Store
  Store
  Store
  Store
  Store
  Store

அனைத்து மதத்தாருக்கும் வாஸ்து பரிகாரம்

   புதிய மனைவாங்கி வீடுகட்டுபவர்கள் வாஸ்த்துப்படி கட்டிடங்களை அமைத்துக் கொள்ளலாம் அதற்கு வசதி வாய்ப்பு கால நேரம் எல்லாமே ஒத்து வரும் அல்லது தனிவீடாக இருப்பவர்கள் தங்களது இல்லத்தில் உள்ள வாஸ்து குறைப்பாடுகளை மராமத்து செய்து சரியாக்கி கொள்ளலாம் நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழ்பவர்கள் தங்களது வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கிறது என்றால் அதை எப்படி நிவர்த்தி செய்துக் கொள்ள இயலும் சுவர்களை உடைத்து இடித்து செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றது அதற்கு என்ன செய்வது தலையெழுத்தே அவ்வளவு தான் என்று கைகட்டி இருந்து விட வேண்டியது தானா?

இந்த மாதிரியான சிக்கல்கள் இன்றைய காலகட்டத்தில் பலபேருக்கு இருக்கிறது தங்களது குறைபாடுகளை தீர்த்துக் கொள்ள முடியாமல் பலரும் தவிர்க்கிறார்கள் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் மும்பையில் பிரதானமான இடம் ஒன்றில் சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கினார் அது சகல வசதிகளும் கொண்ட அழகான நவீனமான வீடு அந்த குடியிருப்புக் குள்ளேயே பூங்கா நீச்சல் குளம் என்று இன்னும் பல வசதிகள் இருக்கின்றன பிரச்சனை என்னவென்றால் வீட்டிற்குள் நைரூதி மூலை என்ற தென்மேற்கு திசையில் கழிவறை அமைந்து விட்டது


அவர் ஆரம்பத்தில் அதை பற்றி கவலைப்படவில்லை காரணம் அப்படி இருந்தால் என்னவாகும் என்பது அவருக்கு தெரியாது வீட்டிற்கு வந்த சில பெரியவர்கள் இந்த குறையை சுட்டிக் காட்டி இதை சரி செய்ய வில்லை என்றால் சிக்கல்கள் பல உருவாகும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் இவருக்கும் குடிபோன சில மாதங்களிலிருந்து பல பிரச்சனைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உருவாகி இருக்கிறது ஆசாமி பயந்து போய் விட்டார் எப்படியாவது அந்த வீட்டை வந்த விலைக்கு விற்று விட வேண்டும் என்ற முடிவிற்கும் வந்து விட்டார்

ஒரு முறை என்னிடம் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த அவர் எதேச்சையாக இந்த விஷயத்தை சொன்னார் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையின் கழிவறை இருப்பது இருக்கட்டும் ஒட்டுமொத்தக் கட்டிடத்தில் தரைப்பகுதியில் கழிவுகளை தேக்கும் தொட்டி எந்த மூலையில் இருக்கிறது என்று கேட்டேன் அதற்கு அவர் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதாக சொன்னார்

வாஸ்து என்பது ஒவ்வொரு தனி அறைக்கும் சொந்தம் என்றால் கூட இப்படி பட்ட ஒரு கட்டிட அமைப்பு என்று வரும் போது அந்த கட்டிடம் அமைந்திருக்கும் மொத்த நிலபரப்பில் வாஸ்துவை கணிக்க வேண்டுமே தவிர தனிதனி குடியிருப்புகளுக்கும் பார்க்க வேண்டிய அவசியம் அவ்வளவாக இல்லை அதனால் நீங்கள் வீட்டை அவசரப்பட்டு விலை பேச வேண்டாம் என்று சொன்னேன்

இருந்தாலும் அவருக்கு எனது பதிலால் பூரண திருப்பதி ஏற்பட்டது என்று சொல்ல இயலாது அதற்கு வேறு ஏதாவது பரிகாரங்கள் இருக்கிறதா என்று என்னை கேட்டார் வாஸ்து சாஸ்திரம் என்பது மிக கண்டிப்பானது கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் வேலையெல்லாம் அங்கு நடக்காது ஈசான்யத்தில் குடி தண்ணீர்க்காக பள்ளம் தோண்ட வேண்டும் என்றால் அதில் தான் தோண்ட வேண்டுமே தவிர மற்ற இடத்தில் தோண்டி விட்டு பரிகாரம் செய்து கொள்ளலாம் என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரம் பொறுப்பாகாது இருந்தாலும் வீட்டின் உள்பகுதிக்குள் அதாவது இப்படி பட்ட அடுக்குமாடி குடியிருபுகளுக்குள் ஏற்படும் வாஸ்து குறைகளை நிவர்த்தி செய்ய சில பரிகார முறைகள் மயனின் வாஸ்து சம்ஹிதை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது


அடுக்கு மாடி குடியிருப்பில் தனி வீட்டில் ஈசான்ய மூலை என்ற வடகிழக்கு மூலை பாதிக்கப்பட்டிருந்தால் வருடம் தோறும் புரட்டாசி மாத பெளர்ணமி அன்று வேதபாட சாலை வித்தியார்த்திகளை அழைத்து வந்து வீட்டில் வேதபாராயணம் செய்து அன்னதானம் செய்யலாம் இதனால் வீட்டில் உள்ளவர்களின் நோய் நொடி விலகி நல்ல சூழல் ஏற்படும்

இந்திரத்திக்கு என்ற கிழக்கு பகுதி குறை உடையதாக இருந்தால் குலதேவதை வழிபாடை வாரம் தோறும் அந்த தேவதைக்கு உரிய தினத்தில் எளிமையாக செய்தால் தோஷம் விலகி விடும் குலதேவதை எது என்று தெரியாதவர்கள் அல்லது அதன் வழிபாட்டு முறையை அறியாதவர்கள் இஷ்டதெய்வ வணக்கத்தை செய்யலாம்

அக்னி மூலை என்ற தென்கிழக்கு திசையில் வாஸ்து குற்றம் இருந்தால் தைமாத சதுர்த்தி அன்று கணபதி ஹோமமும் மிருத்யுஞ்ஜெய ஹோமமும் செய்ய வேண்டும் அப்படி செய்யும் போது குடும்ப உறுப்பினார்கள் உணவு ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பெண்களின் மனப் பிரச்சனைகளையும் தீர்க்கலாம்


எமன் திசை என்று அழைக்கப்படுவது தெற்கு திசையாகும் இந்த திசையில் வாஸ்து குறை இருந்தால் பணத்தட்டுப் பாடும் கடன் சுமையும் ஏற்படும் இதற்கு பரிகாரமாக மூதாதையர்களுக்கு செய்யப்படும் தென்புலத்தார் கடன் என்னும் பித்துருக் காரியத்தை அவரவர் குடும்ப வழக்கப்படி செய்தாலே போதும் குறை தானாக விலகும்

மிக முக்கிய பகுதியான நைரூதி மூலை என்னும் தென்மேற்கு திசையில் வாஸ்து கோளாறு இருந்தால் தச்சுவேலை செய்யும் தச்சர்களை கொண்டு தச்சுக்கழிப்பு என்ற சடங்கை செய்ய வேண்டும் பொதுவாக இந்த சடங்கை தென்தமிழ் நாட்டில் பிராமணர்கள் அல்லாத ஜாதிக்காரர்கள் எந்த ஒரு புதிய வீட்டிலும் கிரகப்பிரவேஷம் நடத்துவதற்கு முன்பு செய்கிறார்கள் இதை பற்றிய விபரங்களை அவர்களிடம் கேட்டால் கண்டிப்பாக வழிக்காட்டுவார்கள்

வருணதிக்கு என்னும் மேற்கு திசையில் குறை இருந்தால் வீட்டிலேயே ஒவ்வொரு மாத சிவராத்திலும் மகாசிவரத்திரிலும் சிவ பெருமானுக்கு அபிசேகம் செய்து சிவ பஞ்சாச்சர மந்திர ஜெபம் செய்ய வேண்டும் இதனால் வருண மூலை தோஷம் விலகி தொழில் முன்னேற்றம் ஏற்படும்


வாயு மூலை என்பது வடமேற்கு திசையாகும் இதில் குறைவு இருந்தால் குழந்தைகளுக்கும் திருமணம் ஆகதவர்களுக்கும் பல கஷ்டங்கள் ஏற்படும் இதை போக்க அம்பாளுக்கு பட்டுப்புடவை சாத்தி அபிசேக ஆராதனை செய்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்

குபேரத்திற்கு என்பது வடக்கு திசையாகும் இதில் குறை இருந்தால் குடும்ப தலைவருக்கு பொருளாதாரம் சமூக அந்தஸ்து தொழில் வியாபாரம் எல்லாமே சிக்கலையும் குழப்பத்தையும் இழப்பையும் கொடுக்கும் இதற்கு ஏகாதசி தோறும் விரதம் இருந்து ஸ்ரீமன் நாராயணனை வழிபட வேண்டும் வேதபண்டிதர்களுக்கு வஸ்திரதானம் கொடுக்க வேண்டும் வருடத்தில் ஒருமுறையாவது வறியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

அதாவது இந்த பரிகார முறைகள் அடுக்கு மாடி குடியிருப்பின் தரைத்தளம் வாஸ்துப்படி சரியாக இருந்தால் மட்டுமே பலன் தரும் உள்ளே இருக்கும் தனித்தனி வீடுகளின் வாஸ்து குறைகளை நீக்கும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் மேலும் இங்கு சொல்லப்பட்ட பரிகாரங்கள் அனைத்தும் எல்லா ஜாதிகளுக்கும் மதத்தவர்களுக்கும் பொருந்தும் என்றாலும் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் இந்த சடங்குகளை செய்வதில் சிக்கல் உள்ளது அவர்கள் மனதும் இதற்கு இடம் தராது


பல கிறிஸ்தவ இஸ்லாமிய அன்பர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு தங்களது சொந்த சிக்கல்களுக்கு தீர்வுகள் கேட்கும் போது இதை நான் நம்பிக்கையோடு செய்வேன் ஆனால் என் வீட்டுள் உள்ளவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேலி பேசுவார்கள் என்று சொல்கிறார்கள் அவர்கள் ஆற்றாமையை தவறு என்று சொல்ல முடியாது

இந்தியா மற்றும் சீனாவின் நிலபரப்பில் மட்டும் தான் வாஸ்துப்படி கண்டிப்பாக வீடுகட்ட வேண்டும் மற்ற பகுதிகளில் வாஸ்துவை பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் சொல்கிறார்கள் அப்படி என்றால் இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மதத்தாருக்கும் வாஸ்துக்கலை பொதுவானதாகும் எனவே அவர்களின் குறை தீர்க்கும் பரிகார முறையை சொல்ல வேண்டியது நமது கடமைகளில் ஒன்றாக இருக்கிறது இதில் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தால் செய்யலாம் இல்லா விட்டால் அதை பற்றி நமக்கு கவலை தேவை இல்லை

இஸ்லாமிய அன்பர்களின் வீடுகளில் வாஸ்து குறை இருப்பதாக அவர்கள் நம்பினால் திருக்குரானில் ஹூத் என்ற பதினோராவது அத்தியாயத்தில் ஒன்பது முதல் பதினோரு வசனங்கள் வரை விடியற்காலை தொழுகைக்கு பிறகு தினசரி ஓதி வரவேண்டும் இப்படி செய்தால் நிச்சயம் நல்ல பலன் இருக்கிறது இதை போல கிறிஸ்தவர்களும் ஆதி ஆகமத்தில் உள்ள பிரசங்கி என்ற அத்தியாயத்தில் முதலாம் அதிகாரத்தை முழுமையாக படித்து தினசரி இரவு வேளை ஜெபம் செய்தாலும் பல வாஸ்து குறைகள் நீங்குகின்றன


இதை படிக்கின்ற இஸ்லாமிய கிறிஸ்தவ அன்பர்கள் இதற்கு ஆதாரம் என்ன இருக்கிறது இவை எல்லாம் மூட நம்பிக்கைகள் எங்கள் மதத்திற்கு விரோதமானவைகள் அவைகளை சொல்லி மக்களை தவறான் பாதையில் திருப்பாதீர்கள் என்று ஏகமாக என்னை விமர்சனம் செய்யலாம் அவர்களுக்கு நான் சொல்லுகின்ற பதில் ஒன்று தான் இந்த முறை பரிகாரம் என்பது எனக்கு தெரிந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பெரியவர்கள் சொல்லித்தந்ததே ஆகும் இதற்கு ஆதாரமான வேறு நூல்கள் எதையும் என்னால் காட்ட முடியாது ஆனால் அனுபவத்தில் பலருக்கு இதை செய்ய சொல்லி அவர்கள் நல்ல பலனை பெற்றதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்

உங்களுக்கு வாஸ்துவின் பெயரில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் திருக்குரானையோ விவிலியத்தையோ கடவுளின் மொழி என்பதில் அவநம்பிக்கை இருக்க வாய்ப்பு இல்லை எனவே நம்பிக்கையோடு செய்துதான் பாருங்களேன் நிச்சயம் அமைதியான வாழ்க்கை நீங்கள் பெறுவீர்கள்



 

Contact Form

Name

Email *

Message *