Store
  Store
  Store
  Store
  Store
  Store

பரமக்குடி! ஒரு எச்சரிக்கை மணி!

   ரமக்குடியில் கலவரம் போலீஸ் துப்பாக்கி சூடு ஏழு பேர் பலி இந்த செய்தியை பார்க்கும் போது தேசத்தை நேசிக்கும் எவருக்கும் சந்தோசம் வராது அடிவயிற்றில் இருந்து கோபமும் ஆத்திரமும் கிளம்பி இன்னும் எத்தனை காலம் தான் ஜாதியின் பெயரால் சண்டை போடுவிர்கள் என சபிக்க தோன்றும் தமிழக அரசுக்கு நெருக்கடியையும் சட்ட ஒழுங்குக்கு சவாலையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தின் மூலத்தை பார்க்கும் போது நெஞ்சி பகீரென பற்றிக் கொள்கிறது

பச்சேரி கிராமத்தில் உள்ள பழனிக்குமார் என்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பையன் சுவற்றில் ஒரு ஜாதியாரை குறிப்பிட்டு அவர்கள் ஒழிக என்றும் இன்னொரு ஜாதியாரை வாழ்க என்றும் எழுதினானாம் இதனால் ஆத்திரம் கொண்ட கும்பல் அவனை இரவோடு இரவாக கொலை செய்து விட்டார்களாம் இந்த செய்தி பரமக்குடி வரை எட்டி துப்பாக்கி சூட்டில் முடிந்திருக்கிறது இதை மேலோட்டமாக பார்க்கும் போது ஜாதி காழ்புணர்ச்சி என்று சொல்லி விடலாம் ஆனால் நிஜம் என்ற பூதம் இதற்குள் மறைந்திருந்து பயமுறுத்துகிறது




வயதானவர்கள் மட்டும்தான் ஜாதி பாகுப்பாடுகளை பார்க்கிறார்கள் இளைஞர்கள் மத்தியில் ஜாதி பற்றிய உணர்வுகள் குறைந்திருக்கிறது குறிப்பாக விடலை பருவத்தினர் ஜாதி என்ற கட்டுத்திட்டத்தை முற்றிலுமாக எதிர்கிறார்கள் என்று இது வரை பலராலும் சொல்லப்பட்டது அது நம்பவும் பட்டது ஆனால் நடந்திருக்கும் இந்த சம்பவம் ஜாதி வெறியானது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பு மனிதர்கள் இடத்திலும் பசுமரத்தாணியாக இன்றும் வேறோடிக் கிடக்கிறது என்பதை முகத்தில் அறைந்தால் போல் நமக்கு காட்டுகிறது

இளமை பருவம் என்பது குறிப்பாக மாணவப் பருவம் என்பது செயல்பட துடிக்கும் பருவம் சாகசங்கள் சாதனைகள் செய்ய ஆர்வம் காட்டும் பருவம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அதே மாணவர்களின் சுறுசுறுப்பும் ஆவேசமும் அழிவு சக்திக்கு பயன்பட்டால் அந்த நாடு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது அர்த்தமாகும் நமது தமிழ்நாட்டை பொருத்தவரை இளைஞர்கள் பல காலமாகவே தவறான பாதையில் வழிநடத்த படுபவர்களாக இருக்கிறார்கள் மாணவர்கள் மத்தியில் அரசியல் ஞானத்தை புகட்ட வேண்டிய நமது தலைவர்கள் எப்போது அரசியல் பேதங்களை புகட்ட ஆரம்பித்தார்களோ அப்போதே இளைய சமூகம் கெட துவங்கிவிட்டது




நேரு சுபாஷ் சந்திர போஸ் மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் இளைஞர் சக்திகளை நாட்டு விடுதலை என்ற வேள்வி பாதையை நோக்கி கொண்டு சென்றார்கள் அவர்களுக்கு பின் வந்த சில தலைவர்களும் கூட அதே போன்ற தேச நலனுக்காக இளைஞர்களை பயன்படுத்தினார்கள் எந்த வழியை பின்பற்றினாலும் பரவாயில்லை அதிகார பதவியில் உட்காருவது மட்டும் தங்களது நோக்கம் என்ற எண்ணம் கொண்ட தலைவர்கள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு மாணவர்களின் கூர்மையான உணர்ச்சிகள் தவறான பாதையில் வழிநடத்தப்பட்டு கெட்டு போக துவங்கி விட்டது

நமது சுகந்திர இந்தியாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை துரிதமாக வளர்ந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது எந்த அளவு இவைகளின் எண்ணிக்கை கூடி உள்ளதோ அந்த அளவு மாணவர்களின் ஆர்ப்பாட்டம் என்பதும் அதிகரித்து உள்ளது உப்புக்கு பெறாத காரியங்களுக்காக சாலை மறியல் செய்வது பொது சொத்துக்களை சேதப்படுத்துவது பொது ஜனங்களுக்கு தொல்லை கொடுப்பது நாளுக்கு நாள் பெருகுவதை யாரும் தடுக்க முனையவில்லை


நமது அரசியல் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தங்களுக்கு எப்போதுமே கொடி பிடிக்கவும் கோசம் போடவும் கும்பல் தேவை அந்த கும்பல் இளைஞர்களாக இருந்தால் தங்களது வளர்ச்சியை அபரீதமாக்கிக் கொள்ளலாம் யாராலும் தடை செய்ய முடியாத அளவிற்கு வலுவாகவும் ஆக்கி கொள்ளலாம் என்பதுதான் அவர்களின் தீர்க்கமான எண்ணம் பொதுவாக இன்றைய சூழலில் அரசியல் கூட்டங்களுக்கு பொது ஜனங்கள் யாரும் அதிகமாக போவது கிடையாது வேலையில் இருப்பவர்கள் குடும்பத்தை கவனிப்பவர்கள் அரசியல் கூட்டம் என்றாலே பத்து காத தூரம் ஓடி விடுகிறார்கள் கூலிக்கு ஆள் வைத்து தான் பொது கூட்டங்கள் நடத்த வேண்டிய நிலை உள்ளது இந்த வேலையில் மாணவர் சக்தியை தங்கள் பக்கம் திருப்பி விட்டால் பணம் செலவு செய்யாமலே காரியங்களை சாதித்து கொள்ளலாம் அதனால் அப்பாவி மாடுகளாக இருந்தாலும் கொம்புகளை சீவி ஜல்லிக் கட்டில் இறக்கி விடுவது போல மாணவர்களின் மூளையை பல வகையில் சலவை செய்து தங்களது சுய லாபத்திற்காக பயன் படுத்துகிறார்கள்




முன்பு கல்லூரி மாணவர்களை குறிவைத்து அரசியல் ஈக்கள் மொய்க்கும் இப்போது அந்த ஈக்கள் பள்ளிக்கூடங்களின் பக்கமும் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்பதை பரமக்குடி கலவரம் நமக்கு நன்றாக விளக்குகிறது நல்லது கெட்டதுகளை தீர்மானிக்க முடியாத வயதில் இருக்கும் குழந்தைகளை தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்தும் செயல் மனித உரிமை மீறலாகும் இதை அரசாங்கம் உடனடியாக கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க தவறினால் மிகப்பெரிய அபாயம் நமது தமிழக சமூகசூழலில் ஏற்படும்

கலவரத்தை போராட்டக்காரர்கள் துவக்கினார்களா போலீஸ்காரர்கள் எல்லை மீரினார்களா என்பது வேறு விஷயம் அவைகளை சட்டம் சரி செய்ய பார்க்கட்டும் இளைய தலைமுறை ஜாதி சேற்றில் சிக்கி மாளாமல் இருப்பதற்கு ஆசிரியர்களும் கல்வி துறை அறிஞர்களும் அவசரமாக செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் இதில் அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் தேசம் அவர்களை மன்னிக்காது




இளமை பருவம் என்பது எதையாவது செய்ய துடிக்கும் சும்மா இருக்க அதுவால் முடியாது எனவே அந்த துடிப்புக்கு சரியான தீனி போட வேண்டும் போடாமல் விட்டால் விபரீதங்கள் அடுக்கடுக்காக நடை பெரும் நமது கல்லூரிகளும் பாட சாலைகளும் சலிப்பு தட்டும் விதத்திலேயே நடந்து வருகிறது கல்வியை வியாபாரம் ஆக்குவதில் காட்டும் கால்பங்கு அக்கறையை கூட மாணவர்களின் அறிவுதிறன் செம்மை படுவதில் காட்டுவதில்லை

நவீன வசதிகள் கொண்ட கல்வி நிறுவனங்களும் அவைகள் இல்லாத நிறுவனங்களும் மாணவர்களின் சுய திறன் வளர்ச்சியில் அக்கரை காட்டுவது இல்லை இதனால் மாணவர்களுக்கு படிப்பதில் சலிப்பு ஏற்ப்பட்டு கவனத்தை வேறு பாதையில் செலுத்துகிறார்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே பேசுபவனும் எழுதுபவனும் திறமை சாலியாக கருதப்படுகிறானே தவிர புத்தகத்தை எழுதுபவனை அதாவது சுயத்திரன் உடையவனை யாரும் அங்கிகரிப்பது இல்லை




முதலில் நமது பாட போதனை முறையில் மாறுதல் கொண்டு வந்து படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டுமே விருப்பம் வருமாறு குழந்தைகள் ஊக்கப்படுத்த பட வேண்டும் விளையாட்டு விஞ்ஞானம் இலக்கியம் ஆகிய துறைகளில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தினால் அதையும் வலுப்படுத்த வேண்டும் அப்படி செய்தால் கல்வி சாலைக்கு வெளியில் அவர்களின் கவனம் செல்லாது

இளம்பருவத்தில் கிளர்ச்சி உட்டக்கூடிய காரியங்களில் ஈடுப்படவே மனது விரும்பும் அது இயற்கையானது அந்த கிளர்ச்சியை சரியான பாதையில் பயன்படுத்தும் போது அவன் நல்ல நிலைக்கு தானாகவே வந்துவிடுகிறான் மாறாக அமையும் போது தான் விபரீத செயல்களை செய்கிறான் இதனால் ஏற்படும் பலாபலன்களை இளைய மனது கணக்கு போட்டு பார்க்காது பார்க்க முடியாது

எனவே இனிமேலாவது பிள்ளைகளின் கல்வியிலும் தனிப்பட்ட ஒழுக்கத்திலும் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அரசாங்கம் ஆகிய மூன்றும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இளைய பாரதம் பாரதி சொன்னது போல் ஒளி பொருந்தியதாக அமையும்.


Contact Form

Name

Email *

Message *