Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த வயதில் மொட்டை போடலாம்...?


    லகிலேயே அதிகமான தாக்குதலுக்கு உள்ளான மதம் எது என்று கேட்டால் யோசிக்காமல் அடித்து சொல்லலாம் அது இந்து மதம்தான் என்று இத்தனைக்கும் இந்து மதம் எந்த மதத்தோடும் சண்டைபோடுவது இல்லை முஷ்டி தட்டி போட்டிக்கு நிற்பதும் இல்லை ஆனால் நேற்று காலையில் பெய்த மழையில் இன்று காலையில் முளைத்த காளான் கூட இந்து மதத்தை இளக்காரமாகவும் எதிரியாகவும் தான் பார்க்கிறது இதற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு? எதிரிகள்?

மற்ற மதங்கள் மனிதனை உடல் ரீதியாக பண்படுத்த பார்க்கிறது இந்து மதமோ மனிதனை மன ரீதியாக செம்மையாக்க முயற்சிக்கிறது நேற்று இரவில் இருந்த மீசையை காலையில் மளித்து விடலாம் அதில் சிரமம் இல்லை ஆனால் நேற்று வரை குடிகாரனாக இருந்துவிட்டு இன்று நீ மாறித்தான் ஆகவேண்டும் என்று சொன்னால் யாருக்கு தான் மனசு வரும் போதைக்கு அடிமையானது உடம்பு அல்ல மனது அந்த மனதை நேர்படுத்தி ஒழுங்குமுறையில் கொண்டுவருவது மகாசிரமம் கஷ்டம் உடல் தோற்றத்தை மாற்றுவதில் ஒன்றும் பெரிய சிரமம் இருக்காது வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்று மாற்றி விடலாம் மனமாற்றத்தை வேண்டுமென்று வற்புறுத்துவதால் தான் இந்து மதத்தை அவ்வளவு சிக்கிரம் மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தாக்கப்படும் சூழலில் உள்ளது


நமது மதத்தை அதிகமாக தாக்குபவர்கள் அட என்னய்யா திருப்பதிக்கு போய் மொட்டை போடுகிறிர்கள் பழனிக்கு சென்று முடி காணிக்கை செலுத்துகிறீர்கள் உடம்பில் உள்ளதை கடவுளுக்கு அர்பணிக்க வேண்டுமென்றால் நாக்கை வெட்டிக்கொள்கிறேன் கையை துண்டித்துக் கொள்கிறேன் என்று வேண்ட வேண்டியதுதானே அதில் என்ன வெட்டிபோட்டால் மீண்டும் வளரும் முடியை காணிக்கையாக தருகிறேன் என்று கடவுளையும் உங்களையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்று சில அதிமேதாவிகள் கிண்டல் அடிக்கிறார்கள் அவர்களின் அறியாமையை பார்த்தால் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது

அர்பணிப்பு காணிக்கை நேர்த்திக்கடன் என்றால் என்ன? எனக்கு பிரிமானத்தை நான் நேசிப்பதை நான் உயர்வாக மதிப்பதை துறந்துவிடுவது தான் அர்பணிப்பு மற்றும் காணிக்கையாகும் ஆப்பிரிக்கா நீக்ரோவும் சரி நம் ஊர் அமிதாப்பச்சனும் சரி மனிதனாக பிறந்த அனைவருமே தான் அழகாக இருப்பதாக நம்புகிறார்கள் அந்த நம்பிக்கையில் தான் தினசரி ஒரு வேளையாவது கண்ணாடி முன் நின்று நம்மை அழகு பார்த்துக்கொள்கிறோம் அலங்காரப்படுத்தியும் கொள்கிறோம் தலைமுடியை வித விதமாக சீவி சிங்காரித்து பார்ப்பதில் நமக்குள்ள சந்தோசம் வேறு எந்த அலங்கார வேலையிலும் கிடைப்பதே இல்லை


ஒரு காலத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து முன்நெற்றியில் சுருள் விழ எம்.ஜி.ஆர்,சிவாஜி போல தலைவாரிகொள்வது தமிழக இளைஞர்களுக்கு நாகரீகத்தி சிகரம் அதன் பிறகு ரஜினி காந்த் போல முன்நெற்றி முற்றிலுமாக மறையும்படி தலைவாருவது பெரிய அழகு பெண்களை பற்றி கேட்கவே வேண்டாம் சரோஜா தேவி கொண்டை ஸ்ரீதேவி பின்னல் நதியா கிராப் என்று ஏகப்பட்ட மாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம் இன்றைய இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல தனக்கு பிடித்தமான திரைப்பட நடிகர்களை பின்பற்றி முடி அலங்காரம் செய்து கொள்கிறார்கள்

இதை ஏன் இந்த இடத்தில் சொல்கிறேன் என்றால் தலைமுடியை அலங்காரம் செய்து பார்ப்பதில் நமக்கு அதிகப்பிரியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் நமது அழகை கூட்டி தருவதோ குறைத்து காட்டுவதோ தலைமுடியில் தான் இருக்கிறது என அழகு கலை நிபுணர்களும் நாமும் கூட சொல்கிறோம் எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும் தலையை வாராமல் பரட்டையாக போட்டுக்கொண்டு திரிபவர்களை என்ன இவன் சுத்த பயித்தியமாக இருப்பானோ என்றுதான் விமர்சிக்கிறோம் அந்த அளவு மனித தோற்ற பொலிவிற்கு முடி என்பது அத்தியாவசியமாக இருக்கிறது


அத்தகைய தலைக்கேசத்தை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவதில் நிறைய அர்த்தம் இருக்கிறது தான் என்ற ஆணவம் நான்தான் அழகு என்ற கர்வம் மொட்டை போடுவதால் அழிகிறது இறைவனின் சன்னிதானத்தின் முன் அவன் அருள்பிரவாகத்தின் முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல என்ற ஞானம் பிறக்கிறது சரீரத்தின் அழகின் மீது மறையும் இச்சை சரீரத்தின் மீதே இச்சை இல்லாமல் போய்விட செய்கிறது  மனம் ஒருஞான வைராக்கியத்தை பெறுகிறது அந்த மனமாற்றத்தை தான் கடவுளும் விரும்புகிறார் நமது இந்து மதமும் விரும்புகிறது

மனிதர்களின் உடல்கள் மாறி முன்னேறி எந்த பயனும் இல்லை மனது மாறவேண்டும் மனமாற்றம் நடந்தால் மட்டும் தான் சமூகமாற்றம் ஏற்ப்படும் நாட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தலைகாட்டாமலே பறந்து போய்விடும் அதனால் மட்டுமே இந்து மதம் எந்த சடங்கையும் மனமாற்றத்தை மையமாக கொண்டே செய்கிறது இதை புரிந்து செய்தாலும் புரியாமல் செய்தாலும் நிச்சயம் காலம் கடந்தாவது பலன் கிடைக்கும் எனவே ஏளனம் செய்வதற்கோ ஏகடீகம் பேசுவதற்கோ இந்து மத சடங்கில் எந்த குறையும் இருக்காது வேண்டுமானால் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அது தெரியாது என்று சொல்லலாம்


நினைத்தவுடன் திருப்பதிக்கோ பழனிக்கோ சென்று மொட்டை போட்டுக்கொள்பவர்கள் நம்மில் ஏராளம் பேர் உண்டு அவர்களில் சிலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்கள் நாம் நினைத்தவுடன் மொட்டை போட்டுக்கொள்கிறோம் அதை பற்றி கவலை இல்லை ஆனால் நமக்கு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு எந்த வயதில் முதல் மொட்டை போடுவது என்று நம்மில் பலருக்கு தெரியவில்லயே அதை நீங்கள் தெரிவிக்கலாமே என்று கேட்டார்கள் அதானால் தான் இந்த பதிவே எழுதுகிறேன்

இது வாஸ்தவம் தான் இன்றைய இளைஞர்கள் பலர் அம்மா அப்பாவோடு வாழ வில்லை வாழவிரும்பினாலும் பல தொழில் காரணங்களால் முடிவதில்லை திருமணமானவுடன் மனைவியுடன் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றுவிடுகிறார்கள் அங்கே நமது சாஸ்திர சம்பிராதயங்கள் தெரியாமல் அல்லல் படுகிறார்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது நமது கடமையல்லவா!

குழந்தைக்கு முதல் முறையாக முடியிறக்குவதை சூடாகர்ம சமஷ்காரம் என்று நமது இந்து மத சாஸ்திரங்கள் சொல்கின்றன இந்த சமஷ்காரத்தை குழந்தை பிறந்து ஒருவருடம் பூர்த்தியான பிறகு செய்ய வேண்டும் இரட்டைபடை வயதில் குழந்தைக்கு சடங்கு செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதால் மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செய்ய வேண்டும் சிலர் முடியிறக்குவது என்றவுடன் தலைமுடியில் சிறுபகுதியை மட்டும் கோவிலில் வெட்டிவிட்டால் போதும் என நினைத்து செய்கிறார்கள் இது தவறு குழந்தையின் தலையை முழுமையாக மளித்து மொட்டை போட்டு விடவேண்டும்


  மொட்டை போட்டவுடன் தலையில் வெண்ணை அல்லது தயிர் ஆடையை தேய்த்த பிறகே சந்தனம் பூசவேண்டும் இப்படி சந்தனம் பூசுவது குழந்தையின் தகப்பனார்தான் செய்யவேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன இதன் தத்துவம் இறைவனின் சித்தமும் தன் சித்தமும் குழந்தையை வழி நடத்தட்டும் என்பதாகும் அதாவது இந்த குழந்தைக்காக இதன் வளர்ச்சிக்காக இதன் பாதுகாப்பிற்காக நான் பாடுபடுவேன் என தகப்பனார் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வதே உள்ளர்த்தம். 



Contact Form

Name

Email *

Message *