Store
  Store
  Store
  Store
  Store
  Store

நோய்களை விரட்டும் அதிசய புத்தகம்

   நாராணயப்பட்டத்திரி என்ற மிகச்சிறந்த ஞானியும் கவிஞருமானவரால் நாராணீயம் எழுதப்பட்டது. 

அக்கால மக்களின் குரு பக்தியும் தியாகமும் தெய்வ பக்தியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது. 

நாராயணப்பட்டத்திரி சமஸ்கிருதம், தர்க்கம், வியாகர்ணம், வேதம் முதலியவற்றை அச்சுத பிஷாரோடி என்ற பெரியவரிடம் கற்றார். 

நல்ல திடகாத்திரமாக இருந்த அந்த மகா பண்டிதருக்கு திடிரென முடக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் அவர் நிற்கவும் நடக்கவும் முடியாமல் துன்பப்பட்டார். 

குருநாதரின் இந்த துயரம் நாராயண பட்டத்திரியின் மனதை கசக்கி பிழிந்தது. குருவினுடைய முடக்குவாத நோய் எனக்கே வரட்டும்.  அவருக்காக வேதனை அனுபவிப்பதே நான் அவருக்கு கொடுக்கும் குரு தட்சனையாக இருக்கட்டும் என்று சங்கல்ப்பித்து நோயை தன் உடம்பில் வாங்கி கொண்டார். 

பட்டத்திரியின் தியாகம் வியாதிக்கு தெரியவா போகிறது.  தான் திண்ண ஆரம்பித்திருப்பது குழந்தையின் உடலா. கிழவனின் உடம்பா என பார்க்கவா செய்யும். 

நாராயணப்பட்டத்திரியும் கசக்கி பிழியப்பட்டார்.  கடைசியாக கொடுமை தாங்காது கேரள நாட்டு பெருக்கவிஞரும் பக்தருமான துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் என்பவரிடம் நிவாரணம் கேட்டார். 

எழுத்தச்சனோ மீனில் துவங்கி அதை தின்று விடு என பூடகமாக சொன்னார்.  எழுத்தச்சனின் பூடக மொழி நாராயண பட்டத்திரிக்கு தெளிவாக தெரிந்தது. 

மச்சவாதாரம் துவங்கி கல்கி அவதாரம் வரை ஒரு காவியம் படைக்க தான் பணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். 

நாராணீயம் என்ற அமரகாவியம் பிறந்தது.  நாராணீயத்தின் ஒவ்வொரு செய்யுளையும் குருவாயுரப்பன் முன்னிலையில் உருவாக்கிய பட்டத்திரி கவிதையின் முடிவில் இப்படி நடந்ததா குருவாயுரப்பா என கேட்பார்.  அதற்கு உலகை அளந்த எம்பெருமான் ஆமாம் என தலையசைத்தாராம். 

தனது பெருமையை தானே கேட்டு கடவுளே தலையசைத்தான் என்றால் நாராணீயத்திற்கு வேறு பெருமை எதற்கு. 

மண்ணை உண்ட கண்ணனின் திருவிளையாடலை ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கவிதைகளாக பாடினார்.  அதை நூறு தசாங்கங்களாக்கி பாகவதத்தின் சாரத்தையே பிழிந்து கொடுத்தார். 

நாராணீயத்தின் கடைசி பாடல் பூலோக மக்கள் எல்லாம் ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என குருவாயூர் அப்பனை பிராத்தனை செய்து முடிக்கிறது.

இந்த நூலில் பிரம்மன் தவம், வைகுண்ட தரிசனம், உலகத்தின் தோற்றம், படைப்பின் வகைகள், கபிலர் அவதாரம், தட்சன் யாகம், துருவன் சரித்திரம், பிரிதுவின் மோட்சம், பார்க்கடல் கடைதல், மோகினி மற்றும் வாமன் அவதாரம், பலியை அழித்தல், கம்பசன் சரித்திரம், பரசுராம கிருஷ்ண அவதாரம், சகடா சூரன்,சுதர்சன கம்ச முக்தி, ருக்மணி திருமணம், குருஷேத்திர யுத்தம், சுதாமர் மார்க்கண்டேயன் கதை என ஏராளமான சுவையான விஷயங்கள் பேசப்படுகின்றது.

இன்று கூட நாராணீயத்தை முழுவதுமாக ஓதுவதால் தீராத நோய் எல்லாம் தீருவதாக நம்பப்படுகிறது.


Contact Form

Name

Email *

Message *