண்டு தேவிகளோடும் குதிரை, அல்லது யானையில் தோற்றமளிப்பவராக சிற்ப ரத்தினம் என்ற நூல் இவரது உருவத்தை அடையாளம் காட்டுகிறது.  


இவருக்கு தனியான காயத்ரி மந்திரமும், அர்ச்சனை மந்திரங்களும், பூர்வ காரண ஆகமம்  என்ற நூலில் உள்ளது.  தமிழகத்தில் ஐயனாராக இருப்பவர் சேர நாடாகிய கேரளத்தில் ஐயப்பனாக இருக்கிறார். 

இருப்பினும் இருவருக்குமிடையில் சிற்சில வேறுபாடுகள் உள்ளன.  ஐயப்பன் பூரண பிரம்மசாரி ஐயனாரோ இரண்டு தேவிகளின் நாயகன். 

ஐயனார் வழிபாடு என்பது இந்தியாவில் முஸ்லிம்கள் அடியடுத்து வைப்பதற்கு முன்பே இருக்கிறது.  ஐயப்பனோ வாவர் என்ற முஸ்லிம் வீரனோடு போரிட்டதாக சொல்லப்படுகிறது. 

எனவே இருவருக்குமிடையில் கால வேறுபாடு நிறையவே உள்ளது.  ஐயனார் சரித்திரத்தையும், ஐயப்பன் வரலாற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வீரனான பந்தள இளவரசனோடு ஐயனார் வழிபாடு பிற்காலத்தில் இணைக்கப்பட்டதாகவே சொல்ல வேண்டும். 

இப்படி சொல்வதற்கு சில ஆதாரங்கள் உள்ளன.  பழம் தமிழகத்தை போல் வீர மரணமடைந்த வீரர்களின் நடுகல் வழிபாடு காலப்போக்கில் ஐயனாரோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. 

இதே போலவே கேரளத்திலும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.  எனவே ஐயப்பனும், ஐயனாரும் ஒருவர் இல்லையென்றாலும் காலப்போக்கில் ஒருவாராக ஆகப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.+ comments + 8 comments

Good info Guruji.

sreenathan
01:51

குருஜி அவர்களே நன்றிகள். இருவரும் வேறு வேறுதான். தமிழகத்தில் ஐய்யப்பன் புகழ் பரவுவதற்கு காரணமானவர் திரு நவாப் ராஜமாணிக்கம் என்றே கூறலாம்.

nalla seithi, nanti pala

anbu
12:10

ithuvarai yennidathi irunthe kelvikku pathi kidaithathu nandri!!!!aiyaaa!!! samiyeh saranam!!!

ஸ்ரீராம் ஆஸ்திரேலியா
06:53

ஐயா! கருப்பசாமி கருப்பண்ணசாமி என்னும் கிராமக் கடவுள்கள் குறிப்பது கருப்பு வண்ணக் கிருஷ்ணனைத்தான். கிராமங்களில் உள்ள "வாமுனி, செம்முனி, ஜடாமுனி" என்னும் மூன்று தெய்வங்கள் மூணுசாமி என்பது மருவி முனிசாமி அல்லது முனுசாமி என்றாகியிருக்க முடியும். இம்மூன்று சாமிகள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் தவிர வேறில்லை. அதேபோல் பழனியில் உள்ள பாலமுருகன் மாடுமேய்க்கும் கண்ணனே தவிர வேறு தெய்வமில்லை. தமிழ் நாட்டில் மாடு மேய்ப்பவர்கள் பெரும்பாலும் கையில் கொம்புடன், உடலில் கோவணத் (கௌபீனத்)துடன் காட்சி தருவார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை. என்தந்தை 1965 இல் எடுத்த பல புகைப்படங்களிலும் கூட இதைக் கண்டிருக்கிறேன். வட இந்தியரின் உடைகள் தெனிந்தியாவில் முன்னாளில் அதிகம் புழக்கமில்லை என்பதே உண்மை. கேரளத்தில் சென்ற நூற்றாண்டு வரை மேல் உடை (பெண்கள் உட்பட) அணிந்ததில்லை. ஆப்பிரிக்க இனத்தவர் போல் வெற்றுடம்புடன் மேல் அங்கங்களை காண்பித்து இருந்தனர் என்பதும் உண்மை. சபரி மலை என்பது இராமர் காலத்து சபரி வாழ்ந்த மலைதானே தவிர வேறில்லை. ஊர்காவல் எல்லை அம்மன்கள் பெரும்பாலும் விவசாயிகள் வணங்கிய "மாரி" என்னும் மழைத் தெய்வம் - "மழைத் தாய்" அல்லது வேறில்லை. அதனால்தான் மழை இல்லாது வெயில் அதிகம் உள்ள காலத்தில் வரும் "அம்மை" (அம்மா) என்னும் நோய் "மாரி ஆத்தா" என வழங்கப்பட்டுள்ளது. மொழி மற்றும் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடுகளால்தான் பற்பல கிராமதேவதைகள் தோன்றியிருக்கக் கூடும்! இவை குறித்து ஏதும் எழுதினால் நல்லது.

Anbu (nilai_malaysia)
11:10

manitharkaal avar avvar isthampool valipaddukaalai madri kolluvathaal varum kulappangal!!ithu!,nam thaan yethu sari yethu tavaru yendru thirmanickka vendum!!ondre kulam oruvaneh deivam!!!

D.M.Reddy
06:30

@Anbu (nilai_malaysia)

அய்யா,நீங்கள்
தவத்தைப்பற்றி யேதேனும் சொல்லுங்கள்.


Next Post Next Post Home
 
Back to Top