( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கருபுள்ளி விழுந்தால் கடன் கொடுப்பதில் சிக்கல் !


    னது வலது கையில் ஆள்காட்டி விரலுக்கு கீழே உள்ள பகுதியில் கரும் புள்ளி ஒன்று ஆறு மாதமாக இருக்கிறது வைத்தியரிடம் காண்பித்தால் இது சர்ம நோய் அல்ல இயற்கையான புள்ளி கொஞ்ச நாளில் மறைந்து போகும் கவலைப்பட வேண்டாம் என்கிறார் கைரேகை ஜோதிடம் தெரிந்த என் நண்பனோ கையில் கரும்புள்ளி விழுந்தால் கைது செய்யப்படும் சூழல் வரும் என பயமுறுத்துகிறான் எனக்கு ஒன்றும் புரியவில்லை வைத்தியர் சொல்லுவது சரியா நண்பன் கூறுவது சரியா எதை நான் நம்புவது தயவு செய்து விளக்கம் தரவும்

மோதிலால் பட்டேல் சென்னை


   கைரேகை ஜோதிட கணிதப்படி உங்களது குரு மேட்டில் கரும்புள்ளி இருக்கிறது இதில் கரும்புள்ளி விழுந்தால் அந்த புள்ளி மறையும் காலம் வரை சுய கெளரவத்துக்கும் அந்தஸ்துக்கும் களங்கம் ஏற்படும் படியான சம்பவங்கள் நடைபெரும் என்று பொதுவாக கூறப்படுகிறது

வராகிமிகிரர் தான் எழுதிய ஹஸ்தரேகை சாஸ்திரம் என்ற நூலில் குரு மேட்டு கரும்புள்ளி அரசு தண்டனையை வாங்கி தரும் என்று மறைவில்லாமலே சொல்கிறார்

ஆனால் பல அனுபவம் வாய்ந்த கைரேகை சாஸ்திரிகள் கரும்புள்ளி குருமேட்டில் வருமேயானால் மனமானது குற்ற நடவடிக்கைகளை நடத்துவதற்கு விரும்பும் அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்க்கும் ஆனால் மனஉறுதியோடு கட்டுப்பாட்டுடன் இருந்தால் அரசு தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள்

அதாவது நமது கையில் உள்ள ரேகைகள் நமது எண்ணங்களையும் பிரதிபலிக்க கூடியதாக இருக்கிறது வலுவான எண்ணங்கள் ரேகை வடிவத்தில் வெளிப்படும் இதை விளக்குவது மிக நீண்ட பதிலாக சென்று முடியும் அது இப்போது தேவை இல்லை

நீங்கள் மனதை அலைய விடாமலும் பலகீன வழியில் நடைபோட விரும்பாமலும் இருங்கள் கையில் உள்ள கரும்புள்ளி விரைவில் மறைந்து விடும்


மேலும் கைதாவதற்கு அனாவசியமாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை குற்றம் செய்தால் மட்டும்தான் கைது செய்யப்படுவோம் என்பது கிடையாது பொது நலத்திற்க்காக செயல் பட்டாலும் கூட கைது செய்ய படலாம் அல்லவா இந்த கைதில் அவமானம் இருப்பதாக நான் நினைக்கவில்லை

மேலும் கரும்புள்ளி பற்றி வராகிமீகிரர் மற்றும் அனுபவசாலிகள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்

நான் எனது அனுபவத்தில் கண்டது என்னவென்றால் கையில் கருபுள்ளி விழுந்தால் யாருக்காவது கடன் கொடுத்துவிட்டு வசூல் விஷயமாக காவல் நிலையம் வரை செல்ல வேண்டியது வரும் அவ்வளவு தான்

இதை பற்றி கவலைப்படுவதை விடுங்கள் கடவுள் நல்லதே செய்வார்.








+ comments + 2 comments

Anonymous
18:24

Kaiyile pulli irundhal ondrum agadhu. Kavalai padadhe. Piruppukkum irappukkum naduvil jadhagam parkadhe. Time waste agum. Enna nadandhalum nadakkattum endru nermaiyaga kadamaiyai sei. Kadavul thunai purivan.

கரும்புள்ளி ...பயம் காட்டுகிறீர்கள்...கடவுள் நல்லதே செய்வார்...


Next Post Next Post Home
 
Back to Top