( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அனைத்து மதத்திலும் விநாயகர்...!

   மது இந்து மதத்தை தாக்கி அழிப்பதற்கு மாற்று மதத்தினர் தயாராக இருக்கிறார்கள் குதிரை எப்போது குப்புற விழும் சதையை எப்போது கொத்தி தின்னலாம் என கழுகு கூட்டம் காத்திருப்பது போல் நாத்திகர்கள் ஒரு பக்கம் நம்மை குறி வைத்து காத்திருக்கிறார்கள் இவர்களை மிக சுலபமாக வென்று விடலாம் ஏனென்றால் இவர்கள் நம் விரோதிகள் என்று நேர்முகமாகவே நமக்கு தெரியும் ஆனால் நம்மை வீழ்த்துவதற்கு நமக்குள்ளேயே ஒரு பகை கூட்டம் பெருகி கிடக்கிறது இவர்களை அடையாளம் காண்பது தான் மிகவும் கஷ்டம்

நமக்குள் இருக்கும் பகையாளிகள் யார்? அவர்களை அடையாளம் காண கஷ்டம் என்றால் அவர்களிடம் இருந்து நாம் எப்படி தப்ப முடியும் என்று நம்மில் பலர் கவலைப்படுகிறோம் ஆனால் சற்று கவனமாக இருந்தால் அந்த உள் பகையாளிகளை நிச்சயம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும் உங்கள் காதுகளையும் கண்களையும் சற்று கூர்மை படுத்துங்கள் சிவனை வணங்குகின்ற தலை எவனையும் வணங்காது என்ற குரல் கேட்கிறதா திருநாமம் தரித்த நெற்றிதான் நெற்றி மற்றதெல்லாம் நெற்றி போலிருக்கும் மயானம் என்று பேசுகின்ற நாவுகளை உங்களால் காண முடிகிறதா அப்படி நீங்கள் கண்டுகொண்டால் இவர்கள் தான் நமக்குள் இருக்கும் நம் எதிரிகள் என்பதை உணர்ந்து கொள்ளாம் 


சைவ வைஷ்ணவ தகராறு இன்று நேற்று அல்ல பன்நெடுங்காலமாகவே நடந்து வருகிறது ருத்ர நர்த்தனம் ஆடுகின்ற சிவ பெருமானும் காளிங்க நர்த்தனம் ஆடுகின்ற மாதவனும் ஒன்றே தான் என்று பல ஞானிகளும் குருமார்களும் எத்தனையோ உபதேசம் செய்தும் நம்மில் பலர் திருந்தவே இல்லை சைவ வைஷ்ணவ சண்டை மட்டும் அல்ல அந்ததந்த பிரிவுக்குள்ளேயே ஆயிரம் உட்பிரிவுகள் அதற்கு பத்தாயிரம் தகராறுகள் சைவத்துக்குள் காஷ்மீரம் கர்நாடகம் என்ற சண்டைகள் வைஷ்ணவத்திற்குள் வடகலை தென்கலை என்ற குடுமி பிடிகள் இத்தனை சண்டை சச்சரவுகளிலும் நம் இந்து மதம் அழியாமல் இன்று வரை தழைத்து நிற்கிறது என்றால் அது இறைவனின் தனிக்கருனையே காரணம் என்று துணிந்து சொல்லலாம்

இந்த மனிதர்கள் இப்படி தான் சமய சண்டைகள் போட்டு சனாதன தர்மத்தை கெடுத்து விடுவார்கள் என்று எண்ணிய நமது குருமார்கள் இந்து மதத்தில் உள்ள எல்லா வழிப்பாட்டு முறைகளும் ஒரே வழியில் வர வேண்டும் என்பதற்காகவே விநாயகர் வணக்கத்தை கொண்டு வந்தனர் விநாயகர் மதசண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இன்னும் சொல்ல போனால் எல்லா மதமும் அவருக்குள்ளேயே அடங்கி விடுகிறது எனலாம் 


சைவ சமயத்தில் தனிப்பெரும் தலைவரான சிவபெருமானுக்கும் சாக்த சமயத்தில் இறைவியான பாராசக்திக்கும் விநாயகர் மகன் கெளமாற இறைவனான முருகனுக்கு பிள்ளையார் அண்ணன் வைஷ்ணவத்தின் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன திருமாலுக்கு கணபதி மருமகன் செளரம் என்ற மத பிரிவின் கடவுளான சூரிய தேவனை தனக்குள் அடக்கி பிரபஞ்ச வடிவமாக விநாயகர் திகழ்வதால் தலைவனுமாகிறார் இப்படி ஆறு மத பிரிவுக்கும் விநாயகர் உறவு பாலமாக திகழ்வதால் அவர் சமயங்களையும் கடந்து நிற்கிறார்

கணபதி உறவு மார்க்கத்தில் மட்டும் மதங்களை இணைக்க வில்லை தனது உருவத்துக்குள்ளேயே அனைத்து மத கடவுளையும் அடக்கி எல்லாமே ஓம்கார வடிவான தானே என்று நமக்கு உணர்த்துகிறார் விநாயகரின் நாபி பிரம்மாவின் சொருபம் அவரது திருமுகம் திருமாலின் அம்சம் விநாயகற்குள்ள மூன்று கண்கள் சிவபெருமானும் எனக்குள் அடக்கம் என்பதை சொல்லாமல் சொல்கிறது அவர் உடம்பின் இடது பாகம் சக்தியின் அம்சம் வலது பாகம் சூரியனின் அம்சம் பெரிய காதுகள் ஞானத்தை வாரி தனக்குள் கொட்டுவதனால் முருகனின் அம்சமாகவும் இருக்கிறது ஆக கணபதி ஒருவரை கைதொழுதாலே கடவுள்கள் அனைவரையும் வணங்குவதற்கு சமமாகி விடுகிறது 


வைஷ்ணவ மத சடங்குகளில் கணபதி வழிப்பாட்டை முதல் வழிப்பாடாக செய்வது இல்லை என்று பலர் நினைக்கிறார்கள் இது தவறு பெருமாள் வீதி உலா வருவதற்கு முன்பு விஷ்வசேனர் என்ற மூர்த்தி முதல் முறையாக ஆலயத்திலிருந்து வீதி உலா வந்து தெருவையும் மக்களையும் ஒழுங்குப்படுத்திவிட்டு போவார் இவரது சந்நிதானத்திலேயே பெருமாள் சன்னதியின் திருச்சாவி இரவில் வைத்து காலையில் எடுக்கப்படும் அப்படி எடுக்கும் முன் முதலில் விஷ்வசேனருக்கு முதல் பூஜை செய்யப்படும் அந்த விஷ்வசேனர் வேறுயாரும் அல்ல விநாயகப் பெருமானே தான்

விநாயகர் வழிப்பாடு இந்து மதத்தில் உள்ள பிரிவுகளை மட்டும் இணைக்க வில்லை இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட பெளத்த,ஜைன மதங்களையும் இணைக்கிறது ஜைன மதத்தில் கணேச பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் புத்த மதத்தில் லாமா பிரிவினரும் மகாயான பிரிவினரும் கணபதியை வழிப்பட்ட பிறகு தான் மற்ற வழிப்பாடே செய்யப்படும் இது மட்டுமல்ல கணபதி கடவுள் என்பவர் ஆணாகவும் இருக்கிறார் பெண்ணாகவும் இருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்க கணேசாணி என்ற பெயரில் பெண் உருவத்திலும் காட்சி தருகிறார் யாணை முகத்தோடு கூடிய கணேசாணி அன்னையின் திருக்கோலத்தை சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் இன்று கூட நாம் தரிசனம் செய்யலாம்


நமது பிள்ளையார் வழிப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல இன்று வரை இந்தோனேசியா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு ஈரான்,ஈராக் போன்ற அரபு நாடுகளிலும் ரஷ்யாவிலும் கூட புகழ் பெற்று இருந்திருக்கிறது கால சூழலால் இன்று அங்கே விநாயகர் வழிப்பாடு இல்லை என்றாலும் புதைபொருள் ஆய்வில் பல பிள்ளையார் சிலைகள் கிடைகின்றன

விநாயகரை வேதம் அறிந்தவன் வேத முறைப்படி மட்டும் தான் வழிப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் வழிப்படலாம் ஏனென்றால் அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும் கவலை இன்றி அருந்திவிட்டு ஆற்றங்கரை ஓரத்தில் அரசமரத்து நிழலில் அமர்ந்திருக்கும் தொப்பை கணபதி மந்திரங்களுக்கு மட்டும் வசப்படுபவர் அல்ல உண்மை அன்பிற்கு வசப்பட்டு மனிதனின் வாழ்நாள் முழுவதும் துனைவருபவர் ஆவார் அவரை இந்த நல்நாளில் வணங்கினால் சகல தெய்வங்களின் அருளை பெறலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும்


நமது மதத்துக்குள்ளேயே பங்காளி சண்டை போட்டு பகையாளியாக நிற்கும் தத்துவ மூடர்கள் விநாயகரின் சர்வவியாப நிலையை உணர்ந்து தங்களுக்குள்ள பேதா பேதங்களை மறந்து கைவிட்டு எல்லோரும் சனாதன தர்மத்தின் மைந்தர்கள் என்ற உண்மை நிலையில் நிற்பதற்கு விநாயகர் வழிப்பாடு துணை செய்கிறது  எனவே உள் பகையை அழிக்க விநாயகரை வணங்குவோம்http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TPk9fEw6SuI/AAAAAAAAD0Q/71Ee4Hgh5IE/s1600/sri+ramananda+guruj+3.JPG
+ comments + 18 comments

அருமையான பதிவு, அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ..

""""புதுமையான படைப்பு """""நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .""அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்""

""""புதுமையான படைப்பு """""நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .""அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்""

மிக அருமையான பதிவு.

very nice ..............

Anonymous
13:31

fantastic

Anonymous
13:33

THIS SONG IS BEAUTYFUL

Anonymous
14:45

குருஜி வணக்கம்,
அருமையான பதிவு . வல்லபை கணபதி பற்றி பல மாறுபட்ட விளக்கங்களை வேறு சில வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது .
தயை கூர்ந்து வல்லபை கணபதி பற்றி விளக்கவும்.
வாசகி
ராதா

மிகவும் அருமையான பதிவு. "அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்"

Anonymous
22:21

Ravi,Dubai-UAE


மிகவும் அருமையான பதிவு. "அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்"

sreenathan
15:26

குருஜிக்கு மற்றொமொரு நன்றி. இந்து மக்கள் எல்ல தெய்வங்களையும் வழி படுவார்கள் , அதில் தவறு ஏதும் இல்லை. பிரச்சனையே எல்ல தெய்வங்களும் ஒன்று என கூறுவதுதான். தெய்வங்கள் பல இருந்தால் என்ன தவறு. நம்முடைய பலமே தெய்வங்கள் பலவும் , ஜாதிகள் பலவும் இருப்பது தான். இதில் குழப்பம் வேண்டாம். நாம் நல்லவனா, நம்மோடு இருப்பவர் நல்லவரா, இது போதும். நல்லவனாய் இரு, சும்மா இராதே

அருமையான பதிவுகள்,

புதைபொருள் ஆராய்ச்சியில் விநாயகர் சிலைகள் பல ஈரானிலும், ஈராக்கிலும் கிடைப்பதாக சொல்லியுள்ளீர்கள், அது பற்றி ஒரு தனி கட்டுரை முடிந்தால் எழுதுமாறு தங்களிடம் வினவுகிறேன், இயன்றால் நன்று...

tamilsnadu.blogspot.com

Anonymous
19:03

hi

as per mataji nirmala devi, the founder of SAHAJA YOGA, lord vinayaga only incargnated as LORD JESUS. Please note, she is originally christian and then married to sir cp srivatsava the first PRINCIPLE SECRETARY OF INDEPENDENT INDIA. Her father translated Holy quran into marathi. you can check the details in you tube or sahajayoga.org. One of the best Medidation, which is obsolutely free all over the world.

regards
venkat
abu dhabi

saran
08:32

''இந்த மனிதர்கள் இப்படி தான் சமய சண்டைகள் போட்டு சனாதன தர்மத்தை கெடுத்து விடுவார்கள் என்று எண்ணிய நமது குருமார்கள் இந்து மதத்தில் உள்ள எல்லா வழிப்பாட்டு முறைகளும் ஒரே வழியில் வர வேண்டும் என்பதற்காகவே விநாயகர் வணக்கத்தை கொண்டு வந்தனர் விநாயகர் மதசண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இன்னும் சொல்ல போனால் எல்லா மதமும் அவருக்குள்ளேயே அடங்கி விடுகிறது எனலாம்''

இப்படி மக்களை குழப்ப கூடாது, சனாதன தர்மம், என்று சொல்லிவிட்டு சைவ மற்றும் வைணவ சமயங்கள் சண்டயிட்டுகொள்கின்றது என்று கூறுவது சமய வழிமுறையைப்பற்றி அறியாத குழந்தையை போல் உள்ளது உண்மையில் சனாதன தர்மம்
என்றல் என்ன என்று அறிந்தவர் எவரும் இப்படி சண்டையிட்டுகொள்ளமட்டர்கள் மற்றும் நமது குருமார்கள் என்றால் யார் யர்ர்???

எல்லா மதமும் ஒன்றல்ல, ஒவ்ஒன்றும் ஒவ் ஒரு தலைவனை குறிக்கின்றது, சனாதன தர்மம் அணைத்து தலைவர்களும் ஒரு தலைவனின் கீழே செயல்படுகின்றனர் என்று அறிவுறுத்துகிறது
நாம் நமது எண்ணத்திற்கு ஏற்றார்போல் மாற்றி எல்லாம் ஒ

ஸ்ரீராம், ஆஸ்திரேலியா
10:52

ஹிந்து மதம் மிகப் பழமையானதால் அதில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. குருஜியின் கருத்து முழுமையாகச் சொல்லப் படாததால் சில செய்திகளின் சாரம் சரியாக வெளிப்படவில்லை. விநாயகருக்கும் சிவனுக்கும் போர் நடந்துள்ளது ஏன்? "அச்சது போடி செய்த அதி தீரா" - ஔவையார் கூறுவது எதை?
சிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்காதவர் கணபதி என்றும் பார்வதி தன் மேனியிலிருந்து வழித்தெடுத்த மஞ்சளிலிருந்து படைக்கப்பட்டவர் கணபதி என்றும் கதை இருக்கிறதே? பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை ருத்திரர் எடுத்ததால் அவர்மேல் பிரம்மா கோபம் கொண்டு சபிக்க அவரை கோவில் இல்லதுபோகும்படி ருத்திரர் சபித்ததால் அவரே விக்னேஸ்வரராக எல்லா ஆலயங்களிலும் இருப்பதாகச் சொல்கிறதே புராணங்கள். இப்படி நமது கடவுள்களே சண்டை போடும்போது நம் மதத்தினர் சண்டை போடுவதில் வியப்பில்லை அல்லவா? இப்படிப்பட்ட பல கருத்துகள் பலகாலகட்டத்தை சேர்ந்ததாக ஏன் இருக்கக் கூடாது? விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ லஷ்மி தேவி பாற்கடலைக் கடைந்தபோது வந்ததால் கடல் ராஜா அவர் தந்தை என்றும் அவரே பார்கவரின் மகளாக வந்ததனால் அவரும் தந்தையாவார் என்று கூறியுள்ளதுபோல் நாம் பல்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஒன்றுபடுத்தி மசாலாவாக கலவை செய்துவிட்டோம் என்பதே உண்மை. இது நமது சநாதன மதத்தின் "time line" என்பது சரியாகத் தெரியாததால் வந்த வினைதானே தவிர வேறில்லை.

நீங்கல் சொல்வது எனக்கு குழப்பம் தானே தருகிறது குருஜி . நான் படித்த பல புத்தகங்கள் கந்தனே முதல் கடவுள் , கந்தனுகுல் அணைத்து கடவுளும் அடங்குவர் என்ற கருத்தை தெரிவிப்பதாக இருந்தது . ( அது என் அறியாமையால் புரிந்து கொண்டதா ? )

R.SURYANAR MAHESHAN
13:18

hi
SRIRAM
All the stories intended to explain core truth in a simplified manner.
Please do not ignore the truth,ignore the story and caricature and catch the truth.

சிவனை வணங்குகின்ற தலை எவனையும் வணங்காது என்ற குரல் கேட்கிறதா திருநாமம் தரித்த நெற்றிதான் நெற்றி மற்றதெல்லாம் நெற்றி போலிருக்கும் மயானம் என்று பேசுகின்ற நாவுகளை உங்களால் காண முடிகிறதா அப்படி நீங்கள் கண்டுகொண்டால் இவர்கள் தான் நமக்குள் இருக்கும் நம் எதிரிகள் என்பதை உணர்ந்து கொள்ளாம். என்ன இது குதர்க்கமான பேச்சு.


Next Post Next Post Home
 
Back to Top