Store
  Store
  Store
  Store
  Store
  Store

வேலையை முதலில் பார் !

  னுஷனை போல் நன்றிகெட்ட ஜென்மா உலகத்தில் எதுவுமே கிடையாது வெற்றி மேல் வெற்றிவந்து மாலை சூட்டும்போதும் கோடி கோடியாக பணம் கொட்டுகின்ற போதும் இத்தனையும் என்னால் என் திறமையால் என் உழைப்பால் வந்தது என்கிறான் ஒரு சிறிய கஷ்டம் வந்துவிட்டால் போதும் ஐயோ கடவுளே எனக்கு ஏன் இந்த கஷ்டத்தை கொடுக்கிறாய் என்று அழுது புலம்புகிறான் வெற்றி வந்தால் என்னால் ஏற்பட்டது என்றும் தோல்வி வந்தால் கடவுள் தந்தது என்றும் சொல்வது முற்றிலுமாக நன்றிகெட்ட தனம் தானே என்று சிலர் பேசுகிறார்கள்

இந்த பேச்சை சில நேரம் கேட்கும்போது நமக்கே அட ஆமாம் நாம் அப்படிதான் நடந்து கொள்கிறோம் அண்ணாவுக்கு வேலைகிடைத்தால் அது அவன் சமார்த்தியத்தால் கிடைத்தது என்கிறோம் அப்பா நாலு காசு கூட கொடுத்தால் அது அவர் உழைப்பால் வந்தது என்கிறோம் எதுவுமே இல்லை என்றால் கடவுள் ஒன்றும் தரவில்லை என்கிறோம் இது நியாயம் தானா நமது ஞானிகளும் ஆன்மீக பெரியவர்களும் சதா சர்வகாலமும் கடவுள் சிந்தனையிலேயே இரு அவரை தவிர வேறு எதையும் நினைக்காதே நம்பாதே என்கிறார்கள் நம்மால் அது முடியவில்லையே ஓடி கொண்டிருக்கின்ற கணிப்பொறி நின்றுவிட்டாலும் அசை போடும் மாடு அதை நிறுத்தி தொழுவத்தில் படுத்து விட்டாலும் அவைகளை பற்றி தான் நினைக்க முடிகிறதே தவிர கடவுளை பற்றி நினைக்க முடியவில்லயே என சுய பட்சாதாபம் அடைகிறோம்


முனிவர்களும் ரீஷிகளும் வினாடி நேரம் கூட தவற விடாமல் கடவுளை நினைக்கலாம் நம்மை போன்ற அற்ப மனிதர்களால் அது சாத்தியமா அப்படி சாத்தியம் இல்லை என்றால் கடவுளின் அருளே கிடைக்காதா வாழ்க்கை முழுவதும் இறைவனின் திருக்கருனையை அனுபவிக்க முடியாமல் அல்லல்பட வேண்டியதுதானா எல்லா நேரமும் கடவுளை நினைக்க என்ன செய்ய வேண்டும் என்று நாம் குழம்புகிறோம்

இப்படி குழம்ப வேண்டிய அவசியமே இல்லை சாதாரண சம்சார வாழ்க்கயில் இருக்கும் மனிதர்கள் எப்போதும் ஒவ்வொரு வினாடியும் கடவுளை நினைக்க வேண்டிய அவசியமில்லை உனக்கு நேரம் கிடைக்கும் போது முழு மனதோடு நினைத்தால் வணங்கினால் போதும் என்று நமது இந்து மதம் சொல்கிறது

ஒரு முறை நாரதருக்கு நம்மை காட்டிலும் நாராயணன் மேல் பக்தி உள்ளவர்கள் யாருமே இல்லை என்று கர்வம் வந்துவிட்டதாம் அதை எம்பெருமான் திருமுன்னாலும் சொல்லிவிட்டாராம் உடனே நாராயணர் அப்பனே நாரதா அப்படி கர்வம் கொள்ளாதே உன்னை காட்டிலும் என் மீது பக்தி கொண்ட ஒருவன் கைலாசபுரத்தில் இருக்கிறான் என்றாராம் நாரதர்க்கு உடனே அந்த பக்தனை காணவேண்டும் என்று ஆவல் பிறந்து விட்டதாம் பெருமாள் சொன்ன அந்த ஊருக்கு ஒரு நாள் காலையில் போய் அந்த குடியானவனை பார்த்தாராம் அவன் காலையில் கண்விழித்ததும் அப்பனே நாராயணா என்று மட்டும் சொல்லிவிட்டு ஏர்கலப்பையை  தூக்கி கொண்டு வயலுக்கு போனானாம்


நாரதரும் அவன் கூடவே வயலுக்கு போனார் அவன் உச்சி வெயில் வரும்வரை ஏர் உழுதான் அதன் பிறகு பழைய சாதத்தை சாப்பிட்டு விட்டு மரத்தடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தான் பிறகு வரப்பு வெட்டுதல் களையெடுத்தல் என்று வேலைகளை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் வீட்டுக்கு வந்தானாம் வந்தவன் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு படுக்கையில் படுக்கும் போது அப்பனே நாராயணா என்று சொல்லி நன்றாக உறங்கி விட்டானாம்

நாரதருக்கு எதுவும் புரியவில்லை ஒரு நாளில் விழிக்கும் போது உறங்கும் போதும் மட்டுமே கடவுளை நினைக்கும் இவன் எப்போது பார்த்தாலும் கடவுளையே நினைத்து கொண்டிருக்கும் என்னை விட எப்படி உயர்ந்தவன் என்று எண்ணினார் இதை நாராயணனிடமே கேட்டும் விட்டார் அதற்கு எம்பெருமான் ஒருவன் எத்தனை முறை என்னை நினைக்கிறான் என்பது முக்கியமல்ல எப்படி நினைக்கிறான் என்பதே முக்கியம் என்று சொன்னாறாம் அதாவது நீ கடவுளை வணங்குவது ஒரே ஒரு நிமிடமாக கூட இருக்கலாம் அந்த ஒரு நிமிடத்தையும் அவருக்காக முழுமையாக செலவிடு என்பதே நமது மதத்தின் ஆதார சுருதியாகும்


வேலை எதுவும் செய்யாமல் கடவுளை மட்டுமே நினைத்து கொண்டிருந்தால் ஆவது என்ன பலன் பூஜ்யம் தான் கண்ண பெருமான் கீதையில் ஓய்வே இல்லாமல் கடமையை செய் என்று தான் சொல்கிறானே தவிர எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னை நினை என்று சொல்லவே இல்லை அப்படி சொல்லியிருந்தாலும் அது ஞானிகளுக்கும் அருளாளருக்கும் பொருந்துமே தவிர நம்மை போன்ற சாதாரண ஜீவன்களுக்கு அது இல்லை முழுமையான உழைப்பை தந்து விட்டு கடவுளின் அருளை நாடுவது தான் இந்து தர்ம வாழ்க்கை

வெற்றியடையும் போது கடவுளை மறந்தாலும் தவறில்லை ஆனால் கண்டிப்பாக தோற்கும் போது கடவுளை கூப்பிட வேண்டும் ஐயோ நான் தோற்றுவிட்டேன் என்னை பள்ளத்திலிருந்து மேல் தூக்கி விடு என்று கதற வேண்டும் அப்படி கதறுவது தான் நம்மையும் அரவணைக்க ஆள் இருக்கிறது நமக்கும் உதவி செய்ய தோள் இருக்கிறது என்ற ஆறுதலை தரும் அந்த ஆறுதல் தான் இன்னும் உழைக்க வேண்டும் மேலும் மேலும் பாடுபட வேண்டும் என்ற உத்வேகத்தை தரும் எனவே துன்பம் வந்தால் கடவுளை கூப்பிடு அவன் கண்ணீரை துடைக்க மட்டுமே இருக்கிறான்.




Contact Form

Name

Email *

Message *