Store
  Store
  Store
  Store
  Store
  Store

நமது எம்.பி.க்கள் நன்றாக உறங்கட்டும் !

மது பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கூட்டத்தொடர் நடக்கும் போது நன்றாக உறங்குகிறார்களாமே! இது எதை காட்டுகிறது?

   உண்மையாகவே நாட்டுக்கு சேவை செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும் நிறைய உறுப்பினர்கள் பேசி பேசியே பல காரியங்களை கெடுக்கிறார்கள் அதை விட இவர்கள் எவ்வளவோ மேல் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்

தேவகவுடா பிரதமராக இருந்த போது ஒரு பொது கூட்ட மேடையில் அமர்ந்தப் படியே உறங்கினார் அதை பெரியதாக படம் பிடித்து முதல் பக்கத்தில் போட்ட ஒரு ஆங்கில பத்திரிகை நமது பிரதமர் தேச வளர்ச்சி பற்றி தீவிரமாக சிந்திக்கிறார் என்று கமெண்டும் அடித்தது

நமது மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு தங்கள் பதவியின் தரம் பற்றியே தெரியாது

எம்.பி, எம்.எல்.ஏ பதவிகள் என்பது பணம் சம்பாதிக்கவும் கட்ட பஞ்சாயத்து செய்யவும் மட்டும் தான் உதவும் என்பது இவர்களின் அறிவு பூர்வமான எண்ணம்

தேசிய கீதத்தையே முழுமையாக பாடத்தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது நமது குற்றம் இங்கே திருந்த வேண்டியது மக்களே தவிர மக்கள் பிரதிநிகள் அல்ல.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை செய்ய போவதை ஜெயபிரகாஷ் நாராயணனின் எமர்ஜென்சிக் எதிரான பிரச்சார பயணத்தோடு ஒப்பிடுகிரார்களே இது சரியா?

   ஜெயப்ரகாஷ் நாராயணன் மக்கள் மத்தியில் களம் இறங்கிய போது மத்தியில் அரசாட்சி செய்தது இந்திராகாந்தி

இந்திராகாந்தி அம்மையார் எவ்வளவு உறுதி பெற்றவர் கல்லை போல் கடினமானவர் என்பது நமக்கு தெரியும்

அவருக்கு எதிராக பிரச்சார பயணத்தை நடத்துவது மிகப் பெரிய போராட்டதிற்கு நிகரானது

ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் மன்மோகன் சிங்கோ பரிதாபமானவர்

சோனியாஜி கண்களை உருட்டி முறைத்தாலே நடு நடுங்கி போய்விடுவார்

உர்ரென்று அவர் உருமினாலே எத்தனை தோப்புக் கரணம் போட வேண்டும் அம்மா நீங்கள் எண்ணுகிறீர்களா அல்லது நானே எண்ணிக் கொள்ளட்டுமா என்று கேட்கும் அப்பாவி ஜீவன்

எனவே இவருக்கு எதிரான ரத யாத்திரை தேவையற்றது

காரணம் அத்வானியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் அல்ல! மன்மோகன் சிங்கும் இந்திரா காந்தி அல்ல!

பாபா ராம்தேவ்,அன்னா ஹசாரே போன்றோர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் லாபம் அடையப் போவது யார்?

   ஹசாரே உசுப்பி விட்டிருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டக் குதிரை பல பேர் மறுத்தாலும் கூட இளைஞர்கள் மத்தியில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

இந்த சிறு நெருப்பை ஊதி பெரிதாக்கி நாட்டை பீடித்துள்ள லஞ்ச லாவண்ய துருவை உருக்கி எடுத்து விட சரியான தலைவர்கள் இந்தியாவில் யாரும் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்த நிலவரம்

ஆனால் இந்தியாவின் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி இதை அறுவடை செய்யலாம் என்று கணக்கு போடுகிறது

அதன் தலைவர்களின் சொல்லும் செயலும் இதை வெளிப்படையாகவே காட்டுகிறது

ஆனால் பாஜக ஒன்றும் பரிசுத்தமான கட்சி அல்ல ஊழலை பொருத்தவரை இதை காவி கட்டிய காங்கிரஸ் என்றே சொல்லலாம்

ஒரு வேளை பாஜக தனது உள் வீட்டு சண்டையை ஒதுக்கி வைத்து விட்டு தெருவில் இறங்கி செயலாற்ற வந்தால் அது ஹசாரே ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வை தனக்கு சாதகமாக ஆக்கி கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் மக்கள் என்னவோ பழையப்படியும் இப்போது போல கஷ்டத்தை தான் அனுபவிக்க போகிறார்கள்.


Contact Form

Name

Email *

Message *