Store
  Store
  Store
  Store
  Store
  Store

எதிரியை வெல்லும் யாக குண்டம் !

   மது இந்துமதத்தினர் நல்ல விஷேசங்கள் ஆனாலும் கெட்ட காரியங்கள் ஆனாலும் ஹோமம் வளர்ப்பது வாடிக்கையான சம்பிராதயம் மரகுச்சிகளை போட்டு நெருப்பு வளர்ப்பதில் என்ன இருக்கிறது என்று கேலி பேசியவர்கள் போபால் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் அக்னி ஹோத்ரா ஹோமம் செய்தவர்கள் மட்டும் தப்பியதை அறிந்தபிறகு அதில் ஏதோ இனம் புரியாத விஷயம் அடங்கி உள்ளது என்று சற்று வாய்மூட ஆரம்பித்துவிட்டார்கள் 
புதிய வேலைகளை துவங்குவதற்கு கணபதி ஹோமம் ஜாதக தோஷங்களை விலக்குவதற்கு நவக்கிரக ஹோமம் எதிரிகளின் தொல்லை அதிகமாகாமல் தடுக்க சுதர்சன ஹோமம் என்று செய்வதை கேள்விபட்டிருக்கிறோம் அந்த ஹோமங்கள் செய்யும் போது சதுரவடிவிலேயே குண்டங்கள் அமைக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம் இவை தவிர வேறு சில ஹோமங்கள் செய்யும் போது சதுரம் மட்டும் அல்லாமல் பல்வேறு வடிவிலும் ஹோம குண்டங்கள் அமைக்கப்படுவதை காண்கிறோம் ஹோமம் என்பதே நெருப்பை வளர்த்து கடவுளை வழிபாடும் ஒரு சடங்குதானே இதற்கு ஒரே வடிவத்தில் குண்டங்கள் அமைத்தால் போதாதா வட்டம் முக்கோணம் என்று அமைக்க வேண்டுமா என்று பலருக்கும் தோன்றும்



ஒரு ஹோம நடத்த ஆகுதி பொருட்களும் மந்திரமும் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஹோம குண்டத்தின் வடிவமுறை  காரணம் ஹோம குண்ட வடிவங்கள் நாம் நினைப்பது போல சாதாரண தோற்றங்கள் அல்ல அந்த தோற்றங்களுக்குள் பல இயற்க்கை தத்துவங்கள் ரகசியங்கள் மறைந்துள்ளன நிலம்,நீர்,காற்று,நெருப்பு.ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் தான் இயற்கையின் மூலங்கள் என்று நமக்கு தெரியும் 

அத்தகைய இயற்க்கை மூலங்களான ஐம்பூதங்களுக்கு பண்டைய கால இந்திய விஞ்ஞானப்படி குறியீட்டு உருவமும் சக்தமும் கண்டறியப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் தான் ஹோமகுண்ட உருவங்கள் வடிவமைக்க படுகின்றன இதன்படி செய்யும் யாகங்களுக்கு கைமேல் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று நமது வேதங்கள் சொல்கின்றன



பூமியை குறிக்கும் குறியீட்டு வடிவம் சதுரமாகும் இதன் ஒலி அதிர்வு அதாவது பீஜமந்திரம் லம் என்பதாகும் நீரை குறிக்கும் வடிவம் பிறைச்சந்திர வடிவாகும் இதன் பீஜ மந்திரம் வம் என்பதாகும் நெருப்பை குறிப்பது முக்கோண வடிவம் இதன் மந்திரம் ரம் என்பதாகும் காற்றை குறிப்பது அறுகோண வடிவாகும் இதன் பீஜம் யம் என்பதாகும் ஆகாயத்தை குறிப்பது வட்டவடிவாகும் இதன் பீஜம் ஹம் என்பதாகும் 

உதாரணமாக எதிரிகளின் தொல்லைகளை முறியடிக்க வெற்றி வாகை சூட யாகங்கள் செய்யும் போது அதன் குண்ட வடிவம் முக்கோணத்தில் அமைப்பார்கள் குழந்தைகள் பெற பொருள் ஈட்ட யாகங்கள் செய்தால் வட்டவடிவ யாககுண்டம் அமைப்பார்கள் இப்படி ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனியான யாககுண்ட வடிவமுறைகள் இருக்கின்றன அவைகளை துல்லியமாக கணக்கிட்டு அமைத்து செய்யப்படும் யாகங்கள் எதுவும் தோர்ப்பது இல்லை.




 http://www.veryicon.com/icon/preview/Object/Buuf/Leaf%20Icon.jpg     அமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும் 


 

Contact Form

Name

Email *

Message *