( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நல்லவன் தோன்றாமல் இருப்பதில்லை!


  • றைக்காமல் சொல்லுங்கள் நம் நாட்டில் ஊழலை நிச்சயமாக ஒழிக்க முடியுமா?
முருகன் காஞ்சிபுரம்


   ழல் என்ற உடன் பல லட்சம் கோடிகளை கொள்ளை அடிக்கப்படுவதை மட்டும் தான் நாம் சிந்திக்கிறோம் ஆனால் அவைகள் மட்டும் ஊழல் அல்ல

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும் போதே ஒரு கொயர் பேப்பர் வாங்கிகொடுக்கப் படுகிறதே அப்படி பட்ட அல்ப விஷயத்திலிருந்தே ஊழல் உற்பத்தியாக ஆரம்பித்து விடுகிறது

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் பயிர் மூட்டைகளை பாதுக்காக்க வேண்டிய இரவு காவலருக்கே விவசாயிகள் லஞ்சம் கொடுக்கிறார்கள்

இந்த இடத்தில் வாங்குபவனும் கொடுப்பவனும் அதை சட்ட விரோதம் என்று நினைக்க வில்லை பரஸ்பரம் கடமையாகவே நினைக்கிறார்கள்

அந்த அளவு ஊழலும் லஞ்சமும் மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டது

இது அவ்வளவு சீக்கிரம் ஒழிந்து விடுமென்று நினைக்க முடியாது

எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் தொடர்ச்சியான அறிவுருத்தலாலும் கடுமையான தண்டனைகளாலும் ஓரளவு கட்டுப்படுத்தலாம்

ஆனாலும் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் மனிதர்களின் மனம் நேர்மை வழியில் வரும் வரை ஊழலை ஒழிப்பது குதிரை கொம்பே ஆகும்.
  •  ன்னலமற்ற தியாக தலைவர்களை நமது நாடு இனி பார்க்குமா?
முருகன் காஞ்சிபுரம்


  ந்த கேள்விக்கு நிறைய பேர் இந்த காலத்தில் தியாகம் செய்யும் தலைவர்கள் கிடைப்பது அறிது இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதில் தருகிறார்கள்

இதில் எனக்கு உடன்பாடு கிடையாது காரணம் அக்கால மக்கள் தான் நல்லவர்கள் இக்காலத்தவர் யாருமே நல்லவர்கள் இல்லை என்பது பரிதாபக்கரமான கற்பனையாகும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றான் மனைவியை மோகிப்பவன் மது அருந்தியவன் சூதாட்டத்தில் ஈடுப்பட்டவன் இருந்ததனால்தான் வள்ளுவர் தமது திருக்குறளில் இவைகளெல்லாம் கூடாது என்று அறிவுறுத்துகிறார்

எனவே கெட்டவன் என்பவன் இன்று புதியதாக தோன்றியவன் அல்ல நல்லவனும் எப்போதுமே தோன்றாமல் இருப்பதும் அல்ல

இன்றைய தேதியில் கூட அப்பழுக்கற்ற தியாக தலைவர்கள் நமது நாட்டில் நிறைய பேர் உள்ளனர் நமது துரதிஷ்டம் அவர்களை யாரும் அடையாளம் கண்டு ஊக்குவிப்பது இல்லை

மக்களாகிய நாம் என்று நல்ல மனிதரைதான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்போம் என்ற உறுதி கொள்கிறோமோ அன்று தான் தியாகத்தலைவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் அவர்களை நாமும் நாடும் பார்க்க முடியும்.

+ comments + 4 comments

Anonymous
14:10

Enna seivadhu? People like you and all can become Guruji and want to be called by that word without shame. and hence there is no surprise about political leaders also.

Anonymous
15:30

அருமையான பதிவு குருஜி..நல்லவர்களும் தியாகிகளும் சமுகத்தில் இருந்து கொண்டு எந்த விளம்பரமும் இன்றி அமைதியாக மக்கள் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் எளிதில் மற்றவர்களுக்கு தெரிவதில்லை..குருஜி இன்றைய பதிவிற்கு தகுந்த மாதிரி ஒரு நல்லவரை தியாகியை,மனிதநேயம் மிக்க ஒருவரை பற்றி நான் ஒரு இணையதளத்தில் படித்தேன் அதை அப்படியே கீழே தருகிறேன்...

ஆட்டோ டிரைவர்கள் என்றாலே அலறி ஓடும் சென்னைவாசிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், தனது வித்தியாசமான செயல்பாடுகளால் பாராட்டைப் பெற்றுள்ளார் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஸ்ரீபாலாஜி. "பிரசவத்திற்கு இலவசம்' "சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே' போன்ற வசனங்கள் ஆட்டோக்களின் பின்புறம் இருப்பது வாடிக்கை. ஆனால், பாலாஜின் ஆட்டோவில் முகப்பில், "தேங்யூ பார் ஆர்.டி.ஓ' என்றும், இடப்பக்கத்தில் "வெயில், மழை பாராமல் உழைக்கும் எம்.டி.சி., ஆம்னி, மொபசல் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு 2 கி.மீ., இலவசம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டோவின், வலப்பக்கத்தில் "இரவென்று, பகலென்று பாராமல் மக்கள் பணியாற்றும் அனைத்து பிரிவு காவல் துறையினருக்கு 2 கி.மீ., இலவசம்' என்றும், பின்புறத்தில் "பிரசவத்திற்கு 15 கி.மீ., இலவசம் - சாலைகளில் விபத்துக்குள்ளாவோருக்கு, அருகிலிருக்கும் மருத்துவமனை வரை இலவசம்' என்றும் எழுதப்பட்டுள்ளது.
இந்த வாசகங்களை எழுத்தில் மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் நடைமுறைப்படுத்தி வருகிறார் பாலாஜி.திருவண்ணாமலையில் பிறந்த பாலாஜி, தற்போது விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
கார்கில் போர் சமயத்தில்,"நாட்டிற்கு தங்களாலான உதவிகளைச் செய்யலாம்' என்ற அறிவிப்பு வர, "எனக்கு டிரைவிங் தெரியும்' என்று சொல்லி, "பரேலி கேண்ட்' பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினருக்கு தற்காலிக டிரைவராக பணியாற்றியிருக்கிறார். ""எங்கேயோ நடக்கிற சில கெட்ட சம்பவங்களை வச்சு, அந்த துறை சார்ந்த எல்லாருமே தப்பானவங்கனு நெனைக்க கூடாது. நான் எழுதியுள்ள துறையில இருக்கிற, நேர்மையாக பணியாற்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த சேவை சமர்ப்பணம்'' என்கிற பாலாஜி, ஆறு மாதங்களுக்கு முன்தான் தவணை முறையில் சொந்தமாக ஆட்டோ வாங்கியிருக்கிறார்.விதவைப்பெண், ஏழைக்குடும்பப்பெண் என விளிம்புநிலைப் பெண்ணை மணந்து கொள்ள உத்தேசித்திருந்த பாலாஜி, இப்போது மணந்திருப்பது இதய நோயாளி ஒருவரை. எத்தனையோ முறை பெண் பார்த்து விட்டுச் சென்ற பின்பும், இதயப் பிரச்னை காரணமாக மணமாகாமல் இருந்த சத்யாவை, தானே முன்வந்து மணம் முடித்திருக்கிறார்.
இத்தம்பதிக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தன், "ரேஷன் கார்டுக்கு' கிடைக்கும் இலவச அரிசியை, தயிர் சாதமாக சமைத்து, உணவில்லாமல் வாடும் நூறு பேருக்கு வழங்குகிறார். மேலும் பணக்காரர்களின் வீடுகளுக்கு சென்று, பழைய ஆடைகளை வாங்கி இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது ஆட்டோவில் ஒருமுறை பயணித்தவர்கள், மீண்டும் விரும்பித் தேடிச்சென்று பயணிக்கத்துவங்கியுள்ளது இவரது சேவைக்கு கிடைத்த மரியாதை........

//இந்த இடத்தில் வாங்குபவனும் கொடுப்பவனும் அதை சட்ட விரோதம் என்று நினைக்க வில்லை பரஸ்பரம் கடமையாகவே நினைக்கிறார்கள்//

உண்மைதான். மக்களாய் உணர்ந்து திருந்தினால்தான் உண்டு.

Anonymous
11:34

துட்டு வாங்கி கொண்டு ஓட்டு போடுவதும் ஊழல் தான்...


Next Post Next Post Home
 
Back to Top