( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஜெயலலிதா கருணாநிதி தீடிர் சந்திப்பு...!

   வாசகர்களுக்கு வணக்கம் பல நாட்களாக ஜோதிடம் ஆன்மிகம் தத்துவம் என்று கனமான விஷயங்களை பேசி அலுத்துவிட்டது நமது தினசரி செய்திதாள்களும் ஏறக்குறைய இப்படிதான் ஒரே விஷயத்தை பேசியும் எழுதியும் வருகின்றனர் அவற்றில் இருந்து மாறுபட்டு செய்திகள் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தோம் அதன் விளைவே இந்த பதிவு இதில் எள்ளளவும் உண்மை கிடையாது அனைத்தும் வடிகட்டிய மாகா பொய்களே ஆனாலும் ஆங்காங்கே சில உண்மைகள் தலைகாட்டுவதை தவிர்க்க முடியவில்லை. ஓசியில் படிக்க வேண்டிய ஒரே பேப்பர் 
தமிழகத்தின் உண்மை நாடி துடிப்புஹசாரே சொற்படி நடப்பேன்  மன்மோகன் சிங் உறுதி 

புதுடெல்லி அக்.11 தலைநகர் டில்லியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார் அவர் தனது உரையில் பொதுநல ஊழியரான அன்னா ஹசாரே வருங்காலத்தில் கட்சி ஆரம்பித்து தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பிற்கு வந்து தன்னை பிரதமராக்கினால் ஹசாரேயின் சொல்லை தட்டாமல் நடப்பேன் சோனியாகாந்தியிடம் காட்டும் விசுவாசத்தை முழுமையாக அவரிடமும் காட்டுவேன் எந்த சூழலிலும் அவர் சொல்லுக்கு மாறாக ஒரு சிறு முணுமுணுப்பை கூட செய்ய மாட்டேன் தப்பித்தவறி அமைச்சரவை சகாக்கள் தவறான முடிவை எடுத்தாலும் இப்போது போலவே அதை கண்டு கொள்ள ,மாட்டேன் என்று பேசினார் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒலிபெருக்கி அமைத்தவர் மேடை போட்டவர் பந்தல் நிர்மானித்தவர் என்று பலரும் கூட்டமாக கலந்து கொண்டனர் பிரதமரின் உணர்ச்சிமிக்க உரையை கேட்டு அவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்

நமது டெல்லி நிருபர்


ஜெயலலிதா கருணாநிதி தீடிர் சந்திப்பு 

சென்னை அக்.11 நேற்று மாலை மெரீனா கடற்கரையில் முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் தீடிரென சந்தித்து கொண்டனர் முதல்வர் அவர்கள் கருணாநிதியிடம் கனிவான முறையில் உடல் நலம் விசாரித்தார் இதனால் கலைஞர் சந்தோசம் தாங்காமல் ஆனந்த கண்ணீர் வடித்தார் தனது அரசியல் எதிரியான ஜெயலலிதா காட்டுகிற அக்கறையை கூட காங்கிரஸ் தலைவர் தன்னிடம் காட்ட வில்லையே என்று வருத்தப்பட்டார் மேலும் இருவரும் அரைமணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினர் செல்வி ஜெயலலிதா தான் கருணாநிதியை எதிர்த்தே அரசியல் செய்து பழகி விட்டதாகவும் வருங்கலத்தில் விஜயகாந்தை எதிர்க்க வேண்டிய நிலை வருமோ என்று அச்சப்படுவதாகவும் கலைஞரிடம் தெரிவித்தார் அதற்கு தமிழரின் மானம் காக்க தானும் தனது வாரிசுகளும் தொடர்ந்து பாடுபடுவோம் அவ்வளவு சீக்கிரம் மக்களை விட்டுவிடமாட்டோம் என்று கலைஞர் தைரியப்படுத்தினார் இருவர் பேச்சையும் சில சுண்டல் விற்கும் சிறுவர்கள் கிண்டல் செய்ததனால் இருவரும் மெளனமாக காரில் ஏறி சென்று விட்டனர் 

நமது சிறப்பு சென்னை நிருபர்
பிச்சைகாரர்களை ஒழிக்க வேண்டும் தமிழக போலீஸ்காரர்கள் ஆவேசம் 

மதுரை அக்.11 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தமிழக காவல் துறை அதிகாரிகள் சிலர் தேனீர் கடை ஒன்றில் ரகசியமாக கூடி பேசியதாக தெரிகிறது தமிழ் நாடு முழுவதும் காவல் துறையை சேர்ந்தவர்கள் கனமான காக்கி சீருடை அணிந்து கொண்டு வெயில் மழை பனி என்று பாராமல் அலைந்து திரிந்து மாமுல் வசூல் செய்ய வேண்டியுள்ளது ஆனால் பிச்சைகாரர்கள் அரைகுறை கிழிந்த ஆடையில் காற்றோட்டமாக கோவில் ரயில் நிலையம் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் நிழலில் உட்கார்ந்து அலையாமல் உடல் நோகாமல் காசு வசூல் செய்வதாக கூறி வருத்தப்பட்டதாக தெரிகிறது தங்களை போலவே பிச்சைகாரர்களுக்கும் கனமான சீருடை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கபோவதாக பேசிக்கொண்டனர் நமது சிறப்பு செய்தியாளர்குரங்குகள் தப்பி ஓட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு 

விழுப்புரம் அக்.11 விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பல காலமாக வாழ்ந்து வந்த குரங்குகள் நேற்று அதிகாலை ஒட்டுமொத்தமாக இடத்தை காலி செய்தன குரங்குகள் தொல்லை இனி இருக்காது என வியாபாரிகளும் விவசாயிகளும் சந்தோசப்பட்டார்கள் இப்படி குரங்குகள் திடிரென இடம் நகர்ந்து போவது விலங்கின ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது அனால் இதை பற்றி கருத்து கூறிய சில பொதுமக்கள் பல காலமாக இங்கு வாழ்ந்த குரங்குகள் ஓடி போனதற்கு நில மோசடி வழக்கில் தாங்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம் என்று கூறினர்

ஒரு விழுப்புரம் வாசகரின் கடிதம்


+ comments + 4 comments

சூப்பர் ! சரியான கிண்டல் நக்கல் பதிவு ! அருமை ! தினம் இந்த பேப்பர் வருமா?

CM & Ex.CM photo designing is super..

M.Natrayan
17:26

தினமணியில் உஜிலாதேவி பக்கம் தற்போது வருவதில்லை. முன்புபோல் இப்பக்கம் வர ஏற்பாடு செய்யவேண்டும். நாங்கள் உங்களைப்போலவே பல்வேறு கருத்துக்கள் எழுதலாம். வாசகர்கள் எப்படியெல்லாம் நகைசுவையாக எழுதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Anonymous
18:20

ஒரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் வலைப்பூ ஒன்றினை ஆரம்பித்து அதில் சிறப்பாக கட்டுரைகளை வெளியிட்டும் வருகிறீர்கள். அந்த வகையிலே தங்களுடைய பல கட்டுரைகள் சிறப்பாக உள்ளன.
இருந்த போதிலும் எதற்காக அரசியல் விஷயங்களை உட்புகுத்துகிறீர்கள். ஆன்மீக வாதிகளுக்கு அது தேவையற்றது. காலத்திற்கேற்றவாறு வேண்டிய மாற்றங்களை இறைவனே நிகழ்த்தி விடுவார். எந்த ஒரு காலத்திலும் ஆன்மீக வாதிகள் அரசியலினின்றும் ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களுக்கு தெரியும் இறைவனின் அற்புத மாயையில் ஒன்று இது என்று.

சர்ச்சைக்குரிய விஷயங்களை தொட்டால் பாப்புலாரிட்டி கிடைக்கும் என்ற அடிப்படை ஆன்மீக வாதிகளுக்கு பொருந்தாது.

இதயன்


Next Post Next Post Home
 
Back to Top