Store
  Store
  Store
  Store
  Store
  Store

துயரம் தராத துர்க்கை...!


இந்து மத வரலாற்று தொடர் 15

   டந்த சில மாதங்களாக நமது இந்து மத வரலாற்றை தொடர்ந்து வாசகர்களுக்கு தரமுடியவில்லை வடமாநில யாத்திரை சில வேலைப் பழு என்று பல்வேறு காரணங்களை சொல்லலாம் சென்ற அத்தியாயத்தில் தாய் தெய்வ வழிப்பாட்டின் தோற்றத்தை பற்றி சிந்தித்தோம் என்று நினைக்கிறேன் இனி சாக்த மதத்தின் அன்னை ஆதி பராசக்தியை மக்கள் எப்படி எல்லாம் வழிபடுகிறார்கள் அவள் எப்படி எல்லாம் காட்சி தருகிறாள் என்பதை சிறிது காண்போம்

அன்னை ஒன்பது வடிவமாக அன்பர்களால் பார்க்க படுகிறாள் அன்னையின் இந்த ஒன்பது வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன முதலாவது உருவம் மனோன்மணியாகும் இதன் தத்துவம் பக்குவப் பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி கழைந்து பரமாத்மாவோடு இணைப்பதாகும் இரண்டாவதாக சொல்லப்படும் சர்வ பூதாமணி என்ற உருவத் தோற்றம் உயிர்களோடு ஒன்றி கலந்து அதன் பாவங்களை விலக்குவதாகும் மூன்றாவது பூமியில் விஷ சத்துக்கள் பெருகாமல் சூரிய சக்தியால் நல்லவைகளை வளர செய்யும் பலபிரதமணி உருவமாகும் நான்காவது சந்திரனில் இருந்து கிடைக்கும் காந்த சக்தியை கொண்டு பயிர் பச்சைகளை உயிர் இனங்களை தழைத்தோங்க செய்யும் பலவிகரணி வடிவமாகும் ஐந்தாவதாக வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்க செய்யும் கலவிசரணி உருவமாகும் ஆறாவதாக காற்றில் பிரணவமாய் நிற்கும் காளி ஏழாவதாக நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர் வளர செய்யும் ரெளத்திரி எட்டாவதாக தண்ணீரில் குளிர்ச்சியையும் ஜீவ சக்தியையும் நிலை பெற செய்யும் சேஸ்றா ஒன்பதாவதாக ஐம்பூதங்களையும் ஆட்சி செய்யும் வாமை


கடவுள் கொள்கையின் அடிப்படை அனைத்திற்கும் மேலாக ஒரே சக்திதான் உள்ளது என்றாலும் அது செயல் படும் வகையால் பல சக்தி கூறுகளாக பிரித்து காட்டப்படுகிறது இதை சிவஞான சித்தியார் தமது சுபக்கம் என்ற நூலில் சக்திதான் பலவோ என்னில் தான் ஒன்றே அநேகமாக வைத்திடும் காரியத்தால் என்று சொல்கிறார்

சைவ சமயமும் சாக்த சமயமும் அன்னைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு ஸ்ரீ வைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது சைவத்தில் நவ சக்தியாக வழிப்படப் படும் தேவி வைஷ்ணவத்தில் ஆதிலஷ்மி தனலஷ்மி தானியலஷ்மி சந்தானலஷ்மி மகாலஷ்மி கஜலஷ்மி வீரலஷ்மி விஜயலஷ்மி என்ற அஷ்ட லஷ்மிகலாக போற்றி வணக்கப்படுகிறாள்

திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் திருமாலின் சிறப்புக் குறிய சக்தியாக திருமகள் விளங்குவது அனைவரும் அறிந்ததே தன்னை எப்போதும் விலகாது இருக்க வேண்டும் என்பதற்காகவே தனது அழகிய மார்பில் திருமகளை நாராயணன் குடிவைத்திருக்கிறார் நாராயணனின் உடம்பில் நாராயணனி எப்படி இடம் பெற்று இருக்கிறாளோ அதே போலவே சிவ பெருமானின் உடம்பிலும் பராசக்தி பாதியாக இடம் பெற்று இருக்கிறாள் இவை எதை காட்டுகிறது என்றால் சிவனுக்கும் நாராயணனுக்கும் தானே மூலம் என்பதை அன்னை சொல்லாமல் சொல்லி நம்மை விளங்க வைக்கிறாள் 


ஸ்ரீ வைஷ்ணவத்தில் கூறப்படும் புருஷகார தத்துவ நோக்கில் தெய்வ திருத்தாயாக அன்னை விளங்குவதால் அவள் தாயார் என அழைக்கப்பட்டு தனி சன்னதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறாள் இது தவிர எம்பெருமான் நாராயணன் எடுக்கும் ஒவ்வொரு அவதாரத்திலும் திருமகள் கூடவே வருகிறாள் திருமகள் இல்லாத திருமால் இல்லை என்றே சொல்லலாம்

சிவனுக்கு பார்வதியாகவும் நாராயணனுக்கு மகாலஷ்மியாகவும் துணை வருகின்ற அன்னை சக்தி படைப்பு கடவுளான பிரம்ம தேவனுக்கு சரஸ்வதியாக துணை வருகிறாள் எப்படி காக்கும் கடவுளின் உடம்பிலும் அழிக்கும் கடவுளின் உடம்பிலும் சக்தி குடிகொண்டு இருக்கிறாளோ அதே போலவே படைக்கும் கடவுளின் திருநாவிலும் அன்னை சக்தி குடிகொண்டு இருக்கிறாள் திருமால் சிவன் இருவருக்கும் ஞான சக்தியாக துணை புரிகின்ற தாயானவள் பிரம்மாவுக்கோ கிரியா சக்தியாக துணை செய்கிறாள்

இந்து சமயத்தில் உள்ள ஆறு பிரிவுகள் மட்டும் அல்லாது பெளத்த ஜைன மதங்களிலும் சரஸ்வதி தேவி சிறப்பிக்கப் படுகிறாள் கங்கை நதிக்கு நிகரான புண்ணிய நதியாகவும் அன்னை சரஸ்வதி பவனி வருகிறாள் நதிகளில் உயர்வானது சரஸ்வதி தேவியருள் மகிமை பொருந்தியவள் சரஸ்வதி என்று ரிக் வேதம் இவளை தான் குறிப்பிடுகிறது வேத கால யாகங்களில் சரஸ்வதி தேவி ஒரு முக்கிய தேவதையாகவும் கருதப்பட்டு வந்தாள் 


சரஸ்வதி தேவியின் வழிப்பாடு இந்தியாவில் மட்டும் அல்லாது தீபெத் ஜாவா ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது நமது தமிழகத்தை பொறுத்தவரையிலும் சரஸ்வதி வழிப்பாடு தனிப் பாரம்பரியம் மிக்கது என்றே சொல்லலாம் சைவ சமய ஞானியான குமரகுருபரருக்கு அன்னை சரஸ்வதி தேவியே கண்கண்ட தெய்வமாகும் அவர் எழுதிய சகலகலாவல்லி மாலையை பாராயணம் செய்தால் அசடன் கூட அறிஞன் ஆவான் என்ற நம்பிக்கை இன்றும் நடை முறையில் இருக்கிறது

முப்பெரும் தேவி வழிப்பாட்டை தவிர சப்தகன்னிமார் வழிபாடும் தாய்தெய்வ வழிப்பாட்டின் மற்றொரு அங்கமாகும் பிராம்மி மகேஸ்வரி கெளமாரி வைஷ்ணவி வராகி இந்திராணி சாமுண்டி ஆகிய ஏழு தேவிகளோடு யோகஸ்வரி என்ற தேவியையும் சேர்த்து கன்னிமார் எண்மர் அதாவது அஷ்டகன்னிகள் என்றும் சிலர் வழிப்படுகிறார்கள் அஷ்டகன்னிகள் வழிப்பாடு ராமேஸ்வரம் திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் இன்றும் பிரபலம்

நன்மையை கெடுக்கும் தீயவற்றை எதிர்க்கும் ஆற்றல்களே சப்தமாதர்களாகும் உதாரணமாக காமத்தை கொல்லும் யோகேஸ்வரி ஆணவமதத்தை எதிர்க்கும் பிராம்மி குரோதத்தை மறைக்கும் மகேஸ்வரி மோகத்தை வெல்லும் கெளமாரி உலோபத்தை தடுக்கும் வைஷ்ணவி மார்ச்சரியத்தை அழிக்கும் இந்திராணி பைசாசம் என்ற தீய சக்திகளை வேரறுக்கும் சாமூண்டி என்று வைகைப்படுத்தப் பட்டுள்ளது இந்த தீயவைகள் அனைத்தும் மனித குலத்திற்கு எதிரானவைகள் என்பது சொல்லிதெரிய வேண்டியது இல்லை 


அன்னை வழிப்பாட்டில் வராகி வழிப்பாடு என்பது மிகவும் முக்கியமானதாகும் பொதுவாக இந்திய மன்னர்களின் வரலாற்றை ஆழ்ந்து ஆராயும் போது அவர்கள் அனைவருமே எதாவது ஒரு வகையில் வராகி தெய்வத்தின் பக்தர்களாக இருப்பதை அறியலாம் சிற்பகலைகளின் உறைவிடமாக திகழும் மாமல்லபுரத்தில் தனியாக வராக மண்டபம் எழுப்பப்பட்டிருப்பதை காணும் போது மாமன்னன் மகேந்திர பல்லவன் தீவிரமான வராகி பக்தன் என்பதை உணர முடிகிறது அது மட்டும் அல்ல நரசிம்ம பல்லவன் கூட வராகி தேவியை வழிப்பட்டவன் தான் தமிழர்களின் ஆட்சியை உலக நாடுகள் சிலவற்றில் திறம்பட நடத்திய சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் குலோத்துங்க சோழன் போன்றோர்களும் வராகியை இஷ்ட தெய்வமாக வழிபாட்டு இருக்கிறார்கள்

தமிழக மன்னர்கள் போலவே சாளுக்கிய மன்னர்களும் வராகி தேவி மீது அளவற்ற பற்றுக் கொண்டவர்களே அவர்கள் தங்களது நாட்டு கொடியின் தேசிய சின்னமாக வராகியின் திருவுருவத்தையை அமைத்து இருந்தார்கள் நூற்றி எட்டு திருப்பதிகளில் ஒன்றான அகோபில மடத்தில் சாளுக்கிய மன்னர்கள் வாராகிக்கான மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள் இந்திய மன்னர்களில் மிகவும் புகழ் பெற்ற விக்கிரமாதித்தன் இந்த மண்டபத்தை மேலும் அழகு படுத்தி அடிக்கடி இங்கு வந்து தியானம் செய்வானாம் இந்த மண்டபத்திற்கு வேறொரு புகழும் உண்டு சிவ பெருமானை தவிர வேறந்த பெருமானையும் தலைதாழ்த்தி வணங்க மாட்டேன் என்ற உறுதி கொண்ட கிருஷ்ண தேவராய மன்னர் கூட இந்த மண்டபத்தில் உள்ள வராகி தேவியை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது 


நமது தஞ்சை மண்ணில் உருவாகி உலகத்தவர் அனைவரையும் பிரம்மிக்க செய்தவண்ணம் உள்ள பெரிய கோவிலில் வராகிக்கான தனி சன்னதி இருக்கிறது ராஜராஜ சோழனின் ஆன்மிக குருவான கருவூர் சித்தரின் ஆலோசனைப்படி இந்த சன்னதி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது அதனாலேயே பிற்கால சோழ மன்னர்களில் பலர் வராகி தேவியை குல தெய்வமாகவே வழிபட்டதாகவும் சில மன்னர்கள் அந்த வழக்கத்தை கை விட்டதனால் சோழ சாம்ராஜ்யம் அழிந்து போனதாகவும் சொல்கிறார்கள்

வராகி சிவனின் அம்சமாகவும் கருதப்படுகிறாள் திருமாலின் அம்சமாகவும் போற்றப்படுகிறாள் சைவ சமய சார்புடைய வராகி தேவியின் திருவுருவத்தில் கலப்பை உலக்கை ஆகியவைகள் காணப்படுகின்றன வைஷ்ண சார்பில் அபய வரத கரங்களே இருக்கின்றன இவை தவிர வழிபாட்டு முறையிலும் மாறுதல்கள் உண்டு முழுமுதல் கடவுளான திருமால் வராக அவதாரம் எடுக்கும் போது திருமகள் வராகியாக வந்தாள் என்று ஸ்ரீவைஷ்ணவ மரபு சொல்கிறது வராகி தேவியை பஞ்சமி நாளில் வழிப்படுகிறார்கள் இந்த நாளில் தேவியை வழிபட்டால் கேட்ட வரத்தை தாமதமின்றி உடனே பக்தர்களுக்கு வழங்குவதாக ஐதிகம் இருக்கிறது

ஆதிகால தமிழ்நாட்டில் வராகி வழிப்பாடு இருந்ததை போலவே கொற்றவை வழிப்பாடும் இருந்ததாக தெரிகிறது சங்ககால தமிழ் இலக்கியங்கள் கொற்றவையை வீரத்திற்கும் வெற்றிக்கும் உரிய தேவதையாக வர்ணனை செய்கின்றன இந்த கொற்றவை வழிப்பாடே நாளடைவில் துர்க்கை வழிப்பாடாக பரிணாமம் எடுத்தது துர்க்கை துர்க்கம் என்ற வார்த்தைகள் அகழி என்ற பொருளை தரும் ஒரு கோட்டையை சுற்றி இருக்கும் அகழி எப்படி பகைவர்களை உள்ளே விடாமல் தடுக்கிறதோ அது போலவே அன்னை துர்க்கையானவள் வாழ்க்கை என்ற கோட்டைக்குள் துயரம் என்ற பகைவராமல் பாதுகாக்கிறாள்


நாடாளும் மன்னர்களும் நாட்டை பாதுகாக்கும் வீரர்களும் வழிப்படும் மூர்த்தியாக திகழும் துர்க்கா தேவி ஐப்பசி மாதத்தில் வரும் நவராத்திரி பண்டிகையில் பார்வதி லஷ்மி சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளின் ஒரே வடிவமாக காட்சி தருகிறாள் அதனால் தான் நவாத்திரி பூஜை துர்க்கா பூஜை என்ற சிறப்பு பெயரை பெறுகிறது துர்க்கா தேவி சூரியகலை சந்திரகலை அக்னிகலை போன்ற யோக நாடிகளாகவும் உருவகப்படுத்தப் படுகிறாள்

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை ஆதிபாரா சக்தியின் வழிபாட்டில் மஹிசாசூர மர்த்தினி வழிப்பாடு மிகவும் சக்திவாய்ந்த வழிபாடாகும் தமிழ் நாட்டு மக்கள் மட்டும் அல்லாது இந்திய மக்கள் அனைவராலும் ஏற்று போற்றி வழிப்படும் வழிப்பாடாகும் இது மஹிசாசூர மர்த்தினி வழிபாட்டை மிக தொன்னமை காலம் முதலே செய்து வருகிறார்கள் சிலப்பதிகாரத்தில் வரும் வேட்டுவவரி என்ற பாடல் வரிசையில் மஹிசாசூர மர்த்தினியின் புகழ் பாடப்படுகிறது

ஆணைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
காணத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுகின்றியே நிற்பாய்!


என்ற சிலப்பதிகார வரி ஏறுமை மாட்டு தலையுடைய அசுரனை அன்னை போரிட்டு அழித்த விதத்தை கவிநயத்தோடு விவரிக்கிறார் இந்த வர்ணனையை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் மஹிசாசூர மர்த்தினியின் திருவுருவ சிலைகள் வடிவமைக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும் 

 இது தவிர நமது தமிழ்நாட்டிலும் மற்றும் பல இந்திய மாநிலங்களிலும் அன்னை பாலாம்பாள் லலிதாம்பாள் ராஜராஜேஸ்வரி நவாட்சரிபாலா அன்னபூரணி அசுவரூடாம்பாள் ராஜமாதங்கி லகுசியமளா வாக்வாதினி நகுளி புவனேஸ்வரி சண்டி வனதுர்க்கை வைஷ்ணவி மாரியம்மன் கங்கையம்மன் பத்திரகாளியம்மன் போன்ற இன்னும் பல பெயர்களால் அன்னை வணக்கப் படுகிறாள் இந்த வழிப்பாடுகளில் சில முறைகள் சாக்த மதத்ற்கு சம்பந்தம் இல்லாமல் நாட்டுபுர மக்களின் பண்பாட்டோடு சம்மந்தப்பட்டதாக இருக்கலாம் ஆனாலும் கூட அவைகளில் தெய்வீகமான அன்பு பளிச்சிடுவதால் அதையும் கூட சாக்த மதம் தன்னோடு அரவணைத்து கொள்கிறது

அன்னை வழிபாட்டில் உயிர்பலி என்பது மிகவும் பழைய காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது இதுவும் சாக்த வழிபாட்டிற்கு சம்மந்தம் இல்லாத வாமசார முறையாகும் ஆனால் காலபோக்கில் பலியிடுதல் என்பதும் அன்னை வழிபாட்டில் ஒரு அங்கமாகிவிட்டது வாமசாரமும் சாக்த நெறியும் பல இடங்களில் பின்னி பிணைந்து இருப்பதனால் தனித்தனியாக பிரித்து அடையாளம் காண பலராலும் முடிவதில்லை இருந்தாலும் தூய சாக்த நெறியின் தனிவழிபாடு என்றால் அது ஸ்ரீ சக்ர வழிபாடே ஆகும் அதை பற்றிய தத்துவ விவரங்களை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்




Contact Form

Name

Email *

Message *