- ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?
ராமன் ஈரோடு
- அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
- இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
- பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்.
- இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
- வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.
இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார். அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.
+ comments + 4 comments
நல்ல பதிவு சூப்பர்
வணக்கம் குருஜி. இன்றைய பதிவு மிகவும் அருமை. மிக்க நன்றி.
nice Post...
SRI RAMA JEYAM...
அஞ்சிலே ஒன்று பெட்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்றார் ஆனா ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு
அஞ்சிலே ஒன்றை விட்டான் அவன் நம்மை அழித்து காப்பான்