( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அலங்காரத்துக்கு மட்டுமே காதுகள்


நான் சொல்வதை தமிழர்கள் கேட்கவில்லை: கருணாநிதி


  •    லைவர் அவர்கள் சொல்வதை தமிழர்கள் காது கொடுத்து கேட்டிருந்தால் அன்பே வடிவான அட்டாக் பாண்டியனும் பொறுமைக்கு பெருமை சேர்க்கும் பொட்டு சுரேசும் சிறையில் வாட வேண்டிய நிலை வந்திருக்குமா? அதிகாலை வேளையில் சூரியனை தரிசிக்க வேண்டிய நேரு காவலர்களின் கர்ண கடூற முகத்தை காண வேண்டிய சூழல் வந்திருக்குமா? வீரத்தின் விளை நிலமான வீரப்பாண்டி ஆறுமுகம் கூட சிறை கம்பிகளை எண்ண வேண்டிய துர்பாக்கிய நிலை நேரிட்டுயிருக்குமா? அஞ்சா நெஞ்சன் அழகிரி மதுரையில் கால் பதிக்கவே நடு நடுங்கி குழந்தை குட்டிகளை அயல்நாடுகளில் குடியேற்றி விட்டு டெல்லியிலே தவமிருக்கும் பரிதாபம் சம்பவித்திருக்குமா? எல்லாம் காது கேளாத தமிழர்களால் வந்த வினை.

ழலுக்கு துணை போனதில்லை : பிரதமர்


  •    ம்ம பிரதமர் ரொம்ப பரிசுத்தம் அவர் நேரடியாக ஊழலுக்கெல்லாம் துணை போகமாட்டார் ராசா,தயாநிதிமாறன்,கனிமொழிபோன்றோர்களின் செயல்களுக்கு ஊக்கம் கொடுப்பார் சுரேஷ் கல்மாடி விளையாட்டு துறையில் காட்டிய செயல் துடிப்புக்கு ஆக்கம் கொடுப்பார் ஷீலா தீட்சித் போன்றோர்கள் நாட்டுக்கு நல்லப்பணி செய்தால் துணை போவார் இன்னும் சொல்லப் போனால் சோனியா காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பட்டுக் கம்பளம் விரிப்பார் அவர் மேஜையிலிருக்கும் பேனாவை யாராவது திருட வந்தால் கூட அய்யய்யோ திருட்டை கண்ணால் பார்ப்பது பாவமென்று கண்களை மூடி கொள்வாரே தவிர வாய் திறந்து முனுமுனுக்கக் கூட மாட்டார் அப்படிப் பட்ட உத்தமர் நமது பிரதமர் இவராவது ஊழலுக்கு துணை போவதாவது 


லோக்பால் மட்டுமே ஊழலை ஒழிக்காது: ராகுல்


  •   ராகுல் பெரிய விஞ்ஞானி யாருமே கண்டுபிடிக்காத கண்டு பிடிக்க முடியாத எவ்வளவு பெரிய விஷயமானாலும் துருவி துருவி கண்டுபிடித்து விடுவார் லோக்பால் மசோதா கொண்டுவந்தால் போதுமா? ஊழல் ஒழிந்து விடுமா? அந்த சட்டத்தை நடைமுறை படுத்துவது நாங்கள் தானே? எங்களால் நாடு நன்மை அடைய விட்டு விடுவோமா? இந்த அன்னா ஹசாரேக்கு விவரம் போத வில்லை இவர் விவரம் தெரிந்தவாராக இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சி ஐந்து பொது தேர்தல்களில் பங்கு பெற கூடாது என்று தானே உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்! அவர் அப்படி செய்யாததை மறைமுகமாக சுட்டிக் காட்டி ராகுல் பேசுவது அவர் விஞ்ஞானி என்பதற்கு தக்க சான்று 

ந்திய எல்லையில் நவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா


  •   லோ! பிரதமர் சார்!! அபாயம்!  சீனாக்காரன் ஆயுதம் கொண்டுவரான் நாம உஷாரா இருக்கணும் ஹலோ...! நான் சொல்றது காதுல விழுதா... கொஞ்சம் கவனிச்சு கேளுங்க... அட! எங்க பார்க்றீங்க! உங்களத்தான் கூப்பிடுகிறேன் காதுல விழலியா? சீனாக்காரன், அட இன்னும் சத்தமா சொல்லட்டுமா சீனாக்காரன் ஆயுதம் கொண்டுவறான்... இப்போவும் காது கேட்கலையா மைக் வச்சி கத்தினாலாவது கேட்குமா? அட இருந்தும் கேட்காத இந்த காதுகளை அலங்காரத்துக்காக ஏன் சார் வச்சிருக்கிங்க! கழற்றி போடுங்க குறுமி சேருவதாவது குறையும்.

+ comments + 7 comments

சாமானியனின் மனசாட்சி கேட்க விரும்பும் கேள்விகளை அப்படியே படம்பிடித்து காட்டியது தங்கள் 4 தலைப்புகளின் செய்திகளும்.

Anonymous
08:17

இராஹூல் இப்படி பேசுகிறாரே என்று யாரும் இவரை பற்றி சிந்தித்து உங்களின் பொன்னான நேரத்தை வீனடிக்காதிர் இதற்கு காரணம் இவர்களின் பெற்றோர் போபர்ஸ் மற்றும் இரண்டு ஜி ஊழலில் சேர்த்த பணத்தை , "மக்கள் எங்கே பிடிங்கிவிடுவார்களோ", இவங்க ஐவரும் (இவர் , இவர்தம் தாயார் , அக்காள் , மற்றும் மம்மு சாமி மன்னிக்கணும் மன்மூஞ்சி ஐயோ மன்மோகன் ஜி மற்றும் ஜால்ராக்கள் இல்ல இல்ல அமைச்சரவை சகாக்கள் ) நாட்ட பாதுகாக்க முடியாம சேர்த்த பொருளும் பரி போக தெருவில் நிற்பது கண்முன் தெரிந்திருக்கலாம் அதனாலதான் இப்படி பேசுறார் இந்தியாவின் எதிர்காலம் எங்கள் பேரியக்கத்தின் பெரும்புள்ளி பிரதமாராக தகுதியுள்ள ஒரே தறுதலை இல்ல இல்ல தலைவர இந்திய மக்கள்தான் புரிஞ்சிக்கணும்

குறிப்பு: சிங்கப்பூரில் இந்த லோக்பால் போன்ற சட்டம் கொண்டு வந்த பின்னரே நாடும் வீடும் முன்னேறியது பொருளாதார வல்லரசாகவும் வளர்ந்தது பெரும்பாலான ஊழல் தலைமகன்கள் உள்ளே போனார்கள் என்பது காதுவழி செய்தி

Super and timely article.

Anonymous
20:35

//// ஹலோ! பிரதமர் சார்!! அபாயம்! சீனாக்காரன் ஆயுதம் கொண்டுவரான் நாம உஷாரா இருக்கணும் ஹலோ...! நான் சொல்றது காதுல விழுதா... கொஞ்சம் கவனிச்சு கேளுங்க... அட! எங்க பார்க்றீங்க! உங்களத்தான் கூப்பிடுகிறேன் காதுல விழலியா? சீனாக்காரன், அட இன்னும் சத்தமா சொல்லட்டுமா சீனாக்காரன் ஆயுதம் கொண்டுவறான்... இப்போவும் காது கேட்கலையா மைக் வச்சி கத்தினாலாவது கேட்குமா? அட இருந்தும் கேட்காத இந்த காதுகளை அலங்காரத்துக்காக ஏன் சார் வச்சிருக்கிங்க! கழற்றி போடுங்க குறுமி சேருவதாவது குறையும்.////

குருஜி நீங்க என்னதான் சத்தமாக கத்தினாலும் அவர் காதில் விழும் ஆனா விழாது..குருஜி அவர் காதில் விழுதோ இல்லையோ கண்டிப்பாக நம்ம நாட்டு ஜனங்க காதில விழனும் ஏன்னா நாமதான் நம்மோட நாட்டை ஆட்சி பண்றவங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம்..நாம்ம நாட்டை யார் காப்பாற்றுவார்கள் என்பதை நம்ம மக்கள் யோசிச்சி ஓட்டு போடணும்..சீனாகாரன் நாம நாட்டை சுற்றி வளைத்து விட்டான்..இந்தியாவை சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தும் தற்போது சீனாவின் காலடியில் விழுந்து விட்டது..நம்மோட வெளியுறவு கொள்கை மிகவும் பலவீனமாக உள்ளது..தம்மாதுண்டு இலங்கை காரனே தைரியமா நம்ம மீனவர்களை கடலில் தாக்குறான் அதை கூட நம்ம நாடு தட்டி கேட்பதில்லை..மாறாக மத்திய அரசு எல்லை தாண்டினா தாக்கத்தான் பண்ணுவாங்க அதனால அந்த பக்கம் மீன் பிடிகாதேன்னு நம்ம மீனவர்களுக்குதான் உபதேசம் பண்றாங்க.. எல்லை தாண்டினா கைது பண்ண வேண்டியதுதானே எதுக்கு தக்கனும்?.. ஆனா இலங்கை மீனவர்களை நம்ம கடற்படை தாக்குவதில்லை..நிலைமை இப்படி இருக்க சீனாவை பத்தி நம்ம ஆளுங்க எப்படி யோசிப்பாங்க?...பொது மக்கள்தான் நம்ம நாட்டை காபாற்றுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்...சீனாவும் பாகிஸ்தானும் இந்தியா மீது போர் தொடுத்ததால் போர் நடக்கும் போது ரகசியமாக பெரும்பாலான அரசியல் வியாதிகள் புள்ள குட்டிகளோடு மூட்டை முடிசிகளை கட்டி கொண்டு வெளிநாடுகளுக்கு போய் விடுவார்கள் பின் போர் முடிந்த பிறகு நம்ம நாட்டுக்கு திருப்பி வருவார்கள் மேலும் பாதிக்க படுவது நம்ம பொது மக்கள்தான்.. எனவே நம்ம பொது மக்கள் சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

மிக சிறந்த கேள்வி பதில், என் மன ஓட்டத்தை அப்படியே பிறதிபளிக்கும் கேள்வி பதில்கள், நம்ம பிரதமரோ இங்கு நடக்கும் எதற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது போலவே இருப்பது நிச்சயம் வேதனைக்குரியது..

tamilscafe.blogspot.com

இந்தியாவை சீனா ஆட்சி செய்தால் ஊழல் குறையும்னு நம்பலாம்

Anonymous
23:18

@B.R.SASIKUMARஎன்னுடைய நீண்ட நாளைய நம்பிக்கை ஆசை அதுதான்,


Next Post Next Post Home
 
Back to Top