( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இவர்களை கொல்ல விரும்பும் அரசுகள் !


இடிந்தகரை இந்த பெயரை உச்சரிக்கும் போது எதோ இனம் புரியாத அமானுஷ்யம் போல் இது ஒரு பாழடைந்த பகுதியாக இருக்குமோ என்ற எண்ணம் பலருக்கு வரும் ஆனால் இடிந்தகரை மிக அழகான கடற்கரை கிராமம் கடற்கரையில் இருந்து மாதா கோவிலின் கோபுரத்தை பார்த்து ரசிக்கும் போது நமக்கு எதோ ஒரு ஐரோப்பிய கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் அந்த கோவில் அவ்வளவு அழகு அவ்வளவு நேர்த்தி

ஊரில் அனைவருமே மீன்பிடி தொழிலை ஜீவாதாரமாக கொண்ட அடித்தட்டு மக்கள் தான் தினசரி கடலுக்கு சென்றால் தான் வாழ்க்கை என்ற நிலையில் இருப்பவர்கள் வெளியுலகத்தை பற்றி அங்கு நடக்கும் ஆனாகரீகங்களை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதனால் மக்களிடம் சற்று முரட்டுத்தனம் அதிகம் இருக்கும் ஆனால் அன்போடு பழகினால் நமக்காக உயிரையும் தருவார்கள்

நான் பிறந்த ஊருக்கு பக்கத்து ஊருதான் இடிந்தகரை என்றாலும் நான் ஊரில் இருக்கும் காலம் வரை எனக்கு அந்த கிராமத்தை பற்றி அதிகம் தெரியாது எனது நண்பர் வார்த்தை சித்தர் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்ட அமரர் திரு.வலம்புரி ஜான் எழுதிய நீர் காகங்கள் என்ற நாவலை படித்த போது அந்த ஊரை பற்றி பல விஷயங்கள் அறிந்துக் கொள்ள ஆர்வம் எனக்கு தோன்றியது உண்டு ஆனாலும் திரு.வலம்புரி ஜான் அவர்களிடம் அதை பேசியதோடு சரி பல வேலையாலோ அல்லது சோம்பேறி தனத்தாலோ அதற்க்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை 


ஆனால் இப்போது கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அறிந்தவுடன் இனம் புரியாத ஒரு பாசம் அந்த மக்கள் மீது ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை அணு உலையினால் ஆக்கத்தை விட அழிவு தான் அதிகம் அதன் அழிவு எத்தகைய கோரமுடன் இருக்கும் என்பதை முன்பு ரஷ்யாவிலும் இப்போது ஜப்பானிலும் பார்த்து விட்டோம் இத்தனையும் கண்டபிறகு இப்படி ஒரு அழிவு சக்தியை பல கோடி ரூபாய் செலவில் உருவாக்க வேண்டுமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அதற்கு அரசாங்கம் சொல்லுகின்ற பதில் தீர்க்கமான முறையில் சிந்திக்கும் போது வேதனையாக இருக்கிறது

அணு சக்தியினால் நாட்டு உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் இதன் மூலம் பொருளாதார பலமும் வளமும் அடையலாம் என்கிறது அரசு பொருளாதார பலம் ஒரு நாடு பெறவேண்டும் என்பது எதற்க்காக? அந்த நாட்டு மக்கள் வளத்தோடு வாழவேண்டும் என்பதற்காக தான் ஆனால் அந்த மக்களையே பலிகொடுத்து பெறுகின்ற வளம் எதற்கு தேவை? குழந்தையின் கழுத்தை வெட்டி பால் வாங்குவது போலதான் இந்த கதையும் இருக்கிறது

அணுஉலை வெடித்தால் பல உயிர்கள் சாம்பலாகி போய் விடும் என்று சொன்னால் அரசாங்கம் அப்படி எல்லாம் எதுவும் ஆகாது முழுமையான பாதுகாப்புடனே திட்டம் செயல்படும் என்கிறார்கள் நிச்சயமாக அணுஉலை வெடிக்க வேண்டும் என்று யாரும் நினைக்க வில்லை ஆயிரம் மனித சக்தியால் பாதுகாப்பு கொடுத்தாலும் இயற்கை சீற்றம் என்று வருகின்ற போது அதன் முன்னால் நமது பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் எல்லாம் வெறும் தூசுக்கு சமம் என்பதைத்தான் அணு உலையை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் இதற்கு அரசாங்கம் கூடங்குளம் பகுதியில் எப்போதுமே சுனாமி தாக்கமோ நில அதிர்வோ ஏற்படாது என்ற உத்திரவாதத்தை தரமுடியுமா? வேண்டுமானால் மனித உயிர்களை காவு கொண்ட பிறகு ஒரு குடும்பத்திற்கு இத்தனை லட்ச்சம் ரூபாய் என்று நஷ்டயிடு கொடுக்க முடியும் அந்த பணம் ஒரு தாயின் அரவணைப்பு தருகின்ற சுகத்தை குழந்தைக்கு கொடுக்குமா? 


 மேலும் இடிந்தகரை மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்து மக்கள் பாதுகாப்பு பிரச்சனையை பற்றி மட்டும் பேச வில்லை கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்பட துவங்கினால் தங்களது மீனவ தொழிலே பாதிக்கப்பட்டுவிடும் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் வயிற்றுக்கு சோறு இல்லாமல் நாதியற்று போவார்கள் என்றும் கூறுகிறார்கள் மிகமுக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது

ரைஸ்மில் வைத்து நடத்துபவரை நாளை முதல் நீ மாவு மில் வைத்து நடத்து என்றால் எப்படியும் பிழைத்துக் கொள்வார் பனைமரம் ஏறி பதநீர் எடுத்து வாழ்பவரை மரத்தை வெட்டி பிழைப்பு நடத்து என்றாலும் கூட பிழைக்க வாய்ப்பு இருக்கிறது ஆனால் தினசரி கடலுக்கு சென்று மீன் பிடித்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும் என்ற நிலையில் உள்ள மக்களை நீ உன் தொழிலை விட்டு விட்டு வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள் என்றால் நிச்சயம் அவர்களால் வாழமுடியாது காரணம் அவர்கள் பல ஆயிரவருடங்களாக கடலோடும் அதன் வளத்தோடும் தங்களது வாழ்க்கையை பின்னி பிணைத்து கொண்டவர்கள் அவர்களால் வேறு வேலை புதியதாக கற்றுக் கொண்டு வாழ்வது என்பது நினைத்து பார்க்க முடியாத வேதனையாகும்

மீனவ மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நம்மால் சரிவர எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது காரணம் நமது வாழ்க்கை முறை வேறு கடல் சார்ந்த அவர்களின் வாழ்க்கை முறை வேறு இடிந்தகரையில் மட்டும் தான் கடல் இருக்கிறதா தூத்துக்குடியில் இல்லையா உவரியில் இல்லையா அங்கே சென்று மீன் பிடித்தால் என்ன என்று நம்மில் பலர் நினைக்கிறோம் ஆனால் இடிந்தகரை கடல் பகுதியில் கிடைக்கின்ற மீன் வகை அருகில் இருக்கும் உவரியில் கிடைக்காது உவரியில் கிடைக்கும் மீன் வகை அதன் அருகில் இருக்கும் கோடாவிளை கிராமத்தில் கிடைக்காது ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டுமே வலை போட்டு பிடித்து பழக்கப்பட்ட மீனவன் தீடிரென வேறுவகை மீனை பிடிக்க முனையும் போது பல சிக்கலையும் சவாலையும் சந்திக்க வேண்டிய நிலைமை உண்டு அதை சொல்லித் தெரிய வைக்க முடியாது அனுபவித்து தான் தெரிந்து கொள்ள முடியும்


 கூடங்குளம் அணுஉலை செயல்பட துவங்கினால் அதை சுற்றி உள்ள பல மீனவ கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்று ஒரு கருத்து உள்ளது இது தான் அந்த மக்களை கொதிப்படைய செய்துள்ளது அவர்கள் பலநூறு வருஷங்களாக அந்த கடல் பகுதியோடு ஒன்றி வாழ்ந்து விட்டார்கள் இனி வேறு இடம் சென்று பிழைப்பு நடத்த வேண்டும் என்பது உடம்பில் இருந்து உறுப்பை வெட்டி எடுப்பதற்கு சமமாகும் அந்த இட மாற்றத்தை யாராலும் ஜீரணிக்க முடியாது

இது மட்டும் அல்ல இவர்கள் பல காலமாக மீன் பிடித்து கொண்டிருக்கின்ற கடல் பகுதியில் இனி மீன் பிடிக்க கூடாதாம் அந்த இடங்களை விட்டு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டுமாம் இது அவர்களது தொழிலையே நாசப்படுத்தும் பயங்கர வன்முறையாகும்

நமது நாட்டில் பங்கு சந்தை சரிவு ஏற்பட்டு தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்தால் நிதிஅமைச்சரே இறங்கி வந்து சலுகைகள் வழங்குவார் ஆனால் பாடு பரதேசிகள் அன்றாடம் காச்சிகள் எக்கேடு கெட்டாலும் அதை பற்றி கவலை பட யாருக்கும் அவகாசம் இல்லை அக்கறையும் இல்லை இது தான் இந்தியர்களின் நித்திய தலையெழுத்து அப்பாவியான மீனவ மக்கள் இத்தனை நாள் பட்டினி போராட்டம் நடத்திய பிறகும் நமது மாநில முதல்வர் ஒரு நாள் அணுஉலை வேண்டும் என்கிறார் மறுநாள் வேண்டவே வேண்டாம் என்கிறார் இப்படி கருத்து குழப்பத்தில் முதல்வர் என்றால் முடிவு எடுக்க வேண்டிய பிரதம மந்திரியோ நான் அமெரிக்கா போகிறேன் வந்த பிறகு பேசலாம் என்கிறார் அதாவது அவர் போய் வரும் வரை இங்கு எத்தனை பேர் செத்தாலும் மத்திய அரசுக்கு கவலை இல்லை என்பதே இதன் பொருளாகும்


 பொதுவாக மீனவ மக்கள் தினம் தினம் மரணத்தை சந்திப்பவர்கள் சாவு என்பது அவர்களுக்கு ஒரு சம்பவமே தவிர சரித்திரம் அல்ல இதனால் அவர்கள் தங்கள் உயிர் போவதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் மற்றவர் உயிர் கெடுவதை பற்றியும் அச்சப்பட மாட்டார்கள் தங்கள் கடல் சார்ந்த சமூகத்திற்கும் தரை சார்ந்த சமூகத்திற்கும் சிறிய சண்டை சச்சரவுகள் வந்து விட்டாலே பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் மூர்க்கமாக மோதுவார்கள் அப்படி பட்ட மக்கள் இன்று அண்ணல் மகாத்மா வழியில் அறப்போராட்டம் நடத்துவதே பாராட்ட வேண்டிய விஷயம் அவர்களின் நியாயமான வேண்டுகோளை உடனடியாக பரிசீலிக்க அரசாங்கம் தவறுமேயானால் நாடு மிக மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் இதை சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்

அணுஉலையை மூடினால் ஒன்றும் குடிமுழுகி போகாது மின்சாரம் எடுப்பதற்கு அதை தன்னிறைவாக ஆக்கி கொள்வதற்கு எத்தனையோ மாற்று வழிகள் நம் நாட்டில் உண்டு மின்சாரத்தை காற்றில் இருந்து எடுக்கலாம் நீரல் இருந்து எடுக்கலாம் சூரியனிடம் இருந்து எடுக்கலாம் குப்பைகளை எரித்துக் கூட எடுக்கலாம் அணுவை உடைத்தான் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது பாதுகாப்பான முறைகள் எத்தனையோ இருக்கிறது அவைகளை விட்டு விட்டு இதில் அரசு பிடிவாதம் பிடித்தால் இது மக்கள் நல அரசு அல்ல மக்கள் விரோத அரசே ஆகும்தமிழக அரசு உண்மையாகவே அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால் கூடங்குளம் திட்டத்தை நிறுத்தக் கோரி மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் அப்படியும் மத்திய அரசாங்கம் செவி சாய்க்க மறுத்தால் தமிழக மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு நம் மாநிலத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் இப்படி செய்யப்பட்டால் தான் வாழும் தமிழக மக்களும் நாளைக்கு வாழப்போகும் தலைமுறையும் பாதுகாப்பாக வாழ்வை நடத்த முடியும்

இவர்கள் அனைவரும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய வசதி படைத்தவன் தரமாட்டான் வயிறு பசித்தவன் விடமாட்டான் என்ற பாடல் வரியை நினைத்து பார்த்தால் எல்லா ப்ரச்சனைகளையுமே சுலபமாக தீர்த்து விடலாம்.

+ comments + 10 comments

Anonymous
13:54

கூடங்குளம் பகுதி மக்களின் பயத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்கிறது குருஜி..நமது அரசை நம்ப முடியாது... போபால் விசவாயுவில் பால்லாயிரகனகான மக்கள் இறந்ததற்கு காரணமான குற்றவாளியை தண்டிக்காமல் வெகு தந்திரமாக தப்ப விட்டார்கள் இதுவரை அந்த மக்களுக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்கவில்லை இதே மாதிரி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அணுமின் விசயத்திலும் போபால் மாதிரி நடக்க வாய்பிருகிறது...ஆனால் தற்போது போராட்டம் நடத்துபவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை பற்றி பல கோணங்களில் ஆராய வேண்டியது அவசியம் குருஜி.. இதுவரை போராட்டம் நடத்தாதவர்கள் தற்போது போராட்டம் நடத்துவதின் பின்னணி என்ன என்பதை பற்றி கண்டிப்பாக ஆராய வேண்டும் குருஜி...இதில் அணுமின் திட்டத்தை முடக்க நினைக்கும் வெளிநாட்டு சதியின் விளைவாக கூட மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு இந்த போராட்டம் நடக்கலாம். கிறிஸ்துவ பாதிரியார்கள் தலைமையேற்று நடத்தும் இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க போன்ற ஏதாவது கிறிஸ்துவ நாடு கூட இருக்கலாம் அல்லது இலங்கையில் கால் பதித்து விட்ட சீனாவின் சதியாக கூட இருக்கலாம்.. எனவே தீர விசாரணை பண்ணிய பிறகே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.. மேலும் மக்களின் போராட்டம் உண்மையாக இருந்தால் அந்த பகுதி மக்களின் பயத்தையும் சந்தேகங்களையும் போக்க அரசாங்கம் மக்களிடத்தில் விளக்க கூட்டங்கள் நடத்த வேண்டும்.உண்மையிலேயே அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தால் அரசாங்கம் இந்த அணுமின் திட்டத்தை நிறுத்த வேண்டும்..

M.Natrayan
20:08

இந்தியாவில் மட்டுமல்லாது அனைத்துனாடுகளிலும் பஸ், ரயில் மற்றும் விமான விபத்துக்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக இப்பயனவசதிகளை எல்லாம் வேண்டாமென்று தடைசெய்துவிட வேண்டுமா? உலகில் பல்வேறு நாடுகளில் ஏராளமான அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் விபத்து நடந்துகொண்டுதான் இருக்கிறதா? சில சந்தர்பங்களில் இயற்கையின் சீற்றம் காரணமாக விபத்துனடக்க வாய்ப்பு உண்டு. சுனாமியின் போது ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். இதற்கெல்லாம் யார் பொருப்பேற்பது. கடந்த காலங்களில் மின்வெட்டினால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம். இதற்கெல்லாம் ஒரேதீர்வு அனுமின்சாரம்தான். இதனை தடை செய்யக்கூடாது. பலவகைகளில் மின்சாரம் தயாரிக்கலாம். அதுவரை இந்த கூடன்குள அணுமின்சாரத்தை பயன்படுத்தலாம். மின்சாரம் தேவைக்கு அதிகமாக கிடைத்தவுடன் இதனை மூட முயற்சிக்கலாம். மின்சாரம் இல்லாமல் நமது நாட்டில் எதுவும் நடக்காது.

M.Natrayan
20:39

கூடன்குளம் அணிமின் நிலையத்தில் நடக்கும் போராட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகள் தாரளமாக உக்குவிக்கின்றன! இத்தனை ஆயிரம்கோடி ரூபாய் செலவுசெய்து, முடியும் தருவாயில் நமது நாட்டை சீர்குலைக்க இச்சதி நடக்கிறது. அமெரிக்காவிற்கு ஏஜென்டாக செயல்படும் ஒரு பாதிரியார்தான் இந்த போராட்டங்களுக்கெல்லாம் மூல காரணம். இந்தியாவில் நடக்கும் அனைத்து விசயங்களையும் இந்த பாதிரி உளவு சொல்லுகிறார். இதற்காக இவருக்கு தாரளமாக பணம் கைமாறுகிறது. இந்த அணுமின் உலை ரஷ்ய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் இந்த பாதிரி செயல்பட்டு வந்தார். ரஷ்யா தற்போது முழு அளவில் இல்லாததால் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறார். தன்னை வளர்த்த நாட்டுக்கே கொடுமை செய்கிறார். அரசுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை! ஒட்டு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகள் கண்டும் காணாமல் இருக்கின்றன. இப்போராட்டத்தில் ஈடுபடும் பெரும்பான்மையாளர்கள் கிருத்துவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்!!!
வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நாட்டை காப்போம்!!!! வாழ்க பாரதம்!!

Anonymous
15:18

திரு M.Natrayan அவர்கள் சரியாக சொல்லி இருக்கிறார்...கிறிஸ்துவ பாதிரியார்களின் போராட்டதின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது..இந்தியா மற்றும் ரஷ்யாவின் இடையே உள்ள நெருங்கிய நட்புணர்வை கெடுக்கவும் இருநாடுகளுக்கும் ஆயிரகணக்கான கோடி பணத்தை நஷ்ட படுத்தி ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தியா,ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தவும் அமெரிக்கா கைகூலிகள் மக்களை தூண்டிவிட்டு இந்த போராட்டத்தை நடத்தாலாம்..மேலும் இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருங்கிய நட்புணர்வை சீர்குலைக்க அமெரிக்கா பல வழிகளில் முயன்று வருகிறது..இந்தியா ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்குவதை தடுக்க அமெரிக்கா இந்தியாவிடம் பெரிய ராணுவ ஒப்பந்தமே பண்ணியது..இந்தியா ரஷ்யாவிடம் நெருங்குவதை தடுக்கவே இதை செய்தோம் என்று அமெரிக்கா அமைச்சர் வெளிப்படையாகவே ஒப்பு கொண்டார்...இது எல்லாம் நமது அரசுக்கு தெரிந்தாலும் ஒட்டு வங்கிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காது...கிருஸ்துவ ஓட்டுக்காக அமெரிக்காவையும் முஸ்லிம்களின் ஓட்டுக்காக பாலஸ்தீனத்தையும் ஆதரிக்கிறது...காங்கிரசுக்கு நாட்டை விட ஆட்சிக்கு வருவதே முக்கியம்... கார்கில் போரில் இஸ்ரேல் இந்தியாவை ஆதரித்தது மேலும் போர் நடந்த போது ஆயுதங்களையும் ராணுவ தளவாடங்களையும் இஸ்ரேல் இந்தியாவிற்கு தந்து உதவியது..ஆனால் இதற்க்கு நேர் மாறாக பாலஸ்தீன் பாகிஸ்தானை ஆதரித்தது.. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த எல்லா போர்களிலும் பாலஸ்தீன் பாகிஸ்தானையே ஆதரித்தது...இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகளில் இஸ்ரேல் இந்தியாவை ஆதரிக்கிறது..பாலஸ்தீன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது..இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் பிரச்னைகளில் இந்தியா இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனை ஆதரிக்கிறது..இப்படிப்பட்ட கேடு கெட்ட செயலை இந்தியாவை தவிர உலகில் வேறு எந்த நாடும் பண்ணாது...நம் நாட்டு அரசியல் வியாதிகள் கிருஸ்துவ,முஸ்லிம்களின் ஒட்டு வங்கிக்காக எதை வேண்டுமானாலும் பண்ணுவார்கள்...கூடங்குளம் அணுமின் திட்டத்தை கிறிஸ்துவர்களுக்காக நிறுத்தினாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை....இந்து சந்நியாசி ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருந்தால் தடியடி.. நாட்டின் வளர்சிக்கு வித்திடும் அணுமின் திட்டத்தை எதிர்த்து கிறிஸ்துவ பாதியார்கள் மக்களை தூண்டி விட்டு உண்ணாவிரதம் இருந்தால் சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்து அரசியல் வியாதிகள் ஆதரவு..நம் நாட்டை கடவுள் தான் காப்பாத்தனும்

M.Natrayan
21:31

சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த கருத்து. சரியாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். பாராட்டுக்கள்!! இது போன்று பலர் முன்வந்தால் நமது நட்டிற்கு நல்லது!!!!

Anonymous
13:12

மக்களின் போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள். சில கேள்விகள்

வரும் டிசம்பர் மாதம் உற்பத்தி தொடங்க போகும் நேரத்தில் ஏன் திடீர் போராட்டம்? இவ்வளவு நாள் என்ன செய்தார்கள்?
இப்பெரிய போராட்டம் ஏன் தமிழக உளவுத்துறைக்கோ அல்லது இந்திய உளவுத்துறைக்கோ முன்கூட்டியே தெரியவில்லை?
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனில், 3.5 பில்லியன் டாலர் கோடி செலவு செய்யப்பட்டதில் பத்து சதமானம் வரை மக்களின் வாழ்வாதாரத்திற்காக (இடம் பெயர்த்து குடியிருப்புகள் ஏற்படுத்துதல், தொழில் வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தி கொடுக்கவில்லை?
மக்களுக்கு வாழ்வாதாரம் பிரச்சினையா? அல்லது அணு மின் நிலையம் பிரச்சினையா?
இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் இந்த அளவு மூக்கை நுழைக்கிறது? இவ்வளவு நாள் அவர்கள் எங்கு இருந்தார்கள்? இக்கட்சிகள் இப்போராட்டத்தின் மூலம் கட்சியையோ அல்லது அதன் தலைவரையோ ஏன் முன்னிறுத்துகிறது?

என் சந்தேகம்.

ஜெ அரசுக்கு முட்டுக்கட்டை போட கருநாய்நிதி உத்தரவின் பேரில், தேச விரோதி எஸ்ரா சற்குணம் இடிந்தகரையில் உள்ள ஒரு பாதிரியாரின் மூலம்
அமெரிக்க அரசுடன் கை கோர்த்து இப்போது பணபலத்தின் மூலம் மக்களை திரட்டி கூடங்குளம் அனுமின்சக்தியை எதிர்கிறார்கள்.

All religion is false religion, caste?

God has written telling false tales of imagination. Truly, there are shrines with statues of people did not live in superstition. It could not escape the people are tense. Many intellectuals to deny it. Ullarkalum rational people do not listen to people telling of it.

Get rid of all this vantavartan arulalar Vallalar.

Highlight the real nature of God through the spiritual world and have the facts. Vallalar Now people are accepting comments. Or religious, that religion is voicing opposition to the plaintiffs. They understand people are coming out.

Science, science, atomic research, who acknowledged that Mr. Vallalar arutpa recorded in the book.

Religious faiths in prose writing about Vallalar catiullarkal ayirakkakana.

Also some of the song; -

While stating that the celebration of the art of imagination
Not everything is covered with soil to cover the eye!

And

Akamatat ethical norms of Vedic mythology
Epic Code imposed morality throughout the declaratory
All of the intelligence and guile otukinra
Unarttinaiye ullatanai feel better!

Clear that all is false.

All religions, all religious claims pitittuk
There was no effect kuvukinrar vine
Mannaki narukinrar accommodate ash as he
Ninaittono than drown in nitulak nilaimel
Anke decade sought to rely usually accepted!

Thousands of songs, religious imagination, false religions. The stories, and let them know that hidden deep pit dug in the mud drum carrukirar Vallalar come out.

The jobs are no longer carries a religious faiths. People were awake. Vallalar people will benefit by realizing the truth by reading Mr. arutpavai care.

I anmaneyan - katirvelu.

Anonymous
08:31

நாட்டை வளர விடுங்கள்!

please improve upon your English.....

previously there was opposition to Sardar Sarovar project in foreign countries. Now the people of Gujarat and Rajastan are enjoying the benefits of the project.
whether it is a Dam project or a Atomic power plant project undertaken in India there is always some disagreement and opposition to it in Europe or in America. And they have their own reasons. They dislike the development of a third world country into a developed country like them.
Ok. Leave other things and single out Atomic projects. Former Atomic Energy Commission chairman R.Chidambaram repeatedly asked the central govt to invest more in existing Atomic power plants to increase the production capacity so that adequate electricity generation can be achieved. All his requests fell in deaf years. Reason: in India almost all the Atomic power plants are primarily aimed at nuclear research for to fine tune the existing knowledge to make an Atom bomb. Then who will care for to increase electricity generation.
So,the aim of koodankulam Atomic power plant also might be to obtain bomb grade plutonium. And to provide protection to the plant from a seaborne attack they have adequately dredged & deepened the gulf of mannar to station warships. Remember the dredging operation started all on a sudden(like a secret operation) and also stopped suddenly.
Forget about getting electricity from koodankulam or building up of the Sethusamudram shipping canal project. Neither will become a reality.


Next Post Next Post Home
 
Back to Top